Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஒரு கவிதை
#1
வானவில்லின் குறுக்கே ஓடும் சமாதி
-சன்னாசி

இந்தக் கவிதையின்
குரல்வளை அறுத்துக்
குருதி குடிப்பதும் மழைவாசங்காணும்
புற்களின் உதட்டு நுனிகளில்
தாவரங்கள் மேய்வதுமெனத்
தரையோடு அறையப்படும்
விழிகளை அறுப்பது
நீ குறுக்காய் ஓடிய வானவில்.

* * *

நாம் குழந்தைகள்
நமக்கேதும் தெரிவதில்லை; இருப்பினும்
அதன் நிறங்களைக் கற்பனை செய்கிறோம்
கொதித்துத் தளரும் பால்மேல் திரளும் ஆடையின்
வன்முறை போதிக்கிறததன் நிறங்களை
நிறங்களை எழுதுகிறோம், நம் விழிகளைத் தாண்டும்
நிறமொன்றை வார்த்தையால் கொணர்கிறோம்
குறிப்பாய்
நமது நோய்க்கென்றொரு
நிறத்தை விளிக்கிறோம்
அந் நிறமொரு ஆடு
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ஹேஹேஹேஹேஹே
என்கிறது
மறுபடி
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ஹேஹேஹே
என்கிறது
ஆட்டுக்குப் பற்கள் முளைக்கின்றன
ஆடற்ற பற்களும்; இவ்வாக்கியத்தை
ஆடற்றவைகளுக்கும் சொல்லமுயன்று
தோல்வியடைகிறேன்.

* * *

இக்கவிதை முடிவுற,
நம்மைப் பிரிக்கும் வானவில்
இரக்கமின்றி அறுக்கிறது வானத்தை
கண்சிமிட்டாமல் கருப்பை அறுக்கும்
ஹிரண்யக் கத்தியொன்றுபோல் அதனொரு
சோப்பு நுரைக்குமிழ் தவறவிடாவொரு
பிரதிபலிப்பு போல்; சோப்பு நுரையெனும்
எதிருன்னதத்தின் அணு பிளந்த வானவில்
சிதைந்து வீழ்கிறது
பொடிகிறது
உன் காலடியில்.

* * *

உனது கண் நீலத்தில்
எறிகின்றேன் என் பாவனைகளை
பிரயத்தனங்களை
எடையுள்ள போலிகளை; நீலம் குழம்பிக்
கருமையடைகிறது குளிரெடுக்கும் காலத்தில்
ஆட்டினொரு கொடூரப் பிளிறல்போல்
பிளிறும் அதன் வாய்க்கு இரண்டங்குலம் முன்
அறையப்பட்ட கண் போல்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ஹே,,,,,,,,,,,,,
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ஹே,,,,,,,,,,,,,

* * *

நமக்கு அனைத்தும் வாக்கியங்கள்
வெடித்துச் சிதறும் சொற்குமிழிகள்
இடையறாது கிறுக்கும் காகிதங்கள்
வெடித்துச் சிதறும் மூளை நரம்புகள்;
பிரயத்தனமில்லா
காலிக் கோர்வைகள்; காலிக் கோர்வைகளில்
வழிந்து நிரம்பும் காளான்கள் இவற்றைப்
பெயர்க்க முனைகையில் அதிர்ந்து
குமைந்து
அவமானப்பட்டுத் தன்வடிவம் குலைத்துச்
சிதறித் தன்னைச் சிதைத்து மடியும்
வானவில்

* * *

இப் பிரயாசைகள் களைக:
பெயர்க்கப்பட்ட விழிகளில் உருக்கி வார்த்த
பீடங்கள் பிரதிபலிக்கின்றன - முன்பும்
பின்னர் பின்பும்
உள் வெளியாகவும்
வெளி யுள்ளாகவும்
கண்களும் அவையான பிறவும்
பரஸ்பரம்
தோண்டிக்கொண்டன.
தோண்டிப் படையலின் உக்கிர அமைதியில்
மௌனத்தைக் கிழிக்கும் வானவில்லை
நோக்குகிறேன்; உன்னை நினைத்துத்
தாண்டுகிறேன்
என்னைக் கடக்கும் வர்ணங்களை
எண்ணத் தொடங்குகிறேன்

* * *

உன்னைக்குறித்துச் சொல்ல விழையும்
ஓர் வார்த்தையின் பாதங்களும்கூட
இருப்பைத் தகர்த்து வழியும்
உகுப்புத் துளிப் பாதுகைகளணிந்து கடக்கின்றன
கருணையின்றி
வில்லின் மறுபுறம்.

