Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பிறமொழி ஆக்கங்கள் என்ற பக்கம் தேவையா ??????
#1
வணக்கம் ஒரு கேள்வி அடியேன் தமிழைத்தவிர எந்த மொழியும் படிக்கவில்லை
ஆணால் பிறமொழி ஆக்கம் என்று ஒரு பக்கம் திறக்கப்பட்டுள்ளது
என்போன்ற பலருக்கு அடியும் விளங்கவில்லை நுனியும் விளங்கவில்லை
மற்றப்பகுதிகளில் ஆங்கிலத்தில் எழுதினால் தமிழில் மாற்றியுள்ளோம் என்று மட்டுறுத்தினர்கள் சொல்வார்கள் ஆணால் இங்கு ???

சரி தமிழ் மொழியில் எழுதனும் இல்லை ஆங்கிலத்தில் எழுதியதை தமிழில் மாற்றம் செய்யனும்

ஏனெனில் அந்தப்பக்கத்தில கருத்து எழுதியவர்கள் 5 அல்லது 6 பேர்

சரி எல்லாரும் வயது போன நேரத்தில அப்பு வோடை கோபப்படாமல் உங்கட கருத்தை சொல்லுங்கோ

என்னைப்பொறுத்த மட்டில பிறமொழி ஆக்கம் என்ற ஒரு பக்கம் தேவையில்லை தமிழர்களுக்காக தமிழில் தமிழரால் ஆரம்பிக்கப்பட்ட பக்கம் இது (இது என் கருத்து )

ஏனெனில் ஒருவர் ஆங்கிலத்தில எழுதுவார் ( அதாவது கொப்பி பண்ணி பிறகு இங்கை ஒட்டுறது ) நான் டொச்சில எழுதுவன் சாட்றீ பிரான்சு மொழியில போடும் குறுவீ சும்மா கீச்சிடும் தமிழ் தனக்கே விளங்காமல் எழுதும் :evil:
ம் ரசிகை. துயா சொல்லவே வேண்டாம் புது மொழியே கண்டுபிடிப்பினம்
பத்தக்குறைக்கு மச்சான் சோமாலியா பாசையில தொடங்குவான் கூடவே அவனின்ட கூட்டு அண்ணாச்சி ( :evil: :evil: :evil: :evil: ) ஆப்கான் பாசை
தேவையா இது ......
:?: :?: :?: :?: :?: :?: :?: :?: :?: :?: :?:
[b]
Reply
#2
நல்லதொரு ஞானோதயம்... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
பிறமொழி ஆக்கங்கள் என்ற பகுதிக்குள், பிற மொழியில் வெளிவந்தவற்றை தமிழில் மொழிபெயர்த்து தருவதுதான் மிகப் பொருத்தமாகவும் சிறந்ததாகவும் இருக்கும் என்பது எனது கருத்து. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
.
Reply
#3
யாள்களத்தில்லென்ன பிறமொழியாக்கம் அகுக்குதான் 1000கணக்கான இடம்மிருக்கே யாள்களத்தின் தனித்துவமோ தனித்தமிழ்தானே இதையார் குழப்பியது????
.....

<img src='http://img423.imageshack.us/img423/5060/sabi40ck4xv.gif' border='0' alt='user posted image'>
Reply
#4
sinnappu Wrote:சரி தமிழ் மொழியில் எழுதனும் இல்லை ஆங்கிலத்தில் எழுதியதை தமிழில் மாற்றம் செய்யனும்

ஏனெனில் அந்தப்பக்கத்தில கருத்து எழுதியவர்கள் 5 அல்லது 6 பேர்

சரி எல்லாரும் வயது போன நேரத்தில அப்பு வோடை கோபப்படாமல் உங்கட கருத்தை சொல்லுங்கோ

என்னைப்பொறுத்த மட்டில பிறமொழி ஆக்கம் என்ற ஒரு பக்கம் தேவையில்லை தமிழர்களுக்காக தமிழில் தமிழரால் ஆரம்பிக்கப்பட்ட பக்கம் இது (இது என் கருத்து )

அப்பிடிப் போடுங்கோ அரிவாளை.... :wink:

தமிழ்ப் பக்கத்தில தமிழில ஆக்கங்கள் வருவதுதான் பொருத்தமாய் இருக்கும்..... அதுதான் எல்லாருக்கும் இலகுவானதாயும் பங்குபற்றிக்கருத்தாட வசதியாயும் இருக்கும்...

