09-27-2005, 09:32 AM
மூன்று சிறிலங்கா காவல்துறையினரின் தடுப்புக் காவல் ஒக். 11 வரை நீட்டிப்பு!!
[செவ்வாய்க்கிழமை, 27 செப்ரெம்பர் 2005, 14:43 ஈழம்] [கிளிநொச்சிலிருந்து செ.தனோஜன்]
தமிழீழ காவல்துறையின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த மூன்று சிறிலங்கா காவல்துறையினர், கிளிநொச்சி மாவட்ட தமிழீழ நீதிமன்றில் நீதியாளர் சதானா முன்னிலையில் இன்று செவ்வாய்க்கிழமை முற்படுத்தப்பட்டனர்.
மூன்று சிறிலங்கா காவல்துறையினரும் கைது செய்யப்பட்டமை தொடர்பாக தமிழீழ காவல்துறையின் பரிசோதகர் பவானி, நீதியாளருக்கு தெரிவித்ததாவது:
போர் நிறுத்த உடன்பாட்டின் படி எமது கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் அனுமதியின்றி உள்நுழைந்தமையானது தவறாகும்.
தவறாக உள்நுழைந்து விட்டோம். இடம் தெரியாது என்று கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது.
ஏனெனில் இவர்கள் ஒரு படைப்பிரிவைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். அத்துடன் எமது கட்டுபாட்டுக்குள் பகுதிக்குள் உள்நுழைந்தபோது சிவில் உடையில் தோற்றமளித்தனர்.
முதல் விசாரணையின் போது தம்மை இனம் காட்டிக்கொள்ள மறுத்து விட்டனர். இவர்களுடைய உள்நுழைவானது சதி நோக்கமாக இருக்கலாம். அது தொடர்பான புலன் விசாரணைகள் நடைபெற்று வருவதால் இவ் விசாரணைகளை மேற்கொள்வதற்கு 14 நாட்கள் கால அவகாசத்தை நீதிமன்று வழங்க வேண்டும்.
தமிழீழ குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 58 உப பிரிவு 2 - இன் கீழ் இன்னும் 15 நாள் வரை மூன்று சிறிலங்கா காவல்துறையினரும் தமிழீழ காவல்துறையினரால் தடுத்து வைக்க முடியும் என்று தெரிவித்தார்.
மூன்று சிறிலங்கா காவல்துறையினர் சார்பில் வாதிட்ட சட்டவாளர் ரி.எஸ்.வேலவர்,
மூன்று சிறிலங்கா காவல்துறையினரையும் பிணையில் விடுவிக்கலாம். பிணையில் விடுவிக்கப்படும் மூன்று சிறிலங்கா காவல்துறையினரும் நீதிமன்றின் கட்டளைகளை ஏற்று மன்றுக்கு சமூகம் அளிப்பார்கள்.
இவர்களுடைய குடும்ப நிலைமைகள் கருத்தில் எடுக்கப்பட வேண்டும். சிறுவர் துஸ்ப்பிரயோகத்தில் ஈடுபட்ட நபர் ஒருவரை கைது செய்வதற்காக சிறிலங்கா தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினரால் இவர்கள் நியமிக்கப்ட்டவர்கள்.
இன்று வரை தமிழீழ காவல்துறையினரால் இவர்களது குற்றவரையறைகள் மன்றுக்கு சமர்ப்பிக்கப்படவில்லை என்று கூறி மூன்று சிறிலங்கா காவல்துறையினரும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினரால் நியமிக்கப்பட்டவர்கள் என்பதற்கான ஆவணங்களை நீதியாளரிடம் கையளித்தார்.
சட்டவாளர் ரி.எஸ்.வேலவர் சமர்பித்த ஆவணங்களை தமிழில் மொழிபெயர்த்து சமர்ப்பிக்கும் படியும் மூன்று சிறிலங்கா காவல்துறையினர் தொடர்பாக குற்ற வரைவினை வரையறை செய்து மன்றுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தமிழீழ காவல்துறையினருக்கும் நீதியாளர் உத்தரவிட்டார்.
அடுத்தகட்ட விசாரணைகள் ஒக்டோபர் 11 ஆம் நாள் இடம்பெறும் என்றும் அதுவரை மூன்று சிறிலங்கா காவல்துறையினரை தடுப்புக்காவலில் வைக்குமாறும் தமிழீழ காவல்துறையினருக்கு கிளிநொச்சி மாவட்ட நீதியாளர் சதானா உத்தரவிட்டார்.
http://www.eelampage.com/?cn=20380