Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தாயகக் கொள்கையும் தமிழர்களும்
#1
ஒரே மொழி - ஒரே மதம் - ஒரே இனக் குழுமம் கொண்ட மக்கள் நீண்ட நெடிய காலமாகத் தொடர்ந்து பாரம்பரியமாக வாழ்ந்து வரும் நிலம் அம்மக்களினத்தின் தாயகம் என்பது வரலாறு புகட்டும் அசைக்க முடியாத ஆணித்தரமான பாடமாகும். இது மிக மிக சாமானிய மக்களே புரிந்து, தெளிந்து கொண்ட உண்மை. இந்த உண்மையைக்கூட புரிந்து கொள்ளத் தடுமாறுபவர்களே நம் அரசியல்த் தலைமைகள் என்றால் அது வேறொன்றுமல்ல. சிங்களத் தலைமைகளின் அரசியல் அனுபவம் வரட்சியையும் - வங்குரோத்துத் தன்மையையுமே புடம் போட்டுக் காட்டுகின்றது.

LAND is not onily necessary for selp the expression and ethaic group. butir also necessary for the very survival of the ethiai cgroup.

‘ஒரு இனம் எதையும் இழக்கலாம். மீண்டும் வாழ்வு பெறலாம். ஆனால் ஒரு இனம் தன் தாயகத்தை இழந்தால் அந்த இனம் தலை தூக்க முடியாத ஒரு இனம் தன்னைத்தான் உணர்த்துவதற்கு மட்டுமல்ல, அந்த இனம் உயிரோடு ஒட்டிய வாழ்வு பெறுவதற்கும் தாய கம் மிக மிக முக்கியமானதாகும் என மேலைநாட்டறிஞனின் கூற்றின் ஆளத்தையும், நீளத்தையும் பார்ப்பதானால் ஒரு கால் தன் தாயகத்தை இழந்த யூத இனம், தன்னுள் எத்தனை வல்லமைகளை, அறிவை, ஆற்றலை, ஆளுமையை, நாகரிக செழுமையை உள்ளடக்கியிருந்தும் உலக நாடெல்லாம் அனாதையாக அகதிகளாக தஞ்சம் புகுந்த நாடெல்லாம் ஓட ஓட வெருட்டியதையும் கிட்லர் என்ற சர்வதிகாரி துரத்தி துரத்தி சுட்டழித்ததையும் இஸ்ரேல் என்ற நாட்டைப் பெற்று இன்று உலகை வியப்பிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ள சிறப்பு தாயக மண்ணின் அவசியத்திற்கோர் எடுத்துக்காட்டு.

அமெரிக்காவின் ஆதிக்குடிகளும் பேரு, மெச்சிக்கோ நாகரிகத்தின் தந்தைகளான செவ்விந்தியர்கள். இன்று மயோலிஸ் மக்கள் என அழைக்கப்படும் அன்று ஈழத்தின் மாந்தையை ஆண்ட மயனின் வாரிசுகள். பிரித்தானிக்க கலைக்களஞ்சியத்தால் சிறந்த அறிவாளர்கள் வானசாஸ்த்திரிகள், கட்டிடக்கலை விற்பன்னர்கள், விஞ்ஞானிகள், மெஞ்ஞானிகள் கணித மேதைகள சிவசர்ப்ப வழிபாட்டுக்காறர்கள் என அவர்களை எதிர்த்து அழித்த ஸ்பானியர்களே வாய்விட்டுக் கூறும் செவ்விந்தியர்கள் தாயகத்தை இழந்ததால் உலக வரலாற்றில் ஓரங்களுக்குத் தள்ளப்பட்டு ஒதுக்கப்படுகின்றார்கள். இது வரலாறு தரும் பாடம். எனவே தாயகம் ஒரு தேசிய இனத்தின் உயிர் மூச்சாகும்.

