Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பிராமணீயம் இந்துத்துவா மனுஸ்மிருதி..
#1
Reply
#2
நாரதா இந்தக் கட்டுரையை துண்டு துண்டாப் போட்டிருந்தா.. வாசிக்க வசதுயாய் இருக்கும்... விட்ட இடத்தை தேடிப்பிடிக்க கடினமா இருக்கு..
:::::::::::::: :::::::::::::::
Reply
#3
<b>மனுஸ்மிருதி, மனுவின் சட்டங்கள், தமிழர்களைச் சூத்திரர்கள் என்று வகுத்த வருணாச்சிரமத்தைப் பற்றியும் பாரதியாரின் கருத்தைக் கேளுங்கள்.</b>


<b>"சூத்திரனுக்கொரு நீதி தண்டச்சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி சாத்திரம் சொல்லிடுமாயின் -அது
சாத்திரமன்றுகண்டேன்."

~ பாரதியார்</b>~[/color]
Reply
#4
சுஜாதா போன்ற பிறப்பால் பிராமண எழுத்தாளர்கள் தாங்கள் வெளிப்பூணூலை அறுத்தெறிந்தாலும் மனதில் இருக்கும் உட்பூணூலை இவர்கள் இன்னும் அறுக்கவில்லை...இவர்கள் இன்று எழுதும் கதைவசனங்களில் பிராமணியத்தை காக்க முனைவதை அவதானிக்கலாம்...
Reply
#5
பிராமணீய கோட்பாட்டிற்கு எதிரான உண்மையான போராட்டத்தைத் திராவிட இயக்கம் கைவிட்டு பல பத்தாண்டுகள் ஆகிவிட்டது. நிலைசெய்ய உதவாத உதிய மரத்தைப் போன்றதுதான் அவர்களின் இன்றைய வர்ணாசிரம எதிர்ப்பு. முப்பது ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சியில் இருக்கும் திராவிட இயக்கத்தால், வர்ணாசிரம சாதீய வெறிக்கு எதிரான திசையில் தமிழ்ச்சமூகத்தைக் கொண்டு செல்ல முடியவில்லை. ஓட்டு வங்கிகளின் அடிப்படையிலான அணுகுமுறையும், அதனடிப்படையிலான சாதீய சமரசங்களுமே அதற்குக் காரணம். அதன் விளைவுதான் இன்னும் தமிழகத்தின் பல லட்சம் கிராமங்களில் தீண்டாமைக் கொடுமை அனைத்து வடிவங்களிலும் நிலைபெற்றுள்ளது. மேலவளவு முதல் திண்ணியம் வரை பல நிகழ்வுகளைப் பார்த்தப்பிறகும் இவர்களால் பதட்டப்படாமல், பெருமிதத்தோடு ஆட்சி நடத்த முடிகிறது.



கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம், பாப்பாபட்டியில் இருபெரும் திராவிட இயக்கத்தின் ஆட்சிக் காலத்திலும் தேர்தல் நடத்தி தலித்தைப் பஞ்சாயத்துத் தலைவராக்க முடியவில்லை. அதைவிடப் பெரிய கொடுமை அங்கு நிலவும் சாதிவெறியை ஒரு பிரச்சனையாகக் கூட இரண்டு கட்சிகளும் இன்று வரை பேசுவதில்லை

.

பிராமணீயம், அக்கிரகாரத்தில் மட்டுமல்ல, அடுத்தவேலை கஞ்சிக்கு வழியில்லாத கீரிப்பட்டியின் ஓலைக்குடிசை வரை கொடிகட்டிப் பறக்கிறது. இடைநிலை சாதிகளின் வாக்கு வங்கிகளே இவர்களுக்கு பிராதான இலக்காக இருப்பதால் அதன் சிந்தனையில் ஏற்றப்பட்டுள்ள சாதீய வெறித்தனத்திற்கு எதிரான போராட்டத்தை நடத்தும் கொள்கைத்திறனை இவர்கள் இழந்துவிட்டனர்.

அதுமட்டுமல்ல, இவர்கள் எந்த வர்க்கத்தின் நலனைப் பாதுகாக்க நினைக்கிறார்களோ, அந்த வர்க்கத்திற்கு இந்த ஏற்றத்தாழ்வுகளை அகற்றவேண்டிய அவசியம் ஏதுமில்லை. மாறாக இந்த ஏற்றத்தாழ்வுகள் நீடிப்பதென்பது, ஒடுக்கப்பட்டவர்கள் வர்க்கரீதியாக திரண்டுவிடாதபடி தடுக்கும் வலுமிகுந்த கேடயமாகும். எனவேதான் அந்த கேடயத்தை இவர்கள் இறுகப்பற்றிக்கொண்டு நிற்கின்றனர்.




