Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வவுனியா தமிழ் தேசிய எழுச்சி நிகழ்வில் பல்லாயிரக்கணக்கானோர்
#1
வவுனியா தமிழ் தேசிய எழுச்சி நிகழ்வில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு
வவுனியாவில் தமிழ் தேசிய எழுச்சி நிகழ்வு வவுனியா நகரசபை விளையாட்டரங்கில் இன்று பேரெழுச்சியுடன் நடைபெற்றுள்ளது. இன்று மாலை 3.00 மணிக்கு ஆரம்பமான இந்நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு 'வவுனியா பிரகடனத்திற்கு" வலுச் சேர்த்துள்ளனர்.

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் கரங்களைப் பலப்படுத்தி சர்வதேச சமூகத்திற்கு வவுனியா மக்கள் முழுமையும் அணிதிரண்டு பிரகடனப்படுத்திளார்கள்.

யுூலை 27 வவுனியா பிரகடனத்தை வலுப்படுத்தும் வகையில் தமிழர் தாயக மாவட்டங்கள் தோறும், மக்கள் அணிதிரண்டு தமது அரசியல் அபிலாசைகளை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்தி வருகின்றனர். அந்தவகையில் வவுனியா முழுவதும் வாழ்கின்ற தமிழ் மக்கள் அணிதிரண்டு எழுச்சி புூர்வமாக பிரகடனம் செய்தனர்.

வவுனியா தமிழ் தேசிய எழுச்சி நிகழ்வு வவுனியா நகரசபை விளையாட்டரங்கில் இன்று பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமானது. இதில் பொதுச்சுடரினை மகேந்திரனின் துணைவியார் இராஜேஸ்வரி ஏற்றி வைக்க, தமிழீழ தேசியக் கொடியினை மாவீரர் லெப். கேணல் குமணனின் தந்தையார் திரு. கந்தையா ஏற்றி வைத்தார். தொடர்ந்து 18பேர் ஈகைச் சுடர்களை ஏற்றினார்கள்.

வவுனியா எழுச்சிப் பிரகடன ஏற்பாட்டுக்குழுத் தலைவர் ஜெயச்சந்திரன் தலைமையில் நிகழ்வு பேரெழுச்சியுடன் நடைபெற்றது. ஆசியுரைகளைத் தொடர்ந்த சிறப்புரைகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான பத்மநாதன், சிவநாதன் கிசோர், அரியநேந்திரன், சிவசக்தி ஆனந்தன், செல்வம் அடைக்கலநாதன், பாடசாலை முதல்வர் அல்ஹஜ் முகமது செரிப், புதுக்குளம் மாதர் சங்கத் தலைவர் கமலாதேவி ஆகியோர் நிகழ்ததினர்.

இறுதியாக மக்கள் அனைவரும் கைகளை உயர்த்தி பேரெழுச்சியுடன் தமது பிரகடனத்தை வெளிப்படுத்தினார்கள்.

வாழ்வுரிமையையும், சுதந்திர வாழ்வையும் ஏற்றுக் கொண்டு எமது மரவுவழித் தாயகம், தேசியம், தேசிய இனம், தன்னாட்சி என்பவற்றின் அடிப்படையில் எம்மையும், எமது இறைமைக்கான போராட்டத்தையும் அங்கிகரிக்க வேண்டுமென்று வவுனியா மக்கள் இன்று பிரகடனம் செய்தனர்.



இலங்கைத் தீவு பண்டைக்காலம் தொடக்கம் தமிழ் அரசுகளைக் கொண்டதற்கான வரலாற்றுச் சான்றுகள் உண்டு. தமிழரின் தாயக புூமியான வடக்கு, கிழக்குப் பிரதேசம், தமிழரின் புூர்வீக புூமியாக இருந்துள்ளது. ஐரோப்பிய தேசம் ஏற்படுத்திய காலணித்துவம், அதனு}டாக பிரித்தாளும் தந்திரம் ஆகியன தமிழர்களின் பண்டைய அரசுகளையும், தன்னாட்சி உரிமைகளையும், தமிழ் அரசிற்குரிய இறைமையையும் இல்லாமல் செய்தது.

சிங்கள தேசம் தமிழீழத்தின் மீது மேற்கொண்ட உக்கிரமான போர் நடவடிக்கைகளை எதிர்த்து நிற்கவேண்டிய காலத்தின் கட்டாயம் மக்களிற்கு ஏற்பட்டது. மக்களோடு மக்களாக புலிகள் இந்த இராணுவ அடக்குமுறைகளிற்கு எதிராக தங்களைத் தயார் படுத்தி தமிழீழ விடுதலைப் போராட்டத்தை விரைவு படுததினர்.



