Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சங்ககாலக் கொற்றவை: சமூகவியல் ஆய்வு
#1
சங்ககாலக் கொற்றவை: சமூகவியல் ஆய்வு
சிலம்பு நா. செல்வராசு

கொற்றவை பற்றிச் சங்க இலக்கியங்கள் தரும் தகவல்கள் மிகக் குறைவு. கொற்றவை என்ற சொல்லாட்சியே சங்க இலக்கியங்களில் இல்லை. ''பெருங்காட்டுக் கொற்றிக்குப் பேய் நொடித்தாங்கு'' (கலி.89) எனவும் ''நெற்றி விழியா நிறைத்திலகம் இட்டாளே கொற்றவைக் கோலங் கொண்டு ஓர் பெண்'' (பரி.11) எனவும் வருவன சங்கப் பிற்காலச் சான்றுகளாகும். அவ்வாறே, கொற்றவைச் சிறுவன் (திருமுருகு.250) என முருகன் சுட்டப்பெறும் ஓரிடத்துக் கொற்றவையின் பெயர் குறிக்கப்பட்டுள்ளது. ''விறல் கெழு சூலி'' (குறு. 218) எனவும் ''உருகெழு மரபின் அயிரை'' (பதி. 79,90) எனவும் குறிக்கப்பெறும் தொடர்கள் கொற்றவையைக் குறிப்பிடுவதாகக் கூறுவர் (வித்தியானந்தன், 1954). நெடுநல் வாடையில் போருக்குத் தலைவனைச் செலவுவிடுத்த தலைவியின் தோழியர் தலைவன் வெற்றியுடன் மீள வேண்டும் என்று வெற்றித் தெய்வத்தை வணங்கியுள்ளனர் எனவும் வணக்கத்தைப் பெறும் அவ்வெற்றித் தெய்வம் கொற்றவை எனவும் நச்சினார்க்கினியர் உரை விளக்கம் செய்துள்ளார். ஆயின் நெடுவல்வாடை மூலத்தில் (168) கொற்றவை என்ற பெயர் இடம் பெறவில்லை. அச்சம் தரத்தக்க இத்தெய்வம் வெற்றிக்குரியவள் என்பதும் அவள் முருகனது தாய் என்பதும் அவள் மலை/காடு வாழ் தெய்வம் என்பதும் மேல் குறிப்புகள் தரும் தகவல்கள் ஆகும். இவைதவிரக் கொற்றவை வழிபாடு பற்றிய வேறு செய்திகளைச் சங்க இலக்கியங்கள் வழி அறிய இயலவில்லை.

ஆயின், தொல்காப்பியம் ''கொற்றவை நிலை'' என்று புறத்திணைத் துறை ஒன்றைச் (தொல். பொருள். 62) சுட்டியுள்ளது. ''மறங்கடைக் கூட்டிய குடிநிலை சிறந்த கொற்றவை நிலையும் அத்திணைப் புறனே'' என்பது அந்நூற்பா. வெட்சித் திணைக்கு இலக்கணம் கூறி அவற்றின் துறைகளை விரித்தோதிய தொல்காப்பியர் அத்துறைகளோடு கொற்றவை நிலையையும் ஒன்றாகத் தனியே கூறியுள்ளார்.

கொற்றவை வழிபாடு பற்றிய விரிவான விளக்கங்கள் சிலப்பதிகாரத்து வேட்டுவ வரியுள்தான் முதன்முதலில் பதிவாகி உள்ளன. ஆறலை கள்வர்கள் என்று சுட்டப்படும் எயினர் வணங்கும் கடவுளாக அவள் சித்திரிக்கப் பெற்றுள்ளாள். ஆறலை கள்வராகிய எயினர் பாலை நிலத்தில் வாழ்வோராகவும் வழிபறி செய்வோராகவும் கொள்ளை அடிப்போராகவும் சங்கப் பாடல்களில் பதிவுகள் உண்டு. எயினரும் வேட்டுவரும் ஒருவராக, ஓரினத்தவராகப் பாடற்பதிவுகள் புனைந்துள்ளன. எயினர் மறக்குணம் வாய்த்தவராகவும், அவர்கள் ஆநிரை கவர்ந்துவரக் கொற்றவையை வழிபட்டதாகவும் ஆநிரை கவர்ந்து வந்தபின் தம்மைக் கொற்றவைக்குப் பலியிட்டுக் கொண்டதாகவும் வேட்டுவவரி விவரிக்கிறது. ஆநிரை கவர்தல் போரில் எயினர்க்கு வெற்றி தருபவள் கொற்றவை என்ற குறிப்பு வேட்டுவவரியின் மையமாகும்.

