Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஜனாதிபதித் தேர்தலில் வெல்லப் போவது யார்?
#1
<b>ஜனாதிபதித் தேர்தலில் வெல்லப் போவது யார்?சீன - ஜப்பானிய சோதிடத்தில் ஓர் ஆராய்ச்சிக் கண்ணோட்டம் </b>
-திக்கவயல் சி.தர்மகுலசிங்கம்-

ஜனாதிபதித் தேர்தல் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. ரணிலா,மஹிந்த ராஜபக்ஷவா ஜனாதிபதியாக வருவார்கள் என்பதையிட்டு ஊகங்கள் பல்வேறு தரத்தனவாக இருக்கின்றன. இருவரும் பல்வேறு கட்சிகளின் துணையுடன் போட்டியிடுவதால் யாருக்கு அதிக வெற்றி வாய்ப்பு இருக்கின்றது என்பதை எவரும் அறுதியிட்டுக் கூறவும் முடியாது உள்ளது. இந்நிலையில் ரணிலா, மகிந்த ராஜபக்ஷவா வெல்வார்கள் என்பது குறித்து சீன- ஜப்பானிய ஜோதிடக் கணிப்புகளின் ஊடாக யார் ஜனாதிபதியாக வருவார்கள் எனக் கணக்கிட்டுக் காட்டும் ஒரு சுவாரஸ்யமான குறிப்பே இது.

எமக்குக் கிடைத்த தரவுகளின்படி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் 1949 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24 ஆம் திகதி கொழும்பில் பிறந்தார். (பிறந்த நேரம் தெரியவில்லை) இருப்பினும் சீன - ஜப்பானிய சோதிடத்தின் படி ரணில் விக்கிரமசிங்க அவர்கள், நரி (0து) இலக்கினத்தில் ஜனனம் ஆனார். ( எமது இந்து ஜோதிடத்தின் படி 12 ராசிகள் இருப்பது போன்று சீன, ஜப்பானிய ஜோதிடத்தில் 12 மிருகங்கள் இருக்கின்றன). நரி இலக்கினத்தில் பிறந்தவர்களின் பலன்களை மூன்றாக வகுத்திருக்கும் சீன- ஜப்பானிய ஜோதிடம் ரணில் விக்கிரம சிங்கவின் வாழ்க்கைப் பாதையைப் பின் வருமாறு கூறுகின்றது.

குணாதிசயங்கள்

ஓர் அமைதியான மனிதர்; சமாதானத்தில் நாட்டம் கொண்டவர். ஸ்திரம் அற்ற மனப்பான்மை கொண்டவர்; ஆயினும் உள்ளத்தில் ஆழமானவர். எவரும் கண்டுபிடிக்க முடியாத ஆழ்மனம் கொண்டவர். இவரின் சிரிப்பு என்பது ஒரு பாதுகாப்பு வளையம் போன்றன. ஒன்றை உருவாக்கும் மனம் உள்ளவர்.(crtative hand).

வாழ்க்கையின் முதற் படி: மிகவும் சந்தோசம்

இரண்டாம் படி :- பொருள் இழப்பு

மூன்றாம் படி :- வாழ்க்கையில் பெறும் வெற்றிகளைக் காணும் வாய்ப்பு.

ஐம்பத்தாறாம் வயதினை அடைந்திருக்கும் ரணில் விக்கிரம சிங்க தனது வாழ்க்கையின் மூன்றாம் கட்டத்தில் உள்ளார். மூன்றாம் கட்டம் பெரும் வெற்றிகளைக் கோடிட்டுக் காட்டுவதால் இவரை வெல்லும் முயற்சிகளில் இறங்கியிருக்கும் மகிந்த ராஜபக்ஷ ஜாதகம் ரணிலை விடவும் உறுதியாக இருக்கின்றதா என ஆராய்ந்து பார்ப்போம்!

மகிந்த ராஜபக்‌ஷவின் ஜோதிடம்

சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் மகிந்த ஏற்கனவே பிரதமராக உள்ளவர். அவர் ரணிலை விடவும் நாலு வயது மூத்தவர். இவர் 1945 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18 ஆம் திகதி வீரகெட்டியாவில் பிறந்தார்.

