10-18-2005, 10:49 AM
தனியொரு மனிதனை ஏமாற்றுவது மூடநம்பிக்கை கீழறுப்பாகும்.
தனியொரு இனத்தை ஏமாற்றுவது நம்பிக்கைக்கேடாகும்.
தனியொரு நாட்டினை ஏமாற்றுவது குமுகாயச்சிதைவாகும்.
ஒட்டுமொத்தமாக இந்த உலகத்தை ஏமாற்றுவதை என்னென்பது?
இந்தியாவின் முன்னாள் பிரதமர் திருமதி. இந்திரா தொடங்கி இன்றைய ராகுல், பிரியங்கா வரையிலாகத் தொடர்கின்றது காந்தியின் பொய்முகம். திருமதி. இந்திராவின் மூன்று தலைமுறையினர் "காந்தி"யின் போர்வைக்குள் தம்மைப் புதைத்துக் கொண்டு வாழ்கின்றனர். இந்நிலையினை தமிழர்கள் மிக இயல்பாக பசுத்தோல் போர்த்திய புலி என்பர். இது முழுக்க முழுக்க அரசியல் பேற்றினை வேண்டி அரங்கேற்றப்படும் நாடகமாகும்.
ஏமாற்றலின் மொத்த வடிவமாகத் தொடர்கின்றது காந்தியின் பொய் முகம். ஜவர்லால் நேரு (Jawahar Lal Nehru), கமலா நேரு (Kamala Nehru) இணையருக்கு மகளாகப் பிறந்தவர் இந்திரா பிரியதர்சிணி நேரு (Indira Priyadarshini Nehru). இந்திரா பிரியதர்சிணி நேருவிற்கு "காந்தி" என்னும் அடைமொழி எப்படி ஏற்பட்டது?
அவர் நேருவின் மகளாக இருக்கும் வரை இந்திரா பிரியதர்சிணி நேரு என்றிருந்தார். திருமணத்திற்குப் பின்னர் இந்திரா பிரியதர்சிணி நேரு, திருமதி. இந்திரா காந்தியானார். திருமதி. இந்திராவின் கணவர் ஃபேரோச் கான் (Feroz Khan) என்பவராவார். இவர் பெர்சிய இனத்தவர், இசுலாமிய சமயத்தவர். இந்நிலை தங்களது அரசியல் ஆளுமைக்குப் பாதிப்பு ஏற்படுமென்று ஜவர்லால் நேருவும் மோகன்தாசு கரம்சிங் காந்தியும் (அப்போதைக்கு மோகன்தாசு கரம்சிங் காந்தி "மகாத்மா"வாகவில்லை) எண்ணினர். உண்மை நிலைப்பாட்டினை மக்கள் முன் வைக்க மனவலிமை யற்றவர்களாயிருந்தனர் இருவரும்.
இந்நிலையில்தான், ஃபேரோச் கானின் தாய்மரபுவழிப் பெயரான கான்டி (Ghandy) என்னும் பெயர் ஃபேரோச் கானுக்கு இடுமாறு மோகன்தாசு கரம்சிங் காந்தி, ஜவர்லால் நேருவிற்கு அறிவுறுத்தல் செய்தார். இதன்வழி காந்தியின் அரசியல் ஆளுமைக்கு நேர்ச்சிகள் ஏதும் ஏற்படாதெனக் கருதப்பட்டது. கணவரின் பெயரில் ஒட்டி வைக்கப்பட்ட "காண்டி" என்னும் சொல் "காந்தி"யாக மாற்றப்பட்டது. இச்சொல்லின் அடிப்படையில்தான் இந்திரா பிரியதர்சிணி நேருவாக இருந்தவர் திருமதி. இந்திரா காந்தியானார். பலர் இந்திரா என்பவர் காந்தியின் மகள் என்றும் சிலர் இந்திரா, காந்தியின் உறவுக்காரர் என்றும் கருதி வாழ்கின்றனர். இற்றைநாள்வரை பலரால் திருமதி. இந்திரா காந்தி, மோகன்தாசு கரம்சிங் காந்தியின் மகளாகவே கருதப்படுகின்றார். இதனைத் தெளிவுபடுத்திக் கொள்ளும் கடப்பாடு மக்களுக்கும் ஏற்படவில்லை; தெளிவுபடுத்த வேண்டிய தேவைப்பாடு திருமதி. இந்திரா காந்திக்கும் அவரின் தலைமுறையினருக்கும் ஏற்படவில்லை. அரசியல் தளத்தில் ஆளுமை கொள்ள வேண்டும் என்னும் வெறியின் பொருட்டு இற்றைநாள்வரை நிகழ்த்தப்படும் நாடகம் இது.