''தமிழிலக்கியத்தில் கொற்றவை என்பதற்கு ''ஆறலை கள்வர்களுக்குக் கொற்றம் தருபவள், வெற்றி தருபவள் என்ற பொருள் இருப்பதைக் காணலாம். பழங்கால வேட்டைத் தெய்வமே பின்னர் இப்படி மாறி இருக்கிறது. உரோமானியரின் கன்னித் தேவதையான டயானாவும் வேட்டைத் தெய்வமே. இவளே ஆற்றுத் துறைகளில் காவல் செய்பவள், காட்டு விலங்குகளையும், வேட்டுவர்களையும் காப்பவளாகக் கருதப்பட்டாள். வில்லும் அம்பும் கையில் வைத்திருப்பாள். தலையில் பிறைநிலா அணிந்திருப்பாள். தமிழிலக்கியத்தில் வரும் கொற்றவையும் டயானாவும் சிலவற்றில் ஒற்றுமையுடன் திகழ்வதை உணரமுடியும்... இனக்குழு மக்களின் வேட்டைக்குக் கொற்றம் தருபவளான கொற்றவையே பின்னர் வேந்தர்க்கும் வீரர்க்கும் கொற்றம் தருபவளாகக் கொண்டாடப்பட்டாள்'' (பி.எல்.சாமி 1980:64)

கொற்றவை வழிபாடு ஒருவிதச் செவ்வியல் பண்போடு வேட்டுவ வரி எனும் பெயரில் சிலப்பதிகாரத்தில் இடம் பெற்றதற்கு வலுவான சமூகவியல் காரணங்கள் உண்டு (சிலம்பு நா. செல்வராசு. 2004). கொற்றவை வைதீகமதக் கடவுளாக மேனிலையாக்கம் பெற்றதற்கும் அதற்கும் முன்பு உள்ள சங்க இலக்கியங்கள் அவ்வழிபாடு பற்றி மௌனம் காத்ததற்கும் தொடர்பு உண்டு. வேட்டுவவரி விவரிக்கும் கொற்றவை வழிபாடு திடீரெனத் தோன்றியது அன்று. புராதன வேட்டைச் சமூகத்துத் தாய்வழித் தலைமையில் நிகழ்த்தப்பட்டதாக அவ்வழிபாட்டை உணர்ந்திடச் சான்றுகள் உண்டு. இது பற்றிச் சிறிது விரிவாக ஆராய்ந்திடலாம்.

தொல்காப்பியர் நிலத்தெய்வங்களாகச் சோயோன், மாயோன், வேந்தன், வருணன் ஆகியோரைக் குறிப்பிட்டுள்ளார். இத்தெய்வங்கள் திணைக் கோட்பாட்டில் எந்த அளவிற்குப் பங்களிப்பைச் செய்துள்ளன என்பதை அறிய முடியவில்லை. சேயோன் எனப்படும் முருகன் ''வெறியாடல்'' வழி நேரடியாக அகப்பொருளோடு தொடர்புபடுத்தப் பெறுகிறான். இதுபோல் ஏனைய தெய்வங்கள் அகப்பொருளோடு கொண்ட நேரடித் தொடர்பு அறியுமாறில்லை. தாய்வழித் தலைமைச் சமூகம் நிலவிய காலக்கட்டங்களில் இந்த நிலத் தெய்வங்கள் எவையாக இருந்தன என்பதையும் அறியுமாறில்லை. ஆனால் தொல்காப்பியர் ''வெட்சி தானே குறிஞ்சியது புறனே'' (தொல். பொருள். 59) என்ற நூற்பாவழி மலை சார்ந்த நிலப்பகுதியின் அகம், குறிஞ்சியாகவும் புறம் வெட்சியாகவும் இருந்துள்ளதைக் குறிப்பிட்டுள்ளார். வெட்சியின் கடவுள் ''கொற்றவை'' என்பது முன்னர்க் கூறப்பட்டது. இதற்கு உரையெழுதும் இளம்பூரணர் கொற்றவைநிலை என்றதனாலே, குறிஞ்சிக்கு முருகவேளேயன்றிக் கொற்றவையும் தெய்வம் என்பது பெற்றாம்'' என்று விவரிப்பர். நச்சினார்க்கினியர் ஒருபடி மேலே சென்று ''வருகின்ற வஞ்சிக்கும் கொற்றவை நிலை காரணமாயிற்று, தோற்றோர்க்குக் கொற்றம் வேண்டியும் வென்றோர்க்கும் மேற் செல்லுங்காற் கொற்றம் வேண்டியும் வழிபடுவராதலின்'' என்று விளக்கம் கூறுவர்.