1945 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பிறந்த பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ, சீன - ஜப்பானிய ஜோதிடத்தின் படி ஒரு கோழி இலக்கினத்தில் பிறந்தவராகும். கோழி இலக்கினத்தில் பிறந்தவருடைய பலன்கள் இச் சோதிடத்தின் கீழ் பின்வருமாறு அமைந்து உள்ளது. உயர்ந்த இலட்சியங்களைக் கொண்டிருப்பவர்; பகற் கனவு காண்பவர், நண்பர்களைத் தனது முடிவுகளால் இழப்பவர். உட்பக்கம் தனிமையில் வாழ்பவர், சுறுசுறுப்பானவர். இவர் வாழும் காலத்தில் பொதுவான குணாம்சங்கள் இவைகளாகும்.

மகிந்த ராஜபக்ஷவின் ஜோதிடப் படி இவரின் முதற் கட்ட வாழ்க்கை சாதாரணமானது என்றும், இரண்டாம் கட்டம் நண்பர்கள் இழப்பு என்றும் மூன்றாம் கட்டம் அதிர்ஷ்டம் என்றும் கூறப்படுகின்றது. 1945 ஆம் ஆண்டில் பிறந்த மகிந்த ராஜபக்ஷவுக்கு இப்போது 59 வயது முடிவடையும் தறுவாயில் இருக்கிறது.

இவ்வயது அவர் வாழ்க்கையின் மூன்றாவது கட்டத்தில் இருப்பதையே காட்டுகின்றது. அவர் பிரதமராகியது இந்த மூன்றாவது கட்டத்தில் தான்! இந்த அதிர்ஷ்டத்துக்கு மேல் வேறு அதிர்ஷ்டங்களை இவரின் ஜோதிடம் எடுத்துக் காட்டாமை துரதிர்ஷ்டமே! இதனால் ஜனாதிபதித் தேர்தல் பலப் பரீட்சையில் மகிந்த ராஜபக்‌ஷவுக்கு இருக்கும் இடம் கேள்விக்குறியாகவுள்ளது.

ஈர்ப்புச் சக்தி

சீன, ஜப்பானிய ஜோதிடத்தின் படி அவர்கள் பிறந்த ஆண்டுக் கணக்கின் படி ஈர்ப்புச் சக்திகள் Vibration Table கணக்கு எடுக்கப்பட்டு எதிர்காலப் பலன்கள் கணிக்கப்படுகின்றன. ரணில் விக்கிரமசிங்க, 1949 ஆம் ஆண்டில் பிறந்தவர் என்பதால் அவரின் ஈர்ப்புச் சக்தி 5 என்றும் அவர் புதனின் ஆதிக்கத்தில் உள்ளவர் என்றும் அவரை எதிரிகள் வீழ்த்துவது கஷ்டம் என்றும் சீன - ஜப்பானிய ஜோதிடம் கூறுகின்றது.

மகிந்த ராஜபக்‌ஷ, 1945 ஆம் ஆண்டில் பிறந்தவர் என்பதால் இவரின் ஈழ்ப்புச் சக்தி1 என்றும் இந்த இலக்கிம் தனிப்பட்ட அவரின் சந்தோசத்துக்கு உரிய இலக்கிமே என்றும் சோதிடம் குறிப்பிடுகின்றது. இவையாவும் ஜனாதிபதி தேர்தலில் ரணிலுக்கே சாதகமாக அமைந்து உள்ளது.

அபூர்வ ஒற்றுமை

சீன- ஜப்பானிய ஜோதிடத்தின் கீழ் ரணிலின் ஈர்ப்புச் சக்தி 5, மகிந்த ராஜபக்ஷ அவர்களின் ஈர்ப்புச் சக்தி1 இந்த இரண்டு ஈர்ப்புச் சக்திகளும் காந்தமும் இருப்பும் போன்றவை. தேர்தலில் இவர்கள் முரண்பட்டாலும் தேர்தலின் பின்பு இவர்கள் முரண்படாது இயங்கும் ஈர்ப்புச் சக்தியைக் கொண்டிருக்கிறார்கள்.