அரசியல் நீரோட்டத்திற்கு ஏதுவாக திருமதி.இந்திரா காந்தியின் தலைமுறையினருக்கு மோகன்தாசு கரம்சிங் காந்தியின் முகம் போர்த்தப்பட்டுள்ளது. இந்திரா காந்தி, இராஜீவ் காந்தி, சோனியா காந்தி, இராகுல் காந்தி, பிரியங்கா காந்தி என்றவாறு தொடர்கின்ற காந்தியின் பொய்முகம்.
திருமதி. இந்திரா காந்தியின் மருமகளான திருமதி. சோனியா இராஜீவிற்கும், பேரப்பிள்ளைகளான இராகுல், பிரியங்கா ஆகியோருக்கும் காந்தியின் முகம் ஏன் பொருத்தப்படுகின்றது?
மய்னோ சோனியா (Maino Sonia) 1946, டிசம்பர் திங்கள் 9-இல், இத்தாலியிலுள்ள ஓசாவஞ்ஞோ (Ossanjo-Turin) என்னுமிடத்தில் பிறந்தார். 1968-இல், இராஜீவை திருமணம் செய்து கொண்டதால் மய்னோ சோனியா என்னும் பிரெஞ்சு கத்தோலிக்கப் பெண்ணான இவர் திருமதி. சோனியா மைனோ இராஜீவ் என்றாகிடல் வேண்டும்.
இராஜீவை தகப்பனாகக் கொண்டதால் இராகுல் (Rahul) என்பவர் இராகுல் இராஜீவாகவும், பிரியங்கா (Priyanka) என்பவர் பிரியங்கா இராஜீவ் என்றாகிடல் வேண்டும். இதுதான் இந்தியப்பண்பாட்டின் மரபு. இதுதான் இந்தியர்களின் வாழ்வியல் வரம்புங்கூட.
இவற்றைக்கடந்து, இராஜீவ் ரத்தன் பிரிஜேசு நேரு காந்தி ( Rajiv Rattan Brijesh Nehru Gandhi) எப்படி இராஜீவ் காந்தியானார்? இராஜீவ் ரத்தன் பிரிஜேசு நேரு காந்தி என்பதுதான் இராஜீவின் இயற்கைப்பெயராகும். திருமதி. சோனியா மைனோ இராஜீவ் (Sonia Maino Rajiv) எப்படி சோனியா காந்தியானார்? இராவுல் ரொபேர்த்தோ (Raul Robertto) எப்படி இராகுல் காந்தியானார்? இராகுல் ரொபேர்த்தோ என்பதுதான் இராகுல் காந்தியின் இயற்பெயராகும்? பியாங்கா ரொபேர்த்தோ (Bianca Robertto) எப்படி பிரியங்கா காந்தியானார்? பிரியங்கா ரொபேர்த்தோ என்பதுதான் பிரியங்கா காந்தியின் இயற்பெயராகும்?
திருமதி. சோனியா மைனோ இராஜீவின் அரசியல் தளம் காந்தியின் பொய்முகத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ளது. காந்தியின் ஆளுமைத்தளத்தில் திருமதி. சோனியா மைனோ இராஜீ வின் அரசியல் கட்டமைப்பு, பலம், புகழ், பொருள் என எல்லாமும் உருவாக்கப் பட்டுள்ளது. திருமதி. சோனியா மையோ இராஜீ வின் தனிப்பட்ட குடும்பம் காந்தியின் பொய்முகத்தினைப் போர்த்தி வாழ்வியல் உச்சங்களை அடைந்துள்ளனர். இதனால், இழப்பு இந்திய மக்களுக்குத்தான். இந்திய மக்களின் இழப்பு தொன்மத் தொடர்ச்சியாக நீள்கின்றது. இத்தாலிய மண்ணின் மகளை தம் அன்னையாக ஏற்றுக் கொள்வதற்கு இந்திய மக்கள் கிஞ்சித்தும் வெட்கப்படவில்லை.
இந்நிலையினை உலகெங்கும் வாழ்ந்திடும் தமிழர்கள் மேல் திருப்பினால், வினையும் விளைவும் ஒன்றாகவே இருக்கின்றது. உலகெங்கிலும் வாழ்ந்திடும் தமிழர்கள் இருவேறுபட்ட பொய்முகங்களால் ஏமாற்றப்பட்டு வருகின்றனர். தமிழர்களைப் புதைக்கும் பொய்முகங்களாக இருப்பவை திராவிடன், இந்தியன், என்னும் இருபொய்முகங்களாகும். திராவிடன், இந்தியன் என்னும் பொய்முகங்களைப் போர்த்தி, தமிழர்களின் மீது ஆளுமை செலுத்த பிற இனத்தார் முனைந்து வெற்றியின் உச்சத்தினைக் கண்டுள்ளனர்.
