04-02-2006, 10:05 AM
யாழ். காரைநகர் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினர் கடந்த சில நாட்களாக சண்டைப் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தச் சண்டைப்பயிற்சிகளால் காரைநகர் பகுதி வாழ் கடற்றொழிலாளர்கள் மத்தியில் பெரும் பீதி ஏற்பட்டுள்ளது. டோராப் படகு மற்றும் நீருந்து விசைப் படகுகளில் குழுக்கள் குழுக்களாக கடற்பரப்பில் நடமாடும் சிறிலங்கா கடற்படையினரே இவ்வாறான சண்டைப் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன்போது காரைநகர் கடற்பரப்பில் பாரிய குண்டுச் சத்தங்களும், துப்பாக்கிச்சூட்டுச் சத்தங்களும், சரமாரியாகக் கேட்பதால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.
இதன்போது காரைநகர் கடற்பரப்பில் பாரிய குண்டுச் சத்தங்களும், துப்பாக்கிச்சூட்டுச் சத்தங்களும், சரமாரியாகக் கேட்பதால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.