ஆகத் தொல்காப்பியத்தின்படியும் அதன் உரைகள் அடிப்படையிலும் கொற்றவை குறிஞ்சி நிலத்திற்குரிய கடவுளாக விளங்கியமையை அறிய முடிகிறது. ஆனால் பின்னாளைய இலக்கண நூல்களும், இலக்கியங்களும் குறிப்பாகப் பரணி போலும் சிற்றிலக்கியங்களும் கொற்றவை, பாலை நிலக் கடவுளாகவே விவரித்துள்ளமையை அறிய முடிகிறது. பாலை நிலம், குறிஞ்சியும் முல்லையும் திரிந்து தோன்றும் நிலப்பகுதி என்ற நில அடிப்படையில் இம்மாற்றம் ஏற்கத் தக்கதே. மலையும் காடும் வறட்சியால் திரிந்து பாலையாக மாறும்போது அந்நிலத்து விளங்கும் தெய்வமும் பாலைத் தெய்வமாகலாம் என்றாலும் அடிப்படையில் இங்கு ஓர் ஐயம் தோன்றுகின்றது. கோடைக்காலத்துப் பாலைச் சூழலில் கள்வர்களாக, வழிபறி செய்வோராக இருப்போர் அக்காலம் மாறிய பின்னர் அறவோராக மாறுவது ஏற்புடையதா? ஆண்டில் ஆறுதிங்கள் கொடியோராகவும், ஆறுதிங்கள் அறவோராகவும் விளங்கும் பண்பு புராணத் தன்மை வாய்ந்ததே தவிர உண்மையாக இருக்க வாய்ப்பில்லை.

தொல்காப்பியர், ''கொற்றவை நிலையைக்'' குறிப்பிட்டுப் பின்னர் அடுத்துக்கூறும் நூற்பா ஒன்றும் அதன் உரையும் மிகக் கவனத்துள் கொள்ளத்தக்கவை.

வெறியறி சிறப்பின் வெவ்வாய் வேலன்
வெறியாட் டயர்ந்த காந்தளும்

எனத் தொடங்குவது அந்நூற்பா (தொல். பொருள். 63). இதற்கு விளக்கம் கூறும் இளம்பூரணர் ''இதனாலே காமவேட்கையின் ஆற்றலாகிய பெண்பாற் பக்கமாகிய வெறியும், அந்நிலத்துள்ளார் வென்றி வேண்டி ஆடும் வெறியும் கொள்ளப்படும்'' என விவரித்தனர். இவ்விளக்கவுரையைச் சோம சுந்தர பாரதியார், ''தலைவியின் மெலிவுகண்ட தாயார் உண்மை உணர வேண்டி நிகழ்த்தப் பெறும் வேலனது வெறியாட்டு அகத்தைச் சேர்ந்தது; அதனின் வேறாய வெட்சியில் வரும் வெறியாட்டு, வேலன் சூடும் பூவின் பெயரால் காந்தள் எனப்பட்டது. வெட்சித்துறை வெறியாட்டில் வேலன் காந்தள் சூடி ஆடுவேன், குறிஞ்சித் துறையில் வெறியாடும் வேலன் குறிஞ்சிப் பூச் சூடுதல் மரபு'' என மேலும் விவரித்துரைப்பார்.

