Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சினிமா மக்களைக் கெடுக்கவில்லை..மக்களே கெடுகிறார்கள்..!
#1
<b>தமிழகத்தை தமிழரே ஆள சட்டம் கொண்டு வர வேண்டும்: சரத்குமார்</b>

திருச்சி:

தமிழகத்தை தமிழர்தான் ஆள வேண்டும், தமிழில் படிப்பது அவசியம் என சட்டம் கொண்டு வர வேண்டும் நடிகர் சரத்குமார் கூறினார்.

திருச்சி காவேரி மகளிர் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் மாணவிகள் மத்தியில் பேசிய சரத்குமார், பின்னர் அவர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

சரத்குமார் பேசுகையில், தமிழகத்தில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். விஜயகாந்த் என்றில்லை, தனுஷ் கூட கட்சி தொடங்கலாம். அதை யாரும் தடுக்க முடியாது.

விஜயகாந்த்துக்கு எனது வாழ்த்துக்கள். செப்டம்பர் 14ம் தேதி அவர் நடத்தப் போகும் மாநாட்டுக்குப் பின்னர்தான் அவரது புதிய கட்சி குறித்த விவரங்கள் தெரிய வரும். என்னைப் பொருத்தவரை எனது இறுதி மூச்சு வரை திமுகவில்தான் இருப்பேன், கட்சியை விட்டு விலக மாட்டேன்.

எனக்கு பிரதமர், முதல்வர் போன்ற பதவிகளில் விருப்பம் இல்லை (அட..). ஆனால் சிலருக்கு அந்த ஆசை உள்ளது. நான் கடைசி வரை மக்கள் தொண்டனாகவே இருப்பேன். பதவியில் அமர்ந்துதான் எதையும் செய்ய வேண்டும் என்பதில்லை.

<b>நான் நிஜ வாழ்வில் புகை பிடிப்பதில்லை, மது அருந்துவதில்லை. அனைவருக்கும் சொந்த புத்தி உள்ளது. எனவே சினிமாவைப் பார்த்து மக்கள் கெட்டுப் போகிறார்கள் என்று கூறுவது தவறான வாதம். சினிமாவில் பல நல்ல விஷயங்களும் உள்ளன.</b>

அரசியலைப் பொருத்தவரை எனது ரோல் மாடல் கருணாநிதிதான். சினிமாவில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.

தமிழகத்தில் யார் தமிழர் என்பதில் பெரும் குழப்பம் உள்ளது. தமிழுக்கு இங்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. தமிழர்தான் தமிழகத்தை ஆள வேண்டும், தமிழில் படிப்பது அவசியம் என சட்டம் கொண்டு வர வேண்டும்.

நியூ பட விவகாரம் இந்த அளவுக்குப் போனதற்கு, தணிக்கை குழுவில் உள்ள குறைபாடுகளே காரணம். நாடு முழுவதும் ஒரே மாதிரியான விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

சென்னையில் தணிக்கை சான்றிதழ் கிடைக்காவிட்டால் மும்பைக்குப் போய் சான்றிதழை பெற்று விட முடிகிறது. இந்த நிலை மாறும் வரை நியூ போன்ற படங்கள் வந்து கொண்டுதான் இருக்கும்.

இதேபோல தனியார் தொலைக்காட்சிகளுக்கும் தணிக்கை இருக்க வேண்டும்.

வாங்கிய கடன் தொகையைத் திருப்பித் தர முடியாமல் தயாரிப்பாளர் காஜாமைதீன் தற்கொலைக்கு முயன்றது சுத்த கோழைத்தனம். யாருமே, கடனை வாங்குங்கள் என்று யாரையும் வற்புறுத்துவது இல்லை. நாமாக சென்று கடன் வாங்கி விட்டு பின்னர் அதைத் திருப்பித் தர முடியாமல் தவிப்பதை தவிர்க்க வேண்டும்.

கடன் வாங்கும் முன்பே அதுகுறித்து யோசிக்க வேண்டும். நடிகர் அஜீத் மீதும், பின்னர் இன்னொருவர் மீதும் காஜா மைதீன் புகார் கூறினார். அவர்களது மனம் என்ன பாடுபட்டிருக்கும் என்பதை அவர் உணர்ந்திருப்பாரா? பிரச்சினை வந்தால் அதை சந்தித்தே ஆக வேண்டும். மாறாக தப்பிக்க நினைப்பது தவறு என்றார் சரத்குமார்.

தற்ஸ்தமிழ்.கொம்
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
Quote:நான் நிஜ வாழ்வில் புகை பிடிப்பதில்லை, மது அருந்துவதில்லை. அனைவருக்கும் சொந்த புத்தி உள்ளது. எனவே சினிமாவைப் பார்த்து மக்கள் கெட்டுப் போகிறார்கள் என்று கூறுவது தவறான வாதம். சினிமாவில் பல நல்ல விஷயங்களும் உள்ளன
பிழைக்கத்தெரிந்தவர்கள் பிழைத்துக்கொள்கிறார்கள். அவர்கள் உறுதியா இருக்கிறார்கள். தல வாழு என்று ரசிகர்கள் தான் சீரழியினம். :?
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#3
தகவலுக்கு நன்றி
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)