Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தயவு செய்து உங்கள் கருத்துக்களைத் தாருங்கள்!
#1
நதியா செய்தது சரியா? தயவு செய்து உங்கள் கருத்துக்களைத் தாருங்கள்!

எம். குமரன் சன் ஒப் மகாலட்சுமி திரைப்படம் பார்த்தேன். அதில், கணவரான பிரகாஷ்ராஜ் தனது இலட்சியம் நிறையேறத் தடையாக தனது மனையியும், மகனும், பாசமும் தான் இருப்பதாகவும், அதனால் அவர்களைப் பிரிந்து வாழ்ந்தால் மாத்திரமே தான் நினைத்ததைச் சாதிக்க முடியும் எனவும் கூற, அவர் மனைவி (நதியா) மகனை அழைத்துக் கொண்டு கணவரைப் பிரிந்து தனியாக வந்து வாழ்கின்றார். நதியா செய்தது சரியா?
வெளிநாட்டில், இதே போன்ற ஒரு
சூழ்நிலையில், வாழும் பெண் ஒருவர், தனது லட்சியத்திற்குத் தடையாக இருப்பது தனது மனையியும் மகனும் தான் என்று கணவர் கூறும் நிலையில், கணவரைப் பிரிந்து தனியே வாழ முற்பட்டால், எமது சமுதாயம் அதனை விளங்கிக் கொண்டு ஏற்றுக் கொள்ளுமா? அவளை எந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கும்? தயவு செய்து உங்கள் கருத்துக்களைத் தாருங்கள்!

தலைப்பு சரி செய்யப்பட்டுள்ளது - யாழினி
!!
Reply
#2
நன்றி யாழினி அக்கா
!!
Reply
#3
யாழி உங்கள் கேள்வி முரண்பாடானதாக இருக்கின்றது,
கணவரின் இலட்சியம் நிறைவேறுவதற்காக பிரிந்திருப்பதென முடிவெடுக்கும் மனைவி அவ்வாறு செய்வது ,தானும் அந்த இலட்சியத்தை அடைவதற்காக தனது தனிப்பட்ட நல்வாழ்வைத் தியாகம் செய்கிறாள்.அவ்வாறெனில் இங்கு முன் நிலைப்படுவது இலட்சிய வேட்கையே.அவ்வாறெனில் ஏன் அவள் எமது சமூகம் அதனை அங்கீகரிக்க வேண்டும் என எண்ண வேண்டும்.அவ் இலட்சியம் பொதுவான சமூக நலம் சார்ந்ததாக இருக்குமிடத்து ,
பிரிந்திருப்பதை எதிர்ப்பதற்கு எந்த நியாயமும் கிடையாது.
Reply
#4
வணக்கம் யாழி. உங்கள் கேள்விக்கு நேரடியாக இல்லாமல் பொதுவானதாக பதில் சொல்ல விரும்புகின்றேன். ஏற்றுக் கொள்வீர்களென நம்புகின்றேன். முதலில் சமுதாயமென நாம் சொல்லும்போது நாமும் சேர்ந்தது. நாம் நன்றாகவிருக்கும்போது சமுதாயம் பற்றிய சிந்தனை எமக்கு ஏற்படாது. ஆனால் எம் வாழ்க்கையில் பாதிப்புகள் ஏற்படும்போது இலகுவாக சமுதாயத்தில் பழியைப் போட்டுவிடுகின்றோம். நாம் எமது வாழ்வில் மற்றவர்களுக்கு பாதிப்புகள் ஏற்படாது எடுக்கும் முடிவுகள் பற்றி மற்றவர்களுக்கு பயப்பட வேண்டிய அவசியமில்லை. அதேபோல் திரைப்படத்தில் வரும் காட்சிகள் அனைத்தும் வாழ்க்கையிலும் பொருந்துமெனவும் எண்ணிவிடமுடியாது.
Reply
#5
காலம் காலம் திரை படத்தில் காட்டி வந்த பதிவிரதை பாத்திரவெளிபாட்டின் புதிய விடயமாய் பார்க்கமுடியுமேய் தவிர நதியாவின் பார்த்திரத்தில் வேறு ஒன்றுமில்லை.நடுத்தரவர்க்கத்தின் இந்த போலி இலட்சியத்துக்காக நதியா பிரிந்தே இருந்தால் தான் நிறை வேறும் என்பது திரை கதை நகர்வுக்காக உருவாக்கப்பட்ட ஒரு ஜிமிக்கிகாக தான் கொள்ளலாம். இந்த புறநடை பாத்திரங்களை சமூகத்திற்குள் போட்டு பார்த்து சரியா பிழையா என்று அளவு கோலிட முடியாது..
Reply
#6
தனிமனித இலட்சியத்தை அடைய குடும்பம்.. சமூகம் தடை என்பது இயலாமையின் வெளிப்பாடு...! ஒரு தனி மனிதனை... சமூகத்தை ஆக்குவது.. குடும்பம் என்ற அலகுதான்....அந்த அலகின் அடிப்படையாக இருப்பவர்கள்... கணவனும் மனைவியும்...!