சிங்கள தேசத்தின் இராணுவ பலத்தையும், சிங்கள பௌத்த பேரினவாதத்தையும் எதிர்த்துப் போரிட்டு, 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாவீரர்களையும், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பொது மக்களையும் தேசவிடுதலைப் போரில் விதைத்து விடுதலையை நோக்கி விரைந்து நிற்கின்றோம்.

22.02.2002ம் நாள் சிறீலங்கா அரசிற்கும், தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளான தமிழீழ விடுதலைப் புலிகளிற்குமிடையில் நோர்வே அரசின் அனுசரணையுடன் யுத்த நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. எனினும் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் கூறப்பட்ட சரத்துக்கள் இன்றுவரை நடைமுறைக்கு கொண்டு வரப்படவில்லை.

இயற்கை அனர்த்தத்தின்போது பாதிக்கப்பட்ட தாயக மக்களிற்கான மனிதாபிமான உதவிகள் மறுக்கப்பட்டமை, எனவே மூன்று ஆண்டுகளைக் கடந்து நிற்கின்ற யுத்த நிறுத்த ஒப்பந்தம் கேள்விக் குறியாகி நிற்கின்றது.

தமிழீழ மக்களாகிய நாம் சிங்கள தேசத்தின் மீது நம்பிக்கை இழந்து நிற்கின்றோம். சர்வதேசமே இதற்கு ஒரு நிரந்தரத் தீர்வைத் தரவேண்டியுள்ளது. எனினும் கடந்த மாத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான வரவேற்புத் தடுப்பானது தமிழ் மக்கள் மீதான தடையே எனக் கருதுகின்றோம். இவை எமக்கு கவலையையும். வேதனையையும் தருகின்றது ஆதலால் உலக அரங்கில் ஏற்பட்டு வருகின்ற அரசியல் மாற்றங்கிளிற்கு ஏற்ப தமிழீழ தேசத்தையும், தமிழீழ அரசியல் புூர்வீகத்தையும், தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் அங்கிகரிக்க வேண்டுமென சர்வதேச சமூத்தை இந்நேரத்தில் நாம் வேண்டி நிற்கின்றோம்.

இந்த நிலையில் சிங்கள ஆட்சியாளர்கள் தமிழ் பேசும் மக்களிற்கு நியாயமான எந்தவொரு தீர்வையும், முன்னெடுக்க மாட்டார்கள் என்பதையும், அவர்களே மீண்டும் சமகால அரசியல் அரங்கில் உறுதிப்படுத்தி வருகின்றனர். இந்த உண்மைநிலை காரணத்தால் தீர்க்கமான முடிவுகளை எடுக்க வேண்டியவர்களாக சிங்கள பௌத்த பேரினவாதத்தால் நிர்ப்பந்தப்பட்டிருக்கின்றோம்.



எனவே எமது தாயக தேசத்தை ஆக்கிரமித்து நிற்கின்ற சிறீலங்கா இராணுவம், எமது தாயகத்தை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும், எமது நிலத்தில், எமது பலத்தில் எமது தலைவிதியை நாமே நிர்ணயித்துக் கொள்ளும் சூழ்நிலை உருவாக வேண்டும். என்றும் அந்த உன்னதமான, உயரிய சுதந்திர வாழ்வை நோக்கி தமிழ் மக்கள் அணிதிரண்ட படியே உள்ளோம் என்பதையும், இந்த எழுச்சிப் பிரகடனத்தின் மூலம் முன்வைக்கும் அதேவேளை, தமிழ் பேசும் மக்களாகிய எமது அடிப்படை வாழ்வுரிமையையும், சுதந்திர வாழ்வையும் ஏற்றுக் கொண்டு, எமது மரபுவழித் தாயகம், தேசியம், தேசிய இனம், தன்னாட்சி என்பவற்றின் அடிப்படையில் எம்மையும், எமது இறைமைக்கான போராட்டத்தையும், அங்கிகரிக்க வேண்டுமென்று நாம் சர்வதேச சமூகத்திடம் கோரி நின்கின்றோம் என்று வவுனியா மக்கள் பேரெழுச்சியுடன் பிரகடனம் செய்தனர்.
sankathi
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)