Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மீனாட்சி அம்மன் கோயில் 22வது இடம்
#1
உலக அதிசயப் பட்டியலில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் 22வது இடத்திற்கு முன்னேற்றம்

மதுரை : புதிய உலக அதிசயப் பட்டியலில் 24வது இடத்தில் இருந்த மதுரை மீனாட்சி அம்மன் கோயில் 22வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. புதிய உலக அதிசயங்களில் ஒன்றாக மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை அறிவிக்கும் முயற்சி அனைத்து மக்கள் ஒத்துழைப்போடு கடந்த ஓராண்டாக நடைபெற்று வருவதை நீங்கள் அறிவீர்கள். இதற்கான முதல் கட்ட ஓட்டுப்பதிவில் 66வது இடத்தில் நுழைந்த மீனாட்சி அம்மன் கோயில் படிப்படியாக முன்னேறி இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 25வது இடத்திற்கு முன்னேறியது. கடந்த 9 மாதங்களாக நடைபெற்ற ஓட்டுப்பதிவின் அடிப்படையில் 24வது இடத்திற்கு இடம் மாறியது. தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் முதல்கட்ட ஓட்டுப்பதிவில் மீனாட்சி அம்மன் கோயில் 22 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. டிசம்பர் 24ம் தேதிக்குள் 21வது இடத்திற்குள் இடம் பெற ஏற்பாடு செய்ய வேண்டும். முதல் 21 இடத்திற்குள் வருபவை மட்டுமே அடுத்த ஆண்டு முழுவதும் நடைபெற உள்ள இறுதிக் கட்ட ஓட்டுப்பதிவில் பங்கேற்க முடியும். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை உலக அதிசயமாக்க இந்தியாவிலிருந்து நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய வெளிநாட்டு தொலைபேசி எண்கள் 00 372 5411 1443, 00 372 5411 1444. இந்த எண்களுக்கு ரிங் போனவுடன் ஆங்கிலத்தில் வரவேற்பு செய்தி அளிக்கப்படும். இறுதியில் ஆங்கிலத்தில், உங்களுக்கான குறியீட்டு எண் வழங்கப்படும். இது ஆறு இலக்கம் உடையது. இரண்டு முறை குறியீட்டு எண் கூறப்படும். இந்த எண்களைப் பெற்றவுடன் பிரவுசிங் சென்டர் செல்ல வேண்டும். உங்கள் குறியீட்டு எண் 50 நிமிடத்திற்குள் காலாவதியாகிவிடும். பிரவுசிங் சென்டர் உதவியாளரிடம் ஓட்டுப்போடும் முறை பற்றி கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்

(Nandri : Dinamalar)
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)