Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சமூகச் சீரழிவுகள்: துரோகிகளுக்கு எல்லாளன் படை எச்சரிக்கை!
#1
யாழ். குடாவில் திட்டமிட்டு அரங்கேற்றப்படும் சமூகச் சீரழிவுகள்: துரோகிகளுக்கு எல்லாளன் படை எச்சரிக்கை!

[வியாழக்கிழமை, 15 செப்ரெம்பர் 2005, 17:26 ஈழம்] [யாழ். நிருபர்]
யாழ். குடாநாட்டில் எதிரிகளின் திட்டமிடலுடன் சமூகச் சீரழிவுகளை அரங்கேற்றும் துரோகிகளுக்கு எல்லாளன் படை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.


எல்லாளன் படை வெளியிட்ட அறிக்கை:

அண்மை நாட்களாக யாழ். குடாநாட்டில் அதிகரித்து வந்துள்ள சமுதாயச் சீரழிவு நடவடிக்கைகள் அனைவரையும் வெட்கித் தலைகுனிய வைத்துள்ளது.

இதனால் மிகுந்த மனவேதனையும் கொதிப்பும் அடைந்துள்ளோம்.

பல்லாயிரம் உயிர்களை விலையாகச் செலுத்தி எமது தலைமுறை கட்டியெழுப்பி வரும் அற்புதமான அழகிய எமது தேசத்தை அவமானப்படுத்தும் இத்தகைய கீழ்த்தரமான செயற்பாடுகள் தொடர்பில் மிகத் தீவிரமான நடவடிக்கைகளில் இறங்குவதற்கு நாம் தீர்மானித்துள்ளோம்.

அதனால் நீதிக்கான வேட்டுக்களை எமது துப்பாக்கி உமிழ்வதற்கு முன்னர் உங்களோடு சில வார்த்தைகள் உரியவர்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகின்றோம்.

அன்புக்குரியவர்களே!

நாம் ஏன் இத்தனை அவலங்களையும் சுமந்தோம்? நாம் ஏன் இத்தனை அவமானங்களையும் சுமந்தோம்?

வரலாற்றுக் காலம் முதல் வீரர்களாய் விவேகர்களாய் ஒழுக்க சீலர்களாய் புகழோடு வாந்த எமது இனம் ஏன் வெறுங்கையோடு எல்லாவற்றையும் இழந்து நிர்க்கதியால் நின்றது?

இவ்வினாக்கள் எல்லாவற்றுக்கும் விடை ஒன்றுதால் ஒன்றுமையோடு வாழ்ந்த எமக்குள் எதிரிகள் திட்டமிட்டுப் பிரிவினைகளைப் புகுத்தினார்கள்.

சாதி என்றும் சமயம் என்றும் பெண் என்றும் ஆண் என்றும் எமக்குள் இன்னுமின்றும் கூறுகள் போடப்பட்டன. உலகில் தலைநிமிர்ந்து நின்ற எம்மினம் தனிச் சாக்கடைக்குள் வீழ்ந்து போனது.
இப்படியாய் வாழ்ந்த எமக்குள் இப்போதுதான் நிமிர்வு வந்தது. இன்றைக்கு முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர்தான் எமது அவல வாழ்வை முடித்து வைப்பதற்கான வழியை எமது இனம் கண்டு கொண்டது. அன்றிலிருந்து தலைநிமிர்வை அன்றித் தலைகுனிவை எமது இனம் கண்டதில்லை.

ஒரு ஒப்பற்ற தலைவனின் வழியில் விலைமதிப்பற்ற உயிர்களை அர்பணித்து எல்லாம் பொறுப்புகளையும் மறந்து எமது இனம் விடுதலை நோக்கிப் பயணித்து அருகாமையில் வந்திருக்கின்றது.

இவ்வாறானதொரு நிலையில் எம்மை மீண்டும் வீழ்த்துவதற்கு வக்கற்ற வழியற்ற உதிரிகள் மீண்டும் எம்மிடையே அதிகாரங்களையும் பிரிவினைகளையும் ஆரோக்கியமற்ற அசிங்கங்களையும் தோற்றுவிக்கும் கீழ்த்தனமான முயற்சியில் நன்கு திட்டமிட்டு இறங்கியுள்ளனர்.

அதன் மூலம் வலுவடைந்து வரும் எமது தேசியத்தை ஒரு புற்றுநோய் போல் உள்ளிருந்தே அரித்து அரித்து அழித்தொழித்து விடலாமென அவர்கள் எண்ணுகிறார்கள்.

யாழ். குடாநாட்டில் மட்டுமல்ல தமிழீழத்தின் அனைத்துப் பாகங்களிலும் இன்று நாம் காணும் அனைத்து அகமுரண்பாட்டுத் தூண்டுதல்களின் பின்னாலும் எதிரிகளின் கைகள் மறைந்திருப்பதை அனைவரும் உணரமுடியும்.

அண்மையில் யாழ். குடாநாட்டில் நடந்த எம்மைச் தலைகுனியச் செய்த சம்பவங்களின் பின்னாலும் எதிரிகளின் கைகளே உள்ளதை அனைவரும் அறிவர்.

எனவே எனது அன்புக்குரிய மக்களே!

சமாதானத்தின் எதிரிகள் ஊருடுவச்செய்ய முனையும் இந்த நாசகாரக் கிருமிகளை முளையிலேயே கிள்ளியெறிவோம்.

அத்தகைய கொடிய நோய்கள் எம்மை அணுகவிடாது விழிப்புடன் இருந்து எம்மையும் எமது இனத்தையும் காப்போம்.

எதிரிகளின் ஏவல் நாய்களாக இருந்து எமது இனத்தின் எதிர்காலத்தில் மீதும் அதற்கான அர்ப்பணிக்கப்பட்ட உயிர்களின் மீது ஏறிநின்று விளையாடும் அனைவரையும் தெளிவாக இனங்காண்போம்.

எமது இனத்தின் சார்பாக அவர்களுக்கெதிரான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு களமிறங்கும் எமக்கு சகலவிதமான ஒத்துழைப்புக்களையும் உங்கள் அனைவரிடமும் எதிர்பார்க்கின்றோம்.


http://www.eelampage.com/?cn=20087


மேலுள்ள அறிவிப்பு யாழ் களத்திற்கும் பொருந்தும்....
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)