Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கொழும்பில் தமிழ் இளைஞர்கள் கடத்தப்படுவது அதிகரிப்பு
#1
கொழும்பில் இனந்தெரியாத கோஷ்டியொன்றினால் தமிழ் இளைஞர்கள் கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரிப்பு

மனோகணேசன் முறைப்பாடு

<b>கொழும்பில் தமிழ் இளைஞர்களை கடத்திச் செல்லும் நடவடிக்கைகளில் இனம் தெரியாத கும்பல் ஒன்று ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இலக்கத் தகடுகள் அற்ற கறுப்புக் கண்ணாடி பொருத்தப்பட்ட வான்களில் வரும் ஐவருக்கு மேற்பட்ட கும்பல் ஒன்றே இந்தக் கடத்தல் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

இரண்டு தினங்களுக்கு முன்னர் கொழும்பு கொச்சிக்கடைப் பகுதியிலும் வத்தளையிலும் இவ்வாறான கடத்தல் நடவடிக்கைகளும் கடத்தல் முயற்சிகளும் இடம்பெற்றுள்ளன. இது தொடர்பாக மேல் மாகாண மக்கள் முன்னணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட எம்.பி.யுமான மனோ கணேசனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது.

கொச்சிக்கடையிலுள்ள இந்திய பிரஜையொருவருக்கு சொந்தமான கடையில் வேலை செய்து வரும் இளைஞர் ஒருவரைப் பார்க்க வந்த வவுனியாவைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் வெள்ளவத்தை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு மிருகத்தனமாகத் தாக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இந்த இளைஞரின் வத்தளை வீட்டுக்கு சென்றுள்ள அவரின் நண்பனை, வானில் வந்த கும்பல் ஒன்று கடத்திச் சென்ற போது அந்த இளைஞன் அவர்களை வானில் கிடந்த கட்டையொன்றில் தாக்கிவிட்டு தப்பிவந்துள்ளார்.

<span style='font-size:25pt;line-height:100%'>இச் சம்பவம் தொடர்பாக ஜம்பட்டா வீதி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யச் சென்றபோது முறைப்பாட்டை ஏற்றுக் கொள்ளாத பொலிஸார், சம்பந்தப்பட்ட இளைஞனை தகாத வார்த்தைகளினால் பேசி வெளியேற்றியுள்ளனர்</span>. பின்னர் அந்த முறைப்பாடு வத்தளை பொலிஸ் நிலையத்தில் பதியப்பட்டுள்ளது.

நேற்று செவ்வாய்க்கிழமை காலை கொச்சிக்கடையிலுள்ள கடைக்கு வெள்ளை வானில் வந்த சிலர் இளைஞர் ஒருவரை தேடியுள்ளனர்.

அந்தக் கூட்டத்தில், வத்தளை இளைஞர் கடத்தலில் சம்பந்தப்பட்டவரும் இருந்ததுடன் அவர் கடை ஊழியர்களை எச்சரித்துமுள்ளார்.

இதேவேளை, ஆட்டோவிலும் சிலர், பொலிஸ் உடையில் வந்து மேற்படி கடையை நோட்டமிட்டுச் சென்றுள்ளனர்.

இந்தச் சம்பவங்கள் அனைத்தும் மேல் மாகாண மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசனின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டு அவர் இது குறித்து பொலிஸ் மா அதிபர் சந்திரா பெர்னாண்டோவிற்கும், பிரதி பாதுகாப்பு அமைச்சர் ரட்ண சிறி விக்கிரமநாயக்காவுக்கும் அறிவித்து இது குறித்து உடனடி நடவடிக்கை</b> எடுக்குமாறு கேட்டுள்ளார்.

http://www.thinakural.com/New%20web%20site...Important-6.htm
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)