Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
உணர்வோடும் உயிரோடும் ஒன்றிவிட்ட பதுங்குகுழி வாழ்வு
#1
ஒரு வீட்டிற்கு அத்தியவசிய தேவைகளாக கிணறு, மலசலகூடம், சமயலறை போன்றவற்றோடு ஈழத்தமிழர் வாழ்வில் ஒன்றிப் போன இன்றுமொன்று பங்கர் எனப்படும் பதுங்குகுழியாம். யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் பல உயிரிழப்புக்களை தவிர்ப்பதற்கு எமக்கு அது தேவையானதாக ஒன்றாக இருந்தே வந்திருக்கின்றது.

90ம் ஆண்டு காலப்பகுதியில் தான் பதுங்குகுழி எனக்கு அறிமுகம் அல்லது நினைவில் நிற்கின்றது. கோட்டை சமர் நடைபெற்ற காலமாதலால், அந்த நேரத்தில் இராணுவம் பலாலியில் இருந்து தாக்குதல் நடத்துவான் என அஞ்சி, நாமும் எமது உறவுகளும் சாவகச்சேரிக்கு இடம்பெயர்ந்திருந்தோம். அப்போதைய தென்மராட்சிப் பொறுப்பாளராக இருந்து, புூநகரி சமரில் வீரச்சாவடைந்த குணா அண்ணாவின் உறவினர் ஒருவர் தான் எமக்கு வாழ்விடம் தந்திருந்தார். மொத்தம் 9 குடும்பங்கள் தங்கியிருந்தோம். கிட்டத்தட்ட 40 பேர் அளவில் வரும்.

அக்காலப்பகுதியில் சிறிலங்கா இராணுவத்திடம் பொம்மர் வகை விமானங்களே இருந்தன. தொடந்து பத்து, இருபது விமானங்கள் ஒரே வரிசையில் வந்து குண்டு போடும் பார்க்க அழகாக இருந்தாலும் ஈனத்தனமாக எம் உறவுகளின் உயிரை குடித்தது. அப்போதைய பங்கர்கள் ஒரு சிறிய அறையின் தோற்றத்தை கொண்டிருந்தன. பொதுவான நீள-அகலத்தை கொண்டமைக்கப்பட்டிருந்தன. மேலே பனைமரக்குற்றிகள் போடப்பட்டு மூடப்பட்டிருக்கும். வாசல் பகுதியில் நீர் உள்வராத வகையில் கூரை போடப்பட்டு மேயப்பட்டிருக்கும். எம்மோடு இருந்த 40 பேரும் தங்கியிருப்பதற்கு ஏற்றவாறான பதுங்குகுழி அது.

அங்கேயும் நம் கலையுணர்வு குன்றி விடவில்லை. சகோதரிமார்கள் கீழே மெழுகி, மேலே மட்டைகளை அழகாக அடித்து ஒரு அறைக்கு ஏற்ற புதுப்பொழிவை கொடுத்திருந்தனர். பிற்பட்ட காலப்பகுதியில் அங்கே சுவாமிப்படம் வைத்து, புூப்போட்டு வழிபட்டதும் உண்டு. உயி;ர்காத்த தெய்வமல்லவா. 2003 ஆண்டு சமாதான காலத்தில் யாழ் சென்றபோது அது சிதைவடைந்து மண்ணால் மூடப்பட்டு இருந்தாலும் பழைய நினைவுகள், சுகமாக தட்டிச் சென்றன.

பிற்பட்ட காலப்பகுதியில் பொம்மர் போய் கிபிர், சுப்பசோனிக் ஆட்சிக்கு வந்தன. எனவே பதுங்குகுழிகளின் கட்டுமானங்களிலும் மாற்றம் ஏற்பட்டன. கிபிர் போடும் குண்டுகள் மண்ணை ஆழமாகத் தோண்டியதால் சிலவேளைகளில் பங்கர் மீது விழுந்தால் அதனுள்ளவர்கள் யாவரும் பலியாவதுடன், சிலவேளைகளில் வாசல்புறம் மூடப்பட்டு, உள்ளுள் பலர் மாட்டுப்பட்டு காற்றோட்டம் இன்றி சாவார்கள் என்பதை கொண்டு, திறந்த பங்கர்கள் அமைக்கும் முறை மேற்கொள்ளப்பட்டது.

