08-15-2005, 07:03 PM
கதிர்காமரின் கொலையைத்தொடர்ந்து இலங்கை அரசியலில் பெரும் மாற்றம் வருமென்று அனைவரும் எண்ணத் தலைப்பட்டுள்ள இவ்வேளையில் அவ்வாறான மாற்றங்கள் இலங்கையில் ஏற்படுமா? அவ்வாறு எண்ணம் எமக்கு ஏற்படுமிடத்து அது எவ்வாறான தாக்கத்தை இலங்கை அரசியலில் உருவாக்கும்?. இலங்கை அரசியலில் கதிர்காமர் பெயர் சொல்லும் அளவிற்கு மிளிர்ந்ததன் பிற்பாடு அதாவது பொதுஜன ஐக்கிய முன்ணணி ஆட்சிக்கட்டிலில் ஏறியபின் 1994ம் ஆண்டு தேர்தலில் நின்று வெற்றி பெறாமலேயே தேசியப்பட்டியல் மூலம் தெரிவாகி அவரை வெளியுறவு மந்திரியாக்கியதன் மர்மம் என்ன? அவ்வாறான நிலையில் இக்கொலை யாரால், என்ன நோக்கத்திற்காக, எவ்வாறு உண்டா னது என்பனவற்றை அலசும் நோக்கில் இக்கட்டுரை தொடரப்படுகின்றது.
அடுத்து நாம் விடுதலைப்புலிகளைப்பற்றி பார்ப்போம். விடுதலைப்புலிகளால் அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் சுட்டுக்கொள்ளப்பட்டிருந்தால் அது எவ்வா றான தாக்கத்தை கொடுக்கும் என்பதை அவதானிப்போம். நேற்று இன்று அல்ல. புலிகளைப்பொறுத்த மட்டில் சந்திரிகா அரசியலில் ஜனாதிபதியாகியது தொடக்கம் கதிர்காமரின் வரலாறு தொடங்கப்பட்டுவிட்டது. அன்றிலிருந்தே புலிகளுக்கெதிரான பிரச்சார யுத்தத்தை உலகநாடுகளுக்கு பரப்புரை செய்யத் தொடங்கிவிட்டார் அமைச்சர் கதிர்காமர். எமது பார்வையில் குள்ளநரி ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவுக்கு பின்னர் இராஜதந்திர விடயத்தில் கதிர்காம ரையே எடுத்துக்கொள்ளக்கூடியதாக இருக்கும். காரணம் பாம்புக்கு தலையை யும், மீனுக்கு வாலையும் காட்டும் தந்திரம் அவரிடத்திலேயே குடிகொண்டிருந் தது. இவரின் இராஜதந்திர நகர்வுகள் அமெரிக்கைவையும், இந்தியாவையும் பகைக்காதவகையில் கொண்டுசெல்லப்பட்டது என்பது உண்மை. அமெரிக்காவு க்கு செல்லப்பிள்ளையாகவும், இந்தியாவுக்கு சொந்தப்பிள்ளையாகவும் செயற் பட்டுக்கொண்டிருந்தவர். இவர் புலிகள் பற்றிய கருத்துக்களை படுபயங்கரமாக சித்தரித்து அவர்களை பயங்கரவாதிகளாக பிரகடனப்படுத்த உலகநாடுகளுக்கு அத்திவாரம் இட்டவர். இவரது இழப்பிற்காக சந்திரிகா அம்மையார் வெளியிட்ட அறிக்கையில் விடுதலைப்புலிகள் எதற்கான அமைப்பு என்பதை உலக நாடுகளுக்கு தெரியப்படுத்திய தலைவர் என்கின்றார்.இதன் உட்கருத்து விடுதலைப்புலிகள் ஓர் பயங்கரவாதிகள் என்பதை தாமும், தமது அரசும் சொல்லச்சொல்ல உலக நாடுகள் இதைப்புரிந்து கொள்வதில்லை என்கின்ற கருத்தை பிரதிபலிப்பதாகின்றது. அத்துடன் செப்ரம்பர் 11இல் நட ந்த தாக்குதலுக்கு முன்னரே பயங்கரவாதத்திற்காக குரல்கொடுத்த பெரும்தலைவர் என புகழாரம் சுூட்டுகின்றார். இதன் முடிவு புலி களை இனிமேலும் நம்பாது பயங்கரவாதிகளாக ஏற்றுக்கொள்ளுங்கள் என்பதேயாகும். ஆனால் இக்கொலையை புலிகள் செய்திருக்க நியாயம் இல்லை என்பதை இனிப்பார்ப்போம். மேற்குறிப்பிட்டவை போன்ற காரணங்களால் கதிர்காமர் மேல் புலிகளுக்கு கோபம் இருந்தாலும் இன்றைய சுூழலில் இக்கொலையை புலிகள் செய்யக் கூடிய நிலையில் இல்லை. காரணம் கதிர்காமரால் புலிகளை பயங்கரவாதிகளாக முத்திரை குத்திவைத்திருந்த நாடுகள் பல இன்று விடுதலைப்புலிகளின் வெளிநாட்டு பயணங்களால், அவர்க ளின் நியாயபுூர்வமான