Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
<img src='http://img240.imageshack.us/img240/1489/chery1qf.jpg' border='0' alt='user posted image'>
ஒரு சின்ன சம்பவம்.
அந்தச் சிறுவன் வீட்டுத் தோட்டத்தைச் சுத்தம் செய்கிறேன் என்று அடர்ந்து கிடந்த புதர்களையும் செடிகளையும் வெட்டிச் சாய்த்துக் கொண்டிருந்தான்.
அப்படி வெட்டிய போது அவனுடைய தந்தை ஆசையாய் வளர்த்துக் கொண்டிருந்த செர்ரி செடியும் வெட்டுப்பட்டுவிட்டது.
குடும்பத்தினர் எல்லோருக்கும் பயம். ஏனென்றால் அவனது தந்தை கோபக்காரர். அவர் ஆசையாய் வளர்த்த செடி இல்லை என்றால்... என்ன செய்வது என்று எல்லோரும் பயந்து கொண்டிருந்தார்கள்.
மறுநாள்.
''யார் என் செடியை வெட்டியது?'' என்று தோட்டத்துக்குச் சென்று வந்த தந்தை கோபமாய்க் கேட்டார்.
''நான்தாம்பா வெட்டினேன். தோட்டத்தைச் சுத்தம் செய்து கொண்டிருந்தபோது தவறுதலாய் வெட்டிவிட்டேன்'' என்றான் சிறுவன்.
அடுத்து அடிதான் விழப் போகிறது என்று காத்திருந்தவர்களுக்கு இன்ப அதிர்ச்சி. அவர் ஒன்றும் செய்யவில்லை. 'இனிமேல் கவனமாய் இரு' என்று மட்டும் சொன்னார்.
ஏன் அடிக்கவில்லை?
அதற்கு தந்தை சொன்ன பதில், ''தைரியமாய் உண்மையைச் சொல்பவனைத் தண்டித்தால், அவன் வாழ்க்கையே பொய்யாகிவிடும். அவனால் உண்மையாக, வீரமாக வாழ முடியாது''.
அன்று உண்மை பேசிய சிறுவன் பிற்காலத்தில் அமெரிக்காவின் முதல் ஜனாதிபதியாக உயர்ந்த ஜார்ஜ் வாஷிங்டன்.
<b>நீதி:</b> உண்மை எப்போதும் உயர்வு தரும்
Posts: 2,542
Threads: 15
Joined: May 2005
Reputation:
0
நல்ல நீதிக்கதை நன்றி வசி அண்ணா..
Posts: 2,650
Threads: 35
Joined: Feb 2005
Reputation:
0
நல்லாத் தான் இருக்கு வசி அண்ணா நீதிக்கதை... ஆனால்...அப்ப கொலை செய்திட்டும் உண்மை பேசினால்...? அதுவும் உயர்வு தருமா? (சரி சரி முறைக்காதீங்க.....):wink:
" "
" "
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
ஒரு மாபெரும் கூட்டம்
இரண்டு பேச்சாளர்களிடையே போட்டி, யாருடைய
பேச்சு அதிக கைதட்டல் பெறும் என்று.
கூட்டம் துவங்குவதற்கு முன் இருவரும் ஒரு
அறையில் அமர்ந்து அன்றைய கூட்டத்தைப் பற்றி
விவாதித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு
பேச்சாளருக்கு தொலைபேசி அழைப்பு வர, அவர்
எழுந்து போனார். அவரது பேச்சுக் குறிப்புகளை
அவசரத்தில் மேஜையிலேயே வைத்துவிட்டுச் சென்றார்.
அவர் திரும்பி வருவதற்குள் போட்டி பேச்சாளர்
அந்தக் குறிப்புகளைப் படித்துவிட்டார். அந்தக்
குறிப்புகள் அவர் தயாரித்திருந்ததைவிட நன்றாக
இருந்தது.
கூட்டம் துவங்கியது.
அடுத்தவர் குறிப்பை பார்த்தவருக்குத்தான் முதலில்
பேச வாய்ப்பு. எதிர் பேச்சாளர் எழுதி வைத்திருந்த
குறிப்புகளையெல்லாம் எடுத்து தன்னுடைய
கருத்துக்கள் போல் பேசினார்.
ஏக கைதட்டல்.