ஆங்கிலம் அல்லது டொச் மொழியில் ஒரு ஆக்கம் இருந்தால் அதற்கான எமது கருத்துக்களை எந்த மொழியில் முன்வப்பது எண்ற சிக்கலும் உள்ளது....(தமிழில் வைப்பது பொருத்தமானதா..???)

அதற்க்காக பிறமொழி ஆக்கங்கள் வைக்கப்பட கூடாதவை அல்ல பிறமொழியில் வரும் நல்ல விடயங்கள்... பொற்றுக்கொண்டு அறிவு பூர்வமான மற்றய மொழிகலாச்சாரக் கருத்துக்களை உள்வாங்குவது நல்லதுதான்....

<b>ஆங்கிலத்திலோ அல்லது வேறு மொழி ஆக்கங்கள் வைப்பவர்கள்... கட்டாயம் அது சம்பந்தமான பூரணவிளக்கம் உள்ளவர்களாய் இருப்பார்கள்.... அவர்கள் முழுதாக இல்லாவிட்டாலும் அந்த ஆக்கத்தின் சுருக்கத்தையாவது(விளக்கம்) தமிழில் தந்தால் வசதியாக இருக்கும்...</b>
(புண்ணியமாப் போகும்)
::
Reply
#5
வணக்கம் சின்னப்பு,

பிற மொழி ஆக்கத்தில் உள்ள குறைபாடாக இங்கு எல்லோருக்கும் விளங்காத பிற மொழி ஒன்றில் ஆக்கங்கள் ஒட்டப்படுவதை ஏற்றுக் கொளகிறேன். ஆனால் கருத்துக்கள், சொந்த ஆக்கங்கள் தமிழ் அல்லாத மொழியில் வைப்பதற்கு அது வழிவகுக்கக் கூடாது.

தலா கூறியது போல் நேரமுள்ளவர்கள் போடப்படும் ஆக்கத்திற்கு சிறு குறிப்பு தமிழில் எழுதி உதவலாம்.

இங்கு பிறமொழியில் வைக்கும் சுதந்திரம் வழங்கப்பட்டது பயனுள்ள விடயங்கள் வேறு மொழியில் கிடைக்கும் பொழுது அதை யாழில் பகிர்ந்து கருத்துப்பரிமாற்றங்களை மேற்கொள்ள.

பல்மொழித்திறமையோடு மடத்துறுத்தினர்கள் இருக்க மாட்டார்கள், மொழிபெயர்பின் போது சில குளப்பங்கள் வரலாம். இந்த குறைபாடுகளை தவறாக பயன்படுத்தாது நல்ல வழியில் பயன்படுத்தும் பொறுப்பு எங்களுடையது.
Reply
#6
களத்தில் கருத்துக்கள் வைக்கப்படுவது பலருக்கும் போய் சேரவேண்டுமென்பதற்காக அந்நியமொழி ஆக்கத்தை அப்படியே ஒட்டுவது சிலருக்குத்தான் சேரும். களநிர்வாகிகள் முடிவெடுக்கவேண்டும் பலருக்கு சேரவேண்டுமா அல்லது சிலருக்கு சேருவது போதுமா என்று
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply
#7
sinnappu Wrote:வணக்கம் ஒரு கேள்வி அடியேன் தமிழைத்தவிர எந்த மொழியும் படிக்கவில்லை
ஆணால் பிறமொழி ஆக்கம் என்று ஒரு பக்கம் திறக்கப்பட்டுள்ளது
என்போன்ற பலருக்கு அடியும் விளங்கவில்லை நுனியும் விளங்கவில்லை
மற்றப்பகுதிகளில் ஆங்கிலத்தில் எழுதினால் தமிழில் மாற்றியுள்ளோம் என்று மட்டுறுத்தினர்கள் சொல்வார்கள் ஆணால் இங்கு ???