நன்றி சன்னாசி http://dystocia.weblogs.us/archives/175

இந்தக் கவிதை நவீன தமிழ் இலக்கியத்தின் ஒரு துளி பனித்துளிக்குள் பாற்கடல் என்று சொல்வார்களே அதற்குப் பொருத்தமான கவிதை.இக்கவிதையை யாராவது விமர்சியுங்களேன்
கருத்தியல்,அழகியல்,வடிவம் எதுவாகிலும்.
\" \"
Reply
#2
ஈழவனண்ணா இந்தக் கவிதை விளங்கினாத்தானே கருத்தியல் அழகியல வடிவம் பற்றி விமர்சிக்கலாம். கவிதையின்ர அடிப்படையே உணர்வை தொடுறதாக அல்லாட்டி உணர்வை தூண்டுறதாக இருக்கோணும். இதில ஏதாவது விளங்கினாத்தானே அது உணர்வைத் தொடும்.......ஒண்டுமே விளங்கலயே.

மற்றாக்களா விமர்சிக்க சொல்லிட்டு நீங்கள் எங்க போட்டீங்கள்? நீங்கள் ஏதொ ஆசிரியர் மாதிரியும் மற்றவர்கள் ஏதோ மாணவர்கள் மாதிரியும் இத நீங்கள் செய்யுங்கோ நான் வெளில போட்டு வாறன் எண்டற மாதிரியெல்லோ கிடக்குதண்ணா. நானும் பாக்குறன் எல்லா இடத்திலயும் ஏதோ ஒரு கட்டுரைய அல்லாட்டி கவிதைய போட்டுட்டு இதப்பற்றி நீங்கள் சொலலுங்கோ எண்டுட்டு போறீங்கள். இதென்ன போட்டிக்களமா :roll:
Reply
#3
அன்பின் பூனைக் குட்டி

உணர்வைத் தொடுவதாகவும் உணர்வைத் தூண்டுவதாகவும் இருந்தால் அதன் பெயர் கோசம் கவிதை அறிவைத் தருவதாகவும் சிந்தனையைத் தூண்டுவதாகவும் இருக்கவேண்டும்.

மற்றது நான் வாத்தியார் வேலை பார்க்க ஆரம்பித்தது தவறுதான் ஒப்புக்கொள்கிறேன்.ஒன்று இந்தக் கவிதையை இங்கே போடாமல் இருந்திருக்கவேண்டும் அல்லது நேரம் ஒதுக்கி மல்லுக்கு நின்றிருக்கவேண்டும்.கவிதையையும் நானே போட்டு அதை நானே விமர்சித்தால் மற்றவர்களுக்கு அலுப்பூட்டும் அதனால் களத்தில் குவிந்திருக்கும் கவிஞர்களை விமர்சிக்கச் சொன்னேன் இடையிடையே எனது அபிப்பிராயத்தைச் சொல்லலாமென்று நினைத்தேன்.பார்த்தால் வாத்தியார் இல்லை நான் மாணவன் தான் களத்தில் நிறையப் படிக்கவேண்டியிருக்கிறது.

வெளிப்படையாக எழுதப்படும் கவிதைகள் படிப்பதற்கு இலகுவாயிருத்தல் இயல்புதான் ஆனால் அவற்றுள் பெரும்பான்மையானவை தட்டையாக ஓசைநயம் மட்டுமே முதலாகக் கொண்டு அமைக்கப்பட்டனவாக இருக்கின்றன.அதற்காக எல்லாமே அப்படியானவை என்றில்லை.

