Raguvaran Wrote:Thala Wrote:<img src='http://www.dinamani.com/Images/Mar06/M-APR-01.jpg' border='0' alt='user posted image'>
http://www.dinamani.com/Images/Mar06/M-APR-01.jpg
நான் நாளை கவனிக்கேல்லை!!!
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
<b>தரிசுநிலங்கள் பற்றி தவறரான தகவல்களை
தந்து மக்களை குழப்புவதா? கருணாநிதிக்கு முதல்வர் பதிலடி </b>
" மூன்றைரை லட்சம் ஏக்கர்தான் அரசுக்கு
சொந்தம்_மற்றவை எல்லாம் பட்டா நிலங்கள்''
மதுரை,ஏப்.13_
நேற்று 12_வது நாள் சூறாவளி பிரசாரத்தை ஆறுமுகநேரியில் இருந்து தொடங்கி, சரியாக 3.30 மணிக்கு தெற்கு ஆத்தூர் வந்தார். அங்கு சாலையின் இருபுறமும் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களிடம் இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்துவிட்டு வடக்கு ஆத்தூர்வந்தார். அங்கு சாலையின் இருபுறமும் சுட்டெரிக்கும் வெயிலிலும் முதல்வர் ஜெயலலிதாவின் வருகைக்கு காத்திருந்தனர். பின்னர்சாலையின் இருமருங்கிலும் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களிடையே தனது ஐந்தாண்டு கால ஆட்சி செய்த சாதனைகளை விவரித்துப்பேசிவிட்டு திருச்செந்தூர் அ.தி.மு.க. வேட்பாளர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு இரட்டை இலையில் வாக்கு சேகரித்தார்.
பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:
கேள்வி: தமிழ்நாட்டில் 50 லட்சம் ஏக்கர் தரிசு நிலம் இருக்கிறது. அதை எடுத்து நிலமற்ற ஏழைகளுக்கு தலா 2 ஏக்கர் இலவசமாக கொடுக்கப்போவதாக தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால் அரசிடம் 3 லட்சத்து 57 ஆயிரம் ஏக்கர்தான் உள்ளது என்று நீங்கள் அதற்கு பதில் அளித்தீர்கள். ஆனால், நீங்கள் (ஜெயலலிதா) தாக்கல் செய்த பட்ஜெட்டிலேயே 20 லட்சம் ஹெக்டேர் தரிசு நிலம் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதன்படி பார்த்தால் 50 லட்சம் ஏக்கர் தரிசு நிலம் இருப்பதை நீங்களே ஒப்புக்கொண்டதாக தி.மு.க. தலைவர் கருணாநிதி ஒரு பேட்டியில் நிருபர்களிடம் கூறியிருக்கிறாரே...?
பதில்: ஏற்கனவே கருணாநிதி ஒரு தவறான வாக்குறுதியை தந்துவிட்டார். அதை நியாயப்படுத்த உண்மையில்லாத தகவல்களை தந்து கொண்டிருக்கிறார். அ.தி.மு.க. அரசு தாக்கல் செய்த நிதி நிலை அறிக்கையில், 50 லட்சம் ஏக்கர் தரிசு நிலம், 20 லட்சம் ஹெக்டேர் ஒருங்கிணைந்த தரிசு நில மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் கொண்டு வரப்பட்டது என்றுதான் கூறியிருக்கிறோமே தவிர அந்த 50 லட்சம் ஏக்கர் நிலமும் அரசுக்கு சொந்தம் என்று எங்கேயும் கூறவில்லை. (உடனே பட்ஜெட் காப்பியை எடுத்து வந்து இந்த காப்பியை பார்க்கிறீர்களா என்று நிருபர்களிடம் முதல்வர் ஜெயலலிதா காட்டி, அந்த பட்ஜெட்டில் கூறியிருப்பதை படித்துக்காட்டினார்)