நிலம் மனிதனின் வாழ்க்கைத் தோட்டம், இயக்கப் பின்னணி, மனிதனுடைய வாழ்வு அதை காலம் காட்டுகின்றது. வரலாற்றுக் கால வரை முறையும், நில இயல்பும் தேசிய இனத்திற்கு இரு கண்களுக்கு ஒப்பானவை என அறிஞர் ரிட்;சாட் ஹேக்கிலியூட் கூறுவதுவும், மனித வாழ்வு நிலத்துடன் பின்னிப் பிணைந்துள்ளது. அவனுடைய வாழ்வின் வளமும், வளர்ச்சியும், வரட்சியும், தளர்ச்சியும், நகைப்பும், ஏக்கமும், ஒளியும், இருளும், நிலயியல் கூறுகளின் பின்னணியைப் பொறுத்து அமைகின்றன. எனவே மனித வரலாற்றின் இயக்கம் நில இயல் என (History is eyeogr aph in motin) என்ற நூல் அறிஞர் ஹெடர் (Hador) கூறியது. மனிதனின் வாழ்வின் வளர்ச்சிக்கு நிலம் தாயகம் எத்தனை ஊந்து சக்தி என்பதை எடுத்துக்காட்டுகின்றது.

குழந்தைக்குத் தாய் எப்படியோ அப்படிப்பட்டது மனிதனுக்குத் தாயகம். ஒரு தாயிடம் இருந்து குழந்தை தன் வளர்ச்சிக்கு வேண்டியதைப் பெறுவது போல தாயகம் மனித பரிணாம வளர்ச்சிக்கு வேண்டிய அனைத்தையும்- படைத்தளித்து வருகின்றது. இதை உணர்ந்த பட்டுக்கோட்டையார் ‘மனிதன் ஆரம்பமாவதுவும் பெண்ணுக் குள்ளே. அவன் ஆடி அடங்குவதுவும் மண்ணுக்குள்ளே" என்று பாடினார் எனவே மண்ணுக்கும், மனிதனுக்கும் உள்ள உறவு உயிருக்கும் உடலுக்குமுள்ள உறவு போன்றதாகும்.

ஒருகாலத்தில் சீனாவின் பெரிய அறிஞன் ஒருவன் உலகை சுற்றிப் பார்க்கத் தயாரானான். சீனாவின் சர்க்கரவர்த்தியை சந்தித்து விடைபெறச் சென்றான். அறிஞனை சந்தித்து விடயங்களைத் தெரிந்து கொண்ட சக்கரவர்த்தி அறிஞனின் உலக வலம் நலமே முடிய வாழ்த்தி அவருக்கு ஒரு முடிச்சை பரிசளித்து அனுப்பி வைத்தார். பரிசை பெற்றுக் கொண்ட அறிஞன் தன் பயணத்தைத் தொடர்ந்தான். பல நாட்களின் பின் ஒரு நாள் அறிஞருக்குச் சக்கரவர்த்தி அளித்த பரிசு ஞாபகம் வந்தது. எனவே அதைத் தேடி எடுத்து பிரித்தார். அங்கே, பொன்னோ, பொருளோ, பணமோ இருக்கவில்லை. பயணிகளுக்குப் பரிசளிப்பது யோவற்றை? ஆனால் மன்னருக்கெல்லாம் மன்னனான சீனிச் சக்கரவர்த்தி அறிஞருக்கு அளித்த பரிசு அவையல்ல. அவற்றுக்கு மேலான கிருஷ்ன பரமாத்மா மகாவலி மன்னனிடம் கேட்ட மூன்றடி மண்ணல்ல. ஒரே ஒரு பிடி மண் ஏன்? எதற்கு?

பொதுவாக அறிஞர்கள் சென்ற இடமெல்லாம் கிடைக்கும் சிறப்பால் ‘யாதுமூரே யாவரும் கேளீர்’ என அமர்ந்து விடுவார்கள். அந்த நிலையையும் நினைப்பையும் மாற்றி தாயகத்தை நினைத்துத் திரும்ப வேண்டும் என்பதற்காகவே ஒரு பிடி மண்ணை பரிசாகக் கொடுத்து அனுப்பி வைத்தார் என்பதை புரிந்து கொண்ட அறிஞர் நாடு திரும்பினார். எனவே தாயகத்தின் அவசியம் தாயகத்தை நேசிப்பவர்களுக்கே புரியுமே ஒழிய அதை யாசித்தவர்களுக்;குத் தெரிய அவசியமில்லை.

