Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கதிர்காமருக்காக சந்திரிக்கா!?!?!?!?.......
#1
செய்தி 1:
கதிர்காமர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டபின், அவசர சிகிச்சைக்காக கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது, சந்திரிக்கா தனது பாதுகாப்பையும் பொருட்படுத்தாது, அவசரமாக வைத்தியசாலைக்கு தனது காரில் சென்றதாகவும், அங்கு கதிர்காமருக்கு சிகிச்சை அழித்துக் கொண்டிருந்த வைத்தியர்களின் கைகளைப் பிடித்து, கதிர்காமரை எப்படியாவாவது காப்பாற்றும்படி கதறி அழுததாகவும், அப்போது அங்கிருந்த ஒரு உதவி அமைச்சர் ஊடகங்களுக்கு தெரிவித்திருக்கிறார்.

செய்தி 2:
கடந்த இலங்கையின் தேர்தல் முடிவடைந்தபின், பிரதமர் பதவிக்காக சந்திரிக்காவினால் கதிர்காமர் முன்மொழியப்பட்டிருந்தார்.

சந்திரிக்கா, கதிர்காமர் மீதான இந்த அன்பு/பாசம்/பரிவுக்கு காரணம் என்னவென்று அறியும் பொருட்டு, இச்செய்திகள் தொடர்பாக சில தகவல்களை, சிலரிடம் பெற்றேன்.....

..... இங்குள்ள சில இணையத்தளங்கள் கூறுவது போல, சந்திரிக்காவிற்கு கதிர்காமரை நீலன் திருச்செல்வம்தான் அறிமுகப்படுத்தியது என்பது உண்மைக்குப் புறம்பான தகவலே! ஆனால் நீலம் திருச்செல்வம்தான் கதிர்காமர் வெளிவிவகார அமைச்சராக பதவியேற்றபின், கதிர்காமரை இயக்கிய பிரதான மனித இயந்திரமாக இருந்தார் என்பது வேறுவிடயம்! கதிர்காமருக்கும், சந்திரிக்காவிற்கும் சிறுவயது முதலே நட்பு இருந்ததாகவும், பின் காலம் செல்லச் செல்ல அவர்களிடையேயான உறவு சாதாரண நட்புக்கு அப்பாற்பட்டதாக மாறியதாம். சந்திரிக்கா பிரான்சில் படித்துக் கொண்டிருந்த காலங்களில், கதிர்காமர் இலண்டனில் இருந்திருக்கிறாராம், இக்காலகட்டத்தில் இவர்களிடையேயான உறவு ஒரு காதலர்களை ஒத்ததாகத்தானாம் இருந்தது. இவர்களின் நட்பு பல அக/புற அழுத்தங்களால் திருமணத்தில் முடியாமல் பின், சந்திரிக்கா வியஜ குமாரணதுங்காவையும் காதலித்து மணமுடித்தது வேறு விடயம்.

கதிர்காமரை சந்திரிக்கா, பிரதமர் பதவிக்கு முன்மொழிந்தபோது, தற்போது பிரதமராகவிருக்கும் ராஜபக்ஸவும், அவர் ஆதரவாளர்களும் மூர்க்கமாக எதிர்தார்கள். ஆனால் அதற்கு சந்திரிக்கா அடிபணியவில்லையாம். பின் புத்த மகாநாயக்கர்கள் தங்களது கடும் எதிர்ப்பை சந்திரிக்காவிற்கு தெரிவித்ததாகவும், ஒரு பிறப்பால் தமிழரும், கிறிஸ்தவருமான ஒருவருக்கு பிரதமர் பதவி வழங்கக் கூடாதென்று உறுதியாகக் கூறி விட்டார்களாம்! இல்லை, அப்படி வழங்குவதாயின் கதிர்காமர் புத்த மதத்திற்கு மாறவேண்டும் என்ற நிபந்தனையை விதித்தார்களாம். அதற்கும் கதிர்காமர் அரை மனத்துடன் சம்மதம் தெரிவித்தாராம்! ஆனால் பிரதமர் பதவிக்காக, கட்சியானது உடையக்கூடிய சந்தர்ப்பம் தோன்றியமையினால், சந்திரிக்காவினால் ராஜபக்ஸவே பின் பிரதமராக்கப்பட்டாராம்.

இவ்வாறு இணைந்தும்/இணையாத காதல் கிழ சிட்டுக்களின் காவிய வரலாற்றை சிங்கள, இலங்கை வரலாற்றாளர்கள் நூலாக்கினால், சரித்திரத்திலுள்ளவாறான இன்னொரு மாகாவம்சமோ, சுழுவம்சமோ, சூழவம்சமோ தோன்றலாம்.
" "
Reply
#2
Quote:ஒரு பிறப்பால் தமிழரும், கிறிஸ்தவருமான ஒருவருக்கு பிரதமர் பதவி வழங்கக் கூடாதென்று உறுதியாகக் கூறி விட்டார்களாம்! இல்லை, அப்படி வழங்குவதாயின் கதிர்காமர் புத்த மதத்திற்கு மாறவேண்டும் என்ற நிபந்தனையை விதித்தார்களாம். அதற்கும் கதிர்காமர் அரை மனத்துடன் சம்மதம் தெரிவித்தாராம்

அது சாகமுன்னம்..... செத்தாப் பிறகு புத்த மதத்தவனாகத்தான் அவர் தனது பயணத்தை முடித்திருக்கிறார். கிறீஸ்தவரான அவர் உடல் புதைக்கப் பட்டிருக்கவேணும் ஆனால் புத்தமத முறைப்படி பிக்குக்களின் பிரித்தின் ஓதுதலின் பின் எரிக்கப்பட்டிருக்கிறது.

சிங்களவனுக்காக என்னவெல்லாம் செய்திச்சு மனிசன். செத்தாப்பிறகு ஒரு ஆறு அடி நிலம் கூடக்கிடைக்கேல்ல செய்தபாவம்...
::
Reply
#3
நான் இப்பகுதியில் எழுதிய கருத்து 1 மாயமாக மறைந்துவிட்டது!

"கருத்துக்களில் மற்றம்" பகுதியிலும் எந்தக் குறிப்புக்ளும் இல்லை.

இத்தோடு 2வது முறையாக தடயங்கள் எதுவும் இல்லாமல் மாயமாக மறைதல் நடந்திருக்கு...
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)