திறந்த பங்கர்கள் ஒரு மனிதனின் இரண்டு தோள்பட்டைகள் அளவு அகலத்தேயே கொண்ட ஒடுங்கிய வடிவமாகும். பெரும்பாலும் நிற்கக்கூடிய அளவு ஆழத்தில் தான் அமைக்கப்பட்டது. மேலும் ஒரே நேராக அமைக்கப்படுவது தவிர்க்கப்பட்டு, "ட" வடிவில் தான் அமைக்கப்படும். இதனால் அங்கே குண்டு விழுந்தாலும் இழப்புக்கள் குறைக்கப்படும் என்ற நப்பாசை தான்.

96ம் ஆண்டு இடப்பெயர்வில் நாம் கடைசி நேரம் தான் வன்னிக்கு போனோம். கடைசி வள்ளங்களில் நாம் போனதும் ஒன்று. அப்போது கிளாலிக்கடற்கரையில் சில பொழுதுகள் கழிக்கவேண்டிய சூழ்நிலை. அப்போதெல்லாம் து}ங்கும்போது காலை பங்கருக்கு மேல் வைத்து தான் து}ங்குவோம். ஆனையிறவிலோ, புூநகரியிலோ செல் அடிக்கும் சத்தம் மெதுவாக கேட்டாலே நித்திரையில் கூட தானாகவே பதுங்குகுழியில் இறங்கும் அளவுக்கு இசைவாக்கம் அடைந்திருந்தோம்.

பின் வன்னி வாழ்வில் முள்ளியவளை தான் தங்குமிடம். அங்கே முல்லைத்தீவில் இராணுவம் இருந்ததால் அவனின் தொல்லைகளுக்கு குறை இருக்கவில்லை. தினமும் மாலை 6.00- 7.00 மணிவரை செல் அடிப்பதால், அவ் நேரத்தை பதுங்குகுழி நேரமாக பதிந்து வைத்திருந்தோம். தினமும் 5.45 இற்கே அதற்குள்ளோ, அல்லது அதற்கு அருகாமையிலோ ஆஜர் ஆகிவிடுவோம். "செல்" அடிக்கும்போது அனுப்பும் பொது சத்தம் தெளிவாக எமக்கு கேட்டுவிடும் அளவு து}ரத்திலேயே வசித்தால் உடனே பதுங்குகுழிக்குள் பாய்ந்து விடுவோம்.

வன்னியில் பங்கர்கள் தொடராக தான் அமைக்கப்படும். ஒரு பக்கத்தில் குதித்தால் வேறு எங்காவது போய் எழூந்து கொள்ளமுடியும். மேலும் தண்ணீர்பாயும் வாய்க்காலும் இருந்தால் அதுவும் ஒரு பதுங்குகுழி மாதிரி அவசரத்துக்கு பயன்படுத்தப்பட்டன. படித்த முள்ளியவளை வித்தியானந்தாக் கல்லு}ரியி;ல் கூட தொடரான பதுங்குழி அமைப்புக்கள் செய்யப்பட்டிருந்தன. சிலவற்றின் வடிவம் பாடசாலைப் பெயரைக் குறிக்கும் வண்ணம். MVC என்று அமைக்கப்பட்டும் இருந்தன.