வெண்மணி நெருப்பு பற்றி எறிந்தபொழுது இவர்கள் என்ன பேசினார்கள் என்பதை வரலாறு மறந்துவிடாது. வெண்மணி என்பது வெறும் கூலிக்கான போராட்டம் மட்டுமல்ல, தலித்களின் சுயமரியாதைக்குமான போராட்டமும்தான். ஆனால் அப்பொழுது இந்த சுயமரியாதைச் சிங்கங்கள் எங்கே போயின? இவர்கள் பேசும் வர்ணாசிரம எதிர்ப்பு என்பது இவர்களின் வர்க்கநலனுக்கு உட்பட்டதுதான் என்பதை வரலாறெங்கும் நம்மால் பார்க்கமுடியும்.




கம்யூனிஸ்ட் இயக்கத்தை வசைபாடுவதையே பிறப்புரிமையாக நினைத்துக் கொண்டிருப்பவரும், திராவிட இயக்கம் தமிழகத்தைப் பொன்விளையும் பூமியாக மாற்றிவிட்டது எனப் புகழ்மாலைபொழிந்து கொண்டிருப்பவருமான மலையாள எழுத்தாளர் சக்கரியா ஜுன் மாத காலச்சுவடு இதழில் எழுதுகிறார் ‘ஒரு பஞ்சாயத்தில் தலித் வேட்பாளர் வெற்றி பெறுகிறார். ஆனால் ஐந்தே நிமிடத்தில் உயர் வருணர்களுக்காகப் பதவியை ராஜினாமா செய்கிறார். மதுரைக்கு அருகில் கீழவளவு கிராமத்தில் பாண்டியம்மாள் என்ற தலித் இனப்பெண்ணை மேல் சாதியினர் ஆடுமேய்க்க அனுமதிப்பதில்லை.



பகிரமங்கமாகவும், சட்டத்துக்கு அறைகூவல் விடுத்தும் தலித் இனத்தவரை ஒடுக்கும் சம்பவங்களைப் பற்றியும் இதுபோன்ற பல செய்திகளை வாசித்தேன். மலையாளியின் தற்புகழ்ச்சியுடன் இதைச்சொல்கிறேன் - இது கேரளத்தில் நடக்காது. இந்த ஒரு செயலுக்காக கம்யூனிஸ்ட் இயக்கத்துக்கு நான் நன்றி சொல்ல வேண்டும் (அதற்கும் முன்னதாக நாராயண குருவுக்கும், அய்யன் காளிக்கும்) இந்த தீராத களங்கம் முடிவடைகிற அன்றுதான் தமிழ்நாட்டின் உண்மையான பாய்ச்சல் தொடங்கும்’ என்கிறார்.



இந்த தீராத களங்கத்தை மகிழ்ச்சியோடு தூக்கிச்சுமக்கும் சமூகமாக தமிழகம் இன்று இருப்பதற்கு காரணம், தென்னிந்தியாவிலே மிகக்கொடுமையான ஜாதிய ஒடுக்குமுறை இருந்த கேரளத்துடன் ஒப்பிட்டு நாம் இழிவுபடுத்தப்படும் நிலை உருவானதற்குக் காரணம், பிராமணீய கோட்பாடு தமிழகத்தில் எதிர்கொள்ளப்பட்ட விதத்தில் இருந்த ஊனமே. இந்த ஊனத்தின் தொடர்ச்சிதான், எந்த கூச்சமுமின்றி இந்துத்துவாவின் இளைய பங்காளிகளாக இருபெரும் திராவிட இயக்கமும் தயக்கமின்றி எளிதில் கைகோர்க்க முடிந்ததென்பது.




உண்மை இப்படியிருக்க அசோகமித்திரன் அய்யோ, அப்பா எல்லாம் போய்விட்டது என்று பூச்சாண்டி காட்டுவதும், பிராமணரல்லாதோர் இயக்கத்தால் பிராமண இனம் கடும் நெருக்கடியில் இருக்கிறது என்று, சங்கரச்சாரி கைதை மட்டும் மையப்படுத்தி பேசுவதென்பதும் பெரும் அபத்தமாகும் ‘மாலுமி சரியில்லை என்பதற்காக கப்பலை அழிக்கக்கூடாது, காப்பாற்ற வேண்டும்’ என்று சங்கரமடத்தைக் காப்பாற்ற அசோகமித்திரனை விட தீவிரமான குரல் திராவிட கோட்டைக்குள் இருந்து தான் வந்தது என்பதை அவருக்கு நினைவுபடுத்துவோம்.



