Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
யுத்த நிறுத்த ஒப்பந்தத்துக்கு கடும் எதிர்ப்பு
#1
சிறிலங்கா அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான யுத்த நிறுத்த ஒப்பந்தத்துக்கு சிறிலங்கா பதில் பாதுகாப்பு அமைச்சர் ரத்னசிறி விக்கிரமநாயகக் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள இந்திய பாதுகாப்புத்துறை பயிற்சிக் கல்லூரியின் குழுவினரிடம் இது குறித்து ரத்னசிறி விக்கிரமநாயக்கவுடன் உரையாடினார்.

அலோக் ஜெயின் மற்றும் டி.கே. திவானி தலைமையிலான இந்தியக் குழு சிறிலங்கா வந்துள்ளது.

இக்குழுவிடம் பேசிய ரத்னசிறீ விக்கிரமநாயக்க, யுத்த நிறுத்த ஒப்பந்தம் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளே பலனடைந்துள்ளனர். சிறிலங்காவின் தேசிய நலன்களை கருத்தில் கொள்ளாமல் ஒரு பக்கச்சார்பாகவே இந்த ஒப்பந்தம் உருவாக்கப்பட்டுவிட்டது என்று கூறியுள்ளார்.

ரத்னசிறி விக்கிரமநாயக்கவின் இந்த குரல், ஜே.வி.பி மற்றும் ஜாதிக ஹெல உறுமயவுடனான மகிந்த ராஜபக்சவின் ஒப்பந்தத்துக்கு ஆதரவு குரலாக வெளிப்பட்டுள்ளது.

ஐ.நா. சபை உள்ளிட்ட இன்னொரு சர்வதேச அமைப்பு இனப்பிரச்சனையில் தலையிடுவதை தான் விரும்பவில்லை என்றும் பேச்சுவார்த்தை மேசைக்கு விடுதலைப் புலிகள் திரும்புவதற்கு சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் விக்கிரமநாயக்க வலியுறுத்தினார்.

இலங்கையில் தமிழர்களைப் பொறுத்தவரை சுதந்திரமாகத்தான் வாழுகிறார்கள். கொழும்பில் கூட அவர்கள் சுதந்திரமாகவே இருக்கிறார்கள். தேசிய விடுதலைப் போராட்டம் என்பதெல்லாம் இல்லை என்றும் ரத்னசிறி விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அரசாங்கமானது வடக்கு கிழக்குப் பகுதிகளுக்கும் உரிய நிதி ஒதுக்கீடு செய்து அரச செயலகங்கள் மூலம் வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. விடுதலைப் புலிகள் வரி அறவிடுதல் என்பது அவர்களது நடவடிக்கைக்கானது என்றார் விக்கிரமநாயக்க.

இந்த விவாதங்களின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் குறித்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் குறித்தும் தமிழீழத் தேசியத் தலைமை குறித்தும் ரத்னசிறி விக்கிரமநாயக்க மோசமான விமர்சனங்களை தெரிவித்துள்ளார்.

இச்சந்திப்பின் போது ஓய்வுபெற்ற சிறிலங்கா பாதுகாப்புத்துறை செயலாளர் அசோக ஜயவர்த்தன, முப்படைத் தளபதி தயா சந்தகிரி மற்றும் முப்படைகளின் தளபதிகள் உடனிருந்தனர்.

இந்தியக் குழுவின் சிறிலங்காவுக்கான திடீர் வருகை ஏன் என்பது குறித்தும் தற்போதைய சிக்கலான சூழலில் இது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதும் குறித்தும் சர்வதேச நாடுகள் அவதானித்து வருகின்றன.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)