Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழர்களுக்கு மானக்கேடான தீபாவளிப் பண்டிகை
#1
தமிழர்களுக்கு மானக்கேடானதுமான பண்டிகை தீபாவளிப் பண்டிகையாகும். தமிழனைஆரியன் அடக்கி யாண்டதை நினைவுபடுத்துவதாகுமிது. இதற்கான கற்பனைக் கதையில் முக்கிய பாத்திரமாக வரும் கடவுளின் கொலைகாரத்தன்மையை மக்கள் நன்கு படித்து உணர வேண்டியதே இக்கட்டுரை)

தீபாவளிப் பண்டிகையின் தத்துவம் மகாவிஷ்ணுவான கடவுள் கிருஷ்ணன் என்கிற அவதாரமெடுத்து உலகுக்கு வந்து நரகாசுரன் என்கின்ற ஓர் அசுரனைக் கொன்றான் என்பதாகும். நரகாசூரன் என்பவன் ஒரு திராவிடன் ஆரியக் கொள்கைகளை எதிர்த்தவன் ஆகையால் தான் அவனை ஆரியப் பாதுகாவலனான கிருஷ்ணன் தன் மனைவி சத்தியபாமா உதவியுடன் கொன்றான். ஆனால், இந்தக் கடவுள் அவதாரமென்கிற கிருஷ்ணன் யார்? எப்படிப்பட்டவன் என்பதை தமிழர்கள், திராவிடர்கள் உணர வேண்டாமா? கிருஷ்ணன் அற்ப சொற்ப ஆசாமியல்ல. சாட்சாத் மகாவிஷ்ணுவின் அவதாரமாகும்.

ஏசுநாதர்
ஏசுநாதர் கிறிஸ்துவ மதத்தை உண்டாக்கியவர். இவரைப் பற்றிய கதை என்ன சொல்லுகிறது? இவர் தம்மைத் தாமே வருத்திக் கொண்டார். எதிரிகளின் தாக்குதலுக்கும் தூற்றுதலுக்கும் ஆளானார். இறுதியில் சிலுவையில் அடித்துக் கொல்லப்பட்டார்.

முகமது நபி
இதுபோல் முகமது நபியும் பல தியாகங்களுக்கு உள்ளானார். எதிரிகளின் கல்லடிக்கும் சொல்லடிக்கும் ஆளானார் என்பதுதான் அவரைப்பற்றிய கதை.

கொலைகாரன்
ஆனால், இன்று விழா கொண்டாடப்படுகின்ற கிருஷ்ணனைப் பற்றிய கதை என்ன சொல்கிறது? குழந்தைப் பருவத்தில் பூதனை சகடாசூரன் திருணாவர்த்தன் முதலியவர்களைக் கொன்றான்.

கன்றுருவத்துடன் வந்த வற்சாசுரனை விளாமரத்தில் மோதிக் கொன்றான்.

கொக்கு உருவத்துடன் வந்த பகாசுரன் வாயைப் பிளந்து கொன்றான்.

மலைப்பாம்பு உருவில் வந்த அகாசுரனின் வாயில் புகுந்து கொன்றான்!

மாட்டுருக் கொண்டு வந்த அரிஷ்டனின் கொம்பைப் பிடுங்கிக் கொன்றான்!

குதிரையுருக்கொண்டு வந்த கேசியைக் கொன்றான்.

வியாமுரசுரனின் கழுத்தை நெரித்துக் கொன்றான்.

கம்சன் வீட்டு வண்ணானைக் கொன்றான்.

கம்சனின் பட்டத்து யானையின் கொம்பை முறித்துக் கொன்று அதன் பாகனையும் கொன்றான்.

மற்போருக்கு வந்த சானூரனைக் கொன்றான்.

சுபலன் கோசனை ஆகிய இருவரையும் காலால் மோதிக் கொன்றான்!

தன் மாமனாகிய கம்சனைப் படுக்கையிலிருந்து இழுத்துத் தள்ளிச் கொன்றான்!

பஞ்சகன் என்பவனை கடலில் சென்று கொன்றான்!

சராசந்தனின் சேனைகளையெல்லாம் கொன்றான்!

முராசுரனையும் அவனது குமாரர்களையும் கொன்றான்!

நரகாசுரனைக் கொன்றான்

வாசுதேவனுக்குத் துணையாக வந்த பவுண்டரகனையும் சுதட்சணனையும் கொன்றான்.

சாளுவனைக் கொன்றான்! சிசுபாலனைக் கொன்றான்!

