Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
"இருந்தால்" இல்லாமல் ஆனா போது
#1
[size=18]"இருந்தால்" இல்லாமல் ஆன கதை

[size=13]"பெத்தவள் மேல் கொஞ்சமாவது அன்பு இருந்தால், உடனே புறப்பட்டு வா.." - அம்மாவின் கடிதம்.

இந்த கல்யாணத்திற்கு போனால் தான் எனக்கு அம்மாவின் மேல் இருக்கும் அன்பு வெளிவருமா?அல்லது நிரூபணமாகுமா?

அம்மா எப்பொழுதும் இப்படி தான். நினைவு தெரிந்த நாளில் இருந்து பார்த்து இருக்கிறேனே.

சரி வீட்டிற்கு போயும் கனநாட்கள்...அல்ல வருடங்கள் ஆகிவிட்டது. 5 வருடங்களாக அதிகமாக வேலைகள் இருந்ததால் , எதற்கும் இடமில்லாமலே இருந்தது.

இப்பொழுதுதான் கொஞ்சம் பரவாயில்லை. கல்யாணமும் வேற்று மனிதருக்கு அல்லவே. என் கூட பிறந்த சகோதரிக்கு தானே.சரி போகலாம் என நினைத்து வந்தது தவறோ என தோன்றியது.

நினைவில் ஆழ்ந்திருந்த போது பக்கத்தில் படுத்திருந்த குழந்தை சிணுங்கியது. 2 வயது தான் இருக்கும், என் மூத்த சகோதரியின் மகன். அழகான சிசு. ரவியுடன் எனக்கும் திருமணமாகி இருந்தால்...அது தான் எதுவுமே இல்லாமல் போய்விட்டதே!

குழந்தையை காலில் போட்டு ஆட்டி தூங்க வைக்க முயற்சி செய்த போது சற்று தொலைவில் என் மூத்த சகோதரியும் அவள் மாமியாரும்..

"இஞ்ச ராஜி உன்ட தங்கச்சிக்கு என்ன தெரியும் என்று குழந்தையை குடுத்திருக்காய்? துவக்கு பிடிக்கிற கையால என்ட பேரனை தொடுறது எனக்கு பிடிக்கலை. சொல்லிட்டேன்"

மாமியாரின் பேச்சுக்கு எதிர் பேச்சு பேசவும் முடியாமல், என்னிடம் எப்படி சொல்லி குழந்தையை வாங்குவது எனவும் தெரியாமல் அக்கா ராஜி தயங்க, குழந்தையை அவளிடம் ஒப்படைத்து விட்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்தேன்.

வந்ததில் இருந்து இப்படிதான். தாய் நாட்டை காக்க ஒருவராவது போக வேண்டும் என நினைத்து 5 வருடங்கள் முன்னர் எனை நாட்டிற்காய் அர்ப்பணித்தேன். உறவும் , அயலும் பேசும் பேச்சு எதற்கு என ஒதுங்கியதன் காரணமே 5 வருடம் பெற்ற தாயை பார்க்காமல் ஓர் வனவாசம்.

என்னடா இது ஊர் பேச்சுக்கு இவ்வளவு மதிப்பா என நினைக்கலாம்!! நான் என்றால் சரி. ஆனால் என்னை பெற்றவள், கூட பிறந்தவர்கள்.... அவர்கள் இன்னும் மாறவில்லையே. எனக்காக மாறச் சொல்லி கேட்பதிலும் நியாயம் இல்லையே.

போராளியானால் ஒரு பெண், பெண் இல்லையா? வெட்டிய தலை முடிக்கு ஒரு கதை, குடும்பம் பற்றி என்ன தெரியும் என ஒரு கதை, குழந்தை பற்றி தெரியுமா என ஒரு கதை...அப்பப்பா எதற்கடா இங்கு வந்தோம் என சலிப்பாய் இருக்கிறது.

சிறிது நேரம் எங்காவது போய்வரலாம் என நினைத்த போது. உடனே மனதிற்கு வந்த இடம் வீட்டிற்கு சற்று தொலைவில் இருந்த கடற்கரை தான்.

