Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சிறுவர்கள் சேர்ப்புக்கள், உள்முரண்பாடுகள், உட்படுகொலைகள்
#41
Quote:மாற்றுக்குழுக்கள் எனப்படுபவர்கள் யார்...தமது பெயர்களில் வெறும் ஈழத்தை உச்சரித்தபடி எதிரிக்கும் அவன் திட்டங்களுக்கும் தமிழர் தேசத்தில் செயல்வடிவம் கொடுப்பவர்கள்...! இந்தியாவும் சரி சிறீலங்காவும் சரி அமெரிக்காவும் சரி ஜனநாயகப் பண்புகள் கருதி இவர்களுக்கு தீனி போடவில்லை...தங்களின் தேவைகளுக்கு பாவிக்கவும் தமிழர்களின் போராட்ட சக்தியை வலுவிழக்கச் செய்யவுமே இவர்களைக் கருவியாக்கி நிற்கின்றனர்...! அது அவர்களுக்கு நங்கு தெரிந்திருந்தும் புலிகள் பல தடவைகள் இவர்களுக்கு இவற்றைச் சுட்டிக்காட்டி பொதுமன்னிப்புக்களும் வழங்கி இருக்கின்றனர்...ஆனால் அதை எல்லாம் இவர்கள் மதித்ததாக தெரியவில்லை...அப்படி மதிக்கவில்லை என்றால் இவர்களுக்கு என்ன தீர்ப்பு என்பதும் பலதடவைகள் சுட்டிக்காட்டப்பட்டிருந்தன... அதை வைத்தே ஆயுதப் பாதுகாப்பும் கோருகின்றனர்...அடாவடித்தனங்களும் புரிகின்றனர்..! புலிகள் எப்போதுமே நேர்மையான ஜனநாயகவாதி மீது வன்முறைகளைப் பிரயோகித்ததில்லை என்பதை கவனித்தில் கொள்வதும் சிறந்தது...! எல்லாவற்றுக்கும் மேலாக உலகில் நேர்மையான ஜனநாயக நடைமுறை இருக்கா என்பதும் கேள்விக்குறிதான்...???!

சரியாக சொன்னீர்கள்.நன்றி குருவி.
#42
ஜுட் முதலில் சம்பவம் நடைபெற்ற யாழ் நகரம் தமிழீழ நீதிமன்றத்தின் ஆளுகைக்குட்பட்ட இடமல்ல.

நீங்கள் சொல்வதிப் போல் செய்வதானால் ,அந் நபர் கைது செய்யப்பட வேண்டும் இது எவ்வாறு சாத்தியம் என்பதை முதலில் சிந்திக்க வேண்டும்,மற்றும் இந் நபர் வீதியில் அலைந்து பத்திரிகை விற்க வேண்டிய கட்டாயம் என்ன,இராணுவத்தினரையே பத்திரிகை விற்க பயன் படித்தியுருக்கலாம்.

தமிழீழ சட்டம், தமிழீழ பிரதேசம் எங்கும் செல்லுபடியானது. வன்னியில் மட்டும்தான் தமிழீழ சட்டம் செல்லுபடியாகுமா? தமிழீழ வரைபடம் இவ்வாறு குறுக்கப்பட்டதாக இது வரை எந்த வெளியீடும் வரவில்லை. மேற்படி நபர் கைது செய்யப்பட்டு தமிழீழ சட்டப்படி திருத்தப்பட்டிருக்க வேண்டுமேயன்றி வீதியில் சுட்டுவீசப்பட்டிருக்க கூடாது. இப்படி சுட்டுவீசப்படுவது தான் முறையானால் யாழ்ப்பாணம் சிறிலங்காவிற்கு உரியது தமிழீழத்துக்குரியதல்ல என்று ஆவதுடன் தமிழீழ சட்டம் இங்கு மதிப்பிளக்கிறது. நீதிமன்றங்கள் அவமதிக்கப்படுகின்றன.

ஜூட் நான் முன்னர் கூறியது போல் யாழ்ப்பானம் புலிகளின் ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசம் அல்ல,போர் நிறுத்த உடன்படிக்கையின் படி புலிகள் ஆயுதத்துடன் இங்கு நடமாட முடியாது,இதுவே அங்குள்ள நிதர்சனம் இது உங்களுக்கும் தெரிந்த ஒன்று இதை மறுதலிப்பதன் மூலம் நீங்கள் உங்களின் உள்னோக்கத்தை வெளிக்கொனர்ந்துள்ளீர்கள்.

சட்டம் ஒழுங்கு என்பதெல்லாம் சாதாரண மனிதர்களை ஒரு கட்டுப் பாட்டுக்குள் வைப்பதற்காகவே மேற்குலக அரசுக்களால் உருவாக்கப் பட்ட மாயத்திரை.