துரியோதனனின் சிங்காதனத்தின் கீழிருந்த அரக்கர்களைக் கொன்றான்!

இவ்வளவுதான் இவனது படு கொலைகள் என்று கருதாதீர்கள்! இன்னும் பலவுண்டு! இங்கு எழுத இடமில்லை.

இப்பேர்ப்பட்ட கொலை காரனைத்தான் சிலர் போற்றுகிறார்கள் "இன்னா செய்தாரை ஒறுத்தல் அவன் நாண நன்னயஞ் செய்து விடல்" என்ற உயர் கருத்து பரவியிருந்த தமிழகத்தில் கொலைகாரக் கிருஷ்ணன் கதையை புகுத்தி விட்டார்கள் தமிழகத்தில் புகுந்த அன்னியர்.

ஒழுக்கமற்றவன்
கிருஷ்ணன் கொலைகாரன் மட்டுமா? இல்லை! கற்பிற்கு அணிகலன் (?) நல்லொழுக்கத்தின் சிகரம் (?) எப்படியெனில்

குளித்துக் கொண்டிருந்த பெண்களுடைய சேலைகளையும் ரவிக்கைகளையும் தூக்கிக் கொண்டு போய் மரத்தின்மேல் ஏறிக் கொண்டான்; நிர்வாணமாகத் தண்ணீரில் நின்ற அப்பெண்கள் தங்கள் இரு கைகளையும் தலைக்கு மேலே தூக்கிக் கும்பிட்டால்தான் தருவேன் என்று கூறி அவ்விதமே செய்ய வைத்து கண் குளிரப் பார்த்தான்!

ராதை, ருக்மணி, சத்தியபாமை சாம்பவதி, காளிந்தி, மித்திரவிந்தை, சத்தியவதி பத்திரை, லட்சுமணை, நப்பின்னை சோபை பிரமை, சாந்தி, க்ஷமை ஆகிய பெண்களை மணந்து கொண்டான். பிறகு சில்லறையாக நரகாசூரன் பட்டணத்திலிருந்து கொண்டுவந்த 16,000 பெண்களையும் மணந்து கொண்டான். இவர்களும் போதாமல் பகதத்தனின் நகரத்திற்குச் சென்று அங்கு சிறையிலிருந்த 1160 இராசக்கன்னிகைகளையும் மணந்து கொண்டான். இவர்களைத்தவிர பல்லாயிரக்கணக்கான கோபி காஸ்திரீகளுடன் லீலைகள் புரிந்தான்.

கொலையும் விபசாரமும் மட்டுமல்ல! கொலை செய்யவும் தூண்டினான். கீதையின் மூலமாக! கொலை செய்யப்பட்டவர்களெல்லாம் அசுரர்கள் (திராவிடர்கள்) என்று கூறலாம் அப்படியானால் அக்கிரகாரத்தார் மட்டுந்தானே இவனைப் புகழ வேண்டும்? மற்றவர்கள் புகழலாமா?

கடவுள் தன்மைக்குப் பொருந்துமா?

உண்மையான கடவுள் தனக்கு எதிரியான அசுரனைப் படைப்பானேன்? அதன் பிறகு அவனைக் கொல்வதற்காக அவதாரமெடுப்பானேன்? இது கடவுள் தன்மைக்கு அவரின் சர்வவல்லமைக்கு தயாபர குணத்துக்குச் சிறிதாவது பொருந்துமா? பிறமதக்காரர்களும் மதமற்ற பகுத்தறிவாளர்களும் விஞ்ஞானிகளும் பேரறிஞர்களும் இப்பேர்ப்பட்ட ஆபாசக் கற்பனைக் கதையை ஏற்றுக் கொள்வார்களா? காரித்துப்ப மாட்டார்களா? கடவுள் என்றால் கடவுள் அவதாரம் என்றால் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக அல்லவா இருக்க வேண்டும்? ஒருவனுக்கு இரண்டு மனைவிகளே இருக்கக் கூடாது என்று சட்டமிருக்கும் போது கண்டவளையெல்லாம் தன் மனைவியாக்கிக் கொண்டவனை மானமுள்ள பெண்கள் கும்பிடலாமா? அவன் சம்பந்தப்பட்ட தீபாவளியைக் கொண்டாலாமா?