வெறியாடும் வேலன் அழைக்கும் தெய்வம் முருகன் என்பதே சங்க மரபு. அவ்வாறு இருக்க வெற்றி வேண்டி வெறியாடும் வேலன் முருகனை அழைத்தே வெறியாடி இருக்க வேண்டும். அங்ஙனமாயின் வெற்றிவேண்டி நிகழ்த்தப்பட்ட கொற்றவை வழிபாடு என்னாயிற்று? வெறியாட்டில் கடவுள் மாற்றம் நிகழ்ந்ததா? அல்லது வெற்றி வேண்டியே முருகனும், கொற்றவையும் வழிபடப் பெற்றனரா? அல்லது சமூக மாற்றத்தால் கொற்றவை இடத்தில் முருகன் இடம் பெற்றானா? எனும் வினாக்கள் விரிவான ஆய்விற்குரியவை.

சங்க இலக்கியங்களில் தாய்த் தெய்வத்திற்கு வெறியாடல் நிகழ்ந்தமைக்கான குறிப்புகள் உண்டு. அகநானூற்றுப் பாடல் (270) ஒன்று ''கடல் கெழு செல்வி'' எனும் தாய்த் தெய்வத்திற்கு ஆடுமகள் ஒருத்தி வெறியாட்டு நிகழ்த்தியமையை விவரிக்கிறது. இது போன்றதோர் வெறியாடலே கொற்றவைக்கும் நிகழ்ந்திருக்க வேண்டும். இதன் வளர் நிலையாகச் சாலினி நிகழ்த்திய வெறியாடலைச் சிலப்பதிகார வேட்டுவ வரியுள் காணமுடிகிறது. இக்கட்டுரையின் நிறைவாக எழும் வினாக்கள் இரண்டு,

1. கொற்றவை வெறியாடலைச் சங்க இலக்கியங்கள் ஏன் பதிவு செய்யவில்லை.
2. கொற்றவை இடத்தில் முருகன் இடம் பெற்றது எவ்வாறு?

இவ்வினாக்களுக்கான விடையைச் சங்க காலத்திற்கும் முந்தைய சமூக அமைப்பில்தான் தேடவேண்டி உள்ளது. தென்னிந்தியப் பகுதிகளில் நிகழ்ந்த தொல்லியல் ஆய்வுகள் முதலியன சங்க காலத்திற்கும் முந்திய ஓராயிரம் ஆண்டுகால நிலையைப் ''பெருங்கற்படைக் காலம்'' எனச் சுட்டியுள்ளன (கா. ராஜன். 2004). சங்க கால மக்களின் வாழ்க்கையை உயர்நிலைக்கு இட்டுச் சென்றவர்கள் பெருங்கற்படைக் காலத்தைச் சேர்ந்த மக்களே ஆவார். திராவிடப் பண்பாட்டின் முதன்மைக் கூறாகிய ''இறந்தவர்களைப் புதைத்து வழிபடுகின்ற வழக்கம்'' பின்னாளில் பெருங்கற்படைச் சின்னங்களாக மாறியுள்ளன. இப்பண்பாட்டைத் தோற்றுவித்த மக்களே பெருங்கற்படைக் கால மக்கள் ஆவர். நீத்தோர் நினைவாகப் பெரும் கற்களைக் கொண்டு உருவாக்கப்பெற்ற இச்சின்னங்களையே தொல்காப்பியர் ''நடுகல்'' என இலக்கண வரையறைபடுத்தியுள்ளார். இத்தகு சின்னங்கள் விந்திய மலைக்குத் தெற்கே இந்தியத் தீபகற்பப் பகுதியில் நிறைந்து காணப்படுவதாகக் கூறும் ராஜன் (2004) தமிழகத்தில் பல்வேறு பரல் உயர் பதுக்கைகளைக் கண்டறிந்துள்ளார்.

சுமார் பத்து முதல் பதினைந்து ''டன்'' எடை கொண்ட கற்களைக் கொண்டு இச்சின்னங்கள் உருவாக்கப்பட்டுள்ளதை அறியும்போது இவற்றை உருவாக்க ஒரு சமூகமே பின்னணியில் இயங்கி உள்ளதையும் அறிய முடிகின்றது. இத்தகு நினைவுச் சின்னங்களின் வளர்நிலையை நான்கு கட்டமாக ராஜன் (2004) விளக்குவர். முதலாவது சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் பதுக்கைகள் கண்டறியப்பட்டுள்ளன. நிலத்திற்கு அடியில் கற்களைக் கொண்டு இப்பதுக்கைகள் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதை அறிய முடிகின்றது. இரண்டாவது வளர் நிலையாகக் கற்பதுக்கைகளுடன் நெடுங்கற்கள் நடப்பட்ட நிலையை அறிய முடிகின்றது. மூன்றாவதாகக் கற்பதுக்கைகளைத் தவிர்த்து நெடுங்கற்கள் நடப்பட்டுள்ளன. நான்காம் நிலையாக நெடுங்கற்கள் அளவில் சிறுத்து நடுகற்களாக நடப்பட்டுள்ளன.