எதிரி பேச்சாளருக்கு விஷயம் புரிந்துவிட்டது.
அடுத்து அவர் பேசவேண்டும். ஆனால் பேசுவதற்கு
ஒன்றும் இல்லை. என்ன செய்வது?
எழுந்தார். மைக்கைப் பிடித்தார்.
''முதலில் எனக்கு முன்னால் பேசிய நண்பருக்கு நன்றி
தெரிவித்துக் கொள்கிறேன். எனக்குத் தொண்டைக் கட்டு
சரியா பேசமுடியாது. என்னுடைய உரையை நீங்கள்
வாசிக்க முடியுமா என்று கூட்டம் துவங்குவதற்கு
முன்பு கேட்டேன். அவர் பெருந் தன்மையாக
ஒத்துக் கொண்டார். அவருக்கு என் நன்றிகள்'' என்று
கூறி அமர்ந்தார்.
[size=18]<b>நீதி:</b> சூழ்நிலைகளுக்கு ஏற்ப செயல்படுபவன்தான் புத்திசாலி
நன்றி
குமுதம்
Posts: 68
Threads: 0
Joined: Apr 2005
Reputation:
0
ஒருவன் வீட்டில் பொதி சுமப்பதற்கு கழுதை ஒன்றையும் வீட்டைக் காப்பதற்கு நாயொன்றையும் வளர்த்து வந்தான். ஒரு நாள் இரவு அவ்வீட்டிற்கு கள்வன் வந்தான். நாய் குரைக்காமல் இருந்ததைப்பார்த்த கழுதை தான் கத்தத் தொடங்கியது. அக்கிராமத்தில் கழுதை இரவில் கத்துவது கெட்டசகுனமாக கருதப்பட்டது.
காலையில் களவு போனதை கண்டவன் கழுதை கத்திபடியால்தான் களவு போனதாக கருதி கழுதையை வீட்டைவிட்டு துரத்தினான்.
நீதி: உனது வேலையை மட்டும் செய் அடுத்தவர் வேலையை செய்யாதே
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
இந்த கதையில் நீதி எனக்கு சரியா தோணலை. முதலாளி தன் மூடநம்பிக்கையால் விசுவாசமான கழுதையை இழந்தார். வேண்டுமானால் நீதியை இப்படி வைக்கலாம்
நீதி: மூளையில்லாத முதலாளியிடம் வேலை செய்யாதே <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 2,650
Threads: 35
Joined: Feb 2005
Reputation:
0
இதைத் தான் பாத்திரம் அறிந்து பிச்சை இடு என்று சொன்னார்களோ? :wink:
" "
" "
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
சாணாக்கியன் படைப்புகள் பற்றி தெரிஞ்சவை சொல்லுங்களேன். <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 168
Threads: 24
Joined: Jun 2003
Reputation:
0
º¢í¸ò¾¢ý ÀíÌ
¸¡ðÊø ź¢òÐ Åó¾ º¢í¸Óõ, ÁüÈ Å¢Äí̸Ùõ ´Õ¿¡û ÜÊÉ ¾¡í¸û ºÁ¡¾¡ÉÁ¡ö Å¡úóÐ ÅÕžü¸¡¸, §Åð¨¼Â¢ø ¸¢¨¼ì¸¢È¨Å¸¨Ç ±ø§Ä¡Õõ ºÁÁ¡öô Àí¸¢ðÎì ¦¸¡ûÙÅÐ ±ýÚ ¾£÷Á¡É¢ò¾É.
´Õ ¿¡û ¦ÅûǡΠ§À¡ð¼ ŨÄ¢ø ´Õ ¦¸¡Øò¾ ¸¨ÄÁ¡ý «¸ôÀð¼Ð. ±øÄ¡ Å¢Äí̸¨ÇÔõ «Ð «¨Æò¾Ð. «ó¾ì ¸¨ÄÁ¡¨Éî º¢í¸õ ¿¡Ö ÀíÌ §À¡ð¼Ð. þÕôÀ¾¢ø ¿øÄ Àí¨¸ ӾĢø «Ð ±ÎòÐ즸¡ñÎ, "¿¡ý º¢í¸õ, «¾É¡ø þÐ ±ÉìÌò¾¡ý" ±ýÚ ¦º¡øÄ¢ÂÐ; Áü¦È¡Õ Àí¨¸ ±ÎòÐ ¨ÅòÐ, "¿¡§É ±ø§Ä¡¨ÃÔõ Å¢¼ô ÀÄÅ¡ý ±ýÚ ÜÈ¢ÂÐ; ãýÈ¡ÅÐ Àí¨¸ì ¨¸ôÀüÈ¢, "±í§¸, ¯í¸ÙìÌò н¢Å¢Õ󾡸 «¨¾ò ¦¾¡Îí¸û, À¡÷ì¸Ä¡õ" ±ýÚ §¸ð¼Ð.