கொஞ்சம் முயற்சித்துப் படித்துப் பாருங்கள் அல்லது உங்களுக்குப் பிடித்த நல்ல கவிதையொன்றைப் போடுங்கள் விவாதிப்போம்
\" \"
Reply
#4
ஈழவன் அண்ணா நான் சொன்னது
Quote:கவிதையின்ர அடிப்படையே உணர்வை தொடுறதாக அல்லாட்டி உணர்வை தூண்டுறதாக இருக்கோணும்.
என்று. கவிதை அறிவைத் தாறதாவும் சிந்தனையைத் தூண்டுறதாவும் இருக்கோணும் எண்டுறது ரண்டாவதாத்தான். முதலில கவிதை ஒராள போய்ச் சேரோணுமெண்டால் அது உணர்வு ரீதியா அவர தொடணும்.....அதுக்குப் பிறகுதான் அறிவு சிந்தனையெல்லாம். காதல் எண்டுறது எப்பிடினோ அதுமாதிரித்தான். காதலில முதலில உணர்வுதான் முக்கியம் அதுக்கு பிறகு தான் அந்தக் காதலில அறிவார்த்தமாக யோசிக்கலாம்.......

சந்தம் இல்லாட்டி ஓசை எல்லாமே கவிதை உணர்வுரீதியா ஒராள தொடுறதுக்கு உதவும். முதலில எதெண்டாலும் ஒராள கவரோணும்..... இல்லாட்டி அதப் பற்றின ஆர்வம் ஏற்படாது.

சரி நீங்கள் போட்ட கவிதை என்னை உணர்வுரீதியாத் தொடேல அதால அதில அறிவார்த்தமா என்ன சொல்லியிருக்கெண்டு தெரியேல. அதுக்காண்டி அது கவிதையில்லை எண்டு நான் சொல்லேல. சிலநேரம் என்ர தளம் வேறயா இருக்கிறதால இநஇத கவிதையை புரிஞ்சு கொள்ள முடியேலயோ தெரியல. அதால நீங்கள் ஒருக்கா இந்தக் கவிதையை விமர்சியுங்கோவன். நீங்களே போட்டு விமர்சிச்சால் ஏன் அலுப்படிக்கும்? முதலில நீங்கள் செய்துகாட்டுங்கோவன் (தாழ்மையான வேண்டுகோளண்ணா) மற்றாக்களும் வந்து தங்கட கருத்த சொல்லுவினம்.

வேற ஒண்ட கொப்பி பண்ணி யாழில போட்டு இலையான் மொய்க்க விடுறத விட இப்ப நீங்கள் போட்டத பற்றி கதைப்பமன்.
Reply
#5
உண்மையில் இது கொஞ்சம் விளங்குவதற்குக் கடினமான கட்டிறுக்கமனா மொழிநடையில் எழுதப்பட்ட கவிதை என்பதை ஒத்துக்கொள்கிறேன்.முதற் பார்வைக்கு மொழிபெயர்ப்புப் கவிதையென்றே நானும் நினைத்தேன்.ஆங்கில அல்லது இலத்தீன் அமெரிக்கக் கவிதைகளின் சாயல்(தெரிந்ததை வைத்துச் சொல்கிறேன் அதிகம் தெரிந்தவர்கள் மனிக்க)

அதே போன்று கவிதை உணர்வைத் தொடுவதுமாக இருக்கவேண்டுமென்கின்ற உங்கள் கருத்தும் உடன்பாடானது கருத்தின்றி உணர்வைத் தொடுவதையே கொஷம் என்றேன்.

ஒரு வானவில்லைப் பார்க்கும்போது உங்கள் மனதில் தோன்றுவதென்ன குதூகலம்,மழை வரப்போகிறதென்பதற்கு அறிகுறி வானவில்.வண்னமயமான அதன் ஏழு நிறங்கள் அதன் பின்னர் வரப்போகும் நீர்த்தாரை இவை பற்றிய கனவில் இருக்கும் போது அதன் குறுக்கே ஒரு சமாதி தென்பட்டால் உங்கள் உணர்வுகள் எவ்வாறு மாற்றமடையும்

சமாதி அதைப்பார்த்தவுடன் எழும் இறப்பு அதைத்தொடரும் துக்கம் பற்றிய சிந்தனைகள் அதனாலேயே பார்த்தும் ரசிக்க முடியாமல் வீணாகிக்கொண்டிருக்கும் வானவில்.

இரு வேறு முரண்பட்ட விடயங்கள் ஒருங்கே சந்திக்கும் போது ஒன்றின் கனம் இன்னொன்றை விழுங்கிவிடுகிறது.வானவில்லின் குறுக்கே ஓடிய சமாதி வானவில்லின் அழகை விழுங்கிவிடுகிறது.அதன் அற்புதமான வண்ணச்சேர்க்கை அழகிழந்து அவலத்தின் குறியீடாய்த் தோற்றமளிக்கின்றது அதை இந்தக் கவிதையில் படிமமாக்கியுள்ளார் கவிஞர்.

