Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நு}று கோடி மக்களுக்கு உணவு அளிக்க முயற்சித்தல்;;;;;;;;;;
#1
நு}று கோடி மக்களுக்கு உணவு அளிக்க முயற்சித்தல்;;;;;;;;;;

ஓவ்வொரு நாளும் 100 கோடி மக்களுக்கு அரை வயிறு கஞ்சிதான் கிடைக்கிறது. இந்தக் கொடுரத்தை ஒழிக்க வேண்டும் என்று ஐக்கிய நாட்டுச் சங்கம் விரும்புகிறது.
‘தலைவிரித்தாடும் வறுமையை ஒழிப்பதே உங்களுடைய லட்சியம் என்று சொல்லியிருக்கிறீர்கள்’ என ஐக்கிய நாடுகளின் (ஐ.நா) பொதுச் செயலாளர் கோஃபி அன்னான் குறிப்பிட்டார். யாரிடம்? உலகிலேயே மிகப் பெரிய பதவிகளிலிருந்த ஆண்களிடமும் பெண்களிடமும். இவர்கள் செப்டம்பர் 8 2000-ல் நடைபெற்ற ஐ.நா. மிலேனியம் உச்சி மாநாட்டிற்கு வந்திருந்தவர்கள். உலகில் ஏழைகள் எதிர்படும் கஸ்டங்களைக் குறித்து இவர்களில் அநேகர் வெளிப்படையாக கருத்து தெரிவித்தார்கள். ‘தலை விரித்தாடும் வறுமை மனித வர்க்கத்திற்கே அவமானம்.’ என பிரேஸில் நாட்டின் துணை ஜனாதிபதி சொன்னார். பிரிட்டனின் பிரதமர் இன்னும் ஒருபடி மேலே சென்று ‘வளர்ச்சியடைந்த நாடுகள் வளர்ச்சியடையாத ஆப்ரிக்காவிற்கு சிறிதும் உதவாததால் அது மிக மோசமான நிலையில் இருக்கிறது. மனித நாகாPகத்திற்கே இது அவமானம் என்றார் ரொனி பிளேயர்.

பசியில் வாடும் மக்களுக்கு வளர்ச்சியடைந்த நாடுகள் உதவ மறுத்ததால் அவமானத்தை தேடி கொண்டன என்று இந்த இரண்டு தலைவர்களும் தௌ;ள தெளிவாக சொன்னார்கள். அந்த மாநாட்டிற்கு வந்திருந்தவர்கள் உலகம் முழுவதுமுள்ள மக்களுடைய வாழ்க்கை முறையை மேம்படுத்த தாங்கள் விரும்புவதாகத் தெரிவித்திருந்தார்கள். அதற்கு ஆதாரமாக எட்டு பகுதிகளை கொண்ட ஒர் உறுதி மொழியை எடுத்தார்கள். அதன் ஒரு பகுதியில் ‘தற்போது வறுமையின் கோரப்பிடியில் சிக்கித் தவிப்பதால் நற்குணங்களை இழந்துவிட்டிருக்கும் 100 கோடிக்கும் அதிகாமன ஆண்கள்-பெண்கள்- குழந்தைகள் ஆகியோரை காப்பாற்ற எங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்வோம். ….அதுமட்டுமல்ல ஒரு நாளைக்கு ஒரு டாலருக்கும் குறைவாக சம்பாதிக்கும் ஆட்க ளின் எண்ணிக்கையையும் பசியில் தவிக்கும் மக்களின் எண்ணிக்கையையும் பாதிக்குப்பாதி குறைப்போம். 20015-ம் ஆண்டுடிற்குள் இந்த லட்சியத்தை அடைவோம்.’

இந்த உயரிய லட்சியங்களை அடைய செப்டம்பர் 2000-லிருந்து என்ன நடவடிக்கைகள் எடுக்கபட்டிருக்கின்றன?


