Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
எங்கள் தேசியப் பூங்காவின் நெருப்புப் பூக்கள்
#1
எங்கள் தேசியப் பூங்காவின் நெருப்புப் பூக்கள்
நெருப்புப் பூக்களே
நீங்கள்
கைது செய்து வைத்த
கனாக்கள் தமிழீழம் தானே?

எங்களின் செல்லப்
பிள்ளைகளே
எங்களின் இதயம் தாங்கிய
கனாக்களின் வாரிசுகளே

நீங்கள் தமிழீழத்தைக்
கௌரவப்படுத்தும்
வித்தியாச முத்துக்கள்

உங்களுக்கான
மென்மை வேண்டித்தானே
காந்தள் மலர்கள்
காhத்திகை இருபத்தேழில்
உங்களை அலங்கரித்துப்
பார்க்கின்றன

கண்களிலே கசிவையும்
நெஞ்சினிலே ஈரத்தையும்
கைகளிலே சுடர்களையும்
ஏந்திவரும் - இந்த
மனித சமுத்திரம்
சூரிய விளக்காகச்
சுடர்விடும்
உங்களின் பாச உறவுகள்

எங்கள் தேசியப் பூங்காவின்
வீரம் பூத்த பூக்கள்
எங்கள் பாசறையில்
தீட்டி எடுத்த ஈட்டிகள்
எங்கள் தேசத்தின்
நெருப்புப் பூக்களுக்காக
உணர்ச்சிப் பிழம்பான
மௌன அழுகை

உங்களின் உயிர்த் தியாகம்
இந்த மண்ணுக்கு
அந்தச் சுதந்திர நதியை
இழுத்து வரும் - என்ற
அந்த நம்பிக்கையோடு
காத்திருக்கிறோம்

சாயாத சரித்திரப் புயல்களே
காற்று உள்ள வரை
எங்கள் மூச்சிலும் பேச்சிலும்
உங்களின் நேசம் இருக்கும்

Reply
#2
கீதா அழகான வரிகள்..
சாயாத சரித்திரப் புயல்களே
காற்று உள்ள வரை
எங்கள் மூச்சிலும் பேச்சிலும்
உங்களின் நேசம் இருக்கும்


வாழ்த்துக்கள்

Reply
#3
உங்கள் நன்றிக்கு என் நன்றி ரமா ஆமாம் எப்படி சுகமாக இருக்கிறிங்களா யாழ் களத்தில் காணேம் எங்கு போய் இருந்திங்கள்

Reply
#4
தேசியப்புூங்காவில் நெருப்புப் புூக்களாய் மலர்ந்த கவிதை அருமை. வாழ்த்துக்கள்....
Reply
#5
Quote:உங்களின் உயிர்த் தியாகம்
இந்த மண்ணுக்கு
அந்தச் சுதந்திர நதியை
இழுத்து வரும் - என்ற
அந்த நம்பிக்கையோடு
காத்திருக்கிறோம்

எங்கள் தேசியப்பூங்காவில் நெருப்புப்பூக்கள் என்ற கீதாவின் கவிதைக்கு வாழ்த்துக்கள். எழுதுங்கள் எழுதுங்கள் மேலும் மெருகுறும். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)