இவ்வாறான பதுக்கைகளையும் நெடுங்கற்களையும் ஆராய்ந்த ராஜன் (2004) இந்நினைவுச் சின்னங்களின் பெரும்பகுதி வெட்சிப் போரில் ஆநிரை கவர்ந்து / மீட்டு (தொறுமீட்டு) மாண்ட மறவர்க்கு நடப்பட்ட நிலையைச் சங்க இலக்கியச் சான்றுகள் வழியே விரிவாக ஆராய்ந்துள்ளார். இதன்வழிச் சங்ககாலத்திற்கும் முன்பு சுமார் ஆயிரம் ஆண்டுகள் காலப் பரப்பில் வாழ்ந்த பெருங்கற்படைப்பண்பாட்டு மக்களின் வாழ்வியலின் ஒரு பகுதி வெட்சித் திணையாக உருவெடுத்துள்ள நிலையை உணர முடிகின்றது. இப்பண்பாட்டுக் காலத்தில் கொற்றவை வழிபாடு வெகு சிறப்புடன் நடைபெற்றிருக்க வேண்டும் என்பதை எளிதாக உய்த்துணர முடியும். இப்பண்பாட்டிற்குரியோராக எயினர், வேட்டுவர் முதலான இனமக்களைச் சுட்ட முடியும்.

தொல் தமிழகத்தில ஆநிரைச் சமூகம் வேளாண் சமூகத்தைத் தோற்றுவித்த நிலையில் வளமார்ந்த நெல் சமூகம் அமைக்கப்பெற்றது. ''மருதநில பொருளாதார அரசியல்'', எயினரையும் வேட்டுவரையும் ''விளிம்பு நிலை மக்களாக'' ஆக்கிவிட்டமையைச் சஙக இலக்கியப் பாலைத்திணைப் பாடல்கள் விவரிக்கின்றன. விளிம்பு நிலை மக்களாக மாறிய இவ்வினமக்கள் அரசு உருவாக்கத்தில் நாட்டின் மையத்திலிருந்து விடுபட்டு வழிபறி கொள்ளையர்களாக மாறியுள்ளனர். மாறவே இவ்வின மக்களின் பண்பாடு முதலியன விளிம்பு நிலைக்குத் தள்ளப் பெற்றிருக்க வேண்டும். எனவே தான் சங்க இலக்கியங்களில் ''கொற்றவை வழிபாடு'' பற்றிய செய்திகள் இடம் பெறாமல் போயின. பின்னாளில் ''ஒரே பேரரசு உருவாக்கம்'', ''ஒற்றைச் சமய உருவாக்கம்'' (சிலம்பு நா. செல்வராசு.2004) ஆகியவற்றிற்கான அரசியல் தொழிற்பட்டபோது எயினர், வேட்டுவர் இன மக்களைப் பேரரசு எல்லைக்குள் கொண்டு வரும் முயற்சியில் அவர்தம் வாழ்நிலை, சமயம் சார்ந்த பண்பாட்டு நிலைகள் மேனிலையாக்கம் பெறத் தொடங்கின. எனவேதான் சிலப்பதிகாரம் வேட்டுவ வரியைச் செவ்வியலாகப் புனைய வேண்டியதாயிற்று.

நன்றி: ஆய்வுக் கோவை

_________________
அன்புடன் பரஞ்சோதி

http://www.muthamilmantram.com/index.php?n...iewtopic&t=1916
Reply
#2
நண்றி நாரதா இப்போதுதான்... கட்டுரையை முழுமையாகப் படித்து முடித்தேன்...