சரி தமிழ் மொழியில் எழுதனும் இல்லை ஆங்கிலத்தில் எழுதியதை தமிழில் மாற்றம் செய்யனும்

ஏனெனில் அந்தப்பக்கத்தில கருத்து எழுதியவர்கள் 5 அல்லது 6 பேர்

சரி எல்லாரும் வயது போன நேரத்தில அப்பு வோடை கோபப்படாமல் உங்கட கருத்தை சொல்லுங்கோ

என்னைப்பொறுத்த மட்டில பிறமொழி ஆக்கம் என்ற ஒரு பக்கம் தேவையில்லை தமிழர்களுக்காக தமிழில் தமிழரால் ஆரம்பிக்கப்பட்ட பக்கம் இது (இது என் கருத்து )

ஏனெனில் ஒருவர் ஆங்கிலத்தில எழுதுவார் ( அதாவது கொப்பி பண்ணி பிறகு இங்கை ஒட்டுறது ) நான் டொச்சில எழுதுவன் சாட்றீ பிரான்சு மொழியில போடும் குறுவீ சும்மா கீச்சிடும் தமிழ் தனக்கே விளங்காமல் எழுதும் :evil:
ம் ரசிகை. துயா சொல்லவே வேண்டாம் புது மொழியே கண்டுபிடிப்பினம்
பத்தக்குறைக்கு மச்சான் சோமாலியா பாசையில தொடங்குவான் கூடவே அவனின்ட கூட்டு அண்ணாச்சி ( :evil: :evil: :evil: :evil: ) ஆப்கான் பாசை
தேவையா இது ......
:?: :?: :?: :?: :?: :?: :?: :?: :?: :?: :?:

அப்பாடா உருப்படியா ஒரு தலைப்பைத்தொடங்கீட்டார் சின்னப்பு. முந்தி ஒரு சிலர் ஆங்கில ஆக்கங்களை தமிழில் மொழிபெயர்த்துப்போட்டார்கள். அதை வாசிக்க முடிந்தது. அதை கதைச்சு கதைச்சே குழப்பீட்டாங்க. இப்ப வேற்று மொழிகளில இருக்கிறதை வெட்டி ஒட்டி என்ன பிரியோசனம்?? இங்கு உள்ளவர்கள் எல்லாரும் ஆங்கிலப்பண்டிதர்கள் அல்ல என்னை மாதிரி அரிச்சுவடிகள் இருக்கினம். நாங்க என்ன செய்ய அங்காலப்பக்கம் போகாமல் விடிறது தான். ஒட்டிறவை மறுபடி மறுபடி படிச்சிட்டு இருக்கட்டேன். :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#8
Thala Wrote:
sinnappu Wrote:சரி தமிழ் மொழியில் எழுதனும் இல்லை ஆங்கிலத்தில் எழுதியதை தமிழில் மாற்றம் செய்யனும்

ஏனெனில் அந்தப்பக்கத்தில கருத்து எழுதியவர்கள் 5 அல்லது 6 பேர்

சரி எல்லாரும் வயது போன நேரத்தில அப்பு வோடை கோபப்படாமல் உங்கட கருத்தை சொல்லுங்கோ

என்னைப்பொறுத்த மட்டில பிறமொழி ஆக்கம் என்ற ஒரு பக்கம் தேவையில்லை தமிழர்களுக்காக தமிழில் தமிழரால் ஆரம்பிக்கப்பட்ட பக்கம் இது (இது என் கருத்து )

அப்பிடிப் போடுங்கோ அரிவாளை.... :wink:

தமிழ்ப் பக்கத்தில தமிழில ஆக்கங்கள் வருவதுதான் பொருத்தமாய் இருக்கும்..... அதுதான் எல்லாருக்கும் இலகுவானதாயும் பங்குபற்றிக்கருத்தாட வசதியாயும் இருக்கும்...

ஆங்கிலம் அல்லது டொச் மொழியில் ஒரு ஆக்கம் இருந்தால் அதற்கான எமது கருத்துக்களை எந்த மொழியில் முன்வப்பது எண்ற சிக்கலும் உள்ளது....(தமிழில் வைப்பது பொருத்தமானதா..???)

அதற்க்காக பிறமொழி ஆக்கங்கள் வைக்கப்பட கூடாதவை அல்ல பிறமொழியில் வரும் நல்ல விடயங்கள்... பொற்றுக்கொண்டு அறிவு பூர்வமான மற்றய மொழிகலாச்சாரக் கருத்துக்களை உள்வாங்குவது நல்லதுதான்....

