10-08-2005, 12:23 PM
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபை மூலம் நடவடிக்கை எடுப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்புரிமையைக் கொண்டுள்ள அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், மற்றும் சீனா ஆகிய நாடுகளிடம் இந்த விடயம் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சீனாவும் பிரித்தானியாவும் சிறிலங்கா அரசாங்கத்தின் கோரிக்கைக்கு சாதகமாக பதிலளித்துள்ளதாக தெரியவருகின்றது.
இதனிடையே பிரான்சுக்கு பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்க, பிரான்ஸ் அரச தலைவருடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போது இது குறித்து கலந்துரையாடியதாகத் தெரியவந்துள்ளது.
கடந்த மாத நடுப்பகுதியில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்கூட்டத்தில் கலந்துகொள்ள அமெரிக்கா சென்றிருந்த சந்திரிகா, விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபை நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத் தொடரில் கலந்து கொள்ள சென்றிருந்த முக்கிய வெளிநாட்டுத் தலைவர்களுடன் சந்திரிகா இந்த விடயம் தொடர்பாக கலந்துரையாடியுள்ளதாகவும் தெரிகிறது.
ஐக்கிய நாடுகள் சபை மூலமாக மேற்கொள்ளப்படவுள்ள இந்த நடவடிக்கையில் எப்படியேனும் வெற்ற பெற்று விடவேண்டும் என சிறிலங்கா அரசாங்க தரப்பு முனைப்புக் காட்டி வருவதாக கூறப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபையின் தலைமை அடுத்த ஆண்டு டென்மார்க்கிற்கு வழங்கப்படவுள்ளது.
டென்மார்க்கில் செயற்படும் சிறிலங்கா அரசாங்கத்தின் ஆதரவுக்குழு ஒன்றின் மூலம் விடுதலைப்புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிகிறது.
தமிழ் மக்களை பலமிழக்கச் செய்து விட்டு தாங்கள் விரும்பிய தீர்வினை தமிழ் மக்கள் மீது திணிப்பதே சிறிலங்கா அரசாங்கத்தின் திட்டம் எனவும் அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
இந்த விடயம் தொடர்பாக சிறிலங்கா அரச தலைவருக்கும் எதிர்கட்சித் தலைவருக்கும் இடையில் பொது இணக்கப்பாடு ஒன்று ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரியவருகின்றது.
ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் இந்த விடயத்தை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு இருதரப்பும் இணக்கம் கண்டுள்ளதாகவும் கொழும்பில் உள்ள அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.