இலங்கையின் மண்ணின் மைந்தர்கள் நாகர், இயக்கர்தான் என்பதை பௌத்த சிங்கள பாளி வரலாற்று நூல்களான மகாவம்சம், சூளவம்சம், தீபவம்சம் என்பன மறுப்பின்றி ஏற்றிருக்கின்றன. இவர்கள் அன்று திராவிடர்கள், சிவநெறினர், தமிழின் ஆரம்ப மொழியான எலுவைப் பேசியவர்கள் நாகர்கள் வாழ்ந்து வளர்ந்த, ஆண்டு அணுபவித்த வடபகுதியில் இன்றைய மொழி தமிழ். அது போல இயக்கர்கள் வாழ்ந்து வளர்ந்த, ஆண்டனுபவித்த தென்கிழக்கிலங்;கையின் இன்றைய மொழி தமிழ். எனவே எலு மொழியின் பரிணாம வளர்ச்சியின் தோற்றம் தமிழ் மொழி. ஆகவே நாகர் இயக்கர் தமிழர்கள். இவர்கள் வடக்கையும் தென்கிழக்கையும் பரம்பரைத் தாயகமாகக் கொண்டவர்கள்.

விஜயன் பௌத்த கதை கட்டுக்கதை என்று பௌத்த சிங்கள புத்திஜீவிகள் ஒட்டு மொத்தமாகக் கூறிவிட்டதால். இனி அதில் இரண்டாம் பேச்சு மூச்சிக்கு இடமில்லை. பௌத்தம் இலங்கையில் காலூன்றிய காலம் நாகம ன்னன் தேவநம்பிய தீசன் கி.மு 244-207 காலமாகும்.

தேவநம்பிய தீசனின் தாய்தந்தையர்கள், சிவநெறியுடையவர்கள், நாகபரம்பரை. எவ்வாறு கௌதம புத்தர் ஒரு சிவநெறியாளனாக இருந்து பௌத்த மதத்தை தோற்றுவித்தாரோ, அவ்வாறே தேவநம்;பிய தீசனும் சிவநெறியாளனாகப் பிறந்து வளர்ந்து அரசனானாதும் பௌத்தத்தை ஆதரித்தானே ஒழிய அவன் பௌத்த சிங்களவனல்ல. பௌத்த தமிழன் அவனுடைய ஆட்சிக்குட்பட்ட குடிகள் சிவநெறியை மூலமாகக் கொண்ட நாகர்கள். அவர்கள் பௌத்தத்தை தழுவினார்களே ஒழிய சிங்களவர்களல்ல. சிங்களம் என்ற வார்த்தை உலகில் எப்பாகத்திலும் அன்றில்லை. இல்லாத மொழி அடிப்படையில் ஒரு இனத்தை பின் எழுதிய வரலாற்றாசிரியர்கள் பௌத்தர்களை சிங்களவர் எனக் குறித்தது மிக மிகத் தவறாகும்.

பிழையான வரலாற்றுப் பதிவாகும். ‘தமிழர்களின் பழமையின் திறவுகோல் மண்ணில் மறைந்திருக்கும் அகழ்வாராய்ச்சிச் சின்னங்களை வெளிக் கொணர்வதிலே உண்டு "என 1919ம் ஆண்டு மாசி மாதம் 20ம் நாள் வெளிவந்த டெயிலி நீயுஸ் பத்திரிகைக் கட்டுரையில் சேர் போல் பீரிஸ் எழுதியுள்ளார். இவர் எழுதுவதற்கு முன் 1917ம் ஆண்டு கதிரோடையில் நடத்திய அகழ்வாராய்ச்சியின் முடிவுகளை மையமாக வைத்தே இக்கட்டுரையை எழுதினார். எனவே ஈழத்தின் ஆதிவாசிகள் தமிழர்கள். ஆகவே ஈழம் சிங்களவரிலும் பார்க்க தமிழரின் தாயகம் என்பதை சிங்களத் தலைமைகள் வெறுக்கவும், மறுக்கவும், மறைக்கவும் முடியாது.