சங்க இலக்கியங்களின் கொற்றவை சம்பந்தமானவை அளிந்து போய் விட்டன... எரியூட்டி அளித்தவர் வேறு யாரும் அல்ல ஆரிய படையாளிகள்தான்... ஒரு இணையத்தில் இது சம்பந்தமான கட்டுரை படித்தேன்... தேடிப்பிடித்து இங்கு இணத்து விடுகிறேன்..
::
Reply
#3
குறிப்பிட்ட ஒரு சமயத்தின் சாயல் பெறாமல் கடவுட் கொள்கைபற்றி பேசும் ஆதி நூல் தொல்காப்பியம். அதில் சமயம் இடம் பெறுகிறது. மக்கள் வாழ்வினை ' அகம் 'என்றும் ' புறம் ' என்றும் வகுத்துப் பல்வேறு செய்திகளைத் தொகுத்து சொல்வதால் வாழ்வியல் கூறும் இலக்கியமாகவும் இருக்கிறது.

தொல்காப்பியர் காலத்தும், அவர்க்கு முந்தைய காலத்தும் இறைவனை வழிபடும் முறை இருந்துள்ளது. அக்காலத்து மக்கள், ஐம்பூதங்களையும், முருகன், திருமால், கொற்றவை முதலான வழிபாடு செய்தனர் என்பதையும்..,

'' மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும் ''
( தொல். அகத் .5)

இப்பாடல் மூலம் அக்காலத்தில் பல கடவுளரை வணங்கும் நிலை இருந்தது என்பதையும், அவர்களுக்குள் ' சமயக்காழ்ப்புணர்ச்சி ' இல்லை என்பதையும் அறியலாம்.

http://ezilnila.com/saivam/thamil_ilakkiya.htm
::
Reply
#4
யாழில வரலாற்றுப் பகுதியில இது சம்பந்தமாய்க் ஈழவரலாற்றில் எப்படி வளிபாடு அமைந்தது என்றும் கருத்துக்கள் உள்ளது

http://www.yarl.com/forum/viewtopic.php?t=...57769651e079d2a
::
Reply
#5
த.ல தமிழின்ர தாய் மொழி எழுமொழி பற்றி எதாவது தெரிந்தால் <b>போடு</b>....ங்கோ...

தமிழில் <b>எழுத்து</b> எண்டு சொல்வது அதனாலாம் உண்மையா?
Reply
#6
தமிழின் தாய் மொழி எலு மொழியா???????? :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted:
.

.
Reply
#7
Birundan Wrote:தமிழின் தாய் மொழி எலு மொழியா???????? :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted:

ம்ம். தம்+ எழு= தமெழு,தமிழ் ஆகியதாக வரலாற்றாளார்கள் சொல்கிறார்கள்.. ஆனால் அதில் பெரிதாக எந்த மாற்றமும் இல்லையாம்... 80% எழு என்கின்ற மொழச்சொற்கள் அப்படியே தமிழில் இருக்கிண்றன... ஆனா எழு+து= எழுது என்கின்ற எழித்துக்கள் தான் மாற்னவாம்... 5000 வருடத்துக்கு முந்தய தமிழன்.. இண்று உயிர்த்தெழந்து வந்தாலும்.. அவர்களால் தமிழை நன்கு விளங்கிக்கொள்ள முடியும் என்கின்றனர்..

இப்ப மாறல்ல 5000-- 3000 வருசத்துக்கு முன்னமே மாறீட்டுதாம்... தணிக கோபம்..
:::::::::::::: :::::::::::::::
Reply
#8
அகிலன் Wrote:
Birundan Wrote:தமிழின் தாய் மொழி எலு மொழியா???????? :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted:

ம்ம். தம்+ எழு= தமெழு,தமிழ் ஆகியதாக வரலாற்றாளார்கள் சொல்கிறார்கள்.. ஆனால் அதில் பெரிதாக எந்த மாற்றமும் இல்லையாம்... 80% எழு என்கின்ற மொழச்சொற்கள் அப்படியே தமிழில் இருக்கிண்றன... ஆனா எழு+து= எழுது என்கின்ற எழித்துக்கள் தான் மாற்னவாம்... 5000 வருடத்துக்கு முந்தய தமிழன்.. இண்று உயிர்த்தெழந்து வந்தாலும்.. அவர்களால் தமிழை நன்கு விளங்கிக்கொள்ள முடியும் என்கின்றனர்..

இப்ப மாறல்ல 5000-- 3000 வருசத்துக்கு முன்னமே மாறீட்டுதாம்... தணிக கோபம்..