ஏகாதிபத்தியம் உருவாக்கியுள்ள நவீன உலகமயச்சூழல், தாராளமயக் கோட்பாடுகள், பெரும் முதலாளிகளின் லாப வேட்கை எல்லாம் சேர்ந்து இந்தியாவைச் சூறையாடிக்கொண்டிருக்கிறது. இதன் ஒரு விளைவுதான் வேலையின்மை. அடிமாட்டு விலைக்கு மனித உழைப்பு கிடைக்கும்பொழுது அரசு உத்தியோகம் எனச்சொல்லி அதிக சம்பளத்தோடு தத்தெடுத்தக்கொள்ளும் முட்டாள்தனத்தை இனிநாங்கள் செய்யமாட்டோம் என்று இந்தியாவின் ஆளும் வர்க்கம் உரக்க கத்துகிறது. நியாயமாக அதை நோக்கிப் பாய வேண்டிய கோபத்தைப் பிராமணரல்லாதோர் இயக்கம்தான் காரணம் என்று திசை திருப்புவது வேலையின்மை என்ற கொடுமையை நிலைநிறுத்தவே உதவி செய்யும்.



அதுமட்டுமல்ல, பிராமணர்களுக்கு மட்டும்தான் அரசாங்க வேலை இல்லை என்றும் இதர சாதிக்காரர்களுக்கு தட்டுத்தாம்பாளத்தோடு தலைமை செயலகத்தில் இருந்து உத்தரவுகள் வந்து கொண்டிருப்பதைப் போலவும் அவர் பேசுவது என்பது சாதீய கண்ணோட்டத்தின் உச்சமாகும்.



கடந்த மார்ச் மாதம் மதுரைக்கு அருகில் உள்ள ஒரு சிறு நகரத்தில் சாதி சங்கமொன்றின் தலைவர் பொதுக்கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்ததைச் சிறிது நேரம் (தேனீர் குடிக்கும்வரை) கேட்க நேரிட்டது ‘நம்மாளுகளுக்காகத்தான் நான் தொடர்ச்சியா போராடுறேன். என் மேல 18 கேசு இருக்கு அதுல 3 கேசு கொலக்கேசு. ஆனாலும் நான் விடமாட்டேன் என்று சொல்லி பெருமிதத்துடனும் ஆக்ரோசத்துடனும் அந்த நபர் பேசிக் கொண்டிருந்தபொழுது அந்த சிறு கூட்டம் வெறியின் உச்சத்திற்கு இழுக்கப்பட்டுக் கொண்டிருந்தது. தனது சாதிக்காக இவ்வளவு வெறித்தனத்தோடு வேறு யாராலும் பேச முடியாது என் எனக்கு தோன்றியது. ஏப்ரல்11ம் தேதி அவுட்லுக் இதழைப் படித்தப்பின் எனது முந்தைய கருத்தை மாற்றிக்கொண்டேன்.



ஜெயகாந்தனின் இந்த நிலையை வெளிப்படையாக எதிர்க்காமல் மௌனம் சாதிப்பதன் மூலம் சிலர் மறைமுக ஆதரவை அவருக்கு அளிப்பதென்பதையும், அசோகமித்திரனை வெளிப்படையாக சிலர் ஆதரிப்பதென்பதையும் நாம் பார்க்கிறோம். வழக்கம் போல் ஜெயமோகன் ‘இலக்கிய வாசகன் இவ்விசயத்தில் ஒரு குறைந்த பட்ச தெளிவைக் கொண்டிருக்க வேண்டும்’ என்று பீடிகை போட்டு தனது விஷத்தைக் கக்கியுள்ளார். ‘அசோகமித்திரன் சொல்வது போல தமிழ்நாட்டு பிராமணர்கள் இன ஒடுக்குமுறைக்கு ஆளாகியுள்ளனரா திடமான பதிலை சொல்வது சிரமம்’ எனச் சொல்லுவது போல் சொல்லி அசோகமித்திரனின் கருத்தை ஆமோதித்துள்ளார்.



