Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
(Ranil Vs Mahindha)
#1
ஜனாதிபதித் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டது இலங்கையில் ஒவ்வொரு முக்கிய அரசியல் கட்சியும் தங்கள் தங்கள் கோரிக்கைள் அடங்கிய பத்திரத்தை முக்கிய ஜனாதிபதி வேட்பாளர்களிடமும் சமர்ப்பித்து தங்களின் பேரப்பேச்சுக்களைத் தொடங்கினார்கள்,

மகிந்த போட்ட கணக்கு என்னதான் தான் தலைகீழாக நின்றாலும் தமிழ் மக்களின் வாக்கு தனக்கு கிடைக்காது, முஸ்லீம் காங்கிரஸ் ஆரம்பத்திலிருந்தே ஜே.வி.பி, சுதந்திரக் கட்சி கூட்டிலிருந்து விலகியே வந்துள்ளது அதனால் அந்த வழியும் அடைபட்ட வழி, அடுத்து ஆறுமுகன் அண்ணனின் ஆதரவை மட்டும் தனக்கு வைத்துக்கொண்டு; ஒன்றும் புடுங்கி விட முடியாது.
ஒரே வழி ஜே.வி.பி, ஹெல உறுமயவுடனான கூட்டு.... சுருங்கச்சொன்னால் “இனவாதம்”

ஜே.வி.பி, ஹெல உறுமயவுடனான உடன்படிக்கை கைச்சாத்தான பின்னும் முஸ்லீம் காங்கிசின் கோரிக்கைகளைப் பார்த்தாh ;அவை ஜே.வி.பி, ஹெல உறுமய உடன்படிக்கைக்கு மிகப்பெரிய ஆப்பு வைப்பவையாக இருந்தன . அதிலும் முஸ்லீம் காங்கிரசின் தனி அலகு,தனித் தரப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் அபாரம் (ஆயுத சம பலத்தையும் 22 பாராளுமன்ற சீட்டையும் வைத்துக்கொண்டு கேட்டே கொடுக்க முன்வராத சிங்களம் வெறும் 15 சீட்டுக்கு இதை எல்லாம் கொடுப்பார்கள் என கேட்பது என்னவென்று சொல்ல) சமாதானம் ,பேச்சுவார்த்தை போன்றவற்றை வெறுக்கும் மகிந்த கூட்டுக்கு முற்றிலும் ஒத்து வராதவை.


அடுத்து ரணில் போட்ட கணகு சிறுபான்மைக் கட்சிகளின் ஒட்டுமொத்த ஆதரவும் தனக்குத்தான் என்பதாகவிருந்தது, ஆனால் இங்கு இரு வேறுபட்ட கட்சிகளின் கோரிக்கைகள் முரண்படும் பட்சத்தில் அவவிரண்டு கட்சிகளையும் சேர்த்து கொணடு ஒரு கட்சி ஓட்டுக் கேட்க முடியாது என்ற சிறிய அரசியல் அறிவு கூட ரணிலுக்கு இருக்கவில்லை அல்லது அவர் தமிழர்களை இ.வா என நினைத்திருக்க வேண்டும் இங்கு நான் குறிப்பிடுவது முஸ்லீட் காங்கிரஸினதும் தமிழ் மக்களினதும் நிலைப்பாட்டையும் பற்றி .

இங்கு ரணில் போட்ட கணக்கு எல்லாம் சரி ஒன்றைத் தவிர அது தமிழர் நிலைப்பாடு. இன்னும் வெளிப்படையாகச் சொல்வதானால் "மேதகு.வே.பிரபாகரனின்" நிலைப்பாடு
I Don't Know!
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)