பின் முல்லைச்சமர் நேரம் நாம் கனகராயன்குளத்துக்கு இடம்பெயர்ந்திருந்தோம். அதன் நிறைவின் பின் திரும்பி வீடு வரும்போது நாம் வெட்டிவைத்த பதுங்குகுழிகள் மீதும் மணலாற்றில் இருந்து அடித்த செல்கள் விழுந்திருந்தன. நாங்கள் அங்கு இருந்திருப்பின் அது புதைகுழிகளாகத் தான் இருந்திருக்கும் என்பதில் ஜயமில்லை. மேலும் நாம் அவதானித்த விடயம் யாதெனில் இராணுவம் செல் அடிக்கும் அதிகூடிய வீச்சு என்பது எமது வீட்டை அண்டியதாகத் தான் இருக்கவேண்டும். ஏனென்றால் எமது வீட்டிற்கு நேர் ஒத்த திசைகளில் தான் நிறைய வெடித்திருந்தன. அப்பால் ஒன்றும் இல்லை. பதுங்குகுழி வாழ்வு என்பது 97ம் ஆண்டு கார்த்திகை மாதம் வன்னியை விட்டு நாம் வெளியேறியவுடன் நிறைவுக்கு வந்து விட்டாலும் நினைவுகளின் ஒன்றித்தே இருக்கின்றது
[size=14] ' '
Reply
#2
ஞாபம் வருது ஞாபகம் வருது.. நாங்களும் இப்படி பங்கருக்குள் காலம் போக்கியிருக்கிறம். சில வேளை பங்கருக்குள் பு}வரசுச்சருகுடன் தேள் இருந்து கடிச்ச நினைவுகளும் உண்டு. ஆமி எப்ப அடிப்பான் என்ற நேரங்கள் தெரிந்து சனம் அந்த நேரம் பங்கருக்கு கிட்டவாய் நிற்பது வழமை. ஆமி முன்னேறி தென்மராட்சிப்பக்கம் வாறான் என்று சனம் எல்லாம் ஒன்றாய் கோவில் வழிய இரவுகளில் தங்கிய சந்தர்ப்பமும் உண்டு. தனிய இருந்தா அம்பிட்ட படி சுடுவான் வெட்டுவான் என்ற பீதி தான். அதன் பிறகு வன்னியில் நாங்கள் பங்கர் வெட்டவில்லை. பெரிய பெரிய மரங்கள் அதிகம் இருந்தது நாங்கள் இருந்த இடத்தில் மரங்களில் மறைந்து கொண்டோம்.. செல்லடியல்ல கிபீர் தான் நமக்கு கரைச்சல் அதனால்மரம் பாதுகாத்துக்கொண்டது. ஆனால் இப்பவும் ஏதாவது விமானம் மேலால் சென்றால் மனப்பதட்டத்துடன் நிமிர்ந்து பார்ப்பதுண்டு பழைய நினைவுகள் மறந்து போகாமல்இருக்கிறது. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#3
ம் பழைய பங்கர் நினைவுகளை தட்டி எழுப்பி இருக்கின்றீர்கள்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#4
பழைய நினைவுகளை ஞாபகப்படுத்திவிட்டிர். 87ல் இந்திய அரசங்கம் உணவு பொட்டலங்களை வானத்தில் இருந்து போட , அந்த மீராஜ் விமானத்தின் சத்தத்துக்கு ,இலங்கை அரசாங்கம் புதிதாக வாங்கிய விமானத்தில் இருந்து குண்டு போடுகிறார்கள் என நினைத்து நானும் பதுங்கு குழிக்குள் சென்று விட்டேன். பிறகு சத்தம் குறைய வெளியில் வந்து பார்த்தால் விதி முழுக்கச்சனம் வேடிக்கை பார்க்கிறது.
,
,
Reply
#5
ஜயசுக்கிறு படை நடைவடிக்கைளில் இராணுவத்தின் டாங்கிகளிலிருந்தான பாதுகாப்பை புலிகளுக்கு தொடர்முறையில் அமைக்கப்பட்ட பதுங்குகுழிகள் தான் பாதுகாப்பையும், குறைந்த இழப்பையும் தந்தன என அறிந்திருக்கின்றேன்.
[size=14] ' '
Reply
#6
இந்தியன் ஆமி யாழ்ப்பாணத்தைப்பிடிக்க KKஸ் வீதியினால் செல் அடிச்சுக் கொண்டு முன்னேற எனது உறவினர் கொக்குவில் இருந்து ஒட, அவர்களது தாய் தகப்பன் மார் வருத்தம் காரணமாக ஒட முடியாமல் பதுங்குகுழியில் இருந்தினம். பிறகு உறவினர், திரும்பி வந்து பார்க்க அவையல் இறந்து கிடந்தினம்.அவசரம் அவசரமாக அவையாளை பதுங்கு குழியில் மூடி தாட்டுவிட்டு பாதுகாப்பாக வேறு இடத்துக்குப் போனார். 40 நாளுக்குப்பிறகு தான் திரும்பி அவர் தனது வீட்டுக்கு வர முடிந்தது
,
,
Reply
#7
90ம் ஆண்டு பலாலியில் இருந்து இலங்கை ஆமி செல் அடித்துக் கொண்டு வர குப்பிளான் மக்கள் இடம் பெயர்ந்தார்கள். அப்பொழுது, ஒருவர் தனது வயதான நோய் வாய்ப்பட்ட தகப்பனை பதுங்குகுழியில் விட்டு ஒடினார். இன்று வரை அவர் தனது வீட்டுக்குப் போக முடுயவில்லை. உயர் பாதுகாப்பு வலயத்தினால், குப்பிளானின் ஒரு பகுதிக்கு(குரும்பசிட்டி பக்கம்) இன்னும் ஒருவரும் செல்லமுடியாது
,
,
Reply
#8
பதுங்குகுழி எனும்போது நீர்வேலியில் விடுதலைப்புலிகளின் நிலக்கீழ் வைத்தியசாலை இருந்ததாக பலரால் சொல்லப்படுவதுண்டு. அதற்கு பல தடவை குண்டு போட சிங்கள ஆமி முயற்சி செய்தபோதும் ஒரு போதும் கூட அவை அங்கே விழவில்லை. அருகிலுள்ள இடங்களில் தான் விழுந்திருக்கின்றது.