தேவநம்பிய தீசன் கி.மு244-207 காலத்தில் நாகரும் இயக்கருமே வாழ்ந்தார்கள். சிங்களம் என்ற வார்த்தை உலகில் திருவிலுமில்லை, கருவிலுமில்லை. தேவநம்பியதீசனின் பிரஜைகள் நாகர்கள். அவர்கள் சிங்களவரல்ல. சிங்கள மொழியே 10ம் நூற்றாண்டின் பின்பே தமிழ் வட்ட எழுத்தையும், கிரந்த எழுத்தையும் கொண்டு சிங்கள எழுத்து வடிவம் உருவாக்கப்பட்டது என அறிஞர் எவ்.டபிள்யூ குணவர்த்தன குறித்துள்ளார்.

6ம் நூற்றாண்டில் சிங்களம் என்ற சொல்லில்லை. இதை மகாவம்சம் கூறவில்லை. 17ம் நூற்றாண்டில் கண்டியில் சிறை இருந்த றொபட் நொக்ஸ் எழுதிய (A Histor ical relation of the islandof ceylon) என்ற நூல் குறிப்பில் தான் தப்பியோடி வந்த போது அனுராதபுரத்தில் இருந்தவர்களால் சிங்களத்தை விளங்கிக்கொள்ள முடியவில்லை என்றும் தான் ஒரு மொழி பெயர்ப்பாளரின் உதவியோடு பேச வேண்டி இருந்தது என்றும் அவர்கள் தமிழே பேசினார்கள் எனவும் குறித்துள்ளார்.

இலங்கையை ஆண்ட மன்னர்கள் தமிழ் மொழியையே ஆட்சி மொழியாகவும், அன்னிய தொடர்பு மொழியாகவும் வைத்திருந்தார்கள் என்பதற்கு வரலாற்றுச் சான்றுகளுண்டு. எனவே சிங்களம், சிங்கள இனம் என்பவை காலத்தால் பிந்திய அடையாளங்களாகும். இக்காலத்திற்க்கு முந்தியவர்கள் பௌத்த தமிழர்களே ஒழிய பௌத்த சிங்களவர்களல்லர். இன்றைய ஜனாதிபதி பிறந்து வளர்ந்து வாழும் தங்கால தங்காலை என்ற தமிழ் பெயரின் திரிவாகும். ஏன் 17ம் நூற்றாண்டில் கண்டி மன்னனாக கீர்த்திஸ்ரீ இராஜசிங்கனுக்கும், பிரான்சு மன்னன் 16ம் லூகிக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தம் தமிழ் மொழியிலே எழுதப்பட்டுள்ளது. இதை பாண்டிச்சேரி நூதனசாலையில் இன்றும் பார்க்கலாம். 1815ம் ஆண்டு கண்டி பிரதானிகளுக்கும் பிரித்தானிய ஆட்சியாளர்களுக்குமிடையே கைச்சாத்தான ஒப்பந்தத்தில் கண்டி சி;ங்களப் பிரதிநிதிகளே தமிழில் கையெழுத்திட்டுள்ளார்கள்.

தென்னிந்திய அரசுகளில் திராவிடர்கள் திராவிடர் செல்வாக்கு மிகுந்திருந்த காலம் முதல் இலங்கையின் வரலாற்றில் திராவிடர் செல்வாக்கு இருந்திருக்கிறது. இன்றுள்ள சிங்கள இனத்தின் உருவாக்கத்திற்குக் காரணமாக இருந்த இனத்தவர்களுள் திராவிடரும் அடங்குவர். அவர்கள் இத்தீவுக்கு எப்போ வந்தார்கள் என்பது தெளிவாகவில்லை. சந்தேகத்திற்கு இடமின்றி மிகப் பழைய காலம் தொட்டே இவர்கள் இருந்திருக்கின்றார்கள் என்பது மட்டும் தெளிவு Sri Lanka the holocakst and after என்ற நூலில் அதன் ஆசிரியர் எல்.பியதாச குறித்துள்ளார்.

கி.மு இரண்டாம் நூற்றாண்டுகளுக்கு முன்பே இலங்கையின் வட கிழக்குப் பகுதியில் தமிழர்கள் மிக செல்வாக்குப் பெற்று வாழ்ந்தார்கள் என அறிஞர் கிளாரன்ஸ் மலோனி சுட்டிக் காட்டுகிறார்.