ஆக தமிழீழ சட்டக்கோவையும் நீதிமன்றங்களும் இப்படியான மாயத்திரைகள் மட்டும்தானா? இப்படியா தமிழீழ நீதித்துறையை (அவ)மதிப்பது? நான் மேற்குலகில் குறிப்பாக அமெரிக்காவினால் உலகங்கும் நடைமுறைப் படுத்தப்படும் பாரபட்ச்சமான ,இரட்டைத்தன்மையுள்ள நீதி முறமையெக் குறிப்பிட்டேன். நான் எப்போது அப்படித்தான் தமிழ் ஈழ நீதித்துறையும் இருக்க வேன்டும் என்று குறிப் பிட்டேன்.?

நீங்கலே நான் கூறாத ஒன்றைக் கூறிக் குளப்பப் பார்க்கிறீர்கள்.

இராக்கில் அபுகயச் சிறைச் சாலையில் நடந்தவை எந்த ஜனனாயகப் பண்பிற்குள் அடங்கும்,அமெரிக்க நீதித்துறையினால் எந்த அதிகாரியும் தன்டிக்கப் படவில்லை.பத்திரிகைகளினாலும் ,இணயத்தளங்களினாலும் அம்பலப் படுத்தப் பட்ட பின்னரே விசாரணை என்ற கண் துடைப்பு நடை பெற்று கீழ் மட்ட இராணுவ வீரர்களே மிகக் குறைந்த தண்டனையைப் பெற்றனர்.அதுவும் விசாரணை சாதாரண சட்டங்களுக்குள் நடை பெறவில்லை.ஜோர்ஜ் புஸ் எவ்வாறான தில்லுமுல்லுகளால் ஜனாதிபதி ஆனார் என்பது உலகறிந்த விடயம்.
#43
மனிதஉயிர்களை தமிழீழ ஆதரவாளர்கள் மதிப்பது குறைவு என்பதை யாழ் களத்தில் இடம்பெறும் கருத்து பரிமாறல்களை கொண்டே எவரும் அவதானிக்க முடியும். ஐ.நா. சபையும்இ பிற நாடுகளும்இ தமிழீழ மக்கள் கொன்று குவிக்கப்படுவது பற்றி பெருமளவில் அக்கறை செலுத்தாததற்கு இவ்வாறாக தமிழீழ மக்கள் மனிதஉயிரை மதிக்காததும் ஒரு காரணமாக இருக்கலாம். தமிழீழ ஆட்சியும் சட்டமும் மனிதஉயிரின் மதிப்பை தமிழீழ மக்களுக்கு கற்றுக்கொடுத்துஇ கனடாஇ அமெரிக்கா போன்ற நாடுகளில் மனிதஉயிருக்கு கொடுக்கப்படும் மதிப்பு தமிழீழ மக்கள் மத்தியிலும் கொடுக்கப்பட செய்யவேண்டும்.


இந்த நாடுகளில மனித உயிருக்கு மதிப்பிருக்கா அது அவர்களது நாட்டை சேர்நி;தவர் எண்டா மட்டுமே பெரியளவில அனுதாபம் தெரிவிப்பினம் உதாரணமா சமீபத்தில லண்டனில நடந்த குண்டு வெடிப்பில கொல்லப்பட்டவர்களுக்கு இனுதாபம் தெரிவிச்சவையில எத்தனை பேர் ஈராககில கொல்லப்பட்ட மக்களிற்காக அனுதாபம் தெரிவிச்சிருப்பினம்

எனவே உங்கட வாதம் மிகவும் தவறானது யுட் அண்ணா

மற்றது நாரதர் அங்கிள் சொன்னது போல சம்பவம் நடந்த இடம் தற்போது புலிகளின் கட்டுப்பாட்டில் இல்லாத இடம் அதோட சிறிலங்கா ராணுவ கட்டுப்பாட்டில இருக்கிற இடத்தில ஈபிடிபி கூலி ஒருவனை அதே ஈபிடிபியை சேர்ந்த கூலிகள் கொலை செய்த போது சிறிலங்கா நீதித்துறை என்ன விடு முறை போட்டுதா

உங்கட அடுத்த கேள்வி இப்படியான தவறாக வழிகாட்டப்பட்ட இளைஞர்களுக்கு தமிழீழ சட்டத்தில என்ன வழி எண்டு கேட்டிருந்தீங்க நான் தமிழீழ மற்றும் இலங்கை சட்டம் பற்றி படிக்கவில்லை ஆனால் கேள்விபட்ட அளவில தமிழீழ சட்டத்தில இப்படியானவர்கள் திருந்தி வாழ சந்தர்ப்பம் வழங்கப்படும் என்று கௌ;விபட்டிருக்கிறன்