யாழ் இடப்பெயர்வில் அது குண்டு வைத்து தகர்க்கப்பட்டதாக பலர் சொன்னார்கள். உண்மை பொய் தெரியவில்லை.
[size=14] ' '
Reply
#9
உங்கள் ஆக்கம் , பதுங்குகுழியோடான வாழ்வை அத்தோடு தொடர்புடைய பல சம்பவங்களை மீள அசை போட வைத்தது. எனக்கும் அவைபற்றிபகிர்ந்துகொள்ள ஆசைதான். உடனே முடியவில்லை. நேரம் வரும்போது எழுதி இணைக்கிறேன்.
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#10
தூயவன் நீங்கள் சொல்லும் நிலக் கீழ் வைத்தியசாலை பேராசிரியர் துரைராசாவால் வடிவமைக்கப்பட்டது என்று கேள்விப்பட்டேன்.அது பல அடுக்குகளைக் கொண்டதாக ,அறுவைச் சிகிச்சைக் கூடம் முதலிய வசதிகளைக் கொண்டதாக இருந்தது.அதை இலங்கை இராணுவம் குண்டு வைத்து அழித்தது,அதனை ரூபவாகினியிலும் காட்டி உள்ளனர்.
Reply
#11
Aravinthan Wrote:90ம் ஆண்டு பலாலியில் இருந்து இலங்கை ஆமி செல் அடித்துக் கொண்டு வர குப்பிளான் மக்கள் இடம் பெயர்ந்தார்கள். அப்பொழுது, ஒருவர் தனது வயதான நோய் வாய்ப்பட்ட தகப்பனை பதுங்குகுழியில் விட்டு ஒடினார். இன்று வரை அவர் தனது வீட்டுக்குப் போக முடுயவில்லை. உயர் பாதுகாப்பு வலயத்தினால், குப்பிளானின் ஒரு பகுதிக்கு(குரும்பசிட்டி பக்கம்) இன்னும் ஒருவரும் செல்லமுடியாது

அப்போ அவரது அப்பாவை இன்னும் காணவில்லையா?
அவருக்கு என்னவாயிற்று?
Reply
#12
என்ன தூயவன் இப்ப என்னத்துக்கு பதுங்கு குழியைப்பற்றி தொடங்கினனீர் சனத்துக்கு திரும்பவும் வெட்டவேணும் எண்டு சாடையா சொல்லுறமாதிரிக் கிடக்கு எங்கடை ஆட்கள் இனிமேல் தேவைவராது எண்டு எல்லாத்தையும் மூடி அதுக்குமேலை மரங்களையும் நட்டு இருக்கினம் இனி திரும்பவும் வெட்டுறமெண்டால்..............????????ஃ
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
#13
இது தான் எங்கள் சனத்தின் பலவீனம்? ஆர் சொன்னது இப்ப தீர்வெல்லாம் வந்திட்டு என்று. :evil: :twisted:
நான் இதை எழுதியது பழைய எங்கள் படங்களை புரட்டிப்பார்க்கும் பொது பதுங்குகுழி ஆழமாக கண்ணில் பட்டது . அது தான் எழுதிப் போட்டன். :wink:
[size=14] ' '
Reply
#14
பதுங்குழியை பற்றி எனக்குபெரிதாக ஞாபகம் இல்லை. ஆனால் எனது நண்பியின் அம்மா அம்மாம்மா அக்கா தங்கை எல்லோரையும் இந்தியன் ஆமி பதுங்குழிக்குள் வைத்து தான் சுட்டார்களாம். இப்போதும் அவர்களின் இதயத்தில் அவர்களின் மாமரத்திற்கு பக்கத்தில் அமைத்திருந்த பதுங்குழி அழியாத குழியாய் இருக்கின்றது

