Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
2300ஆண்டுகள் பழமைவாய்ந்த தூயதமிழ் கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு
#1
2300 ஆண்டுகள் பழமை வாய்ந்த தூய தமிழ் கல்வெட்டுக்கள் தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுக்களில் இவையே மிகவும் தொன்மை வாய்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

தஞ்சைப் பல்கலைக்கழக கல்வெட்டியியல் மற்றும் தொல்லியல்துறையினரால் கடந்த மாதம் தேனி மாவட்டத்தின் ஆண்டிப்பட்டி பகுதிக்கு அண்மையாகவுள்ள புலிமான்கோம்பை என்ற ஊரில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராட்சியில் இக்கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

தமிழரின் பொற்காலம் என போற்றப்படும் சங்க காலத்திற்குரிய மூன்று கல்வெட்டுக்கள் இவ்வாறு கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட கல்வெட்டுக்கள் ஒவ்வொன்றும் அண்ணளவாக மூன்று அடி உயரமும், ஒன்றரை அடி அகலமும் கொண்டவையாக உள்ளன.

இவை ஈமச்சின்னங்களில் நாட்டப்பட்ட நடுகற்களாக இருக்க வாய்ப்புள்ளது.

இவ்வாறு மீட்கப்பட்ட முதல் கல்வெட்டில் 'கல் பேடு தீயன் அந்தவன் கூடல் ஊர் ஆ கோள்" என பொறிக்கப்பட்டுள்ளது. இதற்கு 'கூடல் என்ற ஊரில் நடைபெற்ற ஆகோள் பிணக்கில் உயிர் நீத்த பேடு தீயன் அந்தவன் என்பவனுக்கு எடுத்த கல்" என பொருள் கொள்ளலாம்.

இரண்டாவது கல்வெட்டில் இரு வரிகள் எழுதப்பட்டுள்ளன. அனால் அக்கல்வெட்டின் முன்பகுதி உடைந்து காணப்படுவதால் அதில் எழுதப்பட்டுள்ளவற்றில் சில சொற்களே காணப்படுகின்றன. முதல்வரியில் 'அன் ஊர் அதன்" என்றும் இரண்டாவது வரியில் 'ன் அன் கல்" என்றும் எழுதப்பட்டுள்ளது.

மூன்றாவது கல்வெட்டில் 'வேள் ஊர் பதவன் அவ்வன்" என பொறுக்கப்பட்டுள்ளது. 'வேற்று ஊரைச் சேர்ந்த அவ்வன் என்பவனுக்காக எடுக்கப்பட்ட கல்" என இது பொருள்படுகிறது.

இக்கல்வெட்டுக்களில் காணப்படும் எழுத்துக்கள் முற்று முழுதாக தூய தமிழ் எழுத்துக்களாகும். இதில் எழுதப்பட்டுள்ள சொற்கள் சங்ககால இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

தமிழ்பிராமி வரிவடிவ ஆய்வில் புலமை பெற்ற ஐராவதம் மகாதேவன் அவர்கள் இந்த கல்வெட்டுக்களைப் பார்வையிட்டு, அவை பற்றி கருத்துத் தெரிவிக்கையில், தமிழகத்தில் கிடைத்த தமிழ்பிராமி கல்வெட்டுக்களில் பிராகிருத சொற்கள் கலந்து வரும். ஆனால் இக்கல்வெட்டுக் து}ய தமிழ்ச்சொற்கள் கொண்டு எழுதப்பட்டுள்ளன. இவையே இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுக்களில் பழமை வாய்ந்தவையாகும் எனக்குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக தஞ்சை பல்கலைக்கழக துணைவேந்தர் சி.சுப்பிரமணியன் அவர்கள் நேற்று ஊடகர்களிடம் இது தொடர்பில் தெரிவித்ததாவது: இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க கண்டுபிடிப்புகளை, கள ஆய்வு மூலமும், அகழாய்வு முலமும் வெளிக்கொணர்ந்து, சங்க கால வரலாற்றை அறிவியல் அடிப்படையில் மீட்டுருவாக்கம் செய்திருப்பது, தமிழ்மொழிதான் மிகப்பழமையான மொழியென நிரூபிக்க ஆதாரமாக அமைந்துள்ளது" எனத் தெரிவித்தார்.

