10-28-2005, 07:53 PM
[b]நீண்ட நேரம் நோட்புக் கம்ப்யூட்டரைப் பயன்படுத்த.....
அடிக்கடி வெளியூர்கள், வெளிநாடுகள் செல்லுகிற வழக்கம் உள்ளவர்கள் கண்டிப்பாக நோட்புக் கம்ப்யூட்டர்களை வாங்குவார்கள். இரயில்களிலும், விமானங்களிலும் பயணம் செய்யும் பொழுது அந்த நேரங்களை வீணாக்காமல் நோட்புக் கம்ப்யூட்டர்களில் வேலை செய்து கொண்டிருப்பார்கள்.
வீடுகளில், அலுவலகங்களில் இருக்கும்பொழுது ஏசி கரண்டை நோட்புக் கம்ப்யூட்டர்கள் பயன்படுத்தும். இரயில் நிலையம், விமான நிலையம் போன்ற இடங்களில் நோட்புக் கம்ப்யூட்டர்களை பயன்படுத்தும்பொழுது பேட்டரி வழங்குகிற டிசி கரண்டை அவை நம்பியுள்ளன.
12 மணி நேரப் பயணத்தில் 6 மணி நேரமாவது நோட்புக் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துவீர்கள் எனில், உங்கள் நோட்புக் கம்ப்யூட்டரில் உள்ள பேட்டரி குறைந்தது 6 மணி நேரம் தாக்கு பிடிக்க வேண்டும். பயணத்தின்போது ஒரு சில பழக்கங்களை நீங்கள் கடைப் பிடித்தால், நீண்ட நேரம் பேட்டரியை பயன்படுத்த முடியும்; பயணமும் வெற்றிகரமாக முடியும்.
நீண்ட நேரம் மின்சாரத்தை வழங்குகிற முறையில் பேட்டரியை மாற்ற நீங்கள் கடைபிடிக்க வேண்டிய சில வழி முறைகள் கீழே தரப்பட்டுள்ளன.
மானிட்டரையும் ஹார்ட் டிஸ்க்கையும் ஆப் செய்தல்: பயணம் செய்கையில் கம்ப்யூட்டரை சற்று நேரம் கவனிக்காமல் விட்டுவிட்டு வேறு சிந்தனையில் இருக்கிறீர்கள் என்றால் அந்த நேரத்தில் மானிட்டரையும், ஹார்ட் டிஸ்க்கையும் ஆப் செய்யலாம். இவ்வாறு செய்தால், பேட்டரி நீண்ட நேரம் தாக்குப் பிடிக்கும். இப்படி ஆப் செய்கிற வேலையை விண்டோஸிடம் விட்டு விடலாம்.
விண்டோஸின் கண்ட்ரோல் பேனலில் உள்ள Power Options ஐகானை டபுள்கிளிக் செய்யுங்கள். கிடைக்கிற டயலாக் பாக்ஸில் Power Schemes டேபை அழுத்துங்கள். Running on batteries என்ற நெடுவரிசையில் உள்ள Turn off monitor மற்றும் Turn of hard disks ஆகியவற்றில் நேரங்களை மாற்றுங்கள். பொதுவாக விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் தந்துள்ள நேரத்தை மாற்ற வேண்டியதில்லை. எனினும் விருப்பப்பட்டால் மாற்றிக் கொள்ளலாம்...
ஹைபர்னேஷனைக் கொடுத்தல்::விண்டோஸ் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் ஹைபர்னேஷன் என்ற வசதி உள்ளது. இதைப் பயன்படுத்தாமல் STANBY வசதியைப் பலர் பயன்படுத்துகின்றனர். ஹைபர்னேஷன் மற்றும் ஸ்டாண்ட்பை ஆகியவற்றிற்கிடையே வேறுபாடு உண்டு. கம்ப்யூட்டரைப் பயன் படுத்தாதபோது இந்த இரண்டையும் நீங்கள் தேர்வு செய்யலாம். ஆனால் ஹைபர்னேஷனை நீங்கள் தேர்வு செய்தால் அதுவரை நீங்கள் செய்த வேலைகள் பேக்கப் செய்யப்பட்டு நோட்புக் கம்ப்யூட்டர் முற்றிலும் ஆப் செய்யப்படும்; பேட்டரி மின்சாரம் மிச்சம் பிடிக்கப்படும். ஸ்டாண்ட்பை நிலையில் நோட்புக் கம்ப்யூட்டருக்கு மின்சாரம் சென்று கொண்டே
இருக்கும்.