பிரகாஷ் ராஜ் போன்ற பாத்திரத்தின் தனி மனித இலட்சியம் என்பது எதை நோக்கியது...சுயநலம் நோக்கியதா...குடும்பம் நோக்கியதா...சமுதாயம் நோக்கியதா...அது யாழி உங்கள் கருத்தால் தெளிவுறுத்தப்படவில்லை...!

ஒரு தனிமனிதனின் இலட்சியத்தின் தன்மை அறியாது அவனுள் எழும் தற்கால உணர்வுகளுக்கு ஏற்ப ஒரு பெண்ணோ ஆணோ சமூகத்தின் அடிப்படைக் கட்டமைப்பை ஏன் குலைக்க வேண்டும்... அதனால் எழும் பாதிப்புக்களை மேலதிக சுமையாக்க வேண்டும்...!

கணவன் என்றாலும் சரி மனைவி என்றாலும் சரி தனி மனிதனின் இலட்சியத்தின் தன்மைக்கு ஏற்ப குடும்பம் என்ற கட்டமைப்பின் வழி அவ்விலச்சியத்தை அடைய இணைந்து செயற்படலாம் அல்லது தன்னாலான பக்களிப்பை வழங்கலாம்...! இதன் மூலம் மனித முயற்சிகள் பலப்படவும் வெற்றிகள் பெறப்படவும் துணை புரியலாம்...அதன் மூலம் அந்தக் குடும்ப தனி நபர்கள் மட்டுமன்றி முழுச் சமூகமும் நன்மை பெறும்...! அதற்காக அவர்கள் தங்களளவில் எதையும் இழக்க வேண்டும் என்பதில்லையே......!

அடிப்படையில் கணவன் மனைவியிடம் நல்ல புரிந்துணர்வு இருக்குமாயின்...கருத்துப் பிறழ்வுகளாலான குடும்பப் பிரிவினைகளும் சமூகப் பலவீனங்களும் ஏற்படுவது தடுக்கப்படலாம்...! ஒரு பெண்ணோ ஆணோ தனித்து வாழ்வது என்பது சாதனைக்குரிய விடயம் அல்ல...உண்மையில் அது பலவீனத்தின் வெளிப்பாடு....சமூக வாழ்வியலுக்குள் தனது பங்களிப்பை வழங்க முடியாத சமூக வாழ்வியலில் இருந்து ஒதுங்கி வாழும் சுயநலத் தன்மையின் வெளிப்பாடு...அது மனித இனத்தினதும் மனிதாபிமானத்தினதும் விருத்திக்கு உதவாது...!

இப்படியான பாத்திரப் படைப்புக்கள் மூலம் ஆண்களோ பெண்களோ ஒருவர் மற்றவருக்கு உதவாது தனித்து உலகில் வாழும் திறன் படைத்தவர்கள்...என்ற தவறான சமநிலை வாதம் கற்பிக்க முற்படின்... அது...மனிதனின் சமூக வாழ்வியலின் பால் எழுந்த தவறான பார்வையால் பிறந்ததாகவே கருத்தப்பட முடியும்...!

ஆண் பெண் சமூகவியல் சமத்துவம் என்பது ஆண் - பெண் பிரிந்து போட்டி போட்டு வாழ்தலிலல்ல...புரிந்துணர்வோடு உரிமைகளை சம அளவில் பங்கிட்டு வாழுதல்...அதற்காக மனிதனை வாழ்வியலில் நெறிப்படுத்தக் கூடிய நல்ல கலாசார சமூகப் பண்புகளை இழக்க வேண்டும் என்பதல்ல...!

உண்மையில் ஆண் - பெண் சமூகவியல் சமத்துவம் என்பது உள்ளத்தில் ஏற்படும் புரிந்துணர்வின் பால் பரஸ்பர அன்பின் பால் எழ வேண்டுமே தவிர...போட்டியின் பால்... விரோதத்தின் பால்... சகிப்புத்தன்மையின்மையின் பால்...புரிந்துணர்வுக்கு வாய்ப்பளிக்காத தன்மையின் பால் அல்ல...! அப்படி நிகழின் அது சமூகத்தில் பல புதிய பிரச்சனைகளுக்கும் மனித சமூகப் பலவீனத்துக்குமே இடமளிக்கும்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#7
நாரதர், வசம்பு, ஸ்டேலின், குருவிகள் அனைவரின் கருத்துக்களுக்கும், விசேடமாக குருவிகளின் விளக்கங்களுக்கும் நன்றிகள்! எங்கே மற்றவர்களை காணவில்லை!
தயவு செய்து அனைவரின் கருத்துக்களையும் எதிhபார்க்கின்றேன்!!
!!
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)