இக்கல்வெட்டுக்கள் மீட்பின் மூலம் சங்க காலத்தமிழர்கள் பரவலாக எழுத்தறிவு பெற்றிருந்தனர் என்பது உறுதிப்படுத்தப்படுகிறது.

இக்கல்வெட்டுக்கள் மீட்கப்பட்ட புலிமான்கோம்பையும் அதைச்சூழ்ந்துள்ள பகுதிகளிலும் பெருமளவான ஈமச்சின்னங்கள் காணப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
Reply
#2
அருவி, இணைப்பிற்கு நன்றி. ஆனால் எங்கிருந்து தகவல் பெற்றீர் என்று சொல்லவில்லை
! ?
'' .. ?
! ?.
Reply
#3
ஓ மன்னிச்சிடுங்க இணைச்சிட்டு வேறவேலையா இருந்திட்டன் சரிபாக்கல :oops:

இப்ப இதில இணைச்சிருக்கிறன்.

2300 ஆண்டுகள் பழமைவாய்ந்த தூய தமிழ் கல்வெட்டுகள் தமிழகத்தில் கண்டுபிடிப்பு
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
Reply
#4
"தமிழ் தான் மிகப்பழமையான மொழி'' என்பதை நிரூபிக்க ஆதாரம்:
2இ300 ஆண்டுகளுக்கு முந்தைய தூய தமிழ் எழுத்து கல்வெட்டு கண்டுபிடிப்பு


தஞ்சாவூர்இ ஏப்.5-

2இ300 ஆண்டுகளுக்கு முந்தைய தூய தமிழ் எழுத்து பொறிக்கப்பட்ட கல்வெட்டுகளை தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறையினர் கண்டு பிடித்துள்ளனர்.

அகழாய்வு பணி

தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறையினர் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள புலிமான்கோம்பை என்ற இடத்தில் கடந்த மாதம் 21-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை அகழாய்வு நடத்தினர்.

அப்போது அங்கு 2இ300 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழந்தமிழ் எழுத்து பொறிக்கப்பட்ட 3 சங்ககால கல்வெட்டுகளை கண்டுபிடித்தனர். இந்தியாவில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுகளில் இது மிகவும் பழமை வாய்ந்தவையாகும்.

இந்த கல்வெட்டுகள் மூன்றும் சுமார் 3 அடி உயரமும் 1 1ஃ2 அடி அகலமும் கொண்டவை. இவற்றில் ஒரு கல்வெட்டில் "கல் பேடு தீயன் அந்தவன் கூடல் ஊர் ஆ கோள்'' என எழுத்து பொறிக்கப்பட்டு உள்ளது. இதற்கு "கூடல் ஊரில் நடைபெற்ற ஆகோள் பூசலில் உயிர் நீத்த பேடு தீயன் அந்தவன் என்பவனுக்கு எடுப்பித்த கல்'' எனப்பொருள் கொள்ளலாம்.

இன்னொரு கல்லின் முன்பகுதி உடைந்து போய் உள்ளது. வரி வடிவில் காணப்பெற்ற இந்த கல்வெட்டில் இரு வரிகள் உள்ளன. முதல்வரி "அன் ஊர் அதன்''இ இரண்டாவது வரியில் "ன் அன் கல்'' எனவும் குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த கல்லின் முனைப்பகுதி உடைந்திருந்ததால் அதில் உள்ள எழுத்துக்கள் பற்றிய விவரம் முழுவதுமாகத் தெரியவில்லை.

மூன்றாவது கல்லில் "வேள் ஊர் பதவன் அவ்வன்'' என குறிப்பிடப்பட்டு உள்ளது. இதற்கு "வேறு ஊரை சேர்ந்த பதவன் அவ்வன் என்பவனுக்கு எடுக்கப்பட்ட நடு கல்'' எனப்பொருள் கொள்ளலாம்.

