Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ராசிக் குழு பொறுப்பாளர் பலி
#1
இன்று புதன்கிழமை காலை ராசிக்குழுப் பொறுப்பாளரை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதலில் அதன் பொறுப்பாளரான காந்தியென அழைக்கப்படும் நவரட்ணராஜா கொல்லப்பட்டார். இன்று காலை 6.30 மணியளவில் தனது முகாமிற்குள் இருக்கும் மலசல கூடத்திற்கு காலைக்கடனை செய்யச்சென்ற சமயம் அருகில் இருந்த வளவினுள் இருந்து கைக்குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றது.
அதியுச்ச பாதுகாப்பு வலயத்திற்குட்பட்ட பிரதேசத்தில் இத்தாக்குதல் நடாத்தப்பட்டிருப்பதால் சிறீலங்காப்படைத்தரப்பு அதிர்ச்சியாகி கண்மூடித்தனமாக துப்பாக்கி வேட்டுக்களைத்தீர்த்தனர். அத்துடன் அப்பகுதி வீதிகள் யாவும் மூடப்பட்டு தேடுதல் வேட்டையையும் படைத்தரப்பு முடுக்கிவிட்டிருக்கின்றது. மேற்படி குழுவினர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சாம் தம்பிமுத்து என்பவரது வீட்டினிலேயே முகாம் அமைத்திருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சாம் தம்பிமுத்து என்பவர் 1990களில் கொழும்பில் வைத்து சிங்களப்படைகளின் உளவுத்துறையால் சுட்டுக்கொல்லப்பட்டவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
இக்குழுவின் ஸ்தாபகரான ராசிக் 1999ம் ஆண்டில் மட்டக்களப்பில் வைத்து தற்கொலைக்குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டபின் மேற்படி காந்தி என்பவரே அதன் தளபதியாகவிருந்து செயற்பட்டவர் என்பதுடன் பல தமிழர்களின் கொலைக்கு உடந்தையாக சிங்களப்படைகளுக்கு துணைபுரிந்தார் என்பதுடன் ஈ.பி,ஆர்,எல்,எப்பின் வரதர் அணியின் நெருங்கிய தொடர்புகள் வைத்திருந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மலரவன்
www.tamilkural.com

Reply
#2
சிறீலங்கா இராணுவத்தின் துணைக் குழுவாக இயங்கிவரும் தேசவிரோதக் கும்பலான இராசிக் குழுவின் பொறுப்பாளன் காந்தி என்ற சிவகுரு நவரட்ணராஜா இன்று காலை 6.45 மணியளவில் இடம்பெற்ற கைக்குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். இவர்களது முகாம் அதியுயர் பாதுகாப்பு வலயமாகிய வாவிக்கரை வீதியில் மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாம் தம்பிமுத்துவின் வீட்டிலேயே உள்ளமை குறிப்பிடத்தக்கது.

தனது காலைக் கடன்களை முடிப்பதற்காக மலசல கூடத்திற்குள் சென்ற போது அருகிலுள்ள வளவினுள்ளிருந்து குறிப்பிட்ட மலசல கூடம் மீது கைக்குண்டு இனந்தெரியாத நபர் ஒருவரினால் வீசப்பட்டுள்ளது. இதனால் தேசத்துரோகி காந்தி அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.


<img src='http://www.nitharsanam.com/public/gallery/international./razeek_leader_killed.jpg' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)