திராவிட மனப்பான்மையால் தமிழர்களின் தன்மானமும் வாழ்வியல் கூறுகளும் மலையாளிகள், தெலுங்கர்கள், கன்னடர்கள் ஆகியோரால் பங்கிடப்பட்டுள்ளன. தமிழர்களுக்குத் தந்தையாகக் கன்னடத்து ஈரோட்டு வேங்கட இராமசாமி நாயக்கர் இருக்க வேண்டியுள்ளது. இற்றைநாள்வரை தமிழர்கள் தம்மினத்தாரின் தந்தை என்பவர் ஓதந்தை பெரியார்ஔ என்பவரே என மயங்கி ஏற்றுக்கொண்டு வாழ்கின்றனர். இவரே தமிழர்களுக்கான தன்மானத்தினை அடையாளங்காட்டியவராகக் கருதப்படுகின்றார். திராவிட இனம், திராவிட நிலம் என்னும் பெருவீதியில் தமிழர்களின் எண்ணிக்கையென்பது சிறுபான்மையே. அற்றைநாள் தொடங்கி இற்றைநாள் வரையிலாகத் தமிழர்களின் பெருமைகள், தமிழர்களின் வாழ்வியல் கூறுகள் யாவும் இன்னபிற திராவிட இன நலன்களுக்குள் மூழ்கித் தவிக்கின்றன. தமிழர்களின் தன்மானச் ஓசிண்டுஔ திராவிடக் கைக்குள் அடக்கமாக்கப்பட்டுள்ளது.
இன்று திராவிட மனப்பான்மையின் தொடர்ச்சியாகத் தமிழரல்லாத ஓகலைஞர்ஔ களே, தமிழர்களின் தமிழினத்தலைவர்களாக இருக்கின்றார்கள்.தமிழரல்லாத அரசியல்வாதிகளே தலைவர்களை வழிநடத்தும் கட்சிகளுக்கும் இயக்கங் களுக்கும் தலைமைப் பொறுப்பினை ஏற்றிருக்கின்றனர். தமிழரல்லாதவர்களே தமிழர்களின் பொருளியல் ஆழத்தைப் பங்கிட்டுக் கொண்டுள்ளனர். தமிழரல்லா தவர்களே திரைப்படங்களினூடாகத் தமிழர்களுக்கு வழிகாட்டிடும் பொறுப்பினை ஏற்றுக் கொண்டுள்ளனர்.
தமிழர்கள் எதிர்கொண்டிருக்கும் இன்னுமொரு பொய்முகம் "இந்தியர்
" என்னும் முகமாகும். இந்தியர் என்னும் போர்வைக்குள் பெருவாரியாக நுழைக்கப்பட்டிருப்பவர்கள் தமிழர்கள், தெலுங்கர்கள், மலையாளிகள், சீக்கியர்கள், கன்னடர்கள் என்றவாறு இனங்களின் எண்ணிக்கை நீள்கின்றன. தமிழர்களால் இச்சூழலை அறுத்தெறிந்து விடுபட இயலவில்லை. பெருவாரியான தமிழர்கள் விடுபடவும் விரும்பவில்லை. ஒற்றுமை, பெருமனம், விட்டுக்கொடுக்கும் போக்கு என்ற போலி வாழ்வியல் நிலைகளை முன்னிறுத்தி, தமிழர்கள் ஓஇந்தியர்ஔ என்னும் பொய்முகப் போர்வையினைப் போர்த்திக் கொண்டுள்ளனர். நமக்குள் ஏன் பிரிவினை என்பதைத் தமிழர்கள் கூறுவதுபோல் இன்னபிற இந்திய இனங்கள் கூறுவதில்லை. அவர்கள் சுயநலத்தேடலை முன்னிட்டே தங்களை இந்தியர் என விளிக்கின்றனர். அதனைக் கடந்து, அவர்கள் எங்கும் எக்காலத்தும் தங்களை இந்தியரென அடையாளங் காட்டிக்கொள்வதில்லை.
இந்தியப் போர்வையில் அரசியல், பொருளியல், குமுகவியல் என்னும் மூன்று நிலைகளிலும் பெருவாரியாக இருக்கும் தமிழர்களின் நிலைப்பாடு பின் தள்ளப்படுகின்றது. தமிழர்களை வழிநடத்தும் பேராண்மைத் தமிழர்கள் அல்லாதார்களிடமே கொடுக்கப் பட்டுள்ளது. ஆளுமைப்பொறுப்பினை எடுத்துக் கொண்டவர்கள் தமிழ், தமிழர் நலம் காண்பதைத் தவிர்த்து தாம் சார்ந்துள்ள இனத்தவர்களுக்கே முன்னுரிமைக் கொடுக்கின்றனர். தமிழும் தமிழர்களும் மிகத் தெளிவாக ஓரங்கட்டப்படுகின்றார்கள்.
