Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அன்பான வேண்டுகோள்
#1
இப்போது யாழ்பாணத்தில் கெல்மெட் போட்டுக் கொண்டு மோட்டார் வண்டி ஓடுவதை தடுப்பதற்கான முயற்சியை மேற்கொண்டு வருவதாக அறியக்கிடக்கின்றது. கெல்மெட் போட்ட நபர்களே தாக்குதல் நடத்துவதால் அப்படி ஒரு ஏற்பாடு என்றும் சொல்லப்படுகின்றது.

இதில் ஒரு விடயம் என்னவென்றால் கெல்மெட் என்பதே விபத்தின் போது பாதுகாப்பு வேண்டித் தான் அணியப்படுகின்றது.
இராணுவத்திற்கான பாதுகாப்பு தேவை என்பதற்காக யாழ்பாணத்தில் மட்டும் தடை செய்யவேண்டி இருப்பது ஏன்? கொழும்பில் கூட இராணுவ புலனாய்வு அதிகாரி முத்தலிப் கொல்லப்பட காரணமானவர் கூட கெல்மெட் அணிந்த நபர் தான். அதற்காக கொழும்பில் தடையா செய்து விட்டனர்.?

கெல்மெட் அணிந்து ஓட வேண்டும் என்பது சட்டமாக இருக்கின்றது என நினைக்கின்றேன். எனவே அவ்வாறான தடையை யாழ்பாணத்தில் மட்டும் கொண்டு வந்தால், அங்குள்ள சட்டம் சார்பான ஆவலர்கள் அதற்கெதிராக வழக்கு தொடுக்குமாறு வேண்டுகின்றோம்.
[size=14] ' '
Reply
#2
கெல்மட் அணிவதை யாழ்பாணத்தில் மட்டும் தடை செய்தால் அது சட்டவிரோதம் தான் ஆனால் அதனை சட்ட ரீதியாக எதிர்கொள்ள முயலுமா தெரியவில்லை. அப்படி பார்த்தால் இராணுவம் குடாநாட்டில் பல மக்கள் குடியிருப்புக்களில் பொது இடங்களில் நிலைகொண்டுள்ளது. அவை சட்டபூர்வமாக அரசினால் கசற்றில் அறிவிக்கப்பட்டு சுவீர்கரிப்படாதாவை என்பதால் அந்த ஆக்கிரமிப்பு சட்டவிரோதமான செயல் தான். அதன்படி சட்ட நடவடிக்கை மூலம் அவர்களை அந்த இடத்தை விட்டு அகற்ற முடிந்ததா? அப்படி ஏதும் சட்ட சிக்கல் ஏற்பட்டாலும் கூட அவசரகால சட்ட விதிகளின் கீழ் அதனை நடைமுறைப்படுத்த அரசிற்கு அதிகாரம் இருக்க கூடும் <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

இன்னுமொரு விடயம் தெற்கில் ஜேவிபி கிளர்ச்சி உச்ச நிலையை அடைந்த போது இவ்வகையான கெல்மட் அணிந்த நபர்களின் தாக்குதல்கள் கொழும்பு பிரதேசங்களில் இடம்பெற்றன என்றும் அந்த சமயத்தில் கெல்மட் அணிவது தெற்கில் தடைசெய்யப்பட்டது என்றும் எங்கோ படித்த நினைவு, சரிவர தெரியவில்லை. விஷயம் தெரிந்தவர்கள் இது குறித்த மேலதிக தகவல்களை தாருங்கள்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#3
நான் என்ன சொல்லவருகின்றேன் என்றால் சுனாமி நடந்த நேரத்தில் எங்கள் மக்களுக்கு போக இருந்த நிதியை எப்படி சிங்களப் பேரினவாதிகள் நீதிமன்றம் மூலமாக தடை செய்தார்களோ அதே நீதிமன்றம் மூலமாக அவர்களுக்கே கஸ்டத்தை ஏற்படுத்த வேண்டும். இவ் விடயம் மட்டுமல்ல எந்தவொரு விடயத்திலும் சிங்கள தேசத்தில் நடக்கும் அபிவிருத்தி வேலைகளுக்கு நாம் முட்டுக்கட்டை போடவேண்டும். அது கூட எம் போராட்டத்தின் மற்றுமொரு பரிமாணமாக சிங்களதேசத்தை அடிபணிய வைக்ககூடும்.

எனது நண்பர் ஒருவர் சுனாமிக்கு பிற்பட்ட காலப்பகுதியில் இரத்தினபுரி ஊடாக கதிர்காமம் சென்று வந்தார். அக் காலப்பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ பணம் இல்லை என்று சொல்லிக் கொண்டிருந்த அரசாங்கம் காட்டுப் பாதைகளில் பல கிலோமீற்றர் து}ரத்துக்கு முதல்தர வீதி அமைப்பை செய்து கெண்டிருந்ததைக் கண்டதாகச் சொன்னார். இதற்கு எப்படி பணம் கிடைத்தது?

கெல்மட் போடுவதற்கு சட்டம் எப்படி என்பது பற்றி எனக்குத் தெரியாது. அதனால் தான் ஆலோசனை கேட்டிருந்தேன். ஆனால் ஜேவிபி காலப்பகுதியிலும் சரி, பிற்பட்ட காலப்பகுதியிரும் சரி நீதிமன்றத்தை எவரும் அணுகியிருக்காதால் தான் தடுக்கமுடியவில்லை என்று நினைக்கின்றேன். அணுகியிருப்பின் ஒன்று நீதி கிடைத்திருக்கும். அல்லது நீதிமன்றத்தின் முகத்தை அடையாளம் கண்டிருக்க முடியும்.
[size=14] ' '
Reply
#4
தலைகவசம் அணிவது சட்டாPதியாக தடை செய்ய முடியாது. ஆனால் தலைகவசம் முகத்தை மறைக்கும் வகையில் இருப்பதை தடை செய்ய முடியும். இந்த தடை முன்னர் (சமாதானத்துக்கு முதல்) வவுனியாவில் அமுலில் இருந்தது. இந்த தடையை கூட வவுனியாவிற்க்கு இளஞ்சசெழியன் நீதிபதியாக வந்த பின்னர் நீக்கினார்

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Reply
#5
Nitharsan Wrote:தலைகவசம் அணிவது சட்டாPதியாக தடை செய்ய முடியாது. ஆனால் தலைகவசம் முகத்தை மறைக்கும் வகையில் இருப்பதை தடை செய்ய முடியும். இந்த தடை முன்னர் (சமாதானத்துக்கு முதல்) வவுனியாவில் அமுலில் இருந்தது. இந்த தடையை கூட வவுனியாவிற்க்கு இளஞ்சசெழியன் நீதிபதியாக வந்த பின்னர் நீக்கினார்

நன்றி நிதர்சன்.
சமீபத்தில் பத்திரிகைச் செய்தி ஒன்று யாழ்பாணத்தில் தடை செய்யப் போவதாக வந்திருந்தது. அதனால் தான் இவ்வாறான வினா எழுந்தது.
[size=14] ' '
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)