‘ஜெயமோகன் ஆர்.எஸ்.எஸ்.காரர் அல்ல, ஒரு விஞ்ஞானியின் கூர்மையுடனும் நாணயத்துடனும் அவர் விசயத்தைப் பதிவு செய்கிறார்,’ என்று சமீபத்திய இந்திய டுடேயில் அசோகமித்திரன் எழுதியதற்கு கச்சிதமான கைமாறு ஜெயமோகன் தரப்பில் செய்யப்பட்டுள்ளது. இது ஆபத்தான கொள்கை கூட்டணி (பார்க்க : அறுவை சிகிச்சைக்குக் கடப்பாரை, ஈ.வே.ரா.வின் அணுகுமுறை என்ற ஜெயமோகனின் கட்டுரை).



அசோகமித்திரனின் பேட்டி குறித்து தீம்தரிகிடவில் ஞானியின் கருத்து அதிர்ச்சியளிக்கிறது. ‘இதுவரை அவரது கதைகளிலோ, நேரடி நடவடிக்கைகளிலோ ஜாதி வெறியையோ, ஜாதி வெறுப்பையோ வெளிப்படுத்தும் எதையும் கண்டதில்லை’ என்கிறார். இப்பொழுது இதைச் சொல்லுவதன் நோக்கம் என்ன? இதுவரை இப்படிப்பட்ட சிந்தனையே இல்லாதவருக்கு ஏப்ரல் 10ம் தேதி இரவு தான் இந்த சிந்தனையே வந்துள்ளது என்கிறாரா ஞானி?



ஐம்பது வருடமாக அவர் இப்படித்தான் உள்ளார் என்பதை அவரது பேட்டியே சொல்கிறது. அசோகமித்திரனின் இந்த நிலைபாடு புதிதல்ல என்பதை அவரை நெருக்கமாக அறிந்தவர்கள் அறிவார்கள் (ஞானியைத் தவிர) பி.ஜே.பி. முதன் முறையாக ஆட்சிக்கு வந்த போது அதை வெளிப்படையாக வரவேற்ற தமிழ் எழுத்தாளர் இவர் தான். உண்மை இவ்வாறு இருக்கும் போது கடந்த காலத்தில் அவர் அப்படிப்பட்டவரல்ல என்ற நற்சான்றிதழை ஞானி ஏன் கொடுப்பானேன்?



ஆடு, கோழி பலியிடல் தடைச்சட்டம் என்பது ஆகம கோட்பாட்டுக்குள் சிறு தெய்வ வழிபாட்டை கொண்டு வரும் முயற்சி எனச்சொல்லி கம்யூனிஸ்டுகள் அதை எதிர்த்த பொழுது கோபம் கொப்பளித்து ‘இடது சாரி பூசாரிகள்’ என எழுதிய ஞானி, அசோகமித்திரன் எனும் ஆஷ்டான பூபதி அம்மணமாய் நிற்கும் பொழுது அதற்கு எதிராக வர வேண்டிய நியாயமான கோபத்தைப் புதைத்துவிட்டு, வேதனையையும், வருத்தத்தையும் மட்டும் சடங்கு பூர்வமாகத் தெரிவித்து விட்டு தப்பித்துக் கொள்வதென்பது பகுத்தறிவுக்கோ, பத்திரிக்கைத் தொழிலுக்கோ வழங்கும் நீதியல்ல.
Reply
#6
மறைவிலிருந்து வெளித்தோன்றும் மநுவாதிகள்

சு. வெங்கடேசன்

http://www.keetru.com/visai/aug05/su_venkatesan.html


மேலுள்ள கட்டுரையில் நாங்கள் வாதிடும் விடயங்கள் சம்பந்தமாக நிறயத் தகவல்கள் உள்ளதால் போடப் பட்டது.சில விடயங்கள் தேவயற்றது,ஆனால் இந்த நெடிய கட்டுரை பல தகவல்களை ஒரு முகமாகத் தருகிறது.பொறுமையாக வாசித்தால் பல விசயங்களைத் தெரிந்து கொள்ளலாம்...
Reply
#7
நாரதா இதோட பெரியார் அதேதளத்தில் சொல்வதையும் படித்துப் பாருங்கள்...
http://www.keetru.com/rebel/periyar/10.html