சிந்திக்கவும்
ஆத்திரப்படாமல் சிறிது பொறுமையாக ஆலோசித்துப் பாருங்கள். பக்தர்களே ஆபாசக் கடவுள்களை ஒழித்துத் தலை முழுகுங்கள்! இம்மாதிரிக் கடவுள்களைக் கண்டு வெட்கப் படத்தானே லட்சக்கணக்கான மக்கள் பிறர் தங்களைத் தழுவியிருக்கிறார்கள். ஆகவே மானமுள்ள பகுத்தறிவுள்ள தமிழர்கள் திராவிடர்கள் கொலைகாரக் கிருஷ்ணன் சம்பந்தப்பட்ட தீபாவளியைக் கொண்டாடலாமா? கண்டிப்பாய் கூடாது.
சிந்தித்துப் பாருங்கள் தமிழர்களே! திராவிடர்களே!
Reply
#2
நன்றி: விடுதலை
Reply
#3
அப்பப்ப இதுதான்
அதிகம் படிக்கக்கூடாது
என்பது <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--><!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


<!--QuoteBegin-வதனா+-->QUOTE(வதனா)<!--QuoteEBegin-->
ராதை, ருக்மணி, சத்தியபாமை சாம்பவதி, காளிந்தி, மித்திரவிந்தை, சத்தியவதி பத்திரை, லட்சுமணை, நப்பின்னை சோபை பிரமை, சாந்தி, க்ஷமை ஆகிய பெண்களை மணந்து கொண்டான்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

என் வெயர் விட்டுட்டீங்க <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--><!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

இனி கல்கி அவதாரத்தில்
வருவாராம்..

ம்ம்ம்ம்.. என்ன சிந்தித்து
என்ன நடக்கப்போகுது??

...!
Reply
#4
மேலதிக தகவல்களை அறிந்து தெளிவு பெறுவோம்
Reply
#5
மேலதிக தகவல்களை அறிந்து தெளிவு பெறுவோம்
http://www.dinakaran.com/spiritual/hindu/a...Oct/21/deep.htm
Reply
#6
வதனா Wrote:!


கிருஸ்னருக்கு மட்டுமா இவ்வளவு அசிங்கங்களும் இருக்கின்றன எமது எந்த கடவுளை பார்த்தாலும் பின்புலம் கொலையும் காமவிகாரமுமே தெரிகிறது. எனவே இவர்களை கடவுள் என எப்படி வணங்குவது ? எனக்கு ஒரு சந்தேகம் இவர்கள் எல்லாம் எப்படி எயிட்ஸ் வராம தப்பித்து கொண்டார்கள் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
Reply
#7
விடுதலை போண்ற ஒரு பத்ரிக்கைலிர்ந்து ஒரு கட்டுரையை எடுத்து அதை பற்றி விமர்சனம் வேறு.

ஆரியர் படைய்டுப்பு ஒரு தவறான பிரச்சாரம் என்று எப்பொவோ பல ஆராச்சிகள் சொல்லி விட்டன. இன்னும் என்ன அதை பற்றி பெச்சுவத்ல் என்ன லாபம்
.
.
Reply
#8
Quote:விடுதலை போண்ற ஒரு பத்ரிக்கைலிர்ந்து ஒரு கட்டுரையை எடுத்து அதை பற்றி விமர்சனம் வேறு.
கடவுள் என்று சொல்லப்படுகிறவரின் கீழ்த்தரமான, கேவலமான செயற்பாடுகள் பற்றியே அக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

கடவுளின் அவதாரம் அல்லது கடவுள் என சித்தரிக்கப்படுவரின் கேவலமான செய்ப்படுகளை விடுதலைப் பத்திரிகையோ அல்லது இக்கட்டுரையாளரேh கண்டுபிடித்து எழுதவில்லை. மாறாக உங்களின் புராணங்களே இவற்றை சொல்கின்றன கொஞ்சம் நாகரிகமாக....
<b>
?
- . - .</b>
Reply
#9
கடவுளின் அவதாரம் அல்லது கடவுள் என சித்தரிக்கப்படுவரின் கேவலமான செய்ப்படுகளை விடுதலைப் பத்திரிகையோ அல்லது இக்கட்டுரையாளரேக் கண்டுபிடித்து எழுதவில்லை. மாறாக உங்களின் புராணங்களே இவற்றை சொல்கின்றன கொஞ்சம் நாகரிகமாக....

எல்லாம் சரி !! ஒரு நாணய்திற்ற்கு 2 பக்கம் உண்டு. சில நல்ல விழயத்தை விடுத்து, அதில் சொன்ன கருத்துகளை விடுத்து அதற்கு தவறான சாயம் பூசுவது நாகரிகமான செயலா?

தெளிவாக அதில் உள்ள கருத்தை பார்க்கவும்.
.
.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)