உடனேயே மனதும் துள்ளி குதித்தது. இதோ இந்த இடத்தில் தானே சிறு வயதில் விளையாடினேன், இதோ இந்த இடத்தில் தானே ரவியுடன் பேசி இருக்கிறேன்... ரவி....என்னையும் மீறி அகத்திலும், முகத்திலும் ஓர் இனிய உணர்வு.

8 வருடங்களுக்கு முன்னர் ஒரே பாடசாலையில், ஒரே வகுப்பில் கல்வி பயின்ற காலம். தூரத்து உறவினன் கூட..நட்பாய் இருந்த எங்கள் அன்பு பின்னர் ஓர் முதிர்ச்சி அடைந்த காலம் அது.

ரவியின் அண்ணன் வெளிநாடு செல்ல என, கொழும்பு சென்றிருந்தார். கொழும்பில் விடுதியில் தங்கி இருந்தவரை சிறீலங்கா காவல் துறையினர் ஓர் இரவு சோதனை என்ற பெயரில் கூட்டி சென்றது தான் தெரியும்.

அதன் பின்னர் சிறிது காலம் தகவல் இல்லை, பின்னர் வந்த தகவலின் படி அவர் தவறியிருந்தார். உடலை கூட காணாமல் ரவியின் குடும்பம் அழுது உடைந்தது இப்பொழுதும் கண் முன்னே.

இது நடந்த சில நாளில் இதே கடற்கரை மணலில், "நாட்டிக்காக போராட நான் போகிறேன்" என ரவி கூற, அவன் முடிவில் இருந்த நியாயத்தை புரிந்து கொண்டதால் விடைகொடுத்தேன்.

அன்று இரவு தூங்க நினைத்தும் முடியவில்லை. சின்ன பிள்ளைகளாக அக்கா, தங்கை, நான் இருந்த காலம்,கடைக்கு சென்ற அப்பாவை ஆமிக்காரன் வெட்டி கொன்றுவிட்டான் என செய்தி வந்தது.

எங்கள் அனைவைரையும் நெஞ்சில் சுமந்தவர் நெஞ்சை கூறுபோட்டு இருந்தார்கள்.

அன்று நான் சிறு பிள்ளை ஆனால் இன்று?? சிந்தித்தேன், முடிவெடுத்தேன். நாட்டை காக்க வீட்டிற்கு ஒரு பிள்ளை.

இடையே ரவியை பார்த்ததுண்டு. 3 வருடங்களின் பின்னர் கூட இருந்த ஒரு போராளி "அக்கா ரவி அண்ணா வீரமரணமாம்" என செய்தி கூற, கண்ணீருக்கு பதில் பெருமை தான் மேலோங்கி நின்றது.

3 வருடங்களில் நானும் சற்று முதிர்ச்சி அடைந்து இருந்தேனே.

"அக்கா மாலை எடுக்க போகணும். ஒருக்கா எடுத்துகொண்டு வாறிங்களா" என கேட்டபடி தங்கை வர நினைவுகளுக்கு விடை கொடுத்தேன்.

அடுத்த நாள் தங்கை திருமணம் இனிதே நிறைவேற, அமாவிடம் விடை பெற்றுகொண்டேன்.

7 நாட்களின் பின்னர் பேஸுக்கு திரும்பும் போதே, கடமைகள் ஒவ்வொன்றாய் மனதிற்குள் அணிவகுக்க தொடங்கின.

தூரத்தில் என்னை கண்டதும் "அக்கா வந்திடா" என ஓடி வந்த சக போரளிகளை பார்த்த போது.. "ரவியை மணந்திருந்தால், முடி வெட்டாமல் இருந்திருந்தால், ஓர் குழந்தைக்கு தாயாகி இருந்தால்..."அத்தனை "இருந்தால்" களும் பறந்தோடிவிட்டிருந்தன.

எதற்காக நான் பிறந்தேன், எதற்காக நான் வாழ்கிறேன்..மனது நிறைவாய் மலர என் வீட்டிற்குள் காலடி எடுத்துவைக்கிறேன்....

தூயா
08/12/05


[b][size=15]
..


Reply
#2
பிழைகளை சுட்டி காட்டி, திருத்தவும். நன்றி

தூயா
[b][size=15]
..


Reply
#3
தூயா உங்கள் கதை நன்றாக இருக்கிறது.