பிற இனத்தானைத் தலைவனாக ஏற்றுக்கொள்ள தமிழனும் கூசுவதில்லை, தமிழனை ஆள்வதற்கு அவனும் தயங்குவதில்லை. இது திராவிட மாயையினால் ஏற்பட்ட இழிவு. இது திராவிட மாயையின் நீள்தொடர்ச்சி. திராவிடத்தொன்ம உணர்வுகளின் தொடர்ச்சி. இவ்வகையான தலைமைப் பொறுப்புகளைப் பெறுவதற்கும் தமிழர்களை ஆள்வதற்கும், இன்னபிற இனத்தவர்களுக்கு தமிழர் முகம் தேவைப்படுகின்றது. அவர்கள் தங்களைத் தமிழரென்றும் தங்களது மூதாதையர்கள் தமிழர் கால்வழியர் என்றும் பறைசாற்றிக் கொள்கின்றனர். அதற்கு ஏதுவாக தங்கள் பெயரினைக்கூட தமிழாக்கிக் கொள்கின்றனர். தமிழ்ப் பொய்முகத்தைப் போர்த்திக் கொண்டவர்களை ஓமெய்த்தமிழர்ஔ என்று நம்பி ஏமாந்து வீழ்கின்றனர், தமிழர் கூட்டத்தினர். தமிழர்களுக்குக் கிடைக்க வேண்டிய வாய்ப்புகளைப் பொய்முகம் போர்த்தியவர்கள் பிடுங்கிக் கொள்கின்றனர்.
தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் நடேசன் அண்ணாதுரை (சி.என். அண்ணாதுரை-Conjeepuram Nadesan Annathurai " இவரின் கால்வழியினர் பற்றிய செய்தி முறையாகக் கண்டறியப்படவில்லை!) தொடங்கி கலைஞர் கருணாநிதி (தட்சிணாமூர்த்தி) ஊடாக மருதூர் கோபாலன் இராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்.-MGR) இற்றையநாள் செல்வி. ஜெயராம் ஜெயலலிதா (Miss. J.Jayalalitha) வரையிலாக ஆண்டுக் கொண்டிருப்பது எவ்வாறு? இவர்களின் பின்புலம் என்ன? வேற்றினத்தவர்களான இவர்களுக்கு தமிழ்நாட்டினை ஆளும் பொறுப்பு எவ்வாறு வழங்கப்பட்டுள்ளது? தமிழ்ப்பொய் முகம் அவர்களுக்குக் கைகொடுத்தது, இன்னும் கைகொடுக்கின்றது.
இவற்றினைக் கடந்து, அடிப்படை வாழ்வியல் உரிமைக்காகச் செயல்படும் பிற இனத்தாரை தமிழர்கள் தோழமையுணர்வோடு வரவேற்கின்றனர். வணிகம் செய்வதற்கும் வாழ்வினை வளமாக்கிக் கொள்வதற்கும் தமிழர்கள் தம் முதுகினை வளைத்துக் கொடுத்திட தயங்குவதில்லை. அவர்கள் சார்ந்துள்ள துறையில் வளம் பெற ஏதுவான ஒத்துழைப்புகள் நல்கிடவும் முனைகின்றது தமிழர்தம் பேருள்ளம். உலகில் தமிழும் தமிழினமும் தனித்த நிலையில் செயற்படவியலாது என்னும் மெய்ம்மத்தை தமிழர்கள் உணர்கின்றனர். ஆனால், தமிழர்களின் உரிமைகளைப் பறிப்பதற்காகவும் தமிழர்களின் வளர்ச்சியினை ஒடுக்குவதற்காகவும் திட்டமிட்டுப் பொய்முகம் போர்த்திக் கொண்டு செயற்படும் கூட்டத்தாரை என்னவென்று சொல்வது?
இவ்வகையான பொய்முகத்தினை அடையாளங்கண்டு கிழித்தெறிய வேண்டியது தமிழர்களின் மரபார்ந்த கடப்பாடாகும். கணியன் பூங்குன்றனாரின் மரபார்ந்த செங்குருதி இற்றையத் தமிழர் குருதிநாளங்களிலும் விரைந்தோடுகின்றது என்பதனை உலகத்தார் அறிவர்.
ஆக்கம் : அருண்
நன்றி செம்பருத்தி

----- -----

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->