Reply
#15
சில பதுங்கு குழியில் பாம்புகள், பூச்சிகளின் கடியும் கிடைக்கும். அதனால் 90 கார்த்திகையில், பதுங்குகுழியை ஆச்சி சாணகத்தினால் மெழுகி விட்டிருந்தா. உந்த பலாலி ஆமி செல் அடிக்க முக்கைப்பொத்திக்கொண்டு 3,4 மணித்தியாலம் பதிங்குகுழியில் இருந்தோம்
! ?
'' .. ?
! ?.
Reply
#16
vasisutha Wrote:
Aravinthan Wrote:90ம் ஆண்டு பலாலியில் இருந்து இலங்கை ஆமி செல் அடித்துக் கொண்டு வர குப்பிளான் மக்கள் இடம் பெயர்ந்தார்கள். அப்பொழுது, ஒருவர் தனது வயதான நோய் வாய்ப்பட்ட தகப்பனை பதுங்குகுழியில் விட்டு ஒடினார். இன்று வரை அவர் தனது வீட்டுக்குப் போக முடுயவில்லை. உயர் பாதுகாப்பு வலயத்தினால், குப்பிளானின் ஒரு பகுதிக்கு(குரும்பசிட்டி பக்கம்) இன்னும் ஒருவரும் செல்லமுடியாது

அப்போ அவரது அப்பாவை இன்னும் காணவில்லையா?
அவருக்கு என்னவாயிற்று?



இன்று வரை குரும்பசிட்டிக்கு அருகில் இருக்கும் குப்பிளான் பகுதிக்கு ஒருவரும் செல்ல முடியாது. அவர் இன்னும் தனது தகப்பனைக் காணவில்லை. குப்பிளானின் மற்றைய பகுதியில் இன்னும் பலர் இருக்கிறார்கள்.கற்கரைப்பிள்ளையார் கோவில் வரை மக்கள் வாழ்கிறார்கள். கோவிலில் இப்பொழுதும் பூசைகள்,திருவிழாக்கள் நடைபெறுகின்றன. கோவிலுக்கு அப்பால் சில இடங்கள் செல்லலாம். ஆனால் மக்கள் தங்க இராணுவம் அனுமதிப்பதில்லை. சிலர் ஊறங்குனை பகுதிவரை சென்று வருகிறார்கள். குப்பிளானில் இராணுவக் காவலரண்கள் ஒன்றும் இல்லை. ஆனால் பலாலியில் இருந்து இடைக்கிட ஆமி வந்து போகும். இப்பகுதியில் இருக்கும் வீடுகள் பாழடைந்த நிலையில் உள்ளது. சில இடங்களில் வீடுகள் புற்களினால் முற்றாக மூடப்பட்ட நிலையில் உள்ளது.
,
,
Reply
#17
Kanthappu Wrote:சில பதுங்கு குழியில் பாம்புகள், பூச்சிகளின் கடியும் கிடைக்கும். அதனால் 90 கார்த்திகையில், பதுங்குகுழியை ஆச்சி சாணகத்தினால் மெழுகி விட்டிருந்தா. உந்த பலாலி ஆமி செல் அடிக்க முக்கைப்பொத்திக்கொண்டு 3,4 மணித்தியாலம் பதிங்குகுழியில் இருந்தோம்

ஞாபகம் வைச்சுப் பாரும். அண்டைக்கு நீர் குளிக்காமல் இருந்திருப்பியள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[size=14] ' '
Reply
#18
தூயவன் Wrote:ஞாபகம் வைச்சுப் பாரும். அண்டைக்கு நீர் குளிக்காமல் இருந்திருப்பியள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

தம்பி உமக்குப்பகிடியாக இருக்குது. நான் பட்ட கஸ்டம் உந்தக்கடவுளுக்குத்தான் தெரியும்.

இந்தியன் ஆமி யாழ்ப்பாணத்தினைப்பிடிக்கப் கே.கே.எஸ் விதியினால் போனபோது சில பொதுமக்களினைச் சுட்டுப் பதுங்குகுழியில் போட்டு விட்டுச்சென்றார்கள்.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)