Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பாசிசவாத சின்னமும் பிள்ளையார் சுளியும்.
#1
பாசிசவாதத்தின் சின்னமான சுவாஸ்ரிக்கா (swastika) விற்கும் பிள்ளையார் சுளிக்கும் என்ன தொடர்பு?

உங்களுக்கு தெரிந்தவற்றை அறிந்தவற்றை எழுதுங்கள் இணையுங்கள்.
Reply
#2
ஆரிய அடிப்படை வாத்தின் சின்னம் தான் இந்த swastik எண்டு அண்மையில படித்தேன்... ஜேர்மனியர் ஏன் ரஸ்யர்கள் கூட தாங்கள் ஆரியர் எண்டு சொல்லிக்கொள்கிறார்கள்...
::
Reply
#3
அதென்ன "ரஸ்யர்கள் கூட" என்றீங்கோ ஒருமாதிரி? :wink:

ரஸ்யர்கள் தம்மை viking இன் வந்தேறு குடிகளாக பாக்கிறார்கள் எனவும் கேள்விப்பட்டேன்.

அப்ப உந்த களியாண வீட்டு வீடியோவில எல்லாம் "பிள்ளையார் சுளி போட்டு..." எண்டு அமரர் சீர்காளி கோவிந்தராசன் பாட்டு போடுறது எல்லாம் எங்கடை தலையில நாங்களே மிளகாய் அரைக்கிற மாதிரி என்றியள்?
Reply
#4
kurukaalapoovan Wrote:அதென்ன "ரஸ்யர்கள் கூட" என்றீங்கோ ஒருமாதிரி? :wink:

ரஸ்யர்கள் தம்மை viking இன் வந்தேறு குடிகளாக பாக்கிறார்கள் எனவும் கேள்விப்பட்டேன்.

அப்ப உந்த களியாண வீட்டு வீடியோவில எல்லாம் "பிள்ளையார் சுளி போட்டு..." எண்டு அமரர் சீர்காளி கோவிந்தராசன் பாட்டு போடுறது எல்லாம் எங்கடை தலையில நாங்களே மிளகாய் அரைக்கிற மாதிரி என்றியள்?

பாடின சீர்காளியை ஏன் சீண்டுறீங்கள்... பாட்டு போடுறவையைச் சொல்லுங்கோ... வரவேற்பு இருக்கும் வரை பிள்ளையார் சுளி இல்லை.... பட்டை நாமமும் போடப்படும் :wink:


சரி ஒருக்கா இதையும் பாருங்கோ
http://www.yarl.com/forum/viewtopic.phpt=3...5097fbe68ab74bf
::
Reply
#5
சீர்காளியை நான் சீண்டேல்லை. எங்கடை சமுதாயத்தில எந்தளவுக்கு வெட்கித்தலை குனியவைக்கக்கூடிய அறியாமை மதத்தின் பெயரால் புரையோடிக்கிடக்கிறது.

எமது அன்றாட வாழ்கையில் எம்மை நாமே ஏமாற்றும் எத்தைனையே நடைமுறைகள் பழக்கவழக்கங்களிலிருந்து தெளிவு தேவையாக உள்ளது, விளக்கம் விளிப்புணர்ச்சி அடைய வேண்டியுள்ளது.


அந்த இணைப்பு வேலை செய்யவில்லை.
Reply
#6
பாசிசத்தின் சின்னம் சுவஸ்திகா அல்ல.

ஜேர்மனிய நாசிகள் தங்கள் சின்னமாக பயன்படுத்தியது சுவஸ்திகாவினை சரித்து வைத்ததாற் போலுள்ள வடிவம்.

நாசிகளுக்கும் சுவஸ்திகாவுக்கும் இடையேயுள்ள பிணைப்பு ஆரியர் என்ற கோட்பாட்டினூடாக வந்திருக்கலாம்.

சீர்காழி பாடும் பிள்ளையார் சுழி போட்டு எந்தௌ சுவஸ்திகாவை இல்லை 'ஓம்' அல்லது 'உ'
\" \"
Reply
#7
பிள்ளையார் சுளி இடமிருந்து வலமாகவும், நாசிகளின் சின்னம் வலம் இருந்து இடமாகவும் இருக்கும். கிட்லருக்கு பிள்ளையார் சுளி பிடித்துப்போக இதை பயன்படுத்தினார் தனது சின்னமாக, ஆனால் அதை மறுபுறமாக மாற்றிப்போட்டுவிட்டார், பிள்ளையார் சுளிதான் சரியானது என்றும் அது வாழ்வில் ஏறு முகத்தை காட்டுகிறது என்றும். நாசியின் சின்னம் இறங்கு முகத்தை காட்டுகிறது என்றும், அதனால்தான் கிட்லர் தோற்றுப்போனார் என்றும் படித்திருக்கிறேன். ஆனால் உன்மையா பொய்யா என நான் அறியேன் பலாப்பழமே. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
.

.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)