Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கோயிஞ்சாமி தி(கொ)ண்டாடிய தீபாவளி!: ஒரு சிறப்பு ரிப்போர்ட்
#1
நம்ம எல்லாரும் மஜாவா சிவகாசி பட்டாசு வெடிச்சு, தவமாய்த் தவமிருந்து சேர்த்து வைச்ச காசுல தீபாவளி கொண்டாடிப்புட்டோம்! எல்லாவற்றிலும் அப்பாவியாய் மாட்டிக்கொள்ளும் நம்ம "லொள்ளு தர்பார்' சிறப்புக் கதாநாயகன் கோயிஞ்சாமி எப்படி தீபாவளி கொண்டாடுவார் என அறிய கடந்த ஒரு வாரமாக அவரை ரகசியமாகப் பின் தொடர்ந்தோம். செம கலாட்டா போங்க! உங்களுக்காக அந்த ஸ்பெஷல் ரிப்போர்ட்.

தீபாவளிக்கு இரு தினங்களுக்கு முன்..

"சார் போஸ்ட்!' என மத்திய அரசின் குரல் ஒலிக்க, வீட்டின் கொல்லைப் பக்கம் கொய்யாப்பழம் சாப்பிட்டுக் கொண்டிருந்த கோயிஞ்சாமி வேகமாக ஓடி வருகிறார். நான்கு குஷ்பு இட்லிகளையும், கொஞ்சம் கெட்டிச் சட்னியையும் ஒரு கவரில் போட்டுக் கட்டினால் எவ்வளவு எடை இருக்குமோ அவ்வளவு எடை கொண்ட கவர் அது! மத்திய அரசு தீபாவளிக்காகத் தலையைச் சொறிந்து கொண்டு நிற்க, தன் கோட்டையின் கஜானாவிலிருந்து ஐந்து ஒரு ரூபாயை தபால்காரருக்கு அள்ளிக் கொடுத்தார் கோயிஞ்சாமி.

"நமக்குத்தான் தீபாவளிக்கு யாரோ ஏதோ கிஃப்ட் அனுப்பியிருக்காங்க என்ற மெகா ஆவலில் பார்சலைப் (பங்குக்கு வந்து விடக் கூடாதே என மனைவிக்குக் கூடத் தெரியாமல் ரகசியமாகப்) பிரித்தார். கத்தை கத்தையாய் காகிதக் குப்பைகள், திரி இல்லாமல் சில பட்டாசுகள், ஒரு சிறு பொட்டலத்தில் செம்மண், நாலைந்து ஓலைச்சுவடிகள். புரியாமல் கொரிய மொழிப் படத்தை கீழே ஆங்கில சப்-டைட்டில் இல்லாமல் பார்க்கும் ஒருவன் போல் முழித்தார் கோயிஞ்சாமி.

ஓலைச்சுவடிகளை எடுத்து படிக்க ஆரம்பித்தார். புரியும்படி தெளிவாகத்தான் இருந்தன எழுத்துக்கள். "தீபாவளி வாழ்த்துக்கள்! இந்த ஓலைச்சுவடி உன் வாழ்க்கைத் தரத்தை தாறுமாறா உயர்த்தப் போகுது! இந்த தீபாவளி உனக்கு மறக்க முடியாத தீபாவளி! ஓலைச்சுவடி சொல்லுறபடி நீங்க தீபாவளி கொண்டாடணும்! அதுல ஏதாவது குறை வந்தா குபேரன் உன்னை விட்டு ஓடிவிடுவார். இது சத்தியம்! அதன் பின் கோயில் வாசலில் உட்கார உனக்கு ஒரு இடம் நிச்சயம் கிடைக்கும்!'

வெலவெலத்துப் போன கோயிஞ்சாமி, ஒரு பாட்டில் ஐஸ் வாட்டரை தொண்டை வழியே ஓட விட்டார். மீண்டும் தைரியத்தை, கெஞ்சிக் கூத்தாடி வரவழைத்து அடுத்த ஓலைச்சுவடியைப் படித்தார் கோயிஞ்சாமி!

"ஏய்...நிறுத்து...இதை மட்டும் படி. அடுத்த ஓலைச்சுவடியைப் படிக்காதே! எல்லாத்துக்கும் ஒரு நேரம் இருக்கு. அதை அதை அந்தந்த நேரத்துலதான் செய்யணும். இல்லாட்டி எந்த நேரமும் குபேரன் உனக்கு எஸ்.எம்.எஸ் கூட அனுப்பமாட்டான்! தீபாவளி அன்னிக்கு அதிகாலையில் கரெக்டா 3.13 க்கு அடுத்த ஓலைச் சுவடியை எடுத்துப் படிக்கணும். ஒரு நிமிஷம் கூடத் தாமதிக்கக் கூடாது. இந்த விஷயத்தைப் பத்தி யார் கிட்டயாவது உளறினா, அப்புறம் நீ வாழ்க்கை ஃபுல்லா உளற வேண்டியதுதான். இது செல்லானந்த சுவாமிகளின் கட்டளை!'