தமிழுடன் 75% எலு கலந்ததால் தெலுங்கும்
தமிழுடன் 50% எலு கலந்ததால் கன்னடமும்
தமிழுடன் 25% எலு கலந்ததால் மலையாளமும்
எலுவுடன் பாளி கலந்ததால் சிங்களமும், பின்னர் விஜயனின் வருகையுடன் ஆரியமும், சிங்களத்துடன் கலந்தது எனவும்,
தமிழும் எலுவும் சமகாலத்தில் வாழ்ந்த மொழிகள் எனவும், எலுமொழி பேச்சுவழக்கின்றி போனதால் வழக்கொழிந்து போனது எனவும், தமிழ் மொழி காலத்துக்கேற்ப நல்லவற்றை உள்வாங்கி மெருகேறியதெனவும் அறிந்திருக்கிறேன். "கல்தோன்றி மண்தோன்ற முதல் முன்தோன்றிய மூத்த மொழிக்கு" தாய் மொழி உண்டெனதாங்கள் கூறியதும், தமிழ்பால் அன்புகொண்ட இச்சிறியோன் சற்று கோபம் கொண்டுவிட்டேன், பொறுத்து, தாங்கள் கூறியதற்கான ஆதார இணைப்புக்கள் இருப்பின் இங்கு தந்து எனது ஜயப்பாட்டை தீர்ப்பிர்களா? நண்பர் பெருமகனே.
.

.
Reply
#9
Birundan Wrote:தமிழுடன் 75% எலு கலந்ததால் தெலுங்கும்
தமிழுடன் 50% எலு கலந்ததால் கன்னடமும்
தமிழுடன் 25% எலு கலந்ததால் மலையாளமும்
எலுவுடன் பாளி கலந்ததால் சிங்களமும், பின்னர் விஜயனின் வருகையுடன் ஆரியமும், சிங்களத்துடன் கலந்தது எனவும்,
தமிழும் எலுவும் சமகாலத்தில் வாழ்ந்த மொழிகள் எனவும், எலுமொழி பேச்சுவழக்கின்றி போனதால் வழக்கொழிந்து போனது எனவும், தமிழ் மொழி காலத்துக்கேற்ப நல்லவற்றை உள்வாங்கி மெருகேறியதெனவும் அறிந்திருக்கிறேன். "கல்தோன்றி மண்தோன்ற முதல் முன்தோன்றிய மூத்த மொழிக்கு" தாய் மொழி உண்டெனதாங்கள் கூறியதும், தமிழ்பால் அன்புகொண்ட இச்சிறியோன் சற்று கோபம் கொண்டுவிட்டேன், பொறுத்து, தாங்கள் கூறியதற்கான ஆதார இணைப்புக்கள் இருப்பின் இங்கு தந்து எனது ஜயப்பாட்டை தீர்ப்பிர்களா? நண்பர் பெருமகனே.

பிருந்தன் இதில இருக்கிற விபரத்தை கொஞ்சம் படியுங்கோ.. அகிலன் வந்து பதில் சொல்லுவார்..
தமிழ் மொழி வரலாறு

அகிலன் என்ன சொல்ல வந்தார் எண்டது விளங்கல்லபா?? கேள்வி கேட்டாரா பதில் சொல்லுறாரா????
::
Reply
#10
பிரயோசமான தகவல் நாரதருக்கும் தலவுக்கும் நன்றிகள்
,
,
Reply
#11
Thala Wrote:நண்றி நாரதா இப்போதுதான்... கட்டுரையை முழுமையாகப் படித்து முடித்தேன்...

சங்க இலக்கியங்களின் கொற்றவை சம்பந்தமானவை அளிந்து போய் விட்டன... எரியூட்டி அளித்தவர் வேறு யாரும் அல்ல ஆரிய படையாளிகள்தான்... ஒரு இணையத்தில் இது சம்பந்தமான கட்டுரை படித்தேன்... தேடிப்பிடித்து இங்கு இணத்து விடுகிறேன்..

ஆரியர்களினால் தமிழர்கள் இழந்தவை எண்ணில் அடங்காது. தல நீங்கள் இன்னும் இணைக்கவில்லை. கிடைக்கவில்லையா?
! ?
'' .. ?
! ?.
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)