Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அதிர்ச்சி ஆதாரத்தில் உறைந்த லண்டன்
#1
உலகத்தில் தலைசிறந்த போலீஸ் படை என்று ஸ்காட்லாந்து யார்டைச் சொல்வார்கள். துப்பறிவதில் மட்டுமில்லை... மனித உரிமைகளை மதிப்பதிலும் அவர்கள் நம்பர் 1. ஆனால், லண்டன் குண்டு வெடிப்புகளைத் தொடர்ந்து அந்த தலைசிறந்த போலீஸ் படை அடிக்கடி தலைகுனிய நேரிடுகிறது.

கடந்த ஜூலை 21ம் தேதி லண்டனில் நான்கு இடங்களில் இரண்டாவது தடவையாக மனித வெடிகுண்டுகள் மூலம் தாக்கும் முயற்சி நடந்தது. குண்டுகள் சரியாக வெடிக்காததால் மனித வெடிகுண்டுகளாக செயல்பட்டவர்கள் தப்பி ஓடினர்.

இப்படி மனித வெடிகுண்டாக செயல்பட்ட ஒருவரை மறுநாள் காலை ரயிலில் சுட்டுக் கொன்றதாக போலீஸ் அறிவித்தது. உலகமெங்கும் பரபரப்பு ஏற்பட,

அன்று இரவுக்குள் கொல்லப்பட்டவரின் அடையாளம் தெரிந்தது. போலீஸ் எதிர்பார்த்த மாதிரி அவர் ஆசியக் கண்டத்துக்காரரோ, முஸ்லிமோ இல்லை. அவரது பெயர் ஜீன் சார்லஸ் டி மெனெசஸ். பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர். எலெக்ட்ரீஷியன் வேலை பார்த்த அவர் கடந்த மூன்று ஆண்டுகளாக லண்டனில் தங்கியிருந்தவர் என்று தெரிந்தது.

தீவிரவாதி என்று தவறாகக் கருதி அவர் சுடப்பட்டதற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட போலீஸ், 'அவரது நடத்தையும், உடையும் சந்தேகத்துக்கு இடமளிப்பதாக இருந்தது. போலீஸ் அவரை அணுகியபோது அவர் ஒத்துழைக்கவில்லை. போலீஸாரின் ஆணைகளுக்கு அடிபணியவில்லை. அதனாலேயே சுட நேர்ந்தது. மனித வெடிகுண்டு என்று ஒருவரைக் கருதும் போது அவரைச் சுடுவதைத் தவிர வேறு வழியில்லை. இந்த தவறுக்காக போலீஸின் கண்டதும் சுடும் அணுகுமுறை மாறாது' என்றும் அறிவித்தது.

இருநாட்டு உறவுகளையே பாதிக்கும் அளவுக்கு பிரேசில் நாட்டில் பிரிட்டனை எதிர்த்துப் போராட்டங்கள் நடக்க, இந்த விவகாரத்தை போலீஸ் மீதான புகார்களை விசாரிக்கும் சுயேச்சையான ஆணையத்தின் விசாரணைக்கு அனுப்பியது இங்கிலாந்து அரசு.

<b>இந்த ஆணையத்துக்கு கிடைத்த ஆதாரங்களை ஐ.டி.வி. என்ற நியூஸ் சேனல் கடந்த புதன்கிழமை அம்பலமாக்கியது. 'செய்த தவறை மறைக்க போலீஸார் பச்சையாக புளுகுவார்கள்... அது ஸ்காட்லாந்து யார்டாக இருந்தாலும் சரி' என்று அந்த ஆதாரங்கள் வெளிச்சம் போட்டிருக்கின்றன.</b>


<i>'இரண்டாவது லண்டன் தாக்குதல்களின் போது ஷெப்பர்டு புஷ் பகுதியில் வெடிக்காமல் இருந்த குண்டை போலீஸார் சோதித்தனர். அங்கு அவர்களுக்கு ஹ¨ஸைன் ஓமன் என்பவனது உடற்பயிற்சிக் கூட அடையாள அட்டை கிடைத்தது. அதிலிருந்த விவரங் களை வைத்து அவன் தெற்கு லண்டனில் இருக்கும் ஸ்கோடியா ரோடு பகுதி அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தங்கியிருக்கிறான் என தெரிந்தது. கண்காணிப்பு வீடியோ கேமராக்களில் கிடைத்த உருவத்தை வைத்து அவனைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டது.

மறுநாள் காலை அந்த ஏரியா அடுக்கு மாடி ஒன்றிலிருந்து ஜீன் சார்லஸ் வெளியே வருகிறார். ஹ¨ஸைனின் உருவத்தோடு அவர் பொருந்தியிருந்தார்.