இஞ்சி ஜூஸ் குடித்த மங்கியின் முகம் போல் மாறிப்போனது கோயிஞ்சாமியின் முகம்!

"என்னங்க, பால் அல்வா கிண்டினேன். சரியா இருக்கான்னு பாத்துச் சொல்லுங்க!' என்று ஒரு தட்டை நீட்டினாள் அவர் மனைவி.

வாயில் அதை மென்றபடி, "கொஞ்சம் உப்பு ஜாஸ்தியா இருக்கு! வத்தல் பொடியை கரைச்சு ஊத்துனா சரியா வரும்!' என்றார் மிரண்டு போன கோயிஞ்சாமி.

"ரொம்பத்தான் நக்கல் உங்களுக்கு! என செல்லமாக, நன்றாக வலிக்கும்படி அவர் கன்னத்தில் ஒரு குத்து விட்டுப் போனாள் அவள்.

தீபாவளி அன்று காலை...

அதிகாலை 2.30 மணி...

தூக்கம் வரவே இல்லை கோயிஞ்சாமிக்கு. 3.00 மணிக்கு அலாரத்தை வைத்துவிட்டு, அது அடிக்காமல் ஏமாற்றிவிடக்கூடாதே என்ற பயத்தில் அதன் அருகிலேயே கொட்டக் கொட்ட விழித்துக்கொண்டு காத்திருந்தார் கோயிஞ்சாமி.

அலாரம் அடித்ததும் மெüனமாக அலறி அடித்துக்கொண்டு ஓலைச்சுவடியை ஒளித்து வைத்திருந்த மொட்டை மாடிக்கு ஓடினார். மணி 3.13..கைகள் தத் தத் தத் தந்தியடிக்க பிரித்துப் பார்த்தார். "இனிய தீபாவளி வாழ்த்துக்கள். இன்னும் நேரமிருக்கிறது. போய் குறட்டை விட்டு நிம்மதியாகத் தூங்கு! அடுத்த ஓலைச்சுவடி பார்க்க வேண்டிய நேரம் காலை மணி 4.11. இது செல்லானந்த சுவாமிகளின் கட்டளை' வானத்தைப் பார்த்து ""அய்யய்யோ இன்னும் அரை மணி நேரத்துல எந்திரிக்கணும். அதுக்குள்ள நான் எப்படி குறட்டை விட்டுத் தூங்குவேன். செல்லானந்த சுவாமிஜி நீங்கதான் காப்பாத்தணும்'' எனப் புலம்பியபடி, கீழே சென்று தூக்க மாத்திரை ஒன்றைப் போட்டுக் கொண்டு, இழுத்துப் போர்த்திப் படுக்கிறார்.

அலாரம் அலற, குறட்டை விட்டுக் கொண்டிருந்த கோயிஞ்சாமியை நாலு குத்து குத்தி எழுப்புகிறார் மனைவி.

""சுவாமிஜி என்னை மன்னிச்சுக்கோங்க!'' எனக் கதறியபடியே எழுந்த கோயிஞ்சாமி மொட்டை மாடிக்கு கெட்ட வேகத்தில் ஓடினார்.

ஓலைச்சுவடி...அதில்... "செல்லானந்த சுவாமிகளுக்கு இது உணவருந்தும் நேரம். இன்னும் இரு மணி நேரத்தில் வடை பாயசத்துடன் நீ இதே இடத்தில் வயிராற உண்ண வேண்டும். அடுத்த ஓலைச்சுவடியைப் பார்க்க வேண்டிய நேரம் காலை 6.16!'

கிழக்குக் கடற்கரை சாலையில் செல்லும் சுமோ வேகத்தில் கிச்சனுக்கு ஓடிய கோயிஞ்சாமி வேகவேகமாக சமைக்க ஆரம்பித்தார். மிரண்டு போன அவர் மனைவியைப் பார்த்து, "ப்ளீஸ் பாயசம் மட்டும் இன்னும் பத்தே நிமிசத்துல ரெடி பண்ணிடு..ப்ளீஸ் டார்லிங்!' என கெஞ்சிக் கொண்டே வடை மாவை கொதிக்கும் எண்ணெய்க்குள் ஊற்ற ஆரம்பித்தார்.

