Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
JVP ஆயுதங்களைக் கையளிக்கவில்லை
#1
ஆயுதங்களை ஒப்படைக்குமாறு விடுதலைப் புலிகளுக்கு எதிராக மேடைகளில் கோஷமிடும் ம.வி.மு.இன்னமும் தமது ஆயுதங்களைக் கையளிக்கவில்லை ரணில்
ஆயுதங்களை ஒப்படைக்குமாறு விடுதலைப் புலிகளுக்கு எதிராக மேடைகளில் கோஷமிடும் மக்கள் விடுதலை முன்னணியினர் இன்னமும் தமது ஆயுதங்களைக் கையளிக்கவில்லையென எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தாமும் டி.பி. விஜேதுங்க ஜனாதிபதியும் அரசாங்கத்தில் இருந்த போது ஜனநாயக அரசிலயல் நீரோட்டத்திற்குள் புகுந்த மக்கள் விடுதலை முன்னணியினரிடம் அவர்களிடம் ஆயதங்களை கையளிக்குமாறு கோரவில்லையென அவர் குறிப்பிட்டுள்ளார். பெல்மெதுல்லை பாத்தகட சர்வோதய பிக்குகள் பயிற்சி நிலையத்தில் இன்று காலை நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். டோக்கியோ பிரகடனம் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கை பிரகடனம் என்பனவற்றின் அடிப்படையில் அரசியல் தீர்வொன்றுக்கான சரியான சந்தர்ப்பத்தில் யுத்த நிலைமையில் இருந்து வழமை நிலைக்குத் திரும்புவதற்காக இணக்கப்பாடொன்றை ஏற்படுத்திக் கொள்ளவுள்ளதாகவும் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார். ஐக்கிய இலங்கைக்குள் பிராந்திய நிர்வாகத்தில் அரசாங்க அதிகாரத்திற்குள் சேர்த்துக் கொள்ளும் சகல இன மக்களும் ஏற்றுக் கொள்ளக்கூடிய சமஷ்டி தீர்வொன்றுக்கு விடுதலைப் புலிகள் அமைப்பினர் ஒஸ்லோவில் இணங்கியுள்ளதாகவும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார். அவர்களை மீண்டும் தனி நாடொன்றிற்கான கோரிக்கைக்கு இட்டுச் செல்லாமல் தற்போதைய இணக்கப்பாட்டை முன்னெடுத்துச் செல்வதே தற்போது நாம் செய்ய வேண்டியதென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்

http://www.newstamilnet.com/index.php?suba...t_from=&ucat=1&
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)