முந்தையத் தலைப்பில் கண்ட Power Options Properties டயலாக் பாக்ஸில் உள்ள Hibernate டேபை கிளிக் செய்யுங்கள். Enable Hibernation என்ற செக் பாக்ஸைத் தேர்வு செய்து ஓகே செய்யுங்கள்.[/color]
பயாஸ் செட்டிங்கை மாற்றல்::மின்சாரம் தொடர்பாக பயாஸிலும் நேரத்தை நிர்ணயிக்கலாம். விண்டோஸில் நீங்கள் கொடுத்த நேரம், பயாஸில் நீங்கள் கொடுத்த நேரம் ஆகியவற்றிற்கிடையே வேறுபாடு இருந்தால் பயாஸின் நேரத்தைத்தான் கம்ப்யூட்டர் பின்பற்றும். எனவே பயாஸின் நேரமும், விண்டோஸின் நேரமும் ஒன்றாக வரும்படி ஏதாவது ஒரு இடத்தில் மாறுதல் செய்யுங்கள்.
சில பயாஸ்களில், விண்டோஸில் கொடுத்துள்ள நேரத்தைப் பின்பற்றும்படி பயாஸிற்கான செட்டிங் இருக்கும். அதைக் கொடுங்கள்.[/color]
திரையின் பிரைட்னஸைக் குறைத்தல்::
தேவையற்ற ஹார்ட்வேர் உறுப்புக்களைகழற்றி வைத்தல்::.
தேவையற்ற டிவைஸ்களை செயல் இழக்கச் செய்தல்::Wi-Fi ஆண்டெனா, இன்ப்ராரெட் போர்ட் போன்ற பயணத்தின்போது தேவையற்ற டிவைஸ்களை Disable செய்யுங்கள். மெனு மூலமாக அல்லது சிஸ்டம் டிரேயில் உள்ள அவற்றிற்கான ஐகான்களை கிளிக்/ரைட்கிளிக் செய்து அவற்றை செயல் இழக்கம் செய்யுங்கள்.
வைரஸ் சோதனை, உடனடி தகவல் ஷெட்யூலர் போன்றவற்றை நீங்கள் நிறுத்தி விடலாம். இதனால் பேட்டரி மின்சாரம் மிச்சமாகும். பயணம் முடிந்த பின்பு இவற்றை ஓட விடுங்கள்.[/color]
தேவையற்ற புரோகிராம்களை இயக்காமல் இருத்தல்::பயணத்தின்போது பொழுதுபோக வேண்டுமே என்று விசிடி, டிவிடி டிஸ்க்குகளைப் போட்டு திரைப்படங்களைப் பார்க்கலாம். ஆனால் பேட்டரி மின்சாரம் நிறைய செலவாகும். எனவே திரைப்படங்களைப் பார்க்காமல் இருந்தால் பேட்டரி நீண்ட நேரம் தாக்கு பிடிக்கும்.
ஆடியோ சிடி, எம்பி3 சிடி போன்றவற்றில் இருந்து பாட்டு கேட்காதீர்கள். விசிடி, டிவிடி அளவுக்கு பேட்டரி மின்சாரம் செலவாகாவிட்டாலும், பாடல்களை கேட்கும்பொழுது கொஞ்சமாவது பேட்டரி கூடுதல் செலவாகும்.
நன்றி வட்டகச்சிகொம்[/color]

<b> .. .. !!</b>