எழுத்துப்பிழைகளைக் கொஞ்சம் கவனித்து எழுதுங்கள்
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
Reply
#4
நன்றி அருவி.
தட்டச்சு செய்யும் போது எப்படி கவனமா செய்தாலும் எழுத்து பிழை வந்தே தீருகிறது எனக்கு <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> அடுத்த முறை இன்னும் கவனமா எழுதுறேன்.
[b][size=15]
..


Reply
#5
ம் ஒரு பெண் போராளியின் வாழ்வை எழுதியிருக்கிறியள். நல்லாய் தான் இருக்கு. ஆனால் பெண் போராளிகளுக்கு இப்படி எல்லாம் இடர்களா..?? நான் கண்டதில்லை. நல்ல மரியாதையாத்தான் நடத்திறவையைக்கண்டிருக்கிறன். பகிர்வுக்கு நன்றி. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#6
ஒரு பெண் போராளியின் மனதை பகிர்ந்து கொண்டிருக்கின்றீர்கள், நன்றி தூயா. உங்களிடமிருந்து தொடர்ந்து பதிவுகளை எதிர்பார்க்கின்றேன்.

எனது கண்ணில் பட்ட எழுத்து பிழைகளை சரி செய்துள்ளேன்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#7
துயா உங்கள் கதையில் சொன்னது போல், போராளியான பெண்களை பற்றிய ஊராரின் கருத்துக்களை நான் நேரில் கேட்டுள்ளேன்.ஆரம்ப காலங்களில் இவ்வாறு பேசியவர்கள் தான். ஆனால் தற்போது அந்த நிலை இல்லை என நினைக்கிறேன்.
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#8
தூயா கதை நல்லாயிருக்கு. பல பழைய பெண் போராளிகள் இப்போது திருமணம் செய்து வாழ்க்கையில் சந்தோசமாய் இருப்பதை கண்டு இருக்கின்றேன். ஆனாலும் ஒரு சில பெண் போராளிகளுக்கு இப்படியான சங்கடங்கள் நிகழ்வதையும் அறிந்திருக்கின்றேன். ஓரு பெண் போராளியின் உணர்வை மிகவும் அருமையாக உணர்த்தி உள்ளீர்கள்.. நன்றி .. தொடருங்கள்

Reply
#9
பெண் போராளியின் கதை மிகவும் மனதை நெருட வைத்து விட்டது தூயா . . .அவர்களும் மனிதர்கள்தானே எவ்வளவற்றை தியாகம் செய்து போகிறார்கள் யாருக்காக.............????? எமது விடிவுக்குத்தானே
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
#10
நன்றாக இருக்கிறது.நீங்கள் சொன்னது போல் எழுதும் போது பிழைவரும்நானும் அப்படி தான் நான் கதை எழுதுவதே கணனிக்குமுன்பு அமர்ந்தபின்பு தான் கதை பற்றி யோசிக்கவே ஆரம்பிப்பேன் எல்லோசொல்வது போல் உண்மை கதையல்ல நான் எழுதுவது கற்பனை தான் அது போல் உங்கள் கதையும் தொடருங்கள் வாழ்த்துக்கள்
inthirajith
Reply
#11
தமிழினி

Quote:ம் ஒரு பெண் போராளியின் வாழ்வை எழுதியிருக்கிறியள். நல்லாய் தான் இருக்கு. ஆனால் பெண் போராளிகளுக்கு இப்படி எல்லாம் இடர்களா..?? நான் கண்டதில்லை. நல்ல மரியாதையாத்தான் நடத்திறவையைக்கண்டிருக்கிறன். பகிர்வுக்கு நன்றி.

நன்றி அக்கி. நீங்கள் சொல்வது உண்மை தான். போராளிகளை அனைவரும் மரியாதையாக தான் நடத்துகிறார்கள். ஆனால் சில போராளிகளின் குடும்பங்களில் ,ஒரு பெண்ணிடம் இயற்கையிலே இருக்க கூடிய குணங்களை ஒரு போராளியான பின் இருக்காது என நினைக்கிறார்கள். இதை நான் சில இடங்களில் பார்த்து இருக்கிறேன்.

