Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வாழ்வுரிமையைக் காக்கவே ஆயுதம்.
#1
<b>ஈழத் தமிழர்கள் வாழ்வுரிமையைக் காக்கவே ஆயுதங்களைக் கையில் எடுத்தார்கள்:</b> <i>'ராஜீவ் வழக்கு' கார்த்திகேயன் </i>

இலங்கையில் தமிழர்கள் வாழ்வுரிமையைக் காக்கவே ஆயுதங்களைக் கையில் எடுத்தார்கள் என்று ராஜீவ் கொலை வழக்கை விசாரணை நடத்திய இந்தியப் புலனாய்வுத்துறையின் முன்னாள் அதிகாரி கார்த்திகேயன் கூறியுள்ளார்.


ராஜீவ் வழக்கு விசாரணை தொடர்பாக ஆங்கிலத்தில் கார்த்திகேயன் புத்தகம் எழுதியுள்ளார்.

இந்தப் புத்தகம் தமிழில் "வாய்மையின் வெற்றி" என்று வெளியாக உள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் "ஜூனியர் விகடன்" இதழுக்கு அவர் அளித்துள்ள நேர்காணல்:

இலங்கையிலும் இந்தியாவிலும் பலிகள் பல நடந்தும் இன்னும் இலங்கையில் அமைதி நிலவவில்லையே...?

இதற்குப் பதிலாக அண்மையில் நான் நோர்வே நாட்டில் சர்வதேச தீவிரவாதம் பற்றி ஆற்றிய உரையைக் குறிப்பிட்டால் பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.

நான் அங்கு நிகழ்த்திய உரையின் தலைப்பு "ஏன் தீவிரவாதம்?" என்பதுதான்.

தீவிரவாதத்தில் இரண்டு வகை உள்ளது. ஒன்று மக்கள் தீவிரவாதம். இரண்டாவது ஜனநாயக தீவிரவாதம்.

மக்கள் தீவிரவாதம் என்பது மத அடிப்படையில் பொதுமக்களுக்குள் மூட்டி விடப்படுகிற தீ.

ஜனாநாயக தீவிரவாதம் என்பது, சிறுபான்மையினரை மதிக்காமல், அவர்களின் சம்மதம் பெறாமல் பெரும்பான்மையினர் எடுக்கும் சில முடிவுகளினால் விளைகிற தீவிரவாதம். இதுதான் இலங்கையில் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிற உயிர்பலிகளுக்குக் காரணம்.

முதலில் தமிழர்கள் ஜனநாயக முறையில் கொடுத்தார்கள். ஆட்சியாளர்களின் காதுகளில் இந்தக் குரல்கள் விழவில்லை. ஆகவே அடுத்த தலைமுறையினர் ஆயுதங்களைக் கையில் எடுத்து, தங்கள் வாழ்வுரிமையைக் காத்துக்கொள்ள போராடுகிறார்கள். அதற்கு தீர்வு கண்டால்தான் அங்கே அமைதி திரும்பும்.

ராஜீவ் விசாரணையைப் பற்றி வெளியிட்டுள்ள புத்தகத்துக்கு விடுதலைப் புலிகளிடமிருந்து கடும் கண்டனம் வந்ததாமே?

அதை கண்டனம் என்று சொல்ல முடியாது. என் புத்தகத்தின் மீதான அவர்களின் உணர்வைப் பதிவு செய்தார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

புலிகளின் இணையதளத்தில் என் புத்தகம் பற்றி அவர்கள் தரப்பு கருத்துகளை வெளியிட்டனர்.

அதில், "ராஜீவ் கொலையைப் பற்றியும், அதன் விசாரணையைப் பற்றியும் விரிவாக எழுதியுள்ள தாங்கள், இந்திய-இலங்கை அமைதி ஒப்பந்தத்தைப் பற்றியும், இலங்கையில் அமைதிப்படை செய்த அட்டகாசங்களைப் பற்றியும் ஏன் எழுத மறந்தீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டிருந்தது என்றார் கார்த்திகேயன்.
www.puthinam.com
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
#2
உந்தக் கார்த்தீகேயன் எனும் மிருகத்தினால், "ராஜீவின் விசாரணை" எனும் பெயரில் பல அப்பாவி ஈழத்தமிழ் இளையர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள், இன்றும் பலர் இந்திய சித்திரவதைக் கூடங்களில் அடைக்கப்பட்டுள்ளார்கள்!

மாத்தையாவின் உதவியுடன் இந்திய புலனாய்வுத்துறை, ஈழத்தில் அரங்கேற்றி தோல்வியில் முடிவடைந்த சதி நாடகத்தில் முக்கிய கதாபாத்திரம் ஏற்றவரும் இதே கார்த்தீகேயன் தான்!!!

இன்று, இந்த மிருகம் இரத்தக்கறைபடிந்த தனது வரலாற்றை புத்தகம் எனும் பெயரில் காசு சேர்க்கவும் வெளிக்கிட்டிருக்கிறது!!!!!
" "
Reply
#3
நன்றி தகவலுக்கு

Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)