கி.மு இரண்டாம் நூற்றாண்டு முதல் வடக்கில் தமிழர் ஆட்சி நிலை பெற்றிருந்தது. சிவனின் மகன் முருகனின் ஆட்சி கதிர்காம த்தில் இடம்பெற்றது. வடக்கு, தெற்கு, மேற்குவரைத் தமிழர் ஆண்டார்கள் என ரோம இராச்சியத்திற்கும் இந்தியாவுக்கும் இடைப்பட்ட வாணிபம் என்ற நூலில் 123ம் பக்கத்தில் அறிஞர் வார்மிண்டன் குறித்துள்ளார்.

கி.மு இரண்டாம் நூற்றாண்டிற்கு முன்பிருந்தே இலங்கையில் தமிழர் முக்கிய பங்கைப் பெற்றிருந்தனர் எனக் கலாநிதி எஸ்.ப ரணவிதான கூறியுள்ளார். அன்னியரான போர்த்துக்கீசர்கள் 1581 ஆண்டு கோட்டை அரசைக் கைப்பற்றினார்கள். அதைத் தொடர்ந்து வடகிழக்கு ஆட்சியையும் தம் வசமாக்கினார்கள். இருந்தும் வன்னிப் பிரதேசம் தனியரசாகவும், கண்டி தனித் தமிழரசாகவும் இருந்தன. கி.பி 1560ல் யாழ்ப்பாண ஆட்சி போர்த்திக்கீசர் வசமானது. 1591ல் போர்த்திக்கீசர் யாழ்ப்பாணத்தில் தங்கள் பிரதிநிதியாக எதிர் மன்னசிங்கம் என்பவனை நியமித்தார்கள். அதன் பின் சங்கிலிகுமாரன் ஆட்சிக்கு வந்தான். இவன் சிலகாலம் அவர்களோடு ஒத்துழைத்தான். பின் அவர்களை எதிர்த்தான். இக்காலத்தில் வன்னியிலிருந்த கொட்டியாற்றுப் பற்று, பழுகாமம், பாணமை, யால, மண்முனை என்ற பகுதிகள் சுதந்திரமாக இயங்கின.

போர்த்துக்கீசர் காலத்தில் இலங்கையில் இருந்த தமிழரசு குறித்து டி.குரோசலஸ் என்பவர் வாந வநஅடிழசயட உழபெரநளவ ழக உநலடழn என்னும் நூலை எழுதினார். அதில் இந்த அமைதியான யாழ்ப்பாண பட்டினம் என்ற சிறுபகுதியை மட்டும் உள்ளடக்கியதல்ல, அதன் அண்மையிலுள்ள பகுதிகள் எல்லாம் அதனைச் சேர்த்தது. ஒரு உப்புநீர் நிலையால் பிரிக்கப்பட்டுள்ள வன்னிப் பகுதியும் அதனோடு சேர்ந்தது. வலிகாமம், தென்மராட்சி பச்சிலைப்பள்ளி, வடமராட்சி என்ற பகுதிகளையும் உள்ளடக்கி வன்னி வரை பரந்து குறுக்காக, மன்னார். திருகோணமலை என்பவற்றைக் கொண்டுள்ளது. இது ஒரு பெரிய நிலப்பரப்பாகும்.

போர்த்திக்கீசரைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த டச்சிக்காரர்கள் இலங்கையின் வளங்களை கைப்பற்றுதலில் கவனமாக இருந்ததால் சுதேசிகளின் விருப்பங்களை அனுசரித்தே நடந்தார்கள். அவர்கள் சுதேசிகளின் தேசியத்தை மதித்து, தமிழரைத் தமிழ் மக்களின் மரபுக்கிணங்கவும் சிங்களவர்களை சிங்கள மரபுக்கிணங்கவும் ஆட்சி செய்தார்கள். டச்சுக்கார தேசாதிபதிகளான பின்வருவோர் கூறிய வரலாற்றுத் தரவுகளைப் பார்ப்போம்.

யாழ்ப்பாணத்தில் இருந்த டச்சுக் கொமாண்டரான பவிலோன் ஒருவர் அவர் 1665ல் எழுதிய குறிப்பில் 'வன்னி உட்பட கிழக்கில் திருகோணமலை முதல் மேற்கில் கற்பிட்டி வரையும், யாழ்பாணத்தை சுற்றியுள்ள தீவுகள் மன்னார்த் தீவு எல்லாவற்றையும் உள்ளடக்கிய அரசு யாழ்ப்பாண அரசு எனக் குறித்துள்ளார்.