<b>பெரியார் பேசுகிறார்..</b>

ஆதித் திராவிடர்களை நான், இஸ்லாம் மதத்தில் சேருங்கள்' என்று சொன்னதற்காக அனேகம் பேர் என்மீது கோபித்துக் கொண்டார்கள். அவர்களைப்பற்றி நான் கோபித்துக் கொள்ளவில்லை. அவர்களுக்குச் சொந்த அறிவும் இல்லை; சொல்வதைக் கிரகிக்கச் சக்தியும் இல்லை. சிலருக்குத் தங்கள் மேன்மை போய்விடுமே தங்களுக்கு அடிமைகள் இல்லாமல் போய்விடுமே என்கின்ற சுயநல எண்ணம். ஏனெனில், மோட்சம் அடைவதற்காக என்று நான் ஆதித் திராவிடர்களை இஸ்லாம் கொள்கைகளைத் தழுவுங்கள் என்று சொல்லவில்லை; அல்லது "ஆத்மார்த்தத்திற்கோ' "கடவுளை அடைவதற்கோ' நான் அப்படிச் சொல்லவில்லை. ஆதித் திராவிடர்களின் தீண்டாமையைப் போக்குவதற்குச் சட்டம் செய்வது, சத்தியாக்கிரகம் செய்வது போலவே இஸ்லாம் கொள்கையைத் தழுவுவது என்பதும் ஒரு வழி என்றே சொன்னேன்; இனியும் சொல்கின்றேன்.
::
Reply
#8
<b>பிராமணர்களின் ஆதிக்கத்தாலும், பிராமணர்கள் அறிமுகப்படுத்திய வருணாசிரமத்தாலும், சாதி வெறி பிடித்த் பிராமணரல்லாத தமிழர்களும், பிராமணரும் சேர்ந்து ஆதி திராவிடர்களுக்கு நீதி கிடைக்காமல் அடக்கி, ஒடுக்கிய போது பெரியார் இந்தக் கருத்தைச் சொன்னார், இஸ்லாத்திற்கு மதம் மாறுவதால் ஆதி திராவிடர்கள் நீதியாக, சமமாக நடத்தப் படுவார்களென்றால் அவர்கள் போவதில் என்ன தவறு?</b>
Reply
#9
மேலும் ஆகமங்களை வாசித்தால் கடவுள் நம்பிக்கை வரும் என்று வாதிடுவோருக்கு இக் கட்டுரை,சமர்ப்பணம்.எங்கே ஆகம அறிவைப் பயன்படுத்தி இதில் கூறப்பட்டவை பற்றி மறுதலித்து பிராமணீயம் நியாயமானது என என் போல் ஞான சூனியங்களுக்கு விளக்குங்கள்.
Reply
#10
[quote=preethi]<b>பிராமணர்களின் ஆதிக்கத்தாலும், பிராமணர்கள் அறிமுகப்படுத்திய வருணாசிரமத்தாலும், சாதி வெறி பிடித்த் பிராமணரல்லாத தமிழர்களும், பிராமணரும் சேர்ந்து ஆதி திராவிடர்களுக்கு நீதி கிடைக்காமல் அடக்கி, ஒடுக்கிய போது பெரியார் இந்தக் கருத்தைச் சொன்னார், இஸ்லாத்திற்கு மதம் மாறுவதால் ஆதி திராவிடர்கள் நீதியாக, சமமாக நடத்தப் படுவார்களென்றால் அவர்கள் போவதில் என்ன தவறு?</b>

ஓ பிராமணர்தான் அவர்களை அடிமையாக்கியதாய் பெரியார் சொல்லி இருக்கிறாரா??? அப்ப தமிழன் அவர்களை ஒண்டும் செய்யேல்லை கைகட்டி வேடிக்கை பாத்தவை எண்டுறீர்..

தென்னையில தேள் கடிச்சா பனையில நெறி கட்டும் எண்டுறீர்... ம்ம்ம் வாழ்க..
::
Reply
#11
அம்பேத்கார் ஆதி திராவிடரை புத்த மதத்தவர் ஆகச் சொன்னார்,அதனையே அவரும் பின் பற்றினர்.ஆனால் இது எந்தளவு தூரத்திற்கு அவர்களின் பிரச்ச்னையை தீர்த்தது என்பது சந்தேகமே,ஆனால் அன்றிருந்த நிலயில் வேறு வழி இல்லாதவிடத்து இது ஒரு தற்காலிகத் தீர்வாக இருந்திருக்கலாம்.இலங்கயிலும் பலர் இந்தக் காரனங்களினாலேயே கிரித்துவராக மாறினர் ஆனால் அவர்கள் சாதியத்தையும் அங்கே காவிச் சென்றனர்.

