Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புலிகள் ஐரோப்பா வர தடைவிதிக்கவில்லை
#1
<b>விடுதலைப் புலிகள் ஐரோப்பாவுக்கு வர ஐரோப்பிய ஒன்றியம் தடைவிதிக்கவில்லை - சட்டவல்லுனர் உருத்திரகுமார்

[b]விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகள் ஜரோப்பாவிற்கு வருவதற்கு எந்த விதமான தடைகளும் ஜரோப்பிய யூனியன் போடவில்லையென்றும் சிங்கள அரச ஊடகங்களும் அவர்களுடன் தொடர்புள்ள ஊடகங்களும் போலியான பிரச்சாரத்தை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார். பிரான்ஸ்சில் இயக்கிக் கொண்டிருக்கும் ரி.ரி.என் தொலைக்காட்சிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே பிர பல சட்டவல்லுனர் உருத்திரகுமார் தெரிவித்துள்ளார்.

கடந்த 24 நாள் பெல்ஜியத்தில் நடைபெற்ற எழுக தமிழ் எழுச்சிப் பேரணியில் கலந்து கொண்டு ஐரோப்பிய ஒன்றிய பிதிநிதிகளிடம் மனுக் கையளித்து விட்டு திரும்புகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுடன் சுமார் 2.30 மணி நேரம் இந்த பேச்சுக்கள் இடம்பெற்றன. தமிழர் தரப்பில் 10 பிரதிநிதிகள் கலந்து தமிழர்களின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினர்.

விடுதலைப் புலிகளுக்கு ஜரோப்பிய நாடுகளும் ஜரோப்பிய ஒன்றியமும் பயணத்தடை விதிக்கவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகளுடன் உத்தியோக பூர்வ சந்திப்புக்களை மட்டும் மறு அறிவித்தல் வரை தவிர்த்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார்களே தவிர அவர்கள் எந்த ஒரு பயணத்தடையும் விதிக்கவில்லை என்று ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளால் எடுத்துக் கூறப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை சமாதான முயற்சிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கும் என்றும் இலங்கை சமாதான முயற்சிகளில் தாம் மிகவும் அக்கறை கொண்டுள்ளனர் என்றும் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளால் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்திப்புக்களை ஜரோப்பிய ஒன்றிய நாடுகள் தவிர்ப்பதானது சமாதானப் பேச்சுகளில் ஈடுபடும் தமிழர் தரப்பின் பிரதிநிதிகளின் சமனிலைத் தன்மையினைப் பாதிக்கும் என்றும் சமாதானப் பேச்சுக்களைப் பாதிக்கும் அரச இனவாதிகளுக்கு பலம் சேர்ப்பதாக அமையும் என்றும் எதிர்காலத்தில் இத்தகைய நகர்வுகள் இருக்கக்கூடாது என்பதனையும் தமிழர் தரப்பினரால் முன்வைக்கப்பட்டுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


</b>

http://www.pathivu.com/
Reply
#2
வினித் Wrote:விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகள் ஜரோப்பாவிற்கு வருவதற்கு எந்த விதமான தடைகளும் ஜரோப்பிய யூனியன் போடவில்லையென்றும் சிங்கள அரச ஊடகங்களும் அவர்களுடன் தொடர்புள்ள ஊடகங்களும் போலியான பிரச்சாரத்தை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார். பிரான்ஸ்சில் இயக்கிக் கொண்டிருக்கும் ரி.ரி.என் தொலைக்காட்சிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே பிர பல சட்டவல்லுனர் உருத்திரகுமார் தெரிவித்துள்ளார்.

பெல்ஜியம் பேரணியில் கலந்து கொண்டவர்களிடம் இருந்து நானும் இவ்வாறே அறிந்தேன். இதுவரை காலமும் விடுதலை புலிகள் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் செல்ல தடை என்று தான் சகலரும் நம்பி வந்தோம். இது சிங்கள மற்றும் அதனுடன் தொடர்புடைய ஊடகங்களின் திரிவு படுத்தபட்ட செய்தியை நாம் எவ்வளவு தூரம் நம்பியிருக்கின்றோம் என்று எடுத்து காட்டுகின்றது. தமிழ் ஊடகங்களிடையேயும் இது குறித்த தெளிவு ஏதும் இல்லாதது கவலைக்குரியது. பெல்ஜியம் பேரணியின் பின்பு ஐரோப்பிய ஒன்றிய நிர்வாகம் நமக்கு தெளிவு படுத்திய போதே பயணதடை ஏதும் இல்லை என்று உத்தியோக பூர்வ வரவேற்பு சந்திப்புக்களை தவிர்க்கிறார்கள் என்று தெரியவந்தது. இது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் விடுத்த செய்தி குறிப்பையும் அறிவித்தலையும் அலசி ஆராயாமல் விட்டது நமது தவறு தான் <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#3
ஐரோப்பிய நாடுகளில் புலிகளை உத்தியோக புூர்வமாக வரவேற்கும் நாளும் தொலைவிலில்லை
selva
Reply
#4
http://www.eu2005.gov.uk/servlet/Front?pag...date=2005-09-26
<b> </b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)