ஒருவரின் சிந்தனையை மேவ முயலும் இன்னொரு நோய்க்கூற்றுச் சிந்தனையை வானவில்லின் குறுக்கே ஓடிய சமாதியாய்க் கற்பனை பண்னியிருக்கிறார் என நினைக்கிறேன்
\" \"
Reply
#6
நன்றி ஈழவனண்ணா. நீங்கள் சொன்னதன் பின் தான் ஓரளவு விளங்கிக் கொள்ள முடிகிறது. திரும்ப ஒருக்கா கவிதைய படிச்சு பாக்கிறன்.....பிறகு எனக்கு விளங்கினத எழுதுறன்.

மற்றாக்களும் இனி எழுதுவினம் எண்டு நினைக்கிறன். மெல்ல மெல்லமாத்தானே படிக்கலாம் <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
Reply
#7
தயவு செய்து கவிதை என்ன சொல்ல வருகிறது
என்று ஒரு சிறிய விளக்கமாவது தரமுடியுமா.. அதாவது
கவிதை எதைப்பற்றி கூறுகிறது..??
<b>விளங்கினால் நாங்கள் மேலும் இப்படியான கவிதை
தேடிப்பிடித்து படிக்கலாம் தானே..</b>

வானவில்லின் குறுக்கே ஓடும் சமாதி என்பதற்கு நீங்கள்
கூறியதை விட கவியாளர் வேறு ஏதோ கூறுகிறார் என்று
நினைக்கிறேன்..
ஒருவேளை தாஜ்மகாலை குறிப்பிடுகிறாரோ.. அதுவும் ஒரு
சமாதிதானே?

முழுகவிதையும் சொல்ல வரும் விடயம் என்னவென்று
அறிய மிக ஆவலாக உள்ளேன்.. இங்குள்ள யாராவது
எனக்கு புரியவைப்பார்களா? :roll:

<i>எழுதப்பட்ட நேரம்: 19:28 நவம்பர் 3ம் திகதி</i>

ம்ம் என்ன இன்னும் ஒரு பதிலும் இல்லை..?
இந்தக்கவிதையை புரியவைக்க யாருமே இல்லையா? Cry
Reply
#8
ஈழவன் அண்ணா நீங்கள் போட்டதில கவிதைக்கான அடையாளம் எதையும் என்னால காணமுடியேல....வலை இலகுவா சொல்லவேண்டிய ஒரு கருத்த தேவையில்லாமல் போட்டு சிக்கடிச்சு வச்சிருக்கிறார் போல கிடக்கு. உணர்ச்சிய தொடுறதான வசனங்களும் இல்ல உந்தக் கவிதையில அழகு இருக்கெண்டும் என்னால சொல்ல முடியேல. கவிஞர் (???) என்ன சொல்ல வாறார் எண்டு அவருக்கே மட்டுந்தான் விளங்கும் எண்டு நினைக்கிறன்....(அவருக்கே தான் என்னத்த தன்ர கவிதையில சொல்லியிருக்கிறன் எண்டு விளங்கிச்சோ தெரியல)....ஒரு 10 வருசத்துக்கு பிறகு அவர தன்ர கவிதையையே வாசிச்சு விளக்கத்த சொல்ல சொல்லுங்கோ...அவரே முழிப்பார்.

ஈசியாக சொல்ல வேண்டிய விசயத்த தேவையில்லாமல் சிக்கி குழப்பி குப்பையாக்கிட்டு கவிதையெண்டால் எப்பிடி ஒரு வாசகியாக என்னால வாசிச்சு புரீஞ்சுகொள்ள முடியும்????? கவிதை யாருக்கு எதுக்கு எழுதப்படுதெண்டுறதும் முக்கியம் தானே....ஏதோ தானே எழுதி தானே படிக்கிற கவிதை மாதிரியெல்லொ எழுதியிருக்கிறார்......

Quote:உண்மையில் இது கொஞ்சம் விளங்குவதற்குக் கடினமான கட்டிறுக்கமனா மொழிநடையில் எழுதப்பட்ட கவிதை என்பதை ஒத்துக்கொள்கிறேன்.

