Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
என் பிளாட்டினமே!
#1
என் பிளாட்டினமே!


ஷிபுகி...

என்ன இது? ஏதோ ஜப்பான் சம்பந்தப்பட்ட விஷயம் என்று புரிகிறது. ஆனால், என்னவென்று தெரியவில்ல என்றுதானே யோசிக்கிறீர்கள்?


உங்கள் கணிப்பு கிட்டத்தட்ட சரி. சமீபத்தில் பிளாட்டினம் கில்டு இன்டர்நேஷனல் நிறுவனம் நடத்திய பிளாட்டினம் நகை வடிவமைப்புப் போட்டியில் பரிசு பெற்ற, சோக்கர் நெக்லஸ் டிசைன்தான் இந்த ஷிபுகி. இந்த டிசைனை வடிவமைத்தது ஒரு ஜப்பானிய நிறுவனம்.

160 கிராம் பிளாட்டினத்தை உருக்கி இழைத்து, அதில் ஐந்தரை கேரட் வைரக்கற்களைப் பதித்து, ஜொலிக்க வைத்திருக்கிறார்கள் ஜப்பானிய ஆபரணக் கலைஞர்கள். இந்த டிசைனில் உருவாக்கப்பட்டுள்ள ஒரே ஒரு நெக்லஸ் இதுதான்.

ஷிபுகி இப்போது உலகம் முழுதும் ஒவ்வொரு நாடாக காட்சிக்காக சுற்றி வருகிறது, இது விற்பனைக்கு அல்ல என்ற அறிவிப்புடன்.

என் தங்கமே! என்று தாய்மார்கள் கொஞ்சிய காலம் போய், என் பிளாட்டினமே! என்று கொஞ்ச ஆரம்பித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. அவ்வளவு விலையுயர்ந்த உலோகம் பிளாட்டினம்!

vikatan
[b][size=15]
..


Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)