நான் ஜனாதிபதியானால் பாராளுமன்றம் கலைக்கப்படும் என்று ரணில் விக்கிரமசிங்க கூறி வருகிறார். அவர் ஜனாதிபதியானால் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ பாராளுமன்றத்தைக் கலைக்காமலே ஜனாதிபதியுடன் ஒத்துழைக்கும் வண்ணம் மாறி வரவும் கூடும்.இந்த மாற்றத்துக்குக் காரணம் இவர்களின் ஈர்ப்புச் சக்தி ஏற்றுமையே!

இதன் மூலம் இவர் கொண்டிருக்கும் ஜே.வி.பி., ஹெல உறுமய போன்ற கட்சிகளின் கூட்டினைக் கூட இவர் கைவிடும் சாத்தியம் கூட ஏற்படும்! இந்த உண்மைகள் எவ்வளவு தூரம் சாத்தியப்படப் போகின்ற என்பது சில நாட்களில் தெரியவரும்.


நன்றி http://www.newstamilnet.com/artical.php?su...t_from=&ucat=3&
<b> .. .. !!</b>
Reply
#2
<b>ரணில் வெற்றி பெறுவார்: கருத்துக் கணிப்புகளில் தகவல் </b>

தனியார் நிறுவனங்கள் ஹிந்துஸ்தான் ரைம்ஸ் தேசிய உளவுப்பிரிவு ரிசர்வ் இன்டர்நேசன்ல் ஆகியன தேர்தல் தொடர்பாக நடத்திய கருத்துக் கணிப்பில் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க வெற்றிபெறக் கூடும் என்று தெரியவந்துள்ளது.


நாடு முழுவதும் இருக்கும் தங்களின் கிளைகள் மற்றும் பாவனையாளர்களின் பங்களிப்புடன் முன்னணி நிறுவனங்களும்இ சுயாதீன அமைப்புகள் இந்திய பத்திரிகையான இந்துஸ்தான் ரைம்ஸ் தேசிய உளவுப்பிரிவு ஆகியன ஆய்வினை மேற்கொண்டன.

செலிங்கோ நிறுவனம்இ இலங்கை புகையிலை நிறுவனம் வரையறுக்கப்பட்ட சிங்கர் நிறுவனம்இ லயன் புரூவரி நிறுவனம்இ ஹட்டன் நேசனல் வங்கி ஆகியன தங்களின் ஆய்விற்கமைய அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளன

http://www.eelampage.com/?cn=21664
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
#3
ரணிலின் கழுவிற நீரில நழுவிற மீனாக செய்த பிரச்சாரத்துக்கு விளக்கம் குடுத்தது தப்பு. மகிந்த இனவாதக் குழுக்காளோடு சோந்து இனவாத அடிப்படையில பேட்டி போடுவதால் ரணில் தான் சரியான தெரிவு அவருக்குத்தான் தமிழர்கள் தங்கள் வாக்குகளை போட வேணும் அப்படி போடமல் விட்டு மகிந்த ஜநாதிபதியாகி யுத்தம் வந்தால் அதுக்கு காரணம் புலிகளும் தமிழரும். பின்னர் புலிகளுக்கு சர்வதேச அங்கீகாரமும் கிடைக்காது தமிழ் மக்களின் போராட்டமும் நியாயமற்றது என்றாகிவிடும்.

இது தான் ஜநனாயகம் என்ற வேடத்தில் நாகரீகமாக தமிழ்ர் மீது நடத்தப்படுகிற சர்வாதிகாரம். ரணிலுக்கு வாக்குப் போட்டு ஜனாதிபதியாக்குங்கோ இல்லாட்டி எல்லாருக்கும் பயங்கரவாத முத்திரை குத்தப்படும். அப்போ வெற்றி பெறப்போவது யார் எண்டதை எதிர்வு கூறுறது கடினம் இல்லை. சர்வதேசம் சிங்களதேசம் எல்லாரும் சேர்ந்து தமிழர் மீது நடத்துற சர்வாதிகாரத்தை எதிர் கொள்ளுறது எண்டது தான் கேள்வி.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)