எண்டு நீங்களே சொல்லியிருக்கிறீங்கள்.... நீங்கள் இந்தக் கவிதையை எத்தின தடவை வாசிச்சிருப்பீங்கள் விளங்கிக்கொள்ளுறதுக்கு???? குறைஞ்சது ஒரு 3 4 தடவையாவது வாசிச்சிருப்பீங்கள் தானே???? அபஇபகூட உங்களுக்கு அதின்ர பொருள் ஒழுங்கா விளங்காட்டி பிறகென்னதுக்கு கவிதை... அழகியல்... கருத்தியல் எல்லாம்????
Reply
#9
ஐயோ தலையும் விளங்கவில்லை காலும் விளங்கவில்லை. ஏதோ நல்லதொரு கவிதைபோலத்தான் கிடக்குது. வாசிக்கலாம் என்றால் அந்த மொழி புரியவில்லை.

நமது நோய்க்கென்றொரு நிறத்தை விளிக்கின்றோம்
அன் நிறமொரு ஆடு
ம்ம்ம்ம்... கேகேகே...

ஈழவன் அண்ணா இக் கவிதைதனை நீங்களா எழுதி இணைத்தீர்கள். இல்லாதுவிடில் எங்கு இதனைப்பெற்றுகொண்டீர்களென்றாவது அறியத்தாருங்களேன்.
[size=18]<b> </b>
[size=18]<b> </b>

IRUVIZHI
Reply
#10
அன்பின் பூனைக்குட்டி மற்றும் இருவிழி.உங்களுக்கேற்ற வகையில் இந்தக் கவிதையை விளக்க என்னால் முடியவில்லை.சிறப்பான படிமங்களால் உருவாக்கப்பட்ட கவிதை என்பதனால் எனக்கு சிறப்பாகப் பட்ட கவிதை என்று இங்கே குறிப்பிட்டேன்.இதை நான் புரிந்துகொள்வதும் நிச்சயமாக ஒன்றாக இருக்கப்போவதில்லை.ஒரு வேளை நான் புரிந்துகொள்வதே கவிஞர் சொல்ல வந்ததிலிருந்து வேறுபடலாம்

வேண்டுமானால் ஒன்று செய்வோம் இணையத்தில் எங்காவது படித்த நீங்கள் நல்ல கவிதை என்று நினைக்கும் சில கவிதைகளை இப்பகுதியில் இடுங்கள் அவை பற்றி விவாதிப்போம்.
\" \"
Reply
#11
புரியாட்டி எதுக்கப்பு களத்தில போடுறீங்க, முதலில நீங்கபடிச்சு புரிஞ்சுதா? புரியலயா? என்று பாருங்க, புரிஞ்ச பின்னாடி போடுங்க, புரியாதவங்களுக்கு புரியவைக்கக்கூடிய அளவாவது போடும் ஆக்கத்தை புரிந்து வைத்திருப்பது நல்லது.
.

.
Reply
#12
நீங்கள் சொன்னால் சரியப்பூ

கவிதையைப் புரிந்துகொள்வதென்பதற்கு நீங்கள் வைத்திருக்கும் வரைவிலக்கணமும் நான் வைத்திருக்கும் வரைவிலக்கணமும் வேறு.இதே கவிதையை நான் புரிந்துகொண்ட மாதிரியை ஏற்கனவே விளக்கிவிட்டேன்.அதை நீங்கள் புரிந்துகொள்ளும் அளவுக்கு விளக்க முடியாது என்று குறிப்பிடேனே தவிர இது எனக்குப் புரியவில்லை என்று சொல்லவில்லை

புரியாத கவிதையை ஆகா ஓகோ என்று பாராட்ட நானொன்றும் பரமார்த்த குருவின் சீடன் இல்லை.