ஒன்றரை மணி நேரத்தில் மொட்டை மாடியில் திணறத்திணற லஞ்ச் சாப்பிட்டு விட்டு, "ஏவ்வ்வ..' என ஏப்பம் விடும்போது மணி 6.16.

அடுத்த ஓலைச்சுவடி..

"இது பல் தேய்க்கும் நேரம். பன்னிரெண்டு கழுதைகளுக்கு தீபாவளி அன்று பிரஷ்தானம் செய்தால் செல்வம் "பல்'கிப் பெருகும். அடுத்த ஓலைச்சுவடி பார்க்க வேண்டிய நேரம் பகல் மணி 11.59'

கழுதைகளைத் தேடி குதிரை வேகத்தில் ஓடினார் கோயிஞ்சாமி! பன்னிரெண்டாவது கழுதையைக் கண்டுபிடிக்கும்போது மணி 11.30. வாயில் பிரஷ்ஷை வைத்து தேய்த்துக் கொண்டே தன் வீட்டை நோக்கி ஓடி வந்தார் கோயிஞ்சாமி!

அடுத்த ஓலைச்சுவடி

"இது பொழுது போக்கு நேரம்! இன்று நீ பார்க்க வேண்டிய திரைப்படம் "ராமாயி வயசுக்கு வந்துட்டா!' எப்படியாவது பார்த்துவிடு. அடுத்த நேரம் இரவு 7.12'

""சார், "ராமாயி வயசுக்கு வந்துட்டா' பட சிடி உங்ககிட்ட இருக்குமா?'' என பெட்டிக் கடைகளைக் கூட விட்டு வைக்காமல் முட்டி முட்டித் தேடினார் கோயிஞ்சாமி.

கிடைக்கவில்லை. மணி 7.00

கதறிக் கதறி அழுது கொண்டே மொட்டை மாடிக்குச் சென்று அடுத்த ஓலைச் சுவடிப் பிரித்தார்.

"சரி அழாத! அடுத்த வேலையாவது ஒழுங்கா செய்! போ! போய்க் குளி! 1 லிட்டர் கடலெண்ணெயை உடம்பு முழுசா நல்லா தேய்ச்சி, ஒரு மணி நேரம் ஊற வைச்சி, 1 லிட்டர் மினரல் வாட்டர்ல தாராளமா நல்லாக் குளிரக் குளிரக் குளி! அதன்பின் நீ புதிதாக எடுத்த உடையை ஒரு வாளித் தண்ணீரில் அரைக்கிலோ மஞ்சள் பொடியைப் போட்டுக் கரைத்து, அதில் முக்கி, பின் அணிந்து கொள்! மங்களம் உண்டாகட்டும்! இது செல்லானந்த சுவாமிகளின் ஆர்டர்! மீண்டும் இரவு 11.00 மணிக்கு சந்திக்கலாம்!'

""இந்தாங்க, எலுமிச்சம்பழம்...இதையும் நல்லா தேய்ச்சுக் குளிங்க! அப்பவாவது உங்களுக்குத் தெளியுதான்னு பார்ப்போம்'' என்றாள் கோயிஞ்சாமியின் மனைவி.

பிசுபிசு உடலில் மஞ்சள் மாக்கான் போல் உடை அணிந்து கொண்டு, 11.00 மணிக்கு அடுத்த ஓலைச் சுவடியைப் படித்தார்.

"திரியில்லாத அந்த வெடிகளை எப்படியாவது வெடிக்க வைத்துவிடு! மீண்டும் தீபாவளி வாழ்த்துக்கள்! விரைவில் உன்னைத் தேடி குபேரன் கொரியரில் வருவார்! செல்லானந்த சுவாமிகள் உனக்கு அருள் புரிவார்.' என்றிருக்க, கோயிஞ்சாமிக்கும் கோபம் வந்து, அந்த போஸ்ட் கவரை எரிக்கப் பார்க்கிறார்.

""அடப்பாவிகளா..டூ அட்ரஸ்ல என் பேரே இல்லையே...இது பக்கத்து தெரு அட்ரஸôச்சே! என தானே தன்னைக் கேனையனாக்கி விட்டோமே என் பீல் பண்ணத் தொடங்கினார் கோயிஞ்சாமி!
ThanksBig Grininamani...
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply


[-]
Quick Reply
Message
Type your reply to this message here.

Image Verification
Please enter the text contained within the image into the text box below it. This process is used to prevent automated spam bots.
Image Verification
(case insensitive)

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)