வான்கோயன்ஸ்: (1675 இருந்த டச்சு தேசாதிபதி)

யாழ்பாணம் மட்டக்களப்பு, பகுதிகளில் வாழ்ந்த மக்கள் பேசிய மொழி தமிழ். கிழக்கில் மட்டக்களப்பு மேற்கில் கற்பிட்டி, நீர் கொழும்பு, வடக்கில் கொட்டியாரம் உட்பட யாழ்ப்பாணப் பட்டினம் முழுவதும் தமிழ்ப் பகுதியாகும் எனக் குறித்துள்ளார்.

வான் இம்ஹோவ்:

இவர் 1740ல் இலங்கையிலிருந்து டச்சுத் தோசாதிபதி. இவர் எழுதிய குறிப்பில் யாழ்ப்பாண பட்டினம் என்ற தமிழ் இராட்சியம் தனி அரசனின் கீழ் முதலிருந்தது. இந்த இராட்சியம் மற்றைய பகுதிகளை விட வேறுபட்ட அரசியல் சிவில் முறையில் நிருவாகிக்கப்பட்டது.

அந்தோனிமூயாட்:

இவர் 1766ல் யாழ்ப்பாணத்தில் டச்சுத் தேசாதிபதியாக இருந்தவர். இவர் னரவஉh ழக உநலடழn என்றும் எழுதிய புத்தகத்தில் யாழ்ப்பாணப் பட்டினம் எனப்படும் பிரதேசம் இலங்கைத் தீவின் மூன்றில் ஒரு பங்கு கொண்டது. அது கண்டி அரசிலிருந்து வேறுபட்டது மன்னார் முல்லைத்தீவு இதன் நீதி பரிபாலனத்துக்குள் அடங்கும.; டச்சுக்காரர்கள் கண்டியரசுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் தமிழ் பிரதேசம் உள்ளடக்கப்படவில்லை. வடக்குக் கிழக்குட்பட சிலாபம் ஆற்றுக்கும் குமுக்கன் ஆற்றுக்கும் இடைப்பட்ட பகுதி தமிழ்ப் பகுதியாகும்.

கிறிஸ்ரபர் சுவைட்சர் இவர் ஒரு டச்சு எழுத்தாளர் டச்சுக்காரர் ஆட்சியின் போது இலங்கை வந்த உல்லாசப் பயணி இவர் தன் குறிப்பில் இலங்கையைப் பற்றியும் இலங்கையின் மற்றுமோர் இனத்தவர்களான தமிழர்கள் வடக்கு கிழக்கு உட்பட அளிப்பு கற்பிட்டி, நீர் கொழும்பு, உள்ளடக்கிய பகுதிகளில் வாழ்கின்றார்கள் எனக் குறித்துள்ளார்.

இலங்கையின் டச்சு ஆளுனராக இருந்த ரிக்கு லூப்பான் கோயன்ஸ் கி.பி1665ல் இருந்தவர் அவர் தன் மேலதிகாரிக்கு எழுதிய குறிப்பில் ‘மட்டக்களப்பில் வாழ்வோரின் மரவு, சமயம், மொழி, பழக்கவழக்கங்களால் மலைபார் தேசத்தைச் சேர்ந்தவர்களாகும். அதே போன்று யாழ்பாணப் பட்டினம், திருகோணமலை, மேற்கிலுள்ள கற்பிட்டி, கங்குன் கோறளை வடபகுதிவரை வாழ்பவர்கள் அத்தனை பேரும் தமிழர்கள். நீண்ட காலமாக இலங்கையை தமக்குள் பங்கிட்டு இரு பெரும் தேசிய இனங்கள் ஆண்டு வருகின்றார்கள். அவர்கள் தமிழரும், சிங்களவர்களுமாகும் சிங்களவர்கள் இலங்கையின் தெற்கு முதல் மேற்கேயுள்ள வளவை ஆறுவரை வாழ்கின்றார்கள் தமிழர் வடக்குக் கிழக்கு முதல் புத்தளம், சிலாபம் தொடக்கம் மன்னார் வரை கிழக்கில் குமுக்கன் ஆறுவ ரையும் வாழ்கின்றார்கள் எனக் குறித்துள்ளார்.

கி.பி1813ல் இலங்கையில் பிரித்தானிய ஆட்சியாளராக இருந்த சேர் பிறவுன்டிக் என்பவர் பிரித்தானிய குடியேற்ற நாட்டு மந்திரிக்கு எழுதிய கடிதத்தில் "இலங்கையில் சிங்கள மொழி எவ்வளவு அவசியமோ அது போல தமிழ் மொழியும் அவசியமாகவுள்ளது. வடக்கு, கிழக்கு, புத்தளம், கற்பிட்டி, மன்னார் வரை வாழ்வோர் மொழி தமிழாகவே இருக்கின்றது. ஆகவே நான் சிங்களத்துடன் தமிழ் மொழிக்கும் சம உரிமை வழங்குகின்றேன் என எழுதியுள்ளார்.

கி.பி1770ல் இலங்கையில் பிரித்தானிய ஆளுனரான ரெலென் என்பவர் தானே எழுதிய குறிப்பில் இலங்கையின் பெரும் பகுதி தமிழர் வாழ்விடமாகவே தெரிகின்றது. வன்னிப் பகுதி வன்னியர்களால் ஆளப்படுகின்றது. இது தங்கள் நாடு என அவர்கள் கூறுகின்றார்கள். இவர்கள் சிங்கள ஆட்சிக்கு உட்பட்டவர்களல்ல. இலங்கையின் கரையோரங்களில் வாழ்வோர்களில் பெரும்பான்மையோர் தமிழ் பேசுகிறார்கள்.

மிகவும் ஆரம்பகாலம் முதல் தமிழினத்துவ சிறப்புடைய மக்கள் இங்கே வாழ்ந்து வந்ததற்குக் கிராமிய கல்வெட்டுகள் சான்று பகிர்கின்றன. அதற்குச் சமமான உறவுகள் யாதெனில் ஆதி வரலாற்றுக் காலத்திலும், பௌதீகப் பண்பாட்டும், பௌதீக பண்பாடு அல்லாத பண்பாட்டுத் தோற்றப்பாடுகளும் இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் ஏற்பட்ட உறவுகளாகும் என பேராசிரியர் சேனக்க பண்டாரநாயக்க இலங்கை இன உருவாக்கலில் சிக்கலான பிரச்சினை என்ற தொடர் கட்டுரையில் கூறியுள்ளார்.

ஒரு இனம் பண்டு தொட்டு தொடர்ச்சியாக வாழ்ந்து வரும் பிரதேசம் அந்த இனத்தின் தாயகமாகும் அந்த இனத்திற்கும் அம்மக்களுக்குமுள்ள தாயக உறவை மறுக்கும் உரிமை, நிராகரிக்கும் பொறுப்பு யாருக்கும் கிடையாது. மகிந்த ராஜபக்ச அவர்கள் முழுக்க முழுக்க சிங்களவரின் அங்கீகாரம் பெற்ற ஜனாதிபதி. தமிழ் மக்களின் அங்கீகாரம் பெற்றவர் அல்ல. அவர் எவ்வாறு தமிழ் மக்களின் நியாயமான தாயகத்தை மறுக்கவும் நிராகரிக்கவும் முடியும். தமிழ் மக்கள் தங்கள் இறமையை பிரித்தானியரிடம் இழந்தார்களே ஒழிய சிங்களவரிடம் இழக்கவில்லை. சிங்கவரால் 1972லும் 1978லும் கொண்டுவரப்பட்ட அரசியல் திட்டங்கள் தமிழரால் ஏற்றுக் கொள்ளப்பட்டதல்ல. எனவே தமிழர் தாயகம் சர்வதேசத்தால் அங்கீகரிக்கப்பட்ட தமிழரின் பிறப்புரிமை. அதை நிராகரிக் கும் உரிமை வேறொறு இனத்தவர்களுக்குமில்லை.

பூ.ம.செல்வராசா
மட்டக்களப்ப ஈழநாதம்
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)