Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பயங்கர யுத்தம் ஏற்படும் சூழ்நிலை
#1
பயங்கர யுத்தம் ஏற்படும் சூழ்நிலை ' நோர்வேயின் விசேட தூதர் எச்சரிக்கை

வெளிநாட்டுப் படைகளை தருவிப்பது சமாதான நடவடிக்கைகளுக்கு குந்தகம் என்றும் அறிவுறுத்தல்

பயங்கரமான யுத்தத்துக்கு இட்டுச் செல்லும் சூழ்நிலை இலங்கையில் தற்போது ஏற்பட்டிருப்பதாக எச்சரிக்கை விடுத்திருக்கும் நோர்வேயின் விசேட தூதுவர் மேஜர் ஜெனரல் ட்ரொன்ட் பியூறுஹொவ்டே, வெளி நாட்டுப் படைகளை தருவிப்பது சமாதான நடவடிக்கைகளை மிக மோசமாகப் பாதிக்கும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

வெளிநாட்டு நிருபர் சங்க உறுப்பினர்களை வெள்ளிக்கிழமை சந்தித்த போதே முன்னாள் போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் தலைவரும் தற்போது நோர்வேயின் விசேட தூதுவராக வருகை தந்திருப்பவருமான ஹொவ்டே இந்தக் கருத்தை தெரிவித்துள்ளார்.

வட, கிழக்கிலும் கொழும்பிலும் தொடர்ந்து இடம்பெற்று வரும் படுகொலைச் சம்பவங்கள் நாட்டிற்கு மிகவும் ஆபத்தானவை. ஆனால், இந்த நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்காக அமைதிகாக்கும் படையினராக சர்வதேச படைகளையோ அல்லது வேறொரு நாட்டின் படையையோ தருவிப்பது சமாதான நடவடிக்கைக்கு இடையூறானதாக அமையும். யுத்த நிறுத்தத்தை கடைப்பிடிப்பதும் அமைதி பேணுவதும் சம்பந்தப்பட்ட இரு தரப்பினரதும் முக்கிய பொறுப்பாக உள்ளது. ஆனால் வெளிநாட்டுப் படைகளின் பிரசன்னம் இரு தரப்பினர் மத்தியிலும் மோதல் ஏற்பட வழிவகுத்து விடும்.

அத்துடன் வெளிநாட்டு சமாதானப் படையை தருவிப்பது சமாதான நடவடிக்கைகளிலும் தலையீடு செய்வதாக அமையுமென பியூறுஹொவ்டே கூறியுள்ளார்.

பல நாடுகளைச் சேர்ந்த படைகளையோ அல்லது குறிப்பிட்ட ஒரு நாட்டின் இராணுவத்தினரையோ மோதல் இடம்பெறும் பகுதிகளுக்கு அனுப்பி வைப்பது ஐ.நா. பாதுகாப்பு சபையின் பொதுவான பணியாக உள்ளது. ஆனால் இலங்கை விவகாரத்தைப் பொறுத்த வரையில் நோர்வே அனுசரணையாளரைத் தவிர வேறு எந்தவொரு வெளிநாடும் தீவிரமாக செயற்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

இலங்கையில் தற்போது மோசமான சூழ்நிலை காணப்படுவதை ஏற்றுக் கொண்ட பியூறு ஹொவ்டே வெளிநாட்டு தலையீட்டைக் குறைப்பதற்கான அணுகுமுறையைக் கைக்கொள்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் யுத்த நிறுத்த உடன்படிக்கை அமுலாக்கம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கான ஏற்பாட்டை மேற்கொள்ளும் நோக்கத்துடனேயே ஹொவ்டே தற்போது இலங்கைக்கு வருகை தந்துள்ளார். யுத்த நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்படுவதற்கு முன்பு அரசும் புலிகளும் நடத்திய முழு அளவிலான யுத்த நிலைமைக்கே தற்போதைய சூழ்நிலை வழிவகுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். இரு தரப்பினரும் மரபு ரீதியான யுத்தத்தை மேற்கொண்டதைப் போன்ற தொன்றே தற்போது இதர வழியில் இடம் பெறுகிறது.

எதிரெதிர் தரப்புத் தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் சாதாரண பொது மக்கள், பொலிஸார், இராணுவ புலனாய்வு அதிகாரிகள் கொல்லப்படும் சம்பவங்களும் கடத்தப்படுவதும் இடம்பெறுகின்றன.

இந்த ஒவ்வொரு சம்பவமும் யுத்த நிறுத்த உடன்படிக்கையின் சரத்து 1.2 ஐ மீறும் செயற்பாடாகும். இந்த யுத்தத்தில் அதிகளவிலான சக்திகள் சம்பந்தப்பட்டுள்ளன. கருணா குழுவும் இதில் முக்கியமான தொன்றாகும் என்றும் ஹொவ்டே தெரிவித்திருக்கிறார்.