புரியாதவர்களுக்குப் புரியும் அளவாவது விளக்க என்னால் முடியுமா என்பதை விட முதலில் உங்களுக்குக் கவிதை இலக்கணம் தெரியுமா என்று பார்ப்பது முக்கியம் எனப் படுகிறது

இவ்வளவு சொல்லும் நீங்கள் புரியும்படியா ஒரு கவிதையை எடுத்துவிடலாமே.
\" \"
Reply
#13
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ம்.. பண்டைய இலக்கியங்கள் கவிதை வடிவிலேயே கிடைத்தன.. அவற்றை விளங்கப்படுத்த ஒரு ஆசானைத் தேட வேண்டியும் இருந்தது.
அதற்காக, ஏனிந்த இலக்கியங்கள் என்று வினா எழுந்ததாக நான் அறியவில்லை.
ஒருவருக்குப் புரிந்தது இன்னொருவருக்கப் புரிய வேண்டும் என எதிர்பார்க்க முடியாது.
ஒருவருக்கு வெறும் கல்லாகத் தெரிவது, இன்னொருவருக்கு அது பட்டை தீட்டப்பட வேண்டிய வைரம் என்பதாகக்கூடத் தெரியலாம். அது அவரவர் திறமையும் ஆர்வமும் அனுபவமுமாகும்.
ஆனால் கவிதை இலகுவான தமிழில் வர ஆரம்பித்த பிறகு, கட்டுரைகள்கூட கவிதைகள் என வரும் அவலப் பெருக்கத்தையும் காணக்கூடியதாக உள்ளது.
ஆக, இலக்கியங்ளை ஏன் களத்தில் போடுறீங்க என்ற கேள்வி தேவையற்றது. ஏனெனில் அவை புரிந்தவர்களுக்கு ஏதாவது சேதியை அல்லது உணர்வை கூறக்கூடும். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
.
Reply
#14
கவிதையைச் செய்யுள் வடிவில் விளங்கிக்கொள்வதற்கு மொழியறிவு நிறையத் தேவைப்பட்டமையால் அது உரைநடைக்கு மாற்றப்பட்டது.

கவிதையில் நவீனத்துவம் ஏற்படுத்திய மாற்றம்.கவிதையை எளிமைப்படுத்தியது.எளிமைப்படுத்துதல் என்பது கட்டுரையை வெட்டி படிக்கட்டுக் கவிதைகள் ஆக்குதல் என்று சிலர் நினைக்கிறார்கள்

உதாரணமாக

வாழைப்பழத்தை எடுத்தான்
தோலுரித்தான்
வாயில் வைத்துக் கடித்தான்
மென்று...
விழுங்கினான்
தோலை மெதுவாய்
வீசினான்
வீதியிற் போய்
விழுந்தது

போன்ற வாழைப்பழக் கவிதைகள் தான் எல்லோருக்கும் புரியும் அதற்காக எல்லோரும் வாழைப்பழக் கவிதை எழுதவேண்டும் என்றோ அல்லது பலாப்பழக் கவிதைகளை களத்தில் போடக் கூடாதென்று சொல்லவோ முடியுமா என்ன?
\" \"
Reply
#15
Eelavan Wrote:கவிதையைச் செய்யுள் வடிவில் விளங்கிக்கொள்வதற்கு மொழியறிவு நிறையத் தேவைப்பட்டமையால் அது உரைநடைக்கு மாற்றப்பட்டது.

கவிதையில் நவீனத்துவம் ஏற்படுத்திய மாற்றம்.கவிதையை எளிமைப்படுத்தியது.எளிமைப்படுத்துதல் என்பது கட்டுரையை வெட்டி படிக்கட்டுக் கவிதைகள் ஆக்குதல் என்று சிலர் நினைக்கிறார்கள்

உதாரணமாக

வாழைப்பழத்தை எடுத்தான்
தோலுரித்தான்
வாயில் வைத்துக் கடித்தான்
மென்று...
விழுங்கினான்
தோலை மெதுவாய்
வீசினான்
வீதியிற் போய்
விழுந்தது

போன்ற வாழைப்பழக் கவிதைகள் தான் எல்லோருக்கும் புரியும் அதற்காக எல்லோரும் வாழைப்பழக் கவிதை எழுதவேண்டும் என்றோ அல்லது பலாப்பழக் கவிதைகளை களத்தில் போடக் கூடாதென்று சொல்லவோ முடியுமா என்ன?