அங்கு ரகசிய கண்காணிப்பு மேற்கொண்ட அதிகாரி தகவல் தர, உடனே ஜீனை போலீஸார் பின் தொடர்ந் தனர். ஒரு பஸ்ஸில் ஏறி ஸ்டாக்வெல் சுரங்க ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்தார் ஜீன். அவர் பதற்றமாக இருந்தார். தடிமனான மழைக்கோட் அணிந்திருந்ததால் அதற்குள் பெல்ட்பாம் இருக்கும் என்று போலீஸ் சந்தேகப்பட்டது.

பஸ்ஸிலிருந்து இறங்கியதும் வேகமாக ரயில்வே ஸ்டேஷனுக்கு ஓடிய அவர், அங்கு டிக்கெட் கவுன்ட்டர் அருகில் இருந்த தடுப்பைத் தாண்டிக் குதித்து ஓடினார். அவசரமாக ஒரு ரயிலில் ஏறினார். இதற்குள் அங்கு தயாராக வந்திருந்த ஆயுதப்பிரிவு போலீஸார் ரயிலின் கதவு மூடுவதற்குள் அதில் ஏறினர். 'போலீஸ்' என்று சத்தமிட்டபடி அவர்கள் போனபோது எழுந்து அவர்களை நோக்கி வந்தார் ஜீன். அவர் குண்டை வெடிக்க வைத்துவிடுவாரோ என்று அவசரமாக அவரை மடக்கி போலீஸார் சுட்டனர்.'</i>
<b>இதுதான் ஸ்காட்லாந்து யார்டு தரும் விளக்கம். ஆனால், கிடைத்த ஆவணங்கள் எல்லாமே இதை மறுக்கின்றன.</b>


<span style='color:darkseagreen'>அன்று ஜீன் அணிந்திருந்தது சாதாரண மெல்லிய கோட்தான். பதற்றமாக அவர் வரவில்லை. தனது அபார்ட்மென்ட்டில் இருந்து ஜீன் இறங்கியபோது, அதைக் கண்காணித்த போலீஸ் அதிகாரி பாத்ரூம் போயிருந்தார். அவர் திரும்பி வரும்போது ஜீனின் முதுகைத்தான் பார்க்க முடிந்தது. 'இது தேடப்படும் தீவிரவாதியாக இருக்கலாம்' என்று யூகித்த அவரால் ஜீனை கண்காணிப்பு கேமராவில் படம்பிடிக்க முடியவில்லை. இருந்தாலும் தனது சந்தேகத்தை மேலிடத்துக்கு தெரிவித்திருக்கிறார்.

உடனே ஜீனை பின்தொடர ஆள்போட்டு விடுகிறார்கள். இதற்கிடையே ஆயுதப்படைப் பிரிவான CO-19 க்கு தகவல் போகிறது. அவர்கள் 'சிவப்புக் குறியீடு தந்திரம்' என ஒரு ஆக்ஷனைத் தீர்மானித்து விடுகிறார்கள். ஜீன் பஸ்ஸை விட்டு இறங்கி ரயில்வே ஸ்டேஷனுக்கு போகும்போது அங்கு ஆயுதப்படை போலீஸார் கையடக்க துப்பாக்கிகளை மறைத்து வைத்துக் கொண்டு பிளாட்பார்மில் நிற்கிறார்கள்.

ஜீனின் நடையில் பதற்றம் இல்லை. ஸ்டேஷனுக்குள் நுழைந்த அவர், அங்கு ஸ்டாண்டில் இருக்கும் இலவச நியூஸ் பேப்பரை எடுத்துக்கொண்டு நிதானமாக நகர்ந்து டிக்கெட் கவுன்ட்டர் அருகில் இருக்கும் தடுப்பை எல்லோரும் போல இடையில் புகுந்து கடக்கிறார். தாண்டவில்லை. அப்புறம் நகரும் படிகளில் நின்று கீழே இறங்குகிறார். பிளாட்பார்மைத் தொடும்போது அவர் பயணிக்க வேண்டிய திசையில் ரயில் கிளம்பத் தயாராக இருப்பது தெரிகிறது. குண்டுவெடிப்புகளுக்கு பிறகு ரயில்களின் வருகை மற்றும் புறப்பாடு தாறுமாறாக இருக்கவே, அடுத்த ரயில் எப்போது வரும் என்பதே நிச்சயமில்லாத நிலை... ரயிலை விட்டுவிடக் கூடாது என்று அவர் அவசரமாக ஓடிப் போய் ரயிலில் ஏறுகிறார். அவர் செய்த ஒரே தவறு இதுதான்! ஆனால், ஏறியதும் வாசல் ஓரமாக இருந்த காலியிடத்தில் உட்கார்ந்து விடுகிறார்.