அத்துடன் ஆரம்ப காலத்தில் அனைவரும் எம்மவரை மரியாதையாக நடத்தியதாக சரித்திரம் இல்லையே அக்கி


மதன்

Quote:ஒரு பெண் போராளியின் மனதை பகிர்ந்து கொண்டிருக்கின்றீர்கள், நன்றி தூயா. உங்களிடமிருந்து தொடர்ந்து பதிவுகளை எதிர்பார்க்கின்றேன்.

எனது கண்ணில் பட்ட எழுத்து பிழைகளை சரி செய்துள்ளேன்

எழுத்து பிழைகளை சரி செய்ததிற்கு மிக்க நன்றி மதண்ணா. அரிச்சுவடி படிக்கும் என்னை ஓர் பெரும் எழுத்தாளர் போல பாராட்டுவதுடன் உக்குவிக்கவும் செய்கிறீர்கள். மிக்க நன்றி அண்ணா.


குளகாட்டான்

Quote:துயா உங்கள் கதையில் சொன்னது போல், போராளியான பெண்களை பற்றிய ஊராரின் கருத்துக்களை நான் நேரில் கேட்டுள்ளேன்.ஆரம்ப காலங்களில் இவ்வாறு பேசியவர்கள் தான். ஆனால் தற்போது அந்த நிலை இல்லை என நினைக்கிறேன்.

வணக்கம் குளம்ஸ் அண்ணா, ஓம் ஆரம்பத்தில் அதிகமானோர் இப்படி தான் இருந்தார்கள். எமைக்காப்பவர்களை ஏளனம் செய்தவர்கள் எத்தனை பேர்?!!! மனித நேயம் அற்றவர்கள், நன்றி உணர்ச்சி இல்லாதவர்கள்..!!

உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி அண்ணா.


ரமா

Quote:தூயா கதை நல்லாயிருக்கு. பல பழைய பெண் போராளிகள் இப்போது திருமணம் செய்து வாழ்க்கையில் சந்தோசமாய் இருப்பதை கண்டு இருக்கின்றேன். ஆனாலும் ஒரு சில பெண் போராளிகளுக்கு இப்படியான சங்கடங்கள் நிகழ்வதையும் அறிந்திருக்கின்றேன். ஓரு பெண் போராளியின் உணர்வை மிகவும் அருமையாக உணர்த்தி உள்ளீர்கள்.. நன்றி .. தொடருங்கள்

நன்றி ரமா. எமக்காக போராடுபவர்களுக்கு எத்தனை இன்னல்கள். அவற்றை எழுத வேண்டும் என எனக்கு ஆசை...அதன் ஆரம்பம் தான் இக்கதை. பதிலுக்கு மிக்க நன்றி.



முகம்ஸ்

Quote:பெண் போராளியின் கதை மிகவும் மனதை நெருட வைத்து விட்டது தூயா . . .அவர்களும் மனிதர்கள்தானே எவ்வளவற்றை தியாகம் செய்து போகிறார்கள் யாருக்காக.............????? எமது விடிவுக்குத்தானே

அது சரி தான் முகம்ஸ் ஆனால் எத்தனை பேர் அதை உணர்ந்திருக்கிறார்கள். பிழைகளையும் சுட்டி காட்டுங்கள். நன்றி.


இந்திரஜித்

Quote:நன்றாக இருக்கிறது.நீங்கள் சொன்னது போல் எழுதும் போது பிழைவரும்நானும் அப்படி தான் நான் கதை எழுதுவதே கணனிக்குமுன்பு அமர்ந்தபின்பு தான் கதை பற்றி யோசிக்கவே ஆரம்பிப்பேன் எல்லோசொல்வது போல் உண்மை கதையல்ல நான் எழுதுவது கற்பனை தான் அது போல் உங்கள் கதையும் தொடருங்கள் வாழ்த்துக்கள்

சரியாக சொன்னீர்கள். ஏதாவது ஒரு விடயம் மனதை பாதித்தால் உடனே கணனிக்கு முன் இருந்து எழுத ஆரம்பித்துவிடுவேன். கட கட என்று எழுதி போடுவன்...பிறகு தான் எழுத்து பிழைகளோட மாரடிக்கிறது...

என்னை போலவே இன்னொருவர் என அறியும் போது மிக்க மகிழ்ச்சி <!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->

நன்றி
[b][size=15]
..