பயிர் செய்ய ஏற்ற 20 லட்சம் ஹெக்டேர் பரப்பளவுள்ள தரிசு நிலங்களை வரும் ஐந்தாண்டுகாலத்திற்குள், மேம்படுத்திட மாண்புமிகு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள் தரிசு நில மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் மிகப்பெரும் அளவிலான தொலைநோக்கு திட்டம் ஒன்றை ஏற்கனவே அறிவித்துள்ளார் என்றுதான் அதில் உள்ளது. 20 லட்சம் ஹெக்டேர் என்றால் 50 லட்சம் ஏக்கர். ஆகவே தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் சொன்னதில் எந்த மாற்றமும் இல்லை. நான் சொன்னதை மீண்டும் வலியுறுத்துகிறேன். நாங்கள் தாக்கல்செய்த பட்ஜெட்டில், தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டில் உள்ள 50 லட்சம் ஏக்கர் தரிசு நிலம் சாகுபடியின் கீழ் கொண்டு வரப்படும் என்றுதான் சொல்லியிருக்கிறோமே தவிர, அந்த 50 லட்சம் ஏக்கர் நிலமும் அரசுக்கு சொந்தமானது என்று எங்கேயும் சொல்லவில்லை. அவர்களே வேண்டுமானால் படித்துப்பார்க்கலாம். மீண்டும் மக்களை திசைதிருப்ப கருணாநிதி முயற்சி செய்துகொண்டிருக்கிறார். நான் சொன்னது அவ்வளவும் உண்மை. 50 லட்சம் ஏக்கர் தரிசு நிலம் தமிழ்நாட்டில் உள்ளது. மூன்றரை லட்சம் ஏக்கர்தான் அரசுக்கு சொந்தமானது. மற்றவைகள் எல்லாம் பட்டா நிலங்கள். தனியாருடைய பட்டா நிலங்கள். ஒவ்வொருவரிடமும் 1 ஏக்கர், 2 ஏக்கர், 3 ஏக்கர் என்று சிறு விவசாயிகள் அந்த நிலத்தை வைத்திருக்கிறார்கள். சாகுபடி செய்ய முடியவில்லை ஏழ்மையின் காரணமாக, வறுமையின் காரணமாக.
கேள்வி: மத்திய அரசு ரேஷன் அரிசியை மாநிலங்களுக்கு ரூ 8.30_க்கு கொடுக்கிறது. அதை வாங்கி அரசு ரூ.3.50_க்கு ரேஷன் கடையில் கொடுக்கிறது. இந்த நிலையில் தொகுப்பு திட்டத்தின்கீழ் மத்திய அரசு ரேஷன் அரிசி விலையை மேலும் உயர்த்தியிருக்கிறது. இதற்கு எதிர்ப்பு வந்ததால் மத்திய அரசு விலை உயர்வை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கிறது. இந்த சூழ்நிலையில் நான் ஆட்சிக்கு வந்தால் ரூ.2_க்கு அரிசி வழங்குவோம் என்று கருணாநிதி சொல்லியிருக்கிறாரே. இது மக்களை ஏமாற்றும் திட்டம் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
பதில்: நிச்சயமாக... திரு கருணாநிதி மக்களை ஏமாற்றப் பார்க்கிறார். கிலோ ஒன்று 2 ரூபாய் என்ற விலைக்கு கொடுப்பேன் என்று கருணாநிதி சொல்வது மக்களை ஏமாற்றும் வேலைதான். கருணாநிதியின் முந்தைய தி.மு.க. ஆட்சிகாலத்தில்தான் ரேஷன் கடையில் அரிசி விலையை ரூ.2_க்கு விற்ற அரிசியை ரூ.3.50_க்கு உயர்த்தினார். அப்படி இருக்கும்போது அவரால் ரூ.2_க்கு எப்படி அரிசியை கொடுக்க முடியும்? 99_ல் தி.மு.க. ஆட்சிகாலத்தில் திரு கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது அப்போது அரிசியின் விலை கிலோ ரூ.2. அதை ரூ.3.50_ஆக மாற்றியதே திரு.கருணாநிதிதான். அப்படியிருக்கும்போது இப்போது எப்படி அவரால் ரூ.2_க்கு கொடுக்க முடியும்? வழக்கம்போல் மக்களை ஏமாற்றுகிறார் கருணாநிதி. எனவே மக்கள் ஏமாறக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக வடக்கு ஆத்தூரில் ஸ்ரீவைகுண்டம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.பி.சண்முகநாதன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அப்போது ஷேக் தாவூது, நகரச் செயலாளர் ராஜகோபால் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் சுப்பிரமணியம், ஊராட்சி மன்றத் தலைவர் கில்டன், ம.தி.மு.க. சார்பில் லட்சுமணன் ஆகியோர் வரவேற்றனர்.
http://www.thinaboomi.com/aprr13/head.htm