இது எல்லாமே கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருக்கிறது. அவர் ஏறிய சில நொடிகளில் அவரைப் பின்தொடர்ந்த போலீஸ் காரர்களில் ஒருவர் ஏறுகிறார். அவரது ரகசியப் பெயர் <i>ஹோட்டல்9</i>. அவர் ஜீனைப் பார்த்ததும், 'ஆள் இங்கே இருக்கிறான்' என்று சத்தமாக சொல்லிக்கொண்டே ஜீனை நோக்கி கைகாட்டுகிறார். ஜீன் எதுவும் புரியாமல் எழுந்திருக்கிறார். <i>ஹோட்டல்9, 'போலீஸ்' </i>என்று சொன்னபடியே ஜீனின் கைகளை மடக்கி அவர் உட்கார்ந்திருந்த ஸீட்டில் தள்ளுகிறார். அடுத்த நொடி... நான்கு ஆயுதப் படை போலீஸார் உள்ளே நுழைந்து சுடுகிறார்கள். ஒரு அடி நெருக்கத்தில் வைத்து சுட்டதில் ஏழு குண்டுகள் தலையிலும், ஒன்று தோள்பட்டையிலும் பாய்கிறது (இவ்வளவு நெருக்கத்தில் சுட்டும் மூன்று குண்டுகள் குறிதவறி ரயில் ஸீட்டில் பாய்ந்திருக்கின்றன. யானைக்கும் அடிசறுக்கும்?). 'தான் சாகிறோம்' என்பதைப் புரிந்து கொள்ளக்கூட அவகாசம் இல்லாமல் ஜீன் செத்துப்போகிறார்.

அதன்பிறகு அவரது முகவரி அடையாளங்களைப் பரிசீலித்த போலீஸாருக்கு ஒருமணி நேரத்திலேயே தப்பு நடந்தது தெரிந்துவிட்டது. ஆனால், அவர்கள் உடனே ஜீனின் ஃபிளாட்டுக்கு போய் அங்கிருந்த அவரது உறவினர்களை அழைத்து வந்து ஒரு ஹோட்டல் அறையில் அடைத்து விட்டனர். அந்த அறையில் இருந்த போனையும் துண்டித்து விட்டனர். அவர்கள் யாரிடமும் பேசாமால் இருக்கவே இந்த உஷார் ஆக்ஷன். கடைசியில் வக்கீல்கள் வந்தபிறகே அவர்களை விடுவித்தனர். இப்படி கடத்தல் வேலைகளை செய்ததாக இதுவரை ஸ்காட்லாந்து யார்டை யாரும் திட்டியதில்லை.

''இது விசாரிக்காமலே கொடுத்த மரண தண்டனை'' என மனித உரிமை அமைப்புகள் குமுற, ஜீனின் குடும்பத்தி னர், ''துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட போலீஸார் மீது கொலைவழக்கு போட்டு அவர்களை சிறையில் அடைக்க வேண்டும்'' என்று போராடுகின்றனர். இதற்கு பிரிட்டனிலும் ஆதரவு பெருகி இருக்கிறது என்பது தான் விசேஷம்!

- அகஸ்டஸ்
vikatan
</span>
Reply
#2
ஆஆ <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<b> .. .. !!</b>
Reply
#3
ஓஓஓ <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> .. தகவலுக்கு நன்றி வசி அண்ணா..
Reply
#4
vasisutha Wrote:''இது விசாரிக்காமலே கொடுத்த மரண தண்டனை'' என மனித உரிமை அமைப்புகள் குமுற, ஜீனின் குடும்பத்தி னர், ''துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட போலீஸார் மீது கொலைவழக்கு போட்டு அவர்களை சிறையில் அடைக்க வேண்டும்'' என்று போராடுகின்றனர். <b>இதற்கு பிரிட்டனிலும் ஆதரவு பெருகி இருக்கிறது என்பது தான் விசேஷம்! </b>

- அகஸ்டஸ்
vikatan

தகவலுக்கு நன்றி வசி. இக்கட்டான சூழ்நிலையின் போது இழக்கப்பட்ட உயிர் <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#5
vasisutha Wrote:உலகத்தில் தலைசிறந்த போலீஸ் படை என்று ஸ்காட்லாந்து யார்டைச் சொல்வார்கள். துப்பறிவதில் மட்டுமில்லை... மனித உரிமைகளை மதிப்பதிலும் அவர்கள் நம்பர் 1. ஆனால், லண்டன் குண்டு வெடிப்புகளைத் தொடர்ந்து அந்த தலைசிறந்த போலீஸ் படை அடிக்கடி தலைகுனிய நேரிடுகிறது.


<b>இந்த ஆணையத்துக்கு கிடைத்த ஆதாரங்களை ஐ.டி.வி. என்ற நியூஸ் சேனல் கடந்த புதன்கிழமை அம்பலமாக்கியது. 'செய்த தவறை மறைக்க போலீஸார் பச்சையாக புளுகுவார்கள்... அது ஸ்காட்லாந்து யார்டாக இருந்தாலும் சரி' என்று அந்த ஆதாரங்கள் வெளிச்சம் போட்டிருக்கின்றன.</b>

- அகஸ்டஸ் (vikatan)
<span style='font-size:25pt;line-height:100%'>
இனியும் அப்பாவிகள் பாதிக்கப்படாமல் இருக்க
தவறிழைத்தோர் தண்டிக்கப்பட வேண்டும்.</span>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)