<b>ஆங்கிலத்திலோ அல்லது வேறு மொழி ஆக்கங்கள் வைப்பவர்கள்... கட்டாயம் அது சம்பந்தமான பூரணவிளக்கம் உள்ளவர்களாய் இருப்பார்கள்.... அவர்கள் முழுதாக இல்லாவிட்டாலும் அந்த ஆக்கத்தின் சுருக்கத்தையாவது(விளக்கம்) தமிழில் தந்தால் வசதியாக இருக்கும்...</b>
(புண்ணியமாப் போகும்)

தலயோட நிலையே நமதும்..! முற்றாக தவிர்ப்பதிலும்...ஒரு ஆய்வுக்கட்டுரைக்கு abstract போல...ஒரு வேற்றுமொழி ஆக்கத்துக்கு ஒரு தமிழ் சுருக்கம் வழங்கலாம்..அதுக்கு மணித்தியாலங்கள் அவசியம் என்பதும் மொழிபெயர்க்க நேரம் இல்லை என்பது சுத்த விதண்டாவாதம்..! அப்படிச் சொல்லிச்சினம் என்றால் சம்பந்தப்பட்டவைக்கு தாங்கள் வைக்கும் வேற்றுமொழி ஆக்கத்தை முழுசா விளங்கிக்க முடியல்ல என்பதுதான் அர்த்தம்..! அவைக்கே விளங்கேல்ல அப்புறம் எதுக்கு என்றதும் நியாயமாப் போயிடும்.. சின்னப்பு சொன்னது போல..! ஆக்கத்தோடு தமிழில் ஒரு சுருக்கத்தைக் கொடுத்தால் விளங்காதவர்களும் விளங்கிக் கொள்ள அல்லது விளங்க முயற்சிக்க வசதியாக இருக்கும்..! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#9
யாழ்களத்தில் முடிந்தவரையில் தமிழை பயன்படுத்த வேண்டும் என்பதே நமது விருப்பம். அண்மையில் ஆங்கில ஆக்கங்களை களத்தில் இணைப்பது தொடர்பில் சில பிரச்சனைகளை உருவாகி அதனை தொடர்ந்து கள உறுப்பினரிடையே கசப்புணர்வுகள் உண்டாகின. அவற்றை தவிர்க்கவே கள விரிவாக்கத்தின் போது பிறமொழி ஆங்கங்களுக்கு என ஒரு தனிப்பிரிவு உருவாக்கப்பட்டது. முழுக்க முழுக்க பிற மொழிகளில் இணைக்கப்படும் ஆக்கங்கள் மட்டுறுத்தினர்களால் அடையாளம் காணப்படும் போது ஏனைய பிரிவுகளில் இருந்த இந்த பிரிவுக்கு முடிந்தவரையில் நகர்த்தப்படுகின்றது.

பிறமொழி ஆக்கங்களை இணைக்க விரும்புவோர் தல குறிப்பிட்டது போல அவற்றை தமிழில் மொழிபெயர்த்து இணைத்தால் சிறப்பாக இருக்கும். அவற்றை முழுமையாக மொழிபெயர்க்க முடியாதபோது குறைந்தபட்சம் அவற்றின் கருத்து சுருக்கத்தையாவது தமிழில் மொழிபெயர்த்து இணைக்க வேண்டும். கள உறுப்பினர் திருமகள் சண்டே டைம்ஸ் செய்திகளில் அவர் கவனத்தை ஈர்த்தவற்றை தமிழில் மொழிபெயர்த்து அதனுடன் தன்னுடைய கருத்தையும் சேர்த்து செய்திகள் பகுதியில் இணைத்திருந்தார். அது பலரையும் இலகுவாக சென்றடைந்தது என்பதை கவனிக்க வேண்டும். அது தவிர மருத்துவம் தொடர்பான இந்த கட்டுரையையும் உதாரணமாக கொள்ளாலாம்.

