Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மாணவன் மயூரனை சிறப்பித்தனர் புலிகள்
#1
மாணவன் மயூரனை சிறப்பித்தனர் விடுதலைப் புலிகள்!
[செவ்வாய்க்கிழமை, 13 செப்ரெம்பர் 2005, 17:58 ஈழம்] [கிளிநொச்சிலிருந்து செ.தனோஜன்]
சிறிலங்கா கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் கணிதப் பிரிவில் அகில இலங்கை அளவில் சிறப்பிடம் பெற்ற யாழ். இந்துக் கல்லுரி மாணவன் மயூரனுக்கு விடுதலைப் புலிகள் பரிசில்கள் வழங்கிச் சிறப்பித்தனர்.


கிளிநொச்சியில் உள்ள விடுதலைப் புலிகளின் சமாதான செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் நடைபெற்ற நிகழ்வில் மாணவன் மயூரனுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டன.

தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன், தமிழீழக் கல்விக் கழகப் பொறுப்பாளர் வெ. இளங்குமரன், தமிழீழ அரசியல்துறை துணைப் பொறுப்பாளர் சோ. தங்கன், தமிழீழ விளையாட்டுத்துறைப் பொறுப்பாளர் பாப்பா ஆகியோர் நிகழ்வில் பங்கேற்றனர்.

1986 ஆம் ஆண்டு தென்மராட்சியில் பிறந்த மயூரன் 1997 ஆம் ஆண்டு யாழ். இந்துக் கல்லுரியில் சேர்ந்தார்.




5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரிட்சையில் 154 புள்ளிகளுடன் தேர்வடைந்த மயூரன் இந்துக் கல்லுரியில் சேர்ந்தார்.

அதன் பின்னர் வகுப்பில் ஒவ்வொரு முறையும் அவர் முதல் மாணவனாக சிறப்பிடம் பெற்றார்.

சர்வதேச கணிதப்போட்டிக்காக அவர் அவுஸ்திரேலிய நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் தங்கப்பதக்கம் வென்றார்.

மயூரனின் தந்தை வீரகத்தி சிவப்பிரகாசம், வீதி அபிவிருத்தி அதிகார சபையில் பட வரைஞராக பணிபுரிகிறார்.




வடக்கில் யுத்தம் நிகழ்ந்த காலத்தில் தங்களுக்கு மின்சார வசதி இருக்கவில்லை என்றும் தனது மகன் பெருமளவு நாட்கள் மண்ணெண்ணெய் விளக்கின் உதவியுடனேயே கல்வி கற்றதாகவும் மயூரனின் தந்தை சிவபிரகாசம் தெரிவித்தார்.

யுத்தநிறுத்த உடன்படிக்கையின் பின்னரே தங்களுக்கு மின்சார வசதி கிடைத்ததாக தெரிவித்துள்ள சிவப்பிரகாசம் தாங்கள் பொருளாதார ரீதியாக மிகவும் வசதி படைத்தவர்கள் அல்ல என்றும் கூறினார்.

மயூரனின் சகோதரர் பேராதெனிய பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடத்தில் மூன்றாம் ஆண்டு படிப்பை மேற்கொண்டு வருகிறார்.

மயூரனை மேற்படிப்பிற்கென வெளிநாடு அனுப்பவுள்ளதாகவும் அவர் அங்கு கல்விகற்று நாடு திரும்பி தாய்நாட்டிற்கு சேவையாற்ற வேண்டும் என்று விரும்புவதாகவும் சிவப்பிரகாசம் கூறினார்.
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
#2
கேட்க புல்லரிக்குது.எல்லை மீறீய துன்பங்கள் மத்தியில் கஸ்டப்பட்டிருப்பார்.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)