10-28-2005, 08:47 PM
சிறிலங்காவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் நேற்று வியாழக்கிழமை காலை பயங்கரவாதத்திற்கு எதிரான முக்கிய உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இந்த உடன்படிக்கையினூடாக சிறிலங்காவில் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை அதிகரிப்பதற்கு எதிர்ப்பார்க்கப்படுகிறது.
சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சகத்தில் வைத்து சிறிலங்காவின் சார்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் திலக் ரணவிராஜாவும் அமெரிக்காவின் சார்பில் சிறிலங்காவிற்கான அமெரிக்கத் தூதுவர் ஜெப்ரி லான்ஸ்டட்டும் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர்.
இந்த உடன்படிக்கையின் கீழ் சிறிலங்காவிற்கு அமெரிக்க அரசாங்கம் பாதுகாப்பு சம்பந்தமான உதவிகளை வழங்கும். காவல்துறை திணைக்களத்தின் அதிகாரிகளுக்குத் தேவையான பயிற்சிகள்இ விஞ்ஞான தொழில்நுட்ப அறிவுகளை வழங்கல்இ உபகரணங்களை வழங்கல் என்பன இதில் அடங்குகின்றன.
அமெரிக்க அதிகாரிகளினால் பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கையில்இ தற்போது சிறிலங்காவில் இருக்கும் செயற்பாடுகள் மற்றும் நிலைமைகளை ஆராய்ந்து தேவைக்கேற்ப பயிற்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
சிறிலங்காவின் அரச தலைவர்களுக்குப் பாதுகாப்பளித்தல்இ அரச சொத்துக்கள் மற்றும் அடிப்படை வசதிகளை பாதுகாத்தல்இ சட்டம் ஒழுங்கைப் பாதுகாத்தல்இ பொதுமக்களின் உயிர்களையும் உடமைகளையும் பாதுகாத்தல் இந்த உடன்படிக்கையின் நோக்கமாகும்.
இதேவேளை பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்குத் தேவையான மேலதிக பயிற்சிகளையும் அறிவூட்டல்களையும் சிறிலங்கா காவல்துறையினருக்கு அமெரிக்க காவல்துறையினருக்கு பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளது.
இது தொடர்பாக இருநாடுகளுக்கும் இடையில் உடன்படிக்கையொன்றைக் கைச்சாத்திடுவது தொடர்பாக பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க நேற்று முன்தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பித்த அமைச்சரவை அறிக்கைக்கு அனுமதி கிடைத்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரான நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
இந்த உடன்படிக்கை கைச்சாத்திட்டதன் பின்னர் சிறிலங்கா காவல்துறையினர் அமெரிக்க காவல்துறையினரிடமிருந்து பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு வெற்றிகரமாக முகம் கொடுத்தல் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளை முறியடித்தல் என்பன தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நவீன பாதுகாப்பு முறைகள் பற்றிய அறிவினையும் பயிற்சிகளையும் பெற்றுக்கொள்ள முடியும்.

<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->