09-20-2005, 07:12 PM
தமிழர் புனர்வாழ்வுக் கழகமும் அமெரிக்காவின் நிலைப்பாடும்
அமெரிக்காவில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தை தடை செய்ய வேண்டிய நிலை இன்னும் ஏற்படவில்லை எனவும் தமிழர் புனர்வாழ்வு கழகம் அமெரிக்க சட்ட விதிகளுக்கு உட்படவே நடந்து கொள்வதாகவும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜெப்ரி லன்ஸ்ரெட் தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள அமெரிக்க நிலையத்தில் திங்களன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கையிலேயே அமெரிக்க தூதுவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தமிழர் புனர்வாழ்வுக் கழகம் தொண்டர் நிறுவனம் என்ற அடிப்படையில் எங்கெல்லாம் மக்கள் கஷ்டப்படுகின்றார்களோ அவர்கள் அனைவருக்கும் இன, மத, மொழி வேறுபாடின்றி உதவி வருகின்றது.
எனினும் தமிழ் மக்களின் உதவியில் அது இயங்குவதன் ஒரே காரணத்தினால் இலங்கையிலுள்ள இனவாதிகளுக்கும் பேரினவாதிகளின் ஊதுகுழலாக செயற்படும் ஊடகங்களுக்கும் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் சற்று மாறுபட்ட அமைப்பாகவே தென்படுகின்றது.
இதன் காரணமாக தமிழர் புனர்வாழ்வுக் கழகத்துக்கு புலி முத்திரை குத்துவதுடன் அதனை தடை செய்ய வேண்டும் என சதா வாய் கிழிய கூக்குரல் இட்டு வருவதையும் அவதானிக்க முடிகின்றது.
தமிழர் புனர் வாழ்வுக் கழகத்தின் நியாயமான தன்னிகரற்ற பணியை நன்குணர்ந்தவகையில் அமெரிக்க தூதுவர் ஜெப்ரி லன்ஸ்ரெட், இனவாதிகளின் வாயை அடைக்கும் வகையில் பதிலளித்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்கதாகும்.
இலங்கையில் சுனாமி தாக்கத்தையடுத்து பரிதவித்த மக்களுக்கு இன மத பேதமின்றி உதவிக்கரம் நீட்டியவர்கள் இலங்கையிலுள்ள சமூக அமைப்புகள், தனியார் நிறுவனங்கள் என்றால் அது மிகையாகாது. அதனை தொடர்ந்தே ஆமை வேகத்தில் அரச நிவாரணங்கள் நகரத் தொடங்கின.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் மருந்து வகைகள் நிவாரணப் பொருட்கள் என்பவற்றுடன் ஓடோடி வந்து அன்று முதல் தன்னாலான உதவிகளை செய்து வருகின்றது. இதனை உணர்ந்து கொள்ளவோ, ஜீரணித்துக் கொள்ளவோ முடியாத பேரினவாதிகள் தமிழர் புனர் வாழ்வுக் கழகத்துக்கு எதிராக தொடர்ச்சியாகக் குரல் எழுப்பி வருகின்றனர்.
அது மாத்திரமன்றி தமிழர் புனர் வாழ்வுக் கழகத்தின் நிவாரணப் பொருட்களை எடுத்துச் செல்ல முடியாதவாறு தடை செய்வது மற்றும் அவர்களின் பணிகளுக்கு முட்டுக் கட்டைகளைப் போடுவது போன்ற நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் தமிழ் பேசும் மக்களின் அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்படும் என்று எவராவது கருதுவார்களேயானால் அது வெறும் பகற்கனவாகவே இருக்கும்.
அண்மையில் அமெரிக்காவின் நியூஓர்லியன்ஸில் வீசிய கற்றினா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழர் புனர்வாழ்வுக் கழகம் தன்னாலான உதவிகளை வழங்கியிருந்தது. இதுவே இலங்கையிலுள்ள இனவாதிகள் மத்தியில் சர்ச்சைக்குரிய விவகாரமாகவும் மாறியுள்ளது.
அமெரிக்காவின் துறைமுக நகரான நியூ ஓர்லியன்ஸ் மக்கள் மிகுந்த செல்வ சிறப்புடன் வாழ்ந்தவர்கள். அவர்கள் ஒரே நாளில் உணவுக்கும் குடி நீருக்கும் போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டமை மனிதாபிமானமுள்ள எவரையும் கவலைகொள்ளச் செய்வதாகவே இருக்கும். அந்த வகையில் தமிழர் புனர்வாழ்வுக் கழகமல்ல உலகிலுள்ள எந்தவொரு தொண்டர் அமைப்பõவது முன் வந்து உதவினால் அதனை அனைத்துத் தரப்பினரும் வரவேற்கவே செய்வார்கள்.
ஆனால் இலங்கை மாத்திரம் அவற்றுக்கு முற்றிலும் விதிவிலக்காக நடந்து கொள்வதை உலகம் நன்கு அவதானித்துக் கொண்டே இருக்கின்றது.
சாதாரணமாக தமிழ் மக்கள் என்றாலோ, தமிழ் அமைப்புகள் என்றோலோ அவர்களை சந்தேகக் கண்கொண்டு பார்த்து, சர்வதேச அரங்கில் கண்டனக் குரல்கøள் எழுப்பும் பேரினவாதிகள் எவ்வாறு இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வைக் காண ஒத்துழைப்பு வழங்கப் போகிறார்கள். எவ்வாறு நாட்டில் இன உறவை வளர்க்க உதவப் போகிறார்கள் என்பதை சர்வதேச உலகம் நன்கு கவனத்தில் கொள்வது இன்றியமையாததாகும் என்பதே தமிழ் பேசும் மக்களின் விருப்பமாகும்.
இதேவேளை, கடந்த காலங்களைப் போலன்றி இலங்கையில் நடப்பதென்ன என்பதையும் தமிழ் பேசும் மக்கள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்பதையும் சர்வதேச நாடுகள் அறிந்து வைத்துள்ளன.
இந்த பின்னணியிலேயே, அண்மையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் கூட்டத் தொடரில் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்குமாறு இலங்கை தரப்பில் வலியுறுத்தப்பட்ட போதிலும் அது பிசுபிசுத்துப் போனமை நினைவில் கொள்ளத்தக்கதாகும

[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>