என்னைப் பொறுத்தவரை எல்லாவற்றிற்கும் தீர்வாக அமயக் கூடியது சகோதரத்துவம்,சமத்துவம்,சுதந்திரம் என்பவற்றை முன் நிறுத்தும் மனித நேயக் கோட்பாடே தமிழரின் வாழ்க்கை நியதியாக இருக்க வேண்டும். இதுவே நாம் போராடிப் பெறும் விடுதலை பெறுமதியானதாக இருக்க உதவும்.எமது விடுதலைக்கு நாம் அழித்த விலை பெரியது அதன் பலாபலங்களை அனைவருமே பெற வேண்டும்,அதிலும் முக்கியமாக போராடியவர் பெற வேண்டும்.சாக்கடைக்குள் கிடக்கும் உந்த நிறுவனப் படுத்தப் பட்ட மதங்களோ
சாதிய அடிப் படயில் அமைந்த சமூகமோ உண்மயான விடுதலையை அனை வருக்கும் பெற்றுத்தரா.இன்று பூசி மெழுகப் பட்டுள்ள இந்த முரண்பாடுகள் அங்கான்கே வெளிக் கிளம்புகின்றன, இவை வேரொடு மண்ணோடு அழிக்கப் படும் வரை
கிடைக்கும் இடை வெளிகளுக்குள் வெளிக் கிளம்பும்.சாதியம் எம்மில் அனைவரிலும் இருக்கிறது,அதுவே உண்மை.இதை பூசி மெழுகவதால் அது அற்று விடாது.என்று நாம் அனை வருமே ஒன்றென உனருகிறோமோ அன்றே எமக்கு பூரண விடுதலை.
Reply
#12
[quote=preethi]<b>பிராமணர்களின் ஆதிக்கத்தாலும், பிராமணர்கள் அறிமுகப்படுத்திய வருணாசிரமத்தாலும், சாதி வெறி பிடித்த் பிராமணரல்லாத தமிழர்களும், பிராமணரும் சேர்ந்து ஆதி திராவிடர்களுக்கு நீதி கிடைக்காமல் அடக்கி, ஒடுக்கிய போது பெரியார் இந்தக் கருத்தைச் சொன்னார், இஸ்லாத்திற்கு மதம் மாறுவதால் ஆதி திராவிடர்கள் நீதியாக, சமமாக நடத்தப் படுவார்களென்றால் அவர்கள் போவதில் என்ன தவறு?</b>

பிராமணீயம் என்பதற்கு நான் கொள்ளும் பொருள் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற உணர்வின் மறுப்பு என்பதாகும்.
Reply
#13
[quote="Thala"]நாரதா இதோட பெரியார் அதேதளத்தில் சொல்வதையும் படித்துப் பாருங்கள்...
http://www.keetru.com/rebel/periyar/10.html

<b>பெரியார் பேசுகிறார்..</b>


ஆதித் திராவிடர்களை நான், ‘இஸ்லாம் மதத்தில் சேருங்கள்' என்று சொன்னதற்காக அனேகம் பேர் என்மீது கோபித்துக் கொண்டார்கள். அவர்களைப்பற்றி நான் கோபித்துக் கொள்ளவில்லை. அவர்களுக்குச் சொந்த அறிவும் இல்லை; சொல்வதைக் கிரகிக்கச் சக்தியும் இல்லை. சிலருக்குத் தங்கள் மேன்மை போய்விடுமே தங்களுக்கு அடிமைகள் இல்லாமல் போய்விடுமே என்கின்ற சுயநல எண்ணம். ஏனெனில், மோட்சம் அடைவதற்காக என்று நான் ஆதித் திராவிடர்களை இஸ்லாம் கொள்கைகளைத் தழுவுங்கள் என்று சொல்லவில்லை; அல்லது "ஆத்மார்த்தத்திற்கோ' "கடவுளை அடைவதற்கோ' நான் அப்படிச் சொல்லவில்லை. ஆதித் திராவிடர்களின் தீண்டாமையைப் போக்குவதற்குச் சட்டம் செய்வது, சத்தியாக்கிரகம் செய்வது போலவே இஸ்லாம் கொள்கையைத் தழுவுவது என்பதும் ஒரு வழி என்றே சொன்னேன்; இனியும் சொல்கின்றேன்.

