07-24-2005, 05:03 AM
காந்தி வேடத்தில் பிச்சை எடுத்தவருக்கு தர்ம அடி!
ஜூலை 23, 2005
சென்னை:
சென்னை திருவொற்றியூர் பகுதியில் மகாத்மா காந்தி போல வேடமணிந்து கொண்டு பிச்சை எடுத்தவரை பொது மக்கள் தர்ம அடி கொடுத்து விரட்டினர்.
திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் எல்லையம்மன் கோவில் அருகே ஒரு நபர் மகாத்மா காந்தி போல வேடமணிந்து சாலையோரம் அமைதியாக நின்று கொண்டிருந்தார். தேசத் தந்தையின் உருவத்தை அப்படியே பிரதிபலித்ததால் அப்பகுதியில் சென்று கொண்டிருந்தோர் அவரை பிரமிப்புடன் பார்த்து மெய் மறந்து நின்றனர்.
தன்னைச் சுற்றி நிறையப் பேர் சேர்ந்து விட்டதையடுத்து அந்த நபர் அப்படியே மெதுவாக பிச்சை எடுக்க ஆரம்பித்தார். காசு கொடுங்க, காசு கொடுங்க என்று அந்த நபர் கேட்கத் தொடங்கியதும் பொது மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தேசத் தந்தையை இப்படியா அவமானப்படுத்துவது என்று கூறி அந்த நபரை சரமாரியாக அடிக்க ஆரம்பித்தனர். ஆண், பெண் என அனைவரும் சேர்ந்து தர்ம அடி கொடுத்ததால் அந்த நபர் அங்கிருந்து தலை தெறிக்க ஓடினார்.
அடிப்பதற்கு முன்பு 'காந்தி' அணிந்திருந்த கண்ணாடி மற்றும் கம்பு ஆகியவற்றை பொதுமக்கள் பத்திரமாக 'சுட்டுக் கொண்டனர்' என்பது தான் இதில் விஷேசம்.
Thatstamil

<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>

:evil: