Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மகனாக நடித்தவரிடம் விசாரணை
#1
மகிந்தவின் மகனாக நடித்தவரிடம் விசாரணை
[ஞாயிற்றுக்கிழமை, 25 செப்ரெம்பர் 2005, 21:12 ஈழம்] [ம.சேரமான்]
சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்சவின் மகனைப் போல் நடித்த இளைஞரிடம் சிறிலங்கா காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கண்டியில் உள்ள ஐந்து நட்சத்திர விடுதி ஒன்றுக்கு 5 பாதுகாப்பு குழுவுடன் இளைஞர் ஒருவர் சென்றுள்ளார். பாதுகாப்புக் குழுவினர் அனைவரும் காவல்துறையினரின் உயர் பாதுகாப்பு பிரிவின் உடையைப் போன்ற உடுப்புகளை அணிந்திருந்தனர்.

இளைஞரின் வாகனமும் பாதுகாப்புக் குழுவும் அவரை பிரதமரின் மகன் என்று தோற்றமளிக்கும் வகையில் இருந்துள்ளது.

நட்சத்திர விடுதிக்குள் உள்ளே சென்ற அந்த இளைஞர் முன்பகுதியில் இருந்த பெண்களைச் சீண்டியுள்ளார். இந்த சீண்டலுக்குள்ளானவர்களின் சிறிலங்கா நீதிபதி ஒருவரின் மகளும் இருந்துள்ளார்.
இதனால் சந்தேகமடைந்த நட்சத்திர விடுதி நிர்வாகத்தினர் அந்த இளைஞரின் அட்டையாள அட்டையை வாங்கி பரிசோதித்துப் பார்த்தனர். அவர் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் மகன் அல்ல என்று அப்போது தெரியவந்தது.

21 வயதுடைய தில்ரூவன் ராஜபக்ச என்ற அந்த இளைஞர் ஆயுத வியாபாரி ஒருவரின் மகன் எனவும் தெரியவந்தது.

இந்த இளைஞரின் நடவடிக்கை குறித்து காவல்துறையிடம் புகார் செய்யப்பட்டதையடுத்து அவரிடமும் அவரது பாதுகாப்புக் குழுவினரிடமும் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டனர். தில்ரூவனும் அவருடன் வந்த இருவரும் தங்கியிருந்த நட்சத்திர விடுதியின் அறையிலும் காவல்துறையினர் தீவிர சோதனை நடத்தினர்

http://www.eelampage.com/?cn=20328
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)