சொல்லைவிட செயலுக்கே அதிக வலிமை

ஐ.நா. மிலேனிய பிரகடனத்தின் லட்சியங்களை அடைவதற்கு முயற்சிகள் எடக்கபட்டிருக்கின்றனவா என்பதை உலக பொருளாதார அமைப்பின் ஒரு துறை ( புடழடியட புழஎநசயெnஉந ஐnவையைவiஎந) 2003-ல் மேற்பார்வையிடத் தொடங்கியது ‘மிக முக்கியமான அந்த லட்சியங்களை அடைய உலக நாடுகள் கொஞ்சம் கூட அக்கறை எடுப்பதே இல்லை’ என ஜனவரி 15. 2004-ல் வெளியிடபிபட்ட அதிகாரபுூர்வ அறிக்கை சொல்கிறது. மேலும் பசியின் கொடுமையைக் குறித்து அந்த அறிக்கை குறிப்பிடுவாவது: ‘உலகத்தில் உணவே இல்லையென சொல்ல முடியாது: உண்மையில் எல்லோருக்கும் போதுமான உணவையும் ஊட்டச்சத்தையும் அளிக்க முடியும். ஆனால் அதை வாங்குவதற்கு ஏழைகளிடம் பணம்தான் இல்லை.’

பொதுவாக வறுமையைப் பற்றி அந்த அறிக்கை இவ்வாறு சொல்கிறது. ‘படு மோசமான இந் நிலைக்கு காரணம் அரசாங்கங்களே-வசதிபடைத்தவையும் சரி வசதியற்றவையும் சரி. ஆனால் பணக்காரர்களால் உருவாக்கப்பட்டுள்ள உலக பொருளாதார அமைப்பகளால் ஏழைகளுக்கு எந்த பிரயோசனமும் இருப்பதில்லை. வுசதி படைத்த நாடுகள் வாக்குறுதிகளை மட்டுமே அளிக்கின்றன அந்த பொருளாதார அமைப்பை மாற்றுவதிலோ எழைகளின் படிப்படியான முன்னேற்றத்திலோ அவை அக்கறை காட்டுவதில்லை. அரசாங்க தலைவர்கள் மீது இத்தனை குறைபாடுகள் இருக்கின்ற போதும். அவர்கள் வெறுமனெ வாதாடிகொண்டு தானிருக்கிறார்களே தவிர ஒன்றையும் சாதிப்பதில்லை. அரசாங்கங்கள் அதனுடைய நன்மைக்காவே தொடர்ந்தும் செயல்படுகின்றன. ஆனால் ஏழைகளின் வாழ்வில் எந்த மாற்றமும் கிடையாத வெறும் பசியும் பட்டினியும்தான்.

உயர்ந்த லட்சியத்தை அடைய செயல்படுதல். ஏன்ற தலைப்பில் உலக பொருளாதார கருத்தரங்கில் வழங்கபட்ட ஒர் ஆங்கில ஏடு இவ்வாறு எச்சரிக்கின்றது. ‘சர்வதேச வியாபார கொள்கைகள் மாற்றப்பட வேண்டும். தேசிய கொள்கைகள் உணவு பற்றாக்குறையை தீர்க்க அதீத கவனம் செலுத்த வேண்டும். புயனளிக்கும் செயல்கள் முயற்சிகள் இன்னும் அதிகமாக எடுக்க படவேண்டும். இப்படியெல்லாம் செய்யாவிட்டால் உலகில் பெரும்பாண்மையினர் பசியால் தவிதவிப்பார்கள். அப்படியென்றால் நல்ல கொள்கைகளை ஏற்படுத்தி. பயனளிக்கும் நல்ல முயற்சிகளை எடுக்க வேண்டியது யார்? உலக மக்களின் வாழ்கை முறையை முன்னேற்றுவிக்க 2000-ல் தீர்மானமெடுத்த அந்த அரசாங்க தலைவர்களே அதை செய்ய வேண்டும்.

மேற்கோள்;: யுறயமந! ழுஉவழடிநச 8.2005
I dont hate anyland.....But Ilove my motherland
Reply
#2
நு}று கோடி மக்களுக்கு உணவு அளிக்க முயற்சித்தல்;;;;;;;;;;

மேற்கோள்; Awake! october 8,2005
I dont hate anyland.....But Ilove my motherland
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)