Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
திருகோணமலையில் கரையொதுங்கும் லட்சக்கணக்கான உயிரிழந்த மீன்கள்
#1
திருகோணமலை உட்துறைமுக வீதியிலுள்ள கரையோரப் பகுதியில் லட்சக்கணக்கான இறந்த மீன்கள் கரையயாதுங்கி வருகின்றன.இதனால் திருகோணமலை நகர்ப் பகுதியில் துர்நாற்றம் வீசுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.கடந்த இரு தினங்களாக சூடை மீன் இனத்தைச் சேர்ந்த சாளை மீன் களே இறந்த நிலையில் கரையயாதுங்கி வருவதாகக் கூறப்படுகிறது. குறித்த மீனினம் திடீரென இவ் வாறு கரையயாதுங்கி வருவது பல் வேறு தரப்பினரையும் அதிர்ச்சிக்குள் ளாக்கியுள்ளது.

குறித்த மீனினம் இறந்து கரை யயாதுங்கி வரும் உட்துறைமுக வீதி யில் கடற்படையினரின் பாரிய முகாம் அமைந்துள்ளது. இங்கு வெடி பொருள் ஏதாவது வெடிக்க வைக்கப்பட்டதால் நீரில் ஏற்பட்ட நச்சுத் தன்மை காரண மாக இந்த மீன்கள் உயிரிழந்திருக் கலாம் எனக் கூறப்படுகிறது.அண்மைக்காலமாக கடலில் ஏற் பட்டுவரும் மாற்றங்களும் இதற்குக் காரணமாக இருக்கலாமெனவும் கூறப்படுகிறது.

கரையயாதுங்கிய மீன்களை அகற் றுவதற்கு நேற்று மாலை வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் நகர்ப்பகுதியில் துர்நாற்றம் வீசுகின் றது. இதனால் மக்கள் பெரும் அசெள கரியங்களை எதிர்நோக்கிவருகின்ற னர்.இதேவேளை - கரையயாதுங்கி யுள்ள மீன்களை உடன் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி பொது அமைப்புக்கள் திருகோணமலை நகர சபையினரையும் சுகாதாரப் பிரி வினரையும் கோரியுள்ளனர். (10,04)
Reply
#2
இந்த உயிரிழப்புக்களுக்கான சரியான காரணங்கள் ஏன் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை..! இது எமது கடல்வளத்தில் அதன் நுகர்வுத் தன்மையில் குறிப்பிடத்தக்க அளவு பாதிப்பை ஏற்படுத்தவல்லது..!

யாழ்ப்பாணம்... கிழக்கிலங்கை பல்கலைக்கழகம் என்று இரண்டு எதுக்கு இருக்கு...இதன் முக்கியத்துவம் அறிந்தும் ஏன் இன்னும் வாழாதிருக்கின்றனர்...! :roll: Confusedhock: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)