முழுமையான சமாதானத்துக்கும் முழுமையான யுத்தத்துக்கும் இடைப்பட்டதான போரானது மோதல் இடம்பெறும் பகுதிகளில் பொதுவாக இடம்பெறுவதில்லை என்று கூற முடியாது. ஆனால், சம்பந்தப்பட்ட இரு தரப்பினரும் இதனைக் கட்டுப்படுத்த முடியும். இரு தரப்பும் பேச்சுவார்த்தையை ஆரம்பித்தால் அதனை கட்டுப்படுத்த முடியும். இதனாலேயே இரு தரப்பினரும் சாத்தியமான அளவுக்கு துரிதமாக பேச்சை ஆரம்பிக்க வேண்டும் என்பதில் நோர்வே மிகவும் ஆர்வமாக உள்ளது. இரு தரப்பினருமே பேச வேண்டுமென்ற எண்ணத்தில் உள்ளனர். ஆனால், இடத்தை தேர்வு செய்வதே இங்கு முட்டுக்கட்டையாக உள்ளது. இலங்கையிலேயே பேச்சுவார்த்தை இடம்பெற வேண்டுமென அரசாங்கம் விரும்புகிறது. ஆனால், புலிகள் நடுநிலையான வெளிநாடொன்றில் பேச வேண்டுமென விரும்புகின்றனர்.

ஆனால், ஜனாதிபதித் தேர்தலை நாடு எதிர்நோக்குவதால் பேச்சுவார்த்தை தற்போது இடம்பெறுவதற்கான சாத்தியம் அருகியே காணப்படுகிறது என்றும் பியூறு ஹொவ்டே கூறியிருக்கிறார்.

யுத்த நிறுத்த மீறல் விடயங்கள் தனியான விவகாரமாக அணுகப்பட வேண்டும் என்றும் ஹொவ்டே கூறியுள்ளார். இதேவேளை, இலங்கையின் சமாதான நடவடிக்கைகளுக்கான ஐ.நா.வின் மனித உரிமைகள் விவகாரத்துக்கான ஆலோசகர் இயன் மார்ட்டின் மனித உரிமை மீறல் விவகாரங்களை கண்காணிக்க தனியான நிறுவனமொன்று ஏற்படுத்தப்பட வேண்டுமென்ற யோசனையை முன் வைத்திருக்கிறார்.

பல வருடங்களாக நீடித்திருந்த வெறுப்புணர்வு, அவநம்பிக்கை, யுத்தம் என்பவற்றால் இரு தரப்பையும் ஒன்று சேர்க்கும் நடவடிக்கையானது நீண்டதொரு செயற்பாடு என்று கூறியிருக்கும் பியூறு ஹொவ்டே அரசாங்கத்திற்கும் புலிகளுக்கும் இடையில் அரசியல் மற்றும் கலாசார ரீதியில் வேறுபாடுகள் உள்ளதாக தோன்றுவதாகவும் விபரித்திருக்கிறார்.

பரஸ்பர சகிப்புத் தன்மை, பாரபட்சம் காட்டாத கொள்கையை கடைப்பிடித்தல் மற்றும் சமத்துவத்தை ஏற்படுத்தல் என்பனவே இறுதியான சமாதானத்திற்கு அடிப்படையான விடயங்களாக அமையுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எதிர்மறையான விடயங்கள் தோல்வியான விவகாரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து செய்திகளை பிரசுரிக்காமல் சமாதான நடவடிக்கைகளுக்கு சாதகமான விடயங்களையும் இரு தரப்பும் பொதுவான இணக்கப்பாடு காணும் விதத்தில் அவர்களை உற்சாகப்படுத்தும் தன்மை வாய்ந்த விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்குமாறும் பொறுமையை கடைப்பிடிக்குமாறும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகங்களிடம் பியூறு ஹொவ்டே வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

அதேசமயம், சமாதான நடவடிக்கைகள் பல வெற்றிகளை தேடித் தந்திருப்பதையும் ஹொவ்டே சுட்டிக்காட்டினார். புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியூடாக ஏ - 9 வீதித் திறப்பு பாரிய வெற்றியெனவும் குறிப்பிட்ட அவர், இதன் மூலம் இனரீதியாக பிளவுபட்ட பல்லாயிரக்கணக்கான இலங்கையின் இரு தரப்பினர் மத்தியிலும் உணர்வை ஏற்படுத்த முடிந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

http://www.thinakural.com/New%20web%20site...Lead%20News.htm
Reply
#2
தகவலுக்கு நன்றி நாரதரே.


----- -----
Reply
#3
தகவலுக்கு நன்றி நாரதார்

Reply
#4
தகவலுக்கு நன்றி அண்ணா
<b> .. .. !!</b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)