சட்டம் செய்வது கஷ்டம்; செய்தாலும் நடைமுறையில் வருவது கஷ்டம். சத்தியாக்கிரகம் செய்வதும் கஷ்டம்; செய்தாலும் வெற்றி பெறுவது சந்தேகம். இவற்றால் துன்பமும் தோல்வியும் கிடைத்தாலும் கிடைக்கலாம். ஆனால், ஆதித் திராவிடர்களுக்கு இஸ்லாம் கொள்கையை ஏற்றுக் கொண்டேன் என்று சொல்வதில் என்ன கஷ்டம்? அதில் தோல்வியோ துன்பமோ ஏதாவது உண்டா? அல்லது, அன்னியருக்கு ஏதாவது கஷ்டம் உண்டா? அவன் ஆத்திகனாய் இருந்தால் என்ன? நாத்திகனாய் இருந்தால் என்ன? உண்மை இஸ்லாம் ஆனால் என்ன? பொய் இஸ்லாம் ஆனால் என்ன? உலகில் மதங்கள் ஒழிக்கப்படும்போது, இஸ்லாம் மதமும் ஒழியும்.
ஏன் கிறிஸ்து மதத்தைக் தழுவக் கூடாது? ஆரிய சமாஜத்தைத் தழுவக் கூடாது? கிறிஸ்து மதக் கொள்கைகள் புத்தகத்தில் எப்படி இருக்கின்றன என்பதைப் பற்றி நான் சொல்ல வரவில்லை. நடைமுறையில் பறை கிறிஸ்தவன், பார்ப்பாரக் கிறிஸ்தவன், வேளாளக் கிறிஸ்தவன், நாயுடு கிறிஸ்தவன், கைக்கோளக் கிறிஸ்தவன், நாடார் கிறிஸ்தவன் என்பதாகத் தமிழ்நாடு முழுவதும் உள்ளனர். இஸ்லாம் மார்க்கத்தில் இவ்வித வேறுபாடுகள் இருக்கின்றனவா? கிறிஸ்தவ சகோதரர்கள் கோபிக்கக் கூடாது; வேண்டுமானால், வெட்கப்படுங்கள் என்று வணக்கமாய்த் தெரிவித்துக் கொள்கிறேன். ஆரிய சமாஜம் என்பதும் ஒரு வேஷந்தான்.
Reply
#14
Thala Wrote:ஓ <b>பிராமணர்தான்</b> அவர்களை அடிமையாக்கியதாய் பெரியார் சொல்லி இருக்கிறாரா??? <b>அப்ப தமிழன் அவர்களை ஒண்டும் செய்யேல்லை </b>கைகட்டி வேடிக்கை பாத்தவை எண்டுறீர்..
தென்னையில தேள் கடிச்சா பனையில நெறி கட்டும் எண்டுறீர்... ம்ம்ம் வாழ்க..


<b>கடைசியில பிராமணன் தமிழன் இல்லையென்பதை உம்மையறியாமலே நீர் ஒத்துக் கொள்கிறீர் இல்லையா?</b>[color]

[color=olive]<b>பெரியாரின் காலத்தில் பிராமணர் மற்றத் தமிழர்களைச் சூத்திரர் என்றும் தாழ்த்தப்ப்ட்டவர்கள், தீண்டத்தகாதவர் என்றும் அடிமையாக்கியது போன்று தமிழர்கள் செய்யவில்லை. இலங்கையில் நிலைமை வேறு, </b>


<b>பெரியார் பிராமண ஆதிக்கத்தைத் தான் எதிர்த்தார். பெரியார் தமிழர்களுக்குச் சொன்ன அறிவுரை இது, "பாம்பையும், பிராமணனையும் ஒரே நேரத்தில் கண்டால் பாம்பை விட்டு விடு, ஆனால் பிராமணனை அடி, ஏனென்றால் பாம்பை விட பிராமணன் நஞ்சுள்ளவன், பாம்புக்குப் பயப்படாதே ஆனால் பிராமணனுக்குப் பயப்படு. </b>

[b]பெரியார் எந்தளவுக்குப் பிராமணர்களைப் புரிந்து வைத்திருக்கிறாரெனபதற்கு நீர் நல்ல உதாரணம்.
Reply
#15
preethi Wrote:
Thala Wrote:ஓ <b>பிராமணர்தான்</b> அவர்களை அடிமையாக்கியதாய் பெரியார் சொல்லி இருக்கிறாரா??? <b>அப்ப தமிழன் அவர்களை ஒண்டும் செய்யேல்லை </b>கைகட்டி வேடிக்கை பாத்தவை எண்டுறீர்..
தென்னையில தேள் கடிச்சா பனையில நெறி கட்டும் எண்டுறீர்... ம்ம்ம் வாழ்க..