முதுமக்கள் தாழி

பழங்காலத்தில் வாழ்ந்த சிறு மன்னர்கள்இ வீரர்கள்இ முக்கிய பிரமுகர்கள் மறைந்த போது அவர்களின் உடல்களைஇ முதுமக்கள் தாழியினுள் வைத்து மண்ணில் புதைப்பர். அதற்கு அடையாளமாக இந்த சில கற்களை நடுவர். அவையேஇ இந்த கல்வெட்டுகளாக இருக்க வாய்ப்பு உள்ளது.

ஈமச்சின்னத்தின் ஒரு பகுதியாக காணப்பெற்ற இந்த கல்வெட்டுகள் விவசாயத்திற்காக நிலம் பண்படுத்தப்பட்ட போது அப்புறப்படுத்தப்பட்டு கிடந்தன. பின்னர் மண்ணுக்குள் புதையுண்டும் போயின. ஏராளமான முதுமக்கள் தாழிகள் புலிமான்கோம்பையிலும்இ பரல் உயர் பதுக்கைகள் இந்த ஊரின் எதிர்புறம் வைகை ஆற்றின் வடகரையில் அமைந்துள்ள பூம்பட்டியிலும் அதிக அளவில் உள்ளன.

இந்த புலிமான்கோம்பைக்கு கிழக்கே 2 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள தெப்பத்துப்பட்டி என்ற ஊரிலும் இது போன்ற ஈமச்சின்னங்கள் காணப்படுவதால் சங்க காலத்தில் இப்பகுதி சிறந்த நிலையில் இருந்திருக்க வேண்டும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பொறிக்கப்பட்டுள்ள எழுத்துக்கள் தான் தூய தமிழ் எழுத்துக்கள் ஆகும். இதில் குறிப்பிடப்பட்டுள்ள வார்த்தைகள் சங்க கால இலக்கியங்களில் உள்ளன. இந்த அரிய கல்வெட்டுகளின் கண்டுபிடிப்பின் மூலம் தமிழக மக்கள் பரவலாக எழுத்தறிவு பெற்றிருந்தனர் என்பது உறுதிப்படுத்தப்படுகிறது.

இந்த கல்வெட்டுகளைப் பார்வையிட்ட தமிழ்ப்பிராமி வரிவடிவ ஆய்வில் புலமை பெற்ற ஐராவதம் மகாதேவன் கூறுகையில்இ "இந்த கல்வெட்டுகள் கி.மு. இரண்டாம் நூற்றாண்டுக்கு முந்தியதாக இருக்கலாம். இந்தியாவில் கிடைத்த கல்வெட்டுகளுக்கு இது முந்தையது. தமிழகத்தில் கிடைத்த தமிழ்ப்பிராமிக் கல்வெட்டுகளில் பிராகிருத சொற்கள் கலந்து வரும். ஆனால் இதில் தூய தமிழ்ச்சொற்களை கொண்டு எழுதப்பெற்றுள்ளன'' என்று கூறியுள்ளார்.

பழமையான மொழிக்கான ஆதாரம்

"இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க கண்டுபிடிப்புகளைஇ கள ஆய்வு மூலமும்இ அகழாய்வு மூலமும் வெளிக்கொணர்ந்துஇ சங்க கால வரலாற்றை அறிவியல் அடிப்படையில் மீட்டுருவாக்கம் செய்திருப்பதுஇ தமிழ்மொழி தான் மிகப்பழமையான மொழி என நிரூபிக்க ஆதாரமாக அமைந்துள்ளது'' என்றுஇ தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக துணைவேந்தர் சி.சுப்பிரமணியன் நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார்.

பேட்டியின் போது பல்கலைக்கழக பதிவாளர் பாஸ்கரன்இ கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை பேராசிரியர் ராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.


நன்றி
தினத்தந்தி
Reply
#5
நல்ல தகவல். இணைத்ததற்கு நன்றி.
.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)