அப்ப மகாகவி,பாரதிதாசன்,கண்ணதாசன்,மேத்தா,வைரமுத்து,அப்துல்ரகுமான்,அறிவுமதி போன்றவர்களின் கவிதைகள் வாழப்பழ கவிதை என்கிறீர்கள், ஏனென்றால் அவர்கள் கவிதைகள் புரிகிறதே, புரியாமல் கவிதை எழுதினால்தான் கவிதை அப்படியா? மகாகவியின் கவிதை புரியார் யார் உளர்?
மகாகவியை விட ஒரு சிறந்த கவிஞன் தமிழில் உளனா?
நல்ல வேடிக்கைதான் போங்கள்.
கவிதைகளை ஏன் களத்தில் இடுகிறீர்கள்? நீங்கள் படித்து சுவைத்த கவிதையை களஉறவுகளும் படிக்கட்டும் என்றுதானே. புரியாத கள உறவுகளுக்கு நீங்கள் படித்து சுவைத்த கவிதையை புரியவைப்பதில் என்ன சிரமம் இருக்கிறது? ஒன்று புரியவைக்க கூடிய அளவுக்கு எழுத்து வளமற்றவராக நீங்கள் இருக்கவேண்டும், அது ஏற்றுக்கொள்ள முடியாது, அதற்கு உங்கள் பதிவுளே சாண்றுபகரும், இன்னொன்று அக்கவிதை உங்களுக்கே புரியாமல் இருக்கவேண்டும், புரியாதவற்றை புரிந்தமாதிரி போடுவதில் என்ன புதிர் இருக்கிறது? அது அல்லாவுக்குத்தான் வெளிச்சம்.
சோழியன் அண்ணா உங்களுக்கு விளங்கி இருந்தால், நீங்கள் உங்களுக்கு விளங்கினமாதிரி ஒரு பதிவிடுங்களேன்,
புரியாத உறவுகளுக்கு உதவியாக இருக்குமே. :wink:
.

.
Reply
#16
Quote:இந்தக் கவிதை நவீன தமிழ் இலக்கியத்தின் ஒரு துளி பனித்துளிக்குள் பாற்கடல் என்று சொல்வார்களே அதற்குப் பொருத்தமான கவிதை.இக்கவிதையை யாராவது விமர்சியுங்களேன்
கருத்தியல்,அழகியல்,வடிவம் எதுவாகிலும்.

Quote:ஒரு வானவில்லைப் பார்க்கும்போது உங்கள் மனதில் தோன்றுவதென்ன குதூகலம்,மழை வரப்போகிறதென்பதற்கு அறிகுறி வானவில்.வண்னமயமான அதன் ஏழு நிறங்கள் அதன் பின்னர் வரப்போகும் நீர்த்தாரை இவை பற்றிய கனவில் இருக்கும் போது அதன் குறுக்கே ஒரு சமாதி தென்பட்டால் உங்கள் உணர்வுகள் எவ்வாறு மாற்றமடையும்

சமாதி அதைப்பார்த்தவுடன் எழும் இறப்பு அதைத்தொடரும் துக்கம் பற்றிய சிந்தனைகள் அதனாலேயே பார்த்தும் ரசிக்க முடியாமல் வீணாகிக்கொண்டிருக்கும் வானவில்.

இரு வேறு முரண்பட்ட விடயங்கள் ஒருங்கே சந்திக்கும் போது ஒன்றின் கனம் இன்னொன்றை விழுங்கிவிடுகிறது.வானவில்லின் குறுக்கே ஓடிய சமாதி வானவில்லின் அழகை விழுங்கிவிடுகிறது.அதன் அற்புதமான வண்ணச்சேர்க்கை அழகிழந்து அவலத்தின் குறியீடாய்த் தோற்றமளிக்கின்றது அதை இந்தக் கவிதையில் படிமமாக்கியுள்ளார் கவிஞர்.

ஒருவரின் சிந்தனையை மேவ முயலும் இன்னொரு நோய்க்கூற்றுச் சிந்தனையை வானவில்லின் குறுக்கே ஓடிய சமாதியாய்க் கற்பனை பண்னியிருக்கிறார் என நினைக்கிறேன்

ஏன் பிருந்தனண்ணா ஒண்டையும் ஒழுங்கா வாசசிக்காமல் அவசரத்தில எழுதுவீங்களோ???? ஈழவன் அண்ணா தான் புரிஞ்சு கொண்டத எழுதிட்டார் தானே.....புரியாமல் கவிதை எழுதினாத்தான் அது கவிதையெண்டு ஈழவன் அண்ணா சொன்னாரா?????எல்லாருக்கும் எல்லாக் கவிதையும் புரியாது....அது அவையவை வாழுற சூழல காலத்த பொறுத்தது.......அதுக்காக வாழைப்பழக் கவிதையை மட்டுந்தான் போடலாம் பலாப்பழக் கவிதையை போடக்கூடாதெண்டுறத பற்றித்தான் ஈழவன் அண்ணா சொன்னவர்.....