அடுத்த முக்கிய விடயம் தமிழீழ சட்டங்கள் சமீப காலத்தில உருவாக்கப் பட்டவை எனவே அவை காலப்போக்கில பயன்படுத்தும் பொழுது தேவைக்கேற்ப புது விதிகள் bye lawa புகுத்தப் படுவதால் முழுமை அடையும் கண்டபடி விமர்சிப்பதை வழடுத்து ஆக்க புர்வமாக ஆலோசனை வழங்கலாமே (
. .
.
#44
Jude நீங்கள் கூறும் அமெரிக்கா போன்ற நாடுகளும் தேசிய பாதுகாப்பிற் பாதகமாக இருப்பார் என்றறிந்தால் OJ Simson கொலை வழக்கு மாதிரி வைத்து ஓராட்டமாட்டார்கள். அதுவும் 9-11 போன்ற நெருக்கடியான காலங்களில் கூட எவ்வாறு மனித உரிமைகளை அசட்டை செய்து நடத்த வேண்டியவற்றை நடத்தி முடித்தார்கள் என்று கவனிக்கவில்லையா? சந்தேக நபர்களை Guantanamo Bay வைத்திருக்கிறது என்னத்துக் எண்டு செல்லித் தெரியத் தேவையில்லை.

இதேபோல் மற்றய நாடுகளும் நெருகடியான காலகட்டங்களில் விதி விலக்காக நடந்திருக்கிறார்கள். அதிலும் முழு அளவில் நாடுகளாக அங்கீகரிக்கப்பட்டு அனைத்து நிர்வாகக் கட்டமைப்புகளும் முற்று முழுதாக நடைமுறையில் இருக்கும் நாடுகளில். அவசர காலநிலை போர்ச்சூழல் என்று உருவாகும் போது எந்த அளவிற்கு மனித உரிமைகள் மறுக்கப்படுகின்றன இந்த முற்றாக வழர்ச்சியடைந்த நாடுகளில் என்பதை அவதானிக்கவில்லையா? கடந்த வருட ஆரம்பத்தில் கூட இந்திய புலநாய்வு உயரதிகாரி ஒருவர் அமெரிக்காவிற்கு தப்பியோடினார். இதற்கு பாரததின் நீதித்துறை என்ன வழக்கு வைத்து பிடிவிறாந்து விட்டதா? இல்லை விசாரணை நடத்தி கண்ட இடத்தில் சுட உத்தரவிட்டதா?

எமது நாடு ஒரு துளிர்விட்டு வழர்ந்து வரும் நாடு, அதுவும் பாரிய சவால்கள் எதிர்ப்புக்கள் சதிகள் மத்தியில் நடந்து கொண்டிருக்கிறது. தமிழீழ நீதித்துறை ஒருபோதும் கூறவில்லை அரசபடைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளிலும் வழக்கின் இரு தரப்பாரும் சம்மதிக்காத பட்ச்சத்தில் தனது சேவைகளை வழங்க முடியும் என்று. இரு தரப்பாரும் இணங்கி அருகிலுள்ள புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்திலுள்ள நீதிமன்றதை அணுகி தமது சேவைகளை பெறுகின்றனர்.

நிக்சன் என்பவர் சிறுவயதில் தவறாக வழிநடத்தப்பட்டவர் என்றால் அது மிகவும் வேதனைக்குரியது. சாதாரண (கொலைக்)குற்றவாளிக்கு இப்படி ஒன்று நடந்திருந்தால் உங்கள் வாதம் முற்றிலும் சரியானது. ஆனால் அவர் ஒரு சாதாரண குற்றவாளியல்ல தமிழ் தேசியத்திற்கு எதிராக எதிரியின் பாதுகாப்பில் அரவணைப்பிலிருந்து செயல்பட்டவர். இந்தியப்படைகள் கட்டாய ஆட்சேர்பில் உருவாக்கிய தமிழ் தேசிய இரணுவத்திலிருந்தோர், யுத்த காலங்களில் சிறைபிடிக்கப்பட்டோர் எவ்வாறு நடத்தப்படனர் என்று கவனித்ததில்லையா? நிக்ஸன் புலிகளிடம் சரணடைவது என்பது ஒன்றும் முடியாத காரியம் அல்ல.

உலகில் எந்தவெரு நாடும் தனது தேசிய பாதுகாப்பு சம்மந்தப்பட்ட விடயங்களை அவசியமின்றி மனித உரிமை, சிவில் நீதி நிர்வாக கட்டமைப்புக்களிற்கும் சட்டங்களிற்கும் உட்படுத்தி பலவீனப்படுத்துவதில்லை. தினம்தோறும் இந்தவிடயங்கள் பொதுவாழ்கைக்கு வெளியில் அனாவாசிய ஆடம்பரம் அலட்டலின்றித்தான் நடந்தேறுகின்றன். எந்தவெரு தேசியத்தின் பாதுகாப்பிலோ அல்லது அதற்கு எதிராக செயல்படுபவர்கள் வயது அறிவு வேறுபாடின்றி எதிர்கொள்ளவேண்டும் இப்படியான முடிவுகளை உலகெங்கும்.


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)