07-19-2005, 09:41 PM
<img src='http://img.indiaglitz.com/tamil/news/Perusu050705_1.jpg' border='0' alt='user posted image'>
<b>என்கவுண்டர்' காட்சியுடன் தாதா வீரமணியின் சினிமா படம்: போலீஸ் அனுமதி கிடைக்குமா?</b>
சென்னையை கலக்கிய தாதா வீரமணி `என் கவுண்டர்' மூலம் சுட்டுக் கொல்லப்பட்டது. பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்போது வீரமணியின் வாழ்க்கை `பெருசு' என்ற பெயரில் திரைப்படம் ஆகி இருக்கிறது. இதுவும் காவல்துறையினரிடம் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுபற்றி கருத்து சொன்ன சென்னை நகர போலீஸ் கமிஷனர் நடராஜ், சென்னை அயோத்தி குப்பத்தில் வீர மணி எப்படி வாழ்ந்தான் என்பது ஊர் அறிந்த செய்தி சமூக விரோதிகளை கதாநாயகர்கள் போல சினிமாவில் சித்தரிப்பது தவறு. வீரமணி போலீசாரை தாக்க முயன்றதால்தான் சுடப்பட்டான்.
போலீசாரின் நடவடிக்கைகளை குறை சொல்வது போல `பெருசு' படம் இருந்தால் அதை வெளியிடாமல் தடுப்பதற்கான முயற்சிகளில் காவல் துறை இறங்கும் நிலை உருவாகும்" என்று கூறி இருந்தார். இதனால் `பெருசு' படம் `ரிலீஸ்' ஆகுமா என்ற சர்ச்சை எழுந்துள்ளது.
`பெருசு' படம் குறித்து அதன் டைரக்டர் காமராஜிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
சென்னை அயோத்தி குப்பத்தைச் சேர்ந்த தாதா வீரமணியின் ஒரு பக்கம் எல்லோருக்கும் தெரியும் மறு பக்கம் பலருக்கு தெரியாது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய வீரமணியின் முடிவு குறித்து பல கோணங் களில் ஆய்வு செய்தேன். அப்போது., பல சுவையான தகவல் கிடைத்தன. எனவே இதை திரைப்படமாக எடுக்க முடிவு செய்தேன்.
2 வருட ஆய்வுக்குப் பிறகே இந்த படத்தை எடுத்து இருக்கிறேன். எல்லா மனிதர்களிடமும் நல்ல குணமும் உண்டு. கெட்ட குணமும் உண்டு, வீரமணியிடமும் இருந்த இரண்டு குணங்களையும் என் படத்தில் காட்டி இருக்கிறேன்.
வீரமணி வாழ்ந்த இடத்திலேயே அதை படமாக்கி இருக்கிறேன். அவனுடன் வாழ்ந்தவர்களே இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். ஆனால், உறவினர்கள் யாரும் நடிக்கவில்லை. இந்த குப்பத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் வாழ்கிறார்கள்.
ஒருசிலர் செய்யும் தவறுக்காக இந்த பகுதியில் வாழ்பவர்கள் அனைவரையும் தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பதால் நல்லவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காமல் போய்விடுகிறது.
யதார்த்தத்துக்கு முன்னுரிமை கொடுத்து அதில் கொஞ்சம் கற்பனையையும் கலந்து இந்த படத்தை எடுத்து இருக்கிறேன். படப்பிடிப்புக்கு அயோத்தி குப்பத்தினர் முழுமையாக ஒத்துழைப்பு கொடுத்தார்கள். அவர்கள் சொன்ன பல தகவல்கள் இந்த படத்தை யதார்த்தமாக எடுக்க உதவியாக இருந்தது.
வீரமணி செய்த தவறுகளை தவறு என்றும் நல்லவற்றை நல்லதாகவும் காட்டி இருக்கிறேன். குற்றங்களை நியாயப்படுத்துவது போல கதையை அமைக்கவில்லை. `என் கவுண்டர்' சரியா, தவறா என்ற விவாதமும் வைக்கப்பட வில்லை. சினிமா தன்மையை நூறு சதவீதம் இந்த படத்தில் உடைத்திருக்கிறோம்.
இது முழுக்க முழுக்க புதிய முயற்சி. அதனால்தான் பின்டெக்ஸ் கிரியேஷன் சார்பில் நானே இந்த படத்தை தயாரித்திருக்கிறேன்.
`பெரிசு' படத்தின் கதாநாயகனாக மது நடித்திருக்கி றார். கதாநாயகி பெயர் நீபா. ஜெமினி பாலாஜி வில்லனாக வருகிறார். படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இசை, பின்னணி சேர்ப்பு போன்ற பணிகள் முடிந்ததும் போலீஸ் கமிஷனர் நடராஜ×க்கு இந்த படத்தை போட்டுக் காட்டு வேன். நிச்சயம் அவரும் பாராட்டுவார். படம் ரிலீஸ் ஆவதில் எந்த பிரச்சினையும் வராது.
சினிமா என்ற கண்ணோட்டத்தில் பார்த்தால் `பெருசு' படத்தில் குறை சொல்ல எதுவும் இல்லை. ஏற்கனவே உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு `மலைïர் மம்முட்டியான்' `சீவலப்பேரி பாண்டி' போன்ற படங்கள் வந்துள்ளன. அதைவிட இது முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும்.
இவ்வாறு டைரக்டர் காமராஜ் கூறினார்.
- Viduppu.com