<b>கடைசியில பிராமணன் தமிழன் இல்லையென்பதை உம்மையறியாமலே நீர் ஒத்துக் கொள்கிறீர் இல்லையா?</b>
<b>பெரியாரின் காலத்தில் பிராமணர் மற்றத் தமிழர்களைச் சூத்திரர் என்றும் தாழ்த்தப்ப்ட்டவர்கள், தீண்டத்தகாதவர் என்றும் அடிமையாக்கியது போன்று தமிழர்கள் செய்யவில்லை. இலங்கையில் நிலைமை வேறு, </b>


<b>பெரியார் பிராமண ஆதிக்கத்தைத் தான் எதிர்த்தார். பெரியார் தமிழர்களுக்குச் சொன்ன அறிவுரை இது, \"பாம்பையும், பிராமணனையும் ஒரே நேரத்தில் கண்டால் பாம்பை விட்டு விடு, ஆனால் பிராமணனை அடி, ஏனென்றால் பாம்பை விட பிராமணன் நஞ்சுள்ளவன், பாம்புக்குப் பயப்படாதே ஆனால் பிராமணனுக்குப் பயப்படு. </b>

<b>பெரியார் எந்தளவுக்குப் பிராமணர்களைப் புரிந்து வைத்திருக்கிறாரெனபதற்கு நீர் நல்ல உதாரணம்.</b>

எங்க பிரீதி உமக்குமட்டும் இப்பிடி அறிவு பொங்கிவளியுது... எங்க சொன்னனா தமிழன் வேறு <b>தமிழ்ப்பிராமணன்</b> வேறு எண்டு... <b>ஆரியனிலை பிராமணன் இருக்குறான்.. சத்திரியன் இருக்கிறான், வைசியன் இருக்கிறான்,</b> இதில நீர் சொன்ன மாதிரி பிராமணன்(ஆரியன்) ஒண்டும் படை எடுத்து வந்து தமிழன அடிமை ஆக்கேல்ல வந்தவன் <b>ஆரிய ஷூத்திரன், ஆரியப்பட்டா</b> முதல்ல நீர் அறிய வேண்டி நிறைய விசயம் இருக்கு...

பெரியாரை உம்மட சாதி வெறிக்கு துணைக்கு அழைக்காதேம்... அவர் சாதியைதூண்டும் உம்மைப் போன்ற இத்து வெள்ளாளனயும் தான் எதிர்த்தவர்... பிராமணனை ஈழத்தில திருத்தலாம் ஆனா உம்மைப் போன்றவரை திருத்துவது கடினம்..


இதையும் வாசியும்..

<b>பெரியார் பேசுகிறார்</b>
http://www.keetru.com/rebel/periyar/9.html
::
Reply
#16
எனக்கு ஒரு சந்தேகம். எனது இந்துமத வகுப்பில் எனது பேராசிரியர் சொன்னார். ஆரியர்தான் இந்தியாவில ஆரியக்குடியாம். அவர்கள் குடியேறியவர்கள் அல்லர் என்றும்., புத்தர் வந்து ஆரியராம். அவர் இந்துமதமாம். அவர் இறந்து 15 வருடங்களுக்கு பிறகுதான் அவரது கொள்கைகளை வைத்து புத்தமதம் உருவாகியதாக ஆனால் எனக்கு இது உண்மையா பொய்யா எனத்தெரியாது. :?
<b> .. .. !!</b>
Reply
#17
வாங்கோ எங்கயண போயிருந்தனீங்கள் இருக்கிற குழப்பத்துக்க நீங்க வேற ,முன்னுக்கு இருந்து வாசிச்சுக் கொன்டு வாங்கோ விளங்கும்,ஏன் உங்கட பேராசிரியர் புத்தர் கிருஸ்னண்ட அவதாரம் எண்டும் சொன்னவரே,உங்கட பேராசிரியரின்ட பேரென்ன?
Reply
#18
ஜஸ்ட் ஒரு வகுப்புதான் போனனான் அதுலயே குழப்பி போட்டார். சரி எதுக்கும் அந்த பாடம் எடுத்து முடிஞ்சாப்பிறகு இங்கு வந்து நான் கதைக்குறன். அதுதான் நல்லது. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<b> .. .. !!</b>
Reply


Forum Jump:


Users browsing this thread: