Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
உயிர்களை எடுக்காதே உரிமையை பறிக்காதே!!!!!!!
#1
<img src='http://img304.imageshack.us/img304/2074/photo205cw.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://img304.imageshack.us/img304/360/photo126hq.jpg' border='0' alt='user posted image'>

உயிர்களை எடுக்காதே உரிமையை பறிக்காதே!!!!!!!



உரிமையை பறிப்பதும்
உண்மையை மறைப்பதும்
ஊமைகளாய் இருப்பதால் தான்.

உயிர்களை எடுப்பதும்
பெண்களை கெடுப்பதும்
நீ மௌனமாய் இருப்பதால்த்தான்.

முதேவிகளை விரட்ட முடியவில்லையா?
சொல் நானும் வருகிறேன்.
என் உயிரையும் தருகிறேன்.
வாழ்ந்தால் மானத்தோடு வாழுவோம்.
இல்லை தமிழ்ழீழத்திலே
மடிந்தே போவோம்.

சிங்கள இனவெறி பிடித்த
மூடரை ஈழத்தை விட்டே ஓட்டுவோம்.
[size=18]<b> </b>
[size=18]<b> </b>

IRUVIZHI
Reply
#2
மக்கள் மாணவர் எழுச்சிக்கு மதிப்பளிப்போம் பங்களிப்போம்

பாச புூமியாம் ஈழ தேசம் கொடிய எதிரியின் கோரப்பிடியில் ......
தேச மக்கள் வெகுண்டெழுந்து விழுப்புண் தாங்கி விழும் பொழுது ... ... . .

புலம் பெயர் உறவு(கள்) நான் (ங்கள்) என்ன செய்தேன் (தோம்) ?; என்ன செய்ய வேண்டும் ?

தொலைக்காட்சியிலும் இணையத்திலும் செய்தி அறிந்து,
கொதித்துப்போய் நான்கு சுவரினுள் எதிரியை திட்டி , வீர வசனமும் வீறாப்பும் பேசி
மறுநாள் எழுந்து வேலைக்கு ஓடுவதை தவிர என்ன செய்தே(தோம்)ன் ?

எனக்கு (ங்களுக்கு) கிடைக்கும் ஒய்வு நாளில் நான்(ம்) இருக்கும் நாட்டின் கேந்திர முக்கிய இடங்களில் , பாச புூமியில் எம் தேச மக்கள்படும் சொல்லொண்ணத் துயரங்களை அந் நாட்டு மொழியில் பிரசுரங்களாக படங்களாக வெளிப்படுத்த வேண்டும். நான் (ங்கள்) என(ம)து நண்பர்கள் என அனைவரையும் ஒன்று திரட்டி தினமும் இப்பணி தொடர்ந்திடச் செய்தல் வேண்டும் . அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைவரும் ஒற்றுமையாய் எம் தேச மக்களின் துயரை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும்.

எமக்கு நாமே செய்தி கூறுவது போல் 1008 தமிழ் இணையத்தளங்களில் ஒரே செய்தியை
வெட்டி ஒட்டுவதால் என்ன பயன் ? நாம் குடியேறியுள்ள நாட்டு மக்களும் அறியக் கூடியவாறு
தகவல்களை அந் நாட்டு மொழியில் வளங்கக் கூடிய இணைய வலைகள் பெரியளவில்
அறிமுகப்படுத்தப்பட வேண்டும் !!!!!
www.newstamilnet.com மற்றும் www.tamlilnet.com
( செய்தியறிந்து கொதித்தெழுந்து இலவச ஆலோசனையை பொழிந்து விட்டு . . . .
ம் நாளைக்கு வழமைபோல் வேலை .................................... நானும் என்ட கோவமும் )

VERNON
Reply
#3
100 kku 100 unmai 8) Idea VERNON <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :roll:
உங்கள் பதில் கருத்து மிகச்சுருக்கமாக உள்ளது.
Reply
#4
புலம்பெயர் வாழ் மக்களே எங்கள் மாணவர்கள் அங்கு துடிக்கையில். நாம் சும்மை வீட்டில் இருது பயன் என்ன????? எங்கள் சகோதரன்/ சகோதரி அல்லவா அவர்கள்? வீதியில் நாமும் புலம்பெயர் நாடுகளில் இறங்குவோம். உலக நாடுகளின் மனட்சாட்சியைத் தட்டி எழுப்புவோம். உண்மையை சொல்லுவோம் உரக்கச் சொல்லுவோம். நான் நாளை முதல் எங்கள் உறவுகளுக்காய் வீதில் இறங்கத்தயார். நீங்களும் தாயாரானால். கல்வியை பறிக்கும் உரிமையை யார் சிங்கள இராணுவத்திற்கு கொடுத்தது.
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
#5
என்ன ஒருத்தரின் சத்தத்தயும் காணோம். உறவுகளே தமிழ் மாணவர்கள் நமதுநாட்டில் படுகின்ற இன்னல் கண்டு நீங்கள் துடிக்கவில்லையா????????
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
#6
ம்ம் மதுரன் நீங்கள் சொல்லுறமாதிரி கனடாவுல எல்லாம் ஒரே அங்க ஏதும் பிரச்சினை என்றால் செய்யுறது. போன வருட பொங்குதமிழ நடந்த கையோடை இலங்கைல சிறைக்க்க அடைச்சு வைத்த தமிழர்களுக்காக எல்லம் கனடா பாரளுமன்றத்துல போய் இருந்து கதைச்சு எல்லாம் செய்ததுதான். பல்கலைக்கழக மாண்வர்கள் எல்லோரும் வந்து இருந்தார்கள். ஆனால் இதை எல்லாம் அவர்கள் சட்டை பண்ணிய மாதிரியே தெரியவில்லை
<b> .. .. !!</b>
Reply
#7
இருவிழியண்ணா கவிதை நல்லாருக்கண்ணா......
வெர்ணோனண்ணா சொல்றது உண்மை தான்............சும்மா ஒரே செய்தியத்தான் எல்லா இணையத்தளங்களும் போடுகினம்.....தமிழாக்கள் தங்களுக்குள்ளயே புலம்பி என்னத்த சாதிக்க போயினம்......பிரியோசனமா அநஇதந்த நாட்டில உள்ள மொழில அங்க இருக்கிற மக்களுக்கு எங்கட மக்களின்ர துயரத்த துன்பத்த எடுத்து சொல்லலாந்தானே.....

இங்க வாய்கிழிய தாங்கள் நாட்டுப்பற்றாளர்கள் மாதிரியும்....... ஊரில இருக்கிற எங்கட சனத்துக்காண்டி கண்ணீர் வடிக்கிறவ தாங்கள் மட்டுந்தானெண்டுற மாதிரியும்..... வெளிவேசத்துக்காண்டி கதைக்கிறவை முதலில வெர்ணோனண்ணா சொன்னமாதிரி பிரியோசனமா உத செய்யுங்கோவன்......ஊருக்கு உபதேசம் செய்யிறவை ஒழுங்கா உத செய்யுங்கோவன்.......

குற்றவாளியள அம்பலப்படுத்துகினமாம் தங்களுக்குள்ளயே...... அதுக்கு முதல்ல உங்கட சனத்தின்ர சோகத்த வெளில மற்ற நாட்டு சனத்துக்கு சொல்லலாமே.... இங்க பிறந்து வளந்த பிள்ளையளெல்லாம் தங்கட சிற்றியளில இருக்கிற அமைப்புகளோ சேந்து இங்கத்த சனத்தோட சந்திப்புகள செய்து நாட்டு நிலமையள அவையளுக்கு சொல்லுகினம்......ஆனா உங்க ஊரில இருந்து இடையில வந்த சில கிழடுகள் .....கிழடுகளெண்டா இளங்கிழடுகள் சிலதுகள் மற்றவைக்கு உபதேசம் பண்ணுறதிலயும் மற்றவையில குறை கண்டுபிடிக்கிறதிலயுந்தான் தங்கட நேரத்த எல்லாம் செலவழிக்குத்துகள்.....தாங்கள் ஒழுஙகா ஒண்டையும் செய்தத காணேல.......உந்த இளங்கிழடுகள விட எங்கள மாதிரி சின்ன வயசுக்காரர் எங்கட நாட்டுக்கு தேவையானத நாங்க வாழுற நாடுகளில இருந்து ஒழுங்கா செய்துகொண்டிருக்குிறம்.......எங்கட மக்களின்ர துனஇபங்கள இந்த நாட்டு மக்களுக்கு சொல்றதா இருந்தாலும் சரி.....சுனாமி வந்த நேரத்தில குளிருக்குள்ள கைவிறைக்க காசு சேர்க்கிறதெண்டாலுஞ் சரி.......இப்பிடி எல்லாத்திலயும் எங்கட தரவழியாக்கள் தெளிவாத்தான் இருக்கிறம்........ உந்த இளங்கிழடுகள் எப்ப திருந்துங்களோ தெரியலலலலலலலலலலலலலலலலலலலல....<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
Reply
#8
<img src='http://www.thinakural.com/New%20web%20site/web/2005/December/20/fr-1.jpg' border='0' alt='user posted image'>
<i>வீரகேசரியிலிருந்து சில படங்கள்</i>
<b>
யாழ்.பல்கலைக்கழக சமூகம் மீது இராணுவம் மோசமாக தாக்குதல்</b>

அமைதிப் பேரணி நடத்திய துணைவேந்தர்,பேராசிரியர்கள் மாணவர்களுக்கு அடி, உதை

50 இற்கு மேற்பட்டோர் காயம், பலர் ஆஸ்பத்திரியில் சிரேஷ்ட விரிவுரையாளர் பேரின்பநாதன் மீது துப்பாக்கிச் சூடு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் மீது நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை படையினர் மேற்கொண்ட மிக மோசமான தாக்குதலைக் கண்டித்து, நேற்றுக் காலை யாழ். பல்கலைக்கழக சமூகம் நடத்திய அமைதிப் பேரணி மீது படையினர் மேற்கொண்ட கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டிலும் மிக மோசமான தாக்குதலிலும் பேராசிரியர்கள், சிரேஷ்ட விரிவுரையாளர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட எம்.பி.யொருவர் உட்பட ஐம்பதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இவர்களில் சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவரும் நான்கு மாணவர்களும் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடனும் பேராசிரியர் ஒருவரும் ஐந்து பத்திரிகையாளர்களும் 19 மாணவர்களும் பலத்த அடிகாயங்களுடனும் யாழ். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இருபதுக்கும் மேற்பட்டோர் தாக்குதல்களுக்கிலக்காகி அடிகாயங்களுக்கு சிகிச்சை பெற்றுள்ளனர்.

புங்குடுதீவு 7 ஆம் வட்டாரத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு கடற்படையினரால் கடத்தப்பட்டு பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட பின்னர் படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் யுவதியின் குடும்பத்தவர்களைச் சந்திப்பதற்கு ஞாயிற்றுக்கிழமை மாலை 3 பஸ்களில் பல்கலைக்கழகத்திலிருந்து புறப்பட்ட மாணவர்களையும் யாழ். மாவட்ட எம்.பி.எஸ். கஜேந்திரனையும் பல்கலைக்கழகச் சந்தியில் தடுத்து நிறுத்திய படையினர், அவர்கள் மீது மிக மோசமான தாக்குதலை நடத்தியதில் 25 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்தனர்.

அத்துடன், அப்பகுதியிலுள்ள சர்வதேச தமிழீழ மாணவர் பேரவை அலுவலகத்தினுள் நுழைந்த படையினர் அங்கிருந்த பொருட்களையும் உடைமைகளையும் அடித்து நொருக்கியதுடன் கட்டிடத்திற்கும் பலத்த சேதமேற்படுத்தினர்.

படையினரின் இந்த அடாவடித்தனத்தைக் கண்டித்து நேற்றுக் காலை 10.45 மணியளவில் பல்கலைக்கழகத்திலிருந்து, துணைவேந்தர் எஸ். மோகனதாஸ் தலைமையில் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாணவர்களென 2,500 இற்கும் மேற்பட்டோர், நல்லூரிலுள்ள போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினரிடம் மகஜர் சமர்ப்பிப்பதற்காக அமைதிப் பேரணியொன்றை ஆரம்பித்தனர்.

இவர்களுடன் கஜேந்திரன் எம்.பி.யும் கலந்துகொண்டார்.

இந்த அமைதிப் பேரணி பல்கலைக்கழக சந்தியை (பரமேஸ்வராச் சந்தி) அடைந்து பலாலி வீதியூடாக திரும்பி திருநெல்வேலி சென்றல் நேர்சிங்ஹோம் சந்திக்குச் சென்றபோது, அவ்விடத்தில் தயார் நிலையில் நின்ற பெருமளவு படையினர் பேரணியில் முன்னால் சென்ற துணை வேந்தரையும் பேராசிரியர்கள் மற்றும் சிரேஷ்ட விரிவுரையாளர்களையும் தாக்க முற்பட்டுள்ளனர்.

இவ்வேளையில், தங்களது அமைதிப் பேரணிக்கு இடையூறு விளைவிக்க வேண்டாமெனவும் அது நிலைமையை மோசமடையச் செய்யுமெனவும் பேராசிரியர்கள் கூறிய போதிலும் படையினர் அதனைப் பொருட்படுத்தவில்லை.

பேரணியில் சென்றவர்களுக்கு சற்று முன்பாக நின்றவாறு வீதியை நோக்கி படையினர் சரமாரியாகச் சுடத் தொடங்கினர்.

இதனால், வீதியிலிருந்த கல்லுகள் பறந்து சென்று, பேரணியின் முன்னால் சென்றவர்களை கடுமையாகத் தாக்கவே, துணைவேந்தரும் பேராசிரியர்களும் சிரேஷ்ட விரிவுரையாளர்களும் வீதியில் வீழ்ந்து படுத்துக் கிடந்தவாறு, தங்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டாமெனக் கோஷமெழுப்பினர்.

ஆனால், படையினர் தொடர்ந்தும் துப்பாக்கிச் சூடு நடத்தியவாறு துணைவேந்தர் மீதும் பேராசிரியர்கள் மீதும் பொல்லுகளால் தாக்கத் தொடங்கவே அவர்கள் உருண்டு புரண்ட போது, படையினர் அவர்களைக் கால்களால் உதைத்தும் மிதித்துமுள்ளனர்.

இவ்வேளையில், மாணவர்கள் சீற்றமடைந்து கோஷமெழுப்பவே மாணவர்களை நோக்கி படையினர் துப்பாக்கிச் சூட்டை நடத்தத் தொடங்கினர்.

இதனால், பேரணியில் வந்த மாணவ, மாணவிகள் சிதறியோடத் தொடங்கியபோதும், அவர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தியவாறு தொடர்ந்தும் படையினர் துப்பாக்கிச் சூட்டை நடத்தினர்.

சிதறியோடியவர்கள் மீது துரத்தித் துரத்தி துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டதுடன் அகப்பட்டவர்கள் எல்லோர் மீது பொல்லுகள் மற்றும் துப்பாக்கிப் பிடிகளால் கண்மூடித்தனமான தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

துப்பாக்கிச் சூடுபட்டவர்கள் அந்தந்த இடத்தில் சுருண்டு விழுந்த அதேநேரம், கண்மூடித்தனமான தாக்குதலுக்கிலக்கானவர்களும் அப்பகுதியில் படுகாயமடைந்து வீழ்ந்தனர்.

மாணவர்களை விரட்டி விரட்டித் தாக்கிய படையினர், அங்கு வந்திருந்த செய்தியாளர்களையும் தவறவிடவில்லை.

தங்களை ஊடகவியலாளர்களெனக் கூறி தாக்க வேண்டாமெனக் கோரிய ஊடகவியலாளர்களெல்லாம் மிகக் கடுமையாகத் தாக்கப்பட்டதுடன் அவர்களது புகைப்படக் கருவிகளும் ஒலிப்பதிவு நாடாக்களும் அடித்து நொருக்கப்பட்டன.

இத்தாக்குதலில் ஐந்துக்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்களும் படுகாயமடைந்தனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர்களையும் தாக்குதல்களுக்கிலக்காகி படுகாயமடைந்தவர்களையும் பதுகாப்பாக ஆஸ்பத்திரிகளுக்கு கொண்டு செல்ல முடியாதளவிற்கு தொடர்ச்சியாக துப்பாக்கிச் சூடும் தாக்குதலும் நடத்தப்பட்டது.

அப்பகுதியெங்கும் வெறிச்சோடிய பின்னரும், அங்கு தென்பட்டவர்களை நோக்கி படையினர் துப்பாக்கிச் சூட்டை நடத்தினர். இதேநேரம், அப்பகுதியிலிருந்த கடைகள் மற்றும் வர்த்தக நிலையங்களும் படையினரின் தாக்குதலுக்கிலக்காயின.

சம்பவம் பற்றி அறிந்து அப்பகுதிக்கு போர்நிறுத்த கண்காணிப்புக் குழுவினர் வந்தபோதும் படையினர் தங்கள் தாக்குதலை நிறுத்தாததுடன் கண்காணிப்புக் குழுவினரை, பல்கலைக்கழகப் பக்கமாகச் செல்லவும் அனுமதிக்காததால் சுமார் அரை மணி நேரம் காத்திருந்துவிட்டு அவர்களும் திரும்பிச் சென்றுவிட்டனர்.

இவ்வேளையில், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான பொருளியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் என்.பேரின்பநாதன், மருத்துவபீட மாணவர் ஒன்றியத் தலைவர் எஸ்.காண்டீபன், செந்தில்குமார் (முகாமைத்துவ பீடம்), செந்தூரன் (கலைப்பீடம்) மற்றுமொரு மாணவரும் யாழ்.ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

விரிவுரையாளருக்கு தொடைப் பகுதிகளில் துப்பாக்கிக் குண்டுகள் துளைத்துள்ளன. ஏனைய மாணவர்களுக்கு தலையிலும் ஏனைய பகுதிகளிலும் துப்பாக்கிக் குண்டுகள் தாக்கியுள்ளன.

இதேநேரம், கடுமையான தாக்குதலுக்கிலக்கான பத்திரிகையாளர்களான எஸ்.சபேஸ்வரன் (யாழ்தினக்குரல்), பிரதீபன் (உதயன்), ஜெராட் (நமது ஈழநாடு), வின்சன் ஜெயன் (தினகரன்) ஆகியோரும் யாழ்.ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

தாக்குதலுக்கிலக்கான கலைப்பீடாதிபதி பேராசிரியர் எஸ்.சிவச்சந்திரனும் பின்னர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

துணைவேந்தர், கஜேந்திரன் எம்.பி. மற்றும் சில பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் மாணவர்களும் பலத்த அடிகாயங்களுக்கிலக்கானார்கள்.

சுமார் ஒன்றரை மணிநேரத்தின் பின் படையினர் தங்கள் தாக்குதலை நிறுத்தவே, தாக்குதலுக்கிலக்காகி காயமடைந்தவர்களுக்கும் யாழ்.ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டது.

ஆனாலும், பல்கலைக்கழகச் சந்தி முதல் கந்தர்மடச் சந்திவரையான பலாலி வீதியை மூடிய படையினர், அப்பகுதிகளில் கவச வாகனங்கள், ட்ரக்குகளை நிறுத்தியிருந்ததுடன் வேறு பகுதிகளிலுமிருந்து பெருமளவு படையினரை வரவழைத்து போரொன்றுக்கு தயாராயிருப்பது போன்று பல மணிநேரம் நிறுத்தப்பட்டிருந்தனர்.

எதுவித ஆத்திரமூட்டலுமின்றி அமைதிப் பேரணி நடத்திய தங்கள் மீது படையினர் மேற்கொண்ட மிருகத்தனமான தாக்குதல் பல்கலைக்கழக சமூகத்தை கடும் சீற்றமடையச் செய்துள்ளது. இந்தச் சம்பவத்தையடுத்து, பல்கலைக்கழகம் மூடப்பட்டபோதும் மாணவர்களும் விரிவுரையாளர்களும் அவசர கூட்டங்களைக் கூடி அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் தீர்மானித்துள்ளனர். படையினரின் இந்தச் செயலால் குடாநாடெங்கும் நேற்று பெரும் பதற்றம் நிலவியது.

தினக்குரல்
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)