Reply
#12
Quote:நன்றி அக்கி. நீங்கள் சொல்வது உண்மை தான். போராளிகளை அனைவரும் மரியாதையாக தான் நடத்துகிறார்கள். ஆனால் சில போராளிகளின் குடும்பங்களில் ,ஒரு பெண்ணிடம் இயற்கையிலே இருக்க கூடிய குணங்களை ஒரு போராளியான பின் இருக்காது என நினைக்கிறார்கள். இதை நான் சில இடங்களில் பார்த்து இருக்கிறேன்.

அத்துடன் ஆரம்ப காலத்தில் அனைவரும் எம்மவரை மரியாதையாக நடத்தியதாக சரித்திரம் இல்லையே அக்கி

அப்படி என்றியள் ஆரம்பத்தில் நாங்கள் மழலைகளா.. அப்ப சரியாக விபரம் இல்லை. நன்றி தூயா. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#13
கதை நல்லா எழுதுறீங்கள் தூயா... தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்..
ம்ம் இப்படியெல்லாம் நடந்திருக்கா .. அவர்களுடைய ஆசை கனவுகள் எல்லாத்தையும் விட்டுட்டு போராளியா போனவர்களை இப்படியெல்லாம் பேச எப்படி மனம் வரும் , ம்ம் இப்படி ஒரு கதையை இப்பத்தான் வாசிக்குறன் ... நன்றாக இருக்கு ..தொடருங்கள்.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply
#14
தூய்ஸ் கதை எல்லாம் எழுதிறீங்கள்.. வாழ்த்துக்கள்.
நன்றாக இருக்கிறது.. தொடர்ந்து எழுதுங்கள்.. 8)
Reply
#15
KULAKADDAN Wrote:துயா உங்கள் கதையில் சொன்னது போல், போராளியான பெண்களை பற்றிய ஊராரின் கருத்துக்களை நான் நேரில் கேட்டுள்ளேன்.ஆரம்ப காலங்களில் இவ்வாறு பேசியவர்கள் தான். ஆனால் தற்போது அந்த நிலை இல்லை என நினைக்கிறேன்.

முன்பை விட குறைவு என்றாலும் பெண் போராளிகளுக்கு சில இடர்பாடுகள் இல்லாமல் இல்லை. பெண்கள் போராளிகளானவுடன் அவர்கள் பெண்மை தன்மை இழந்துவிட்டதாக அல்லது குறைவடைந்துவிட்டதாக நினைப்பவர்கள் இருக்கின்றார்கள். ஒரு ஆண் போராளி தனிப்பட்ட வாழ்க்கைக்கு திரும்பும் போது இலகுவாக திருமணம் செய்து கொள்ள முடிகின்றது, ஆனால் அதுவே ஒரு பெண் போராளி தனிப்பட்ட வாழ்க்கைக்கு திரும்பி திருமணம் செய்ய முற்படும் போது பல இடர்பாடுகள் உண்டு.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#16
வாழ்த்துக்கு மிக்க நன்றி அனிதா , வசிண்ணா.

மதன் அண்ணா சொல்வது உண்மையில் பல பெண் போராளிகளுக்கு நடந்திருக்கின்றது.
[b][size=15]
..


Reply
#17
தூயா நல்ல கதை.விண்ணானம் கதைக்கிறதுக்கெண்டே அக்கான்ர மாமி போல் ஆக்கள் இருக்கினம்.சில இடங்களில இயக்க அக்காவைக்கு நல்ல மரியாதைதான.சில இடங்களில் சில மனிதர்கள் என்ன செய்ய.
..

<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Reply
#18
Snegethy Wrote:தூயா நல்ல கதை.விண்ணானம் கதைக்கிறதுக்கெண்டே அக்கான்ர மாமி போல் ஆக்கள் இருக்கினம்.சில இடங்களில இயக்க அக்காவைக்கு நல்ல மரியாதைதான.சில இடங்களில் சில மனிதர்கள் என்ன செய்ய.


நன்றி சகோதரி. சரியா சொன்னிங்க சில சனத்துக்கு வேற வேலையே இல்லை.. :twisted: :twisted: :twisted:
[b][size=15]
..


Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)