11-11-2005, 10:14 AM
திருமண போட்டோவில்''உம்'' என்று இருந்ததால், குடியுரிமை மனு தள்ளுபடி
திருமண போட்டோவில் ''உம்'' என்று மனைவி இருந்ததால், அவரது குடியுரிமை மனுவை அதிகாரிகள்தள்ளுபடிசெய்து விட்டனர்.இந்த சம்பவம் கனடாநாட்டில் நடந்துள்ளது.
இந்தியாவில்உள்ள பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர், ஆர்.சிங் (வயது 55). இவர் கனடாநாட்டில்ஆலை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவரது முதல் மனைவி இறந்து விட்டார். எனவே அவர் பஞ்சாப் வந்து ரஞ்சித் என்ற 36 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவர் கனடா சென்று, அவருக்கும் ரஞ்சித்துக்கும்நடந்த திருமண போட்டோவை இணைத்து ரஞ்சித்துக்கு குடியுரிமை கோரி அதிகாரிகளுக்கு மனு கொடுத்தார்.
அந்த மனுவை கனடாஅதிகாரிகள் பரிசீலித்து, '' இது உண்மையான திருமணமா? என்பது சந்தேகமாக இருக்கிறது. இதில்ரஞ்சித் '' உம்'' என்று இருக்கிறார். இந்த மனுவை ஏற்க முடியாது'' என்று அதிகாரிகள் கூறி தள்ளுபடி செய்து விட்டனர். இதைத்தொடர்ந்து, "திருமண நிகழ்ச்சியின்போது சுமார் 150 பேர்கூடி இருந்தனர். எனவே அவர்கள் மத்தியில் மணமகள் வெட்கத்துடன் 'உம்' என்று இருக்கிறார். இது உண்மையான திருமணம் தான்'' என்று சிங் விளக்கம்கொடுத்தார். ஆனால் இந்த விளக்கத்தை ஏற்க அதிகாரிகள் மறுத்து விட்டனர்.
Dailythanthi

<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>