http://www.yarl.com/forum/viewtopic.php?t=7468

பிறமொழி ஆக்கங்களை மட்டுறுத்தினர்கள் தமிழில் மொழிபெயர்த்து இணைப்பது சாத்தியமற்ற ஒன்று, இனிமேல் புதிய ஆக்கங்களை தமிழ் தவிர்ந்து பிறமொழிகளில் இணைக்கும் போது குறைந்தபட்சம் சுருக்கத்தையாவது தமிழில் இணைப்போமா?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#10
மதன் உங்கள் கருத்துக்கள் பிரயோசனமானவையாக இருக்கின்றது. பிறமொழி ஆக்கங்களை இணைக்கம்போது தமிழில் விளக்கம் கொடுக்கப்படாவிட்டால் அந்த ஆக்கத்தை தடைசெய்தால் மீண்டும் முன்பு எழுந்ததுபோல் பிரச்சனைகள் உருவானகும்..இது விடயமாக நீங்களும் ஒரு தீர்க்கமான முடிவை எடுத்தால் வீண் சச்சரவுகளை தவிர்க்கலாம்
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply
#11
Quote:ஆங்கிலத்திலோ அல்லது வேறு மொழி ஆக்கங்கள் வைப்பவர்கள்... கட்டாயம் அது சம்பந்தமான பூரணவிளக்கம் உள்ளவர்களாய் இருப்பார்கள்.... அவர்கள் முழுதாக இல்லாவிட்டாலும் அந்த ஆக்கத்தின் சுருக்கத்தையாவது(விளக்கம்) தமிழில் தந்தால் வசதியாக இருக்கும்...

ம்ம் சகோதரம் சொன்னதுதான் ..எனது கருத்தும்.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply
#12
எல்லோரும் சொல்வது போல தமிழில் மொழிபெயர்ப்பையும் இடுவது தான்; சிறந்தது.

அப்பாடா... இன்னும் யாரும் சண்டையைத் தொடங்காதது சந்தோசமாக இருக்குது. :wink:
[size=14] ' '
Reply
#13
நல்லவிடயங்கள் பிறமொழியில் இருந்தாலும் அதனை இ;ங்கே இணைப்பது வரவேற்கத் தக்கதே. ஆனாலும் சிலவேளைகளில் அம்மொழியில் போதிய தேர்ச்சி இல்லாதோர் அதனை மொழி பெயர்த்தும் போடும் போது சிறு பிழையும் வேறு அர்த்தத்தைக் கொடுத்துவிடும். எனவே அந்தந்த மொழிகளில் நல்ல தேர்ச்சியுள்ளவர்கள் பிறமொழியாக்கம் பகுதியில் இருக்கும் ஆக்கங்களை வசதியானபோது மொழிப்பெயர்ப்பு செய்து போடலாம்.
Reply
#14
பிற மொழி ஆக்கங்கள் என்ற பகுதியில்தானே
பிற மொழி சம்பந்தமான விடயங்கள் இணைக்கப்படுகின்றன.

அது உண்மையிலேயே தேவையானதும் வரவேற்கத் தக்கதுமான ஒன்று.

தமிழில் ஒரு சில ஆய்வுகள் வருவதற்கு முன் வேறு மொழிகளில் வருவதுண்டு.
அவ்வகையான ஆக்கங்கள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு வருவதற்கு காலமாகலாம்.
அல்லது நமக்கு தெரியாமலே போகலாம்.

புலம் பெயர்ந்து வாழும் நாடுகளில் என்ன நடக்கிறது என்பதை புலம் பெயர் நாடுகளில் உள்ள அனைவருக்கும் தெரிவதில்லை.
காரணம் ஆங்கில மொழி பேசும் நாடுகளை விட ஏனைய மொழி பேசும் நாடுகளில் உள்ளவர்களுக்கு இது பாதிப்பை உண்டு பண்ணியதை நான் பார்த்திருக்கிறேன்.

உதாரணமாக நாம் வாழும் நாடுகளில் ஒரு புதிய சட்டம் அமுலுக்கு வந்தால் கூட நம்மவருக்கு தெரிவதில்லை.
அப்படித் தெரிய வந்தாலும் அவை சொல்வோர் ரசனைக்கும் விருப்பத்துக்கும் ஏற்ற விதத்தில் மாறுபட்டே மக்களை அடைகிறது.

இது ஆரோக்கியமானது அல்ல.

இது போல எவ்வளவோ சொல்லலாம்.

தேவையானவர்கள் பிரயோசனப்படட்டும்.
தேவையற்றோர் வேறு பக்கங்களை பாக்கலாம்தானே?

வேற்று மொழி ஆக்கங்களை இணைப்பவர்கள் முடிந்தால் அது பற்றிய மொழியாக்கத்தை தமிழில் தரலாம்.
அவர்களால் முடியாத போது வேறு எவராவது மொழி பெயர்த்து உதவலாம்.