ஈழவன் அண்ணா உந்தக் கவிதைய இங்க போட்டது படிச்சு சுவைக்கிறதுக்கும்....அதபற்றி மற்றாக்களின்ர விமர்சனங்கள தெரிஞ்சு கொள்ளுறதுக்கும் தான்....புரியாதவைக்கெல்லாம் புரியவைக்கோணுமெண்டு அவசியமில்லையே????மற்றது....ஒரு கவிதைய எல்லாரும் ஒரே மாதிரி புரிஞ்சு கொள்ளோணுமெண்டுமில்லையே...???? ஈழவன் அண்ணா கவிதை பற்றின தன்ர புரிதல சொல்லிட்டார்....கவிதை புரியாதவை ஈழவனண்ணா சொன்னத வச்சு மிச்சத்த புரிஞ்சு கொள்ளட்டுமன்....

சரி இந்தக் கவிதைல உங்களுக்கு ஏதாவது புரிஞ்சிருக்காண்ணா? புரிஞ்சிருந்தா அத எழுதுங்கோவன்???? புரியாட்டி புரியேல எண்டு எழுதுங்கோவன் முதல்ல.....
Reply
#17
poonai_kuddy Wrote:

இப்பவிளங்கீட்டுது என்று சொல்லுறனீங்கள் எதுக்கு இந்த பதில் எழுதுவான், என்ன நேரத்துக்கு ஒரு கதையா?

ஈழவன் அண்ணா நீங்கள் போட்டதில கவிதைக்கான அடையாளம் எதையும் என்னால காணமுடியேல....வலை இலகுவா சொல்லவேண்டிய ஒரு கருத்த தேவையில்லாமல் போட்டு சிக்கடிச்சு வச்சிருக்கிறார் போல கிடக்கு. உணர்ச்சிய தொடுறதான வசனங்களும் இல்ல உந்தக் கவிதையில அழகு இருக்கெண்டும் என்னால சொல்ல முடியேல. கவிஞர் (???) என்ன சொல்ல வாறார் எண்டு அவருக்கே மட்டுந்தான் விளங்கும் எண்டு நினைக்கிறன்....(அவருக்கே தான் என்னத்த தன்ர கவிதையில சொல்லியிருக்கிறன் எண்டு விளங்கிச்சோ தெரியல)....ஒரு 10 வருசத்துக்கு பிறகு அவர தன்ர கவிதையையே வாசிச்சு விளக்கத்த சொல்ல சொல்லுங்கோ...அவரே முழிப்பார்.

ஈசியாக சொல்ல வேண்டிய விசயத்த தேவையில்லாமல் சிக்கி குழப்பி குப்பையாக்கிட்டு கவிதையெண்டால் எப்பிடி ஒரு வாசகியாக என்னால வாசிச்சு புரீஞ்சுகொள்ள முடியும்????? கவிதை யாருக்கு எதுக்கு எழுதப்படுதெண்டுறதும் முக்கியம் தானே....ஏதோ தானே எழுதி தானே படிக்கிற கவிதை மாதிரியெல்லொ எழுதியிருக்கிறார்......

மேற்கோள்:

உண்மையில் இது கொஞ்சம் விளங்குவதற்குக் கடினமான கட்டிறுக்கமனா மொழிநடையில் எழுதப்பட்ட கவிதை என்பதை ஒத்துக்கொள்கிறேன்.

எண்டு நீங்களே சொல்லியிருக்கிறீங்கள்.... நீங்கள் இந்தக் கவிதையை எத்தின தடவை வாசிச்சிருப்பீங்கள் விளங்கிக்கொள்ளுறதுக்கு???? குறைஞ்சது ஒரு 3 4 தடவையாவது வாசிச்சிருப்பீங்கள் தானே???? அபஇபகூட உங்களுக்கு அதின்ர பொருள் ஒழுங்கா விளங்காட்டி பிறகென்னதுக்கு கவிதை... அழகியல்... கருத்தியல் எல்லாம்????
_________________
உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா
.

.
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)