<b>- Åý¨Á ¯¡¢¨Á¨Âì ¦¸¡Î츢ÈÐ.</b>
<b>
?
?</b>-
Posts: 2,148
Threads: 288
Joined: Jun 2005
Reputation:
0
«ô§À¡ «ó¾ º¢ý¸õ «¦Áâ¸ÛìÌ À¢Èó¾Ð þø¨Ä
«¦Áâì¸ý  §À¡Ä ²ý ±ñ¼¡ø «Å÷¸û ¾¡ý ƒÉ¡É¸õ §Àº¢ì¦¸¡ñÎ ¦¸¡¨Ä¸Ùõ ¦ºöÅ¡÷¸û «Ð ¾¡ý
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Posts: 2,542
Threads: 15
Joined: May 2005
Reputation:
0
<b><span style='font-size:22pt;line-height:100%'>உங்களுக்குப் பயன் தேவையா? அடுத்தவருக்கு உதவுங்கள்!! </b></span>
<b>ராமுவும் சோமுவும் நண்பர்கள். அவர்கள் இருவருக்கும் தாய் தந்தையர் மற்றும் சுற்றார் கிடையாது. இது போதாதென்று ராமுவுக்குக் கண் தெரியாது. அதேபோல் சோமுவால் நடக்க முடியாது. அவர்கள் வாழ்ந்த கிராமத்தில் கிடைத்த வேலையைச் செய்து கிராமத்தில் உள்ளோர் கொடுப்பதைச் சாப்பிட்டு வாழ்ந்து வந்தனர்.
ஒரு நாள் அவர்களுக்குச் சிறிது தொலைவில் உள்ள மற்றொரு ஊரில் நடக்கும் திருவிழா பற்றித் தெரிய வந்தது. இருவருக்கும் அங்கே போக மிகுந்த ஆசை. அந்த ஊருக்குச் செல்ல மிகுந்த தொலைவு நடக்க வேண்டும். சோமு சலிப்புடன் சொன்னான்" "என்னாலோ நடக்க முடியாது உன்னாலோ பார்க்க முடியாது. இந்த லட்சணத்தில் நமக்கு ஏன் இந்த ஆசை?"
ராமு சிறிது நேரம் தீவிரமாக யோசித்து விட்டுச் சொன்னான்: "நண்பா! யோசித்துப் பார். உன்னால் நடக்கத்தான் முடியாது. ஆனால் கூர்மையாகப் பார்க்க முடியும். என்னால் பார்க்கத்தான் முடியாது. ஆனால் வெகுதூரம் நடக்க முடியும். நீ என் தோள் மேல் ஏறிக் கொள். எனக்கு வழியைச் சொல்லிக் கொண்டே வா. நாம் இருவரும் திருவிழாவிற்குச் சென்று வரமுடியும்"
ராமுவும் சோமுவும் திருவிழாவிற்குச் சென்று வந்தார்கள்!! </b>
<b>1. நம் பலங்கள் எவை என்பதை எப்பொழுதும் உணர்ந்திருப்பது அவசியம். அவற்றைத் தகுந்த சமயத்தில் உபயோகிக்கத் தெரிய வேண்டியதும் அவசியம்
2. ஏன் நம்மால் ஒரு காரியத்தை சாதிக்க முடியாது என்று யோசிப்பதை விட எப்படி சாதிக்க முடியும் என்று யோசிப்பது அதிகப் பயன் தரும்.
3. அடுத்தவர் பலங்கள் நமக்குப் பயன் தர வேண்டுமானால் அவர்களுக்குத் தேவையான நமது பலங்களின் பயன்களை அவர்களுக்கு அளித்து உதவத் தயங்கக்கூடாது
4. முயன்றால் முடியாதது எதுவுமில்லை</b>