[b]எனவே இப் பகுதி நிச்சயம் பலருக்கு பிரயோசனமாகவே இருக்கும்.
Reply
#15
Vasampu Wrote:நல்லவிடயங்கள் பிறமொழியில் இருந்தாலும் அதனை இ;ங்கே இணைப்பது வரவேற்கத் தக்கதே. ஆனாலும் சிலவேளைகளில் அம்மொழியில் போதிய தேர்ச்சி இல்லாதோர் அதனை மொழி பெயர்த்தும் போடும் போது சிறு பிழையும் வேறு அர்த்தத்தைக் கொடுத்துவிடும். எனவே அந்தந்த மொழிகளில் நல்ல தேர்ச்சியுள்ளவர்கள் பிறமொழியாக்கம் பகுதியில் இருக்கும் ஆக்கங்களை வசதியானபோது மொழிப்பெயர்ப்பு செய்து போடலாம்.
இதுவே எனது கருத்தும்
<b> .. .. !!</b>
Reply
#16
சின்னப்பு நீ கறுப்புகண்ணாடி போட்டு வரேக்கையே எனக்குத் தெரியும் ஏதோ விளையாட்டைத் தொடங்கப்போறாய் எண்டு உனக்கு விளங்காட்டி என்னத்துக்கு அதுக்கை போறாய் எங்களுக்குத்தான் நிறைய பகுதியிருக்கே அப்பிடி போடாட்டி எல்லாப்பக்கத்திலும் எல்லா வெட்டி ஒட்ட வெளிக்கிடுகினம் இப்ப தனிப்பகுதி எண்டபடியால் விரும்பினவை போகினம் விடன்
ஆனாலும் சில ஆங்கிலம் தெரிஞ்ச ஆட்கள் இப்பிடியான தலைப்புகளுக்கு தமிழ் விளக்கங்களைத் தந்தால் வாசித்து கொஞ்சமெண்டாலும் விளங்க வசதியாக இருக்கும் என்ன.......
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
#17
MUGATHTHAR Wrote:சின்னப்பு நீ கறுப்புகண்ணாடி போட்டு வரேக்கையே எனக்குத் தெரியும் ஏதோ விளையாட்டைத் தொடங்கப்போறாய் எண்டு உனக்கு விளங்காட்டி என்னத்துக்கு அதுக்கை போறாய் எங்களுக்குத்தான் நிறைய பகுதியிருக்கே அப்பிடி போடாட்டி எல்லாப்பக்கத்திலும் எல்லா வெட்டி ஒட்ட வெளிக்கிடுகினம் இப்ப தனிப்பகுதி எண்டபடியால் விரும்பினவை போகினம் விடன்
ஆனாலும் சில ஆங்கிலம் தெரிஞ்ச ஆட்கள் இப்பிடியான தலைப்புகளுக்கு தமிழ் விளக்கங்களைத் தந்தால் வாசித்து கொஞ்சமெண்டாலும் விளங்க வசதியாக இருக்கும் என்ன.......

முகத்தார் ஒரு ஆதங்கம் எழுதினானடாப்பு கள உறவுகள் என்ன சொல்லினம் எண்டு பாக்க ம்
பாப்பம் ....
யோவ் சாட்றீ எங்க உம்மட கருத்தைக்கானோமே
:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:
என்ன இன்னும் முறியேல்லையோ
:wink: :wink: :wink: :wink: :wink:
[b]
Reply
#18
தமிழ் மொழிபெயர்ப்புடன் அல்லது குறைந்தபட்சம் கருத்துசுருக்கத்துடன் பிறமொழி ஆக்கங்களை இணைப்பதன் மூலம் பயனுள்ள வகையில் பிறமொழி ஆக்கங்கள் தலைப்பை பயன்படுத்துவோம்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#19
பிற மொழி ஆக்கங்கள் தேவை அவற்றிலிருந்து பல நல்ல விடயங்களை நாம் எடுத்து கொள்ளலாம் ஆனால் அவை பற்றிய விரிவான ஒரு விழக்கத்தையும் அல்லது மொழி பெயர்ப்பை போட்டால் (சின்னா சொன்னது போல ) எல்லாரும் விழங்கி கொள்ளுவினம் எல்லாருக்கும் பரிந்தால் தானே அந்த ஆக்கத்தை இட்டதற்காகன முழு பிரயோசனமும் கிடைக்கும்
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
Reply
#20
அதானே...அப்பு அப்பு தான்..மப்பிலையும் தெளிவா இருப்பார்... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)