கருத்துக்களால், ஏன், எதற்காக அவர்கள் ஆயுதப் போராட்டத்தை தொடக்கினார்கள் என்கின்ற விளக்கங்களினால் ஓர் தெளிவுத் தன்மையை பெற்றிருக்கின்றார்கள். பல ஆண்டுகளாக லக்ஸ்மன் கதிர்காமரால் சொல்லப்பட்டு வந்த விடயங்களும், பிரச்சார யுக்திகளும் புலிகளில் ஓர்வருட பயணத்திலேயே பிசுபிசுத்துப்போய் கதிர்காமரின் கூற்று பொய்யாகிப் போய்விட்டது. அதன் வெளிப்பாடே பயங்கரவாதிகளாக புலிகளைப்பிரகடனப் படுத்திய நாடுகளே இன்று செங்கம்பள விரிப்பு விரித்து புலிகளை வரவேற்கின்றன. ஆகவே புலிகள் உலகநாடுகளுக்கு வேண்டியவராய் இருந்த ஒரு வரை கொன்று அதன் மூலம் மீண்டும் தமது பெயர்மீது களங்கத்தை ஏற்படுத்தமாட்டார்கள். அத்துடன் உலக நாடுகள் சிங்கள அரசு பொதுக் கட்டமைப்பில் கைச்சாத்திடாதிருந்த வேளையில் அழுத்தங்களை அரசுமீது போட்டு புலிகளுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபடும் வண்ணமும் கூறிவந்தன. இதன்காரணம் புலிகளால் எதுவிதமான யுத்தநிறுத்த மீறல்களும் இடம்பெறா மல் இருந்ததே. அவ்வாறு தமது நற்பெயரை கட்டிக்காத்த புலிகள் இவரைக் கொன்று தமது பெயரை களங்கப்படுத்துவார்களா? என்கின்ற கேள்வி எழுகின் றதல்லவா?. புலிகளைப்பொறுத்தமட்டில் மொக்குத்தனமான வேலைகளில் ஈடுபடமாட்டார்கள் என்பது உண்மை. ஆகவே அவர்கள் இவரை கொலை செய்ய வேண்டிய தேவையும் இருக்கவில்லை.
அப்படியாயின் இக்கொலையை யார் செய்திருப்பார்கள் என்கின்ற வினா எழுகின்றதல்லவா?. நிச்சயமாக இக்கொலையை செய்திருக்க வாய்பதிகம் யாருக்கிருக்கின்றதென்று பார்ப்போம்.
1.சந்திரிகா
2.பொதுஜன ஐக்கிய முன்னணி உறுப்பினர்கள்
3.ஜேவிபியும் சிங்கள உறுமயா கட்சிகளின் கூட்டு.
4.இந்திய அரசின் றோ
முதலில் சந்திரிகாவில் இருந்து இக்கொலைக்கான ஆதாரங்களைத்தேடுவோம். ஓர் அமைச்சர் எந்தந்த வேளைகளில் வீடுகளில் இருப்பார், எந்தெந்த வேளை களில் வெளியில் இருப்பார் என்கின்ற விடயங்கள் அனைத்தும் தெரிந்து வைத்திருப்பார். இலங்கையின் ஜனாதிபதி என்கின்ற வகையில் இவரது அனைத்து நடவடிக்கைகளும் தெரிந்த ஒருவராக சந்திரிகா இருக்கின்றார். அத்துடன் அவரின் அரசியல் இலாபமும் இதன் உட்காரணமாகின்றது. பதவி ஆசையினால்; தொடர்ச்சியாக அவர் செயற்படுகின்றார் என்பதையே அவரின் நடவடிக்கைகளும் காட்டியவண்ணம் இருக்கின்றது. எப்போ சந்திரிகா ஆட்சி யைப்பிடித்தாரோ அப்போதே அவர் ஜனாதிபதி ஆட்சிமுறையை உடனும் மாற்றிவிடுவதாக சொன்னார். ஆனால் நடந்தது என்ன? அவரின் ஆட்சியில் இரண்டுமுறையும் ஜனாதிபதியாக இருந்து அதன் காலம் முடிவடையும் வேளையில் ஜனாதிபதி ஆட்சி முறையை மாற்றுவதற்கு முயற்சிக்கின்றார். அத்துடன் இந்த ஆண்டு ஜனாதிபதித்தேர்தலை நடாத்தாது வரும் ஆண்டு நவம்பரில் அதை நடாத்த முயற்சிக்கின்றார். ஆனால் அதற்கு தேர்தல் ஆணையகம் மறுப்புத் தெரிவித்திருக்கின்றது. உடனும் ராஜபக்சாவை கட்சித் தலைமையாக்கியதன் வெளிப்பாடானது மீண்டும் தானே பிரதம மந்திரியாக ஆட்சிசெய்வதற்கான அத்திவாரமாகும். அவ்வாறான பதவிப்பித்து பிடித்தவரால் ஏன் கொலை செய்யப்பட்டிருக்கக்கூடாது. அப்படியாயின் எப்படி நடந்திருக்கும். யாரால் நடந்திருக்கும்.
விபரங்கள் தொடரும்....
மலரினி மலரவன்
www.tamilkural.com

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->