Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஏன் தயக்கம்?
#1
<b><span style='font-size:25pt;line-height:100%'>ஏன் தயக்கம்?</b>
-ஆத்மானந்தா
<img src='http://www.dinamalar.com/2005matharasimargazhi/photo/THAMIL%20MATHA%20RASI%20MALAR-06.JPG' border='0' alt='user posted image'>

ஒரு செயலைத் தொடங்கும் முன் நான்கையும் யோசிக்க வேண்டும் என அடிக்கடி சொல்லி வருகிறேன். சரி...ஒரு இக்கட்டான நிலையில்சிக்கிக் கொள்கிறீர்கள். இதிலிருந்து மீள வேண்டும். என்ன செய்வது...என கையை பிசைந்து கொண்டு நிற்கக்கூடாது. இதிலிருந்து மீண்டே தீர வேண்டும் என்ற நம்பிக்கை உங்களுக்குள் உருவாக வேண்டும். மனம் இருந்தால் மார்க்கமுண்டு. நம்மால் முடியாதது என்பதே கிடையாது.

\"\"துன்பமே உன்னை வரவேற்கிறேன்,'' என யார் ஒருவர் கஷ்டத்தை ரத்தினக்கம்பளம் விரித்து வரவேற்கிறாரோ அவர் என்றேனும் ஒருநாள் எட்டிப்பிடிக்க முடியாத நிலையில் இருப்பார்.

\"வருவது வரட்டும், அதிக பட்சம் போனால் என்ன...இந்த உயிர்தானே' என்று தினமும் பத்து தடவை உங்களுக்குள் சொல்லிக்கொண்டே இருங்கள். நீங்கள் உங்களை அறியாமலே உயரப் பறக்க துவங்கி விடுவீர்கள்.


நீங்கள் ஏதோ ஒரு வேலையில் இருந்தீர்கள். அது நன்கு பழகிய வேலை. ஏதோ காரணத்தால் அதை இழக்க வேண்டி வந்து விட்டது. குடும்பம் பசியில் தத்தளிக்கும் என்ற நிலை...அன்பு மனைவியும், பிள்ளைகளும், பெற்றவர்களும், சகோதரிகளும் உங்கள் கண் முன் நின்று, \"\" அடுத்த ஒன்றாம் தேதிக்கு என்ன செய்யப் போகிறாய்?'' என்று கேட்பதை மனக்கண் முன் பார்க்கிறீர்கள். பயம் தொற்றுகிறது. இதைத் தான் தவறு என்கிறேன்.

இந்த சமயத்தில் யாரோ ஒருவர் உங்களுக்கு வேலை வாங்கித் தர முன் வருகிறார். அல்லது நீங்களே ஒரு இடத்தில் வேலைக்கு ஆள் தேவை என்ற போர்டைப் பார்க்கிறீர்கள். இப்போது கிடைக்கும் வேலை உங்களுக்கு பழக்கப்படாததாக இருக்கலாம். எப்படி செய்வது என்ற தயக்கம் ஏற்படுகிறது.

இந்த தயக்கத்துக்கு மருந்து தான் இந்த சம்பவம்.

விவேகானந்தர் ஒரு மரத்தடியில் நின்று கொண்டிருந்தார். அருகிலுள்ள ஒரு மரத்தின் கிளையில் ஒரு கலயத்தைக் கட்டி சில வாலிபர்கள் துப்பாக்கியால் குறி வைத்து சுட்டனர். எல்லோரது குறியும் தவறி விட்டது. விவேகானந்தர் அந்த இளைஞர்களைப் பார்த்து சிரித்தார். இதை ஒரு இளைஞன் கவனித்து விட்டான்.

\"\"சாமியாரே! என்ன கிண்டல் சிரிப்பு...நாங்கள் இந்த கலயத்தை குறி வைத்து அடிக்க முடியவில்லை என்று தானே சிரிக்கிறீர். இதோ பிடியும்...துப்பாக்கியை...சுட்டுத்தள்ளும் பார்க்கலாம்,'' என்றனர்.

விவேகானந்தர் கையில் துப்பாக்கியை வாங்கினார். கலயத்தை நோக்கி குறி வைத்தார். துப்பாக்கி குண்டு கலயத்தை சுக்கு நுõறாக்கி விட்டது. அந்த இளைஞன் ஆச்சரியப்பட்டான்.

\"\"சாமியாரே! ஆச்சரியமாய் தான் இருக்கிறது. இருந்தாலும், இது தற்செயலாக நிகழ்ந்ததாக இருக்கலாம் இல்லையா? எங்கே...அந்த கலயம் கட்டப்பட்டிருந்த குச்சி அதோ இருக்கிறது. அதை அடித்து வீழ்த்தும், பார்க்கலாம்,'' என்றான் இளைஞன்.

விவேகானந்தர் திரும்பவும் குறி வைத்தார். குச்சி கீழே விழுந்தது.

இளைஞன் அப்படியே அவர் காலில் விழுந்து விட்டான்.

\"\"சுவாமி! தாங்கள் பெரிய துப்பாக்கி சுடும் வீரர் என அறியாமல் பேசி விட்டேன். மன்னிக்க வேண்டும். நீங்கள் யாரிடம் பயிற்சி எடுத்தீர்களோ, அவரிடம் போய் நாங்களும் படிக்க வேண்டும்,'' என்றான்.

சுவாமிஜி சொன்னார்.

\"\"தம்பி! நான் இதுவரை துப்பாக்கியை தொட்டது கூட இல்லை. நீ ஒரு வேலையைச் சொன்னாய். அதை முடித்தாக வேண்டும் என என் மனதில் உறுதி கொண்டேன். ஒரே மூச்சில் முடித்தாக வேண்டும் என கணநேரத்தில் வைராக்கியம் எடுத்தேன். முடித்து விட்டேன்,'' என்றார்.

பார்த்தீர்களா! உறுதி கொண்ட நெஞ்சங்கள் எப்பேர்ப்பட்ட சூழ்
நிலையையும் சமாளிக்கும் என்பதை...இளைஞர்களே! நீங்களும் சின்ன விவேகானந்தர்களாய் மாறுங்கள்.</span>
Reply
#2
தத்துவ முத்துக்களுக்கு நன்றி அஜீவன்.
"மனதில் உறுதி வேண்டும்..." என்ற பாரதியார் பாடலும் நினைவுக்கு வருகின்றது.

Reply
#3
அஜீவனண்ணா நல்ல அறிவுரை. இதே போல நானும் பலசமயங்களில் பலதை இளந்ததுண்டு. எங்கே பார்ப்போம் இனியாவது மனவலிமையோடு நினைப்பதை முடிக்கின்றேனா என.

உங்களுக்கு நன்றி <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
#4
அஐிவன் தகவலுக்கு நன்றி. ஆமாம் தோல்விகளை கண்டு சோர்ந்து விடமால் முயன்று பார்த்தால் வெற்றி எமக்கு நிச்சயம்

Reply
#5
இந்த தயக்கம் தாழ்வுமனப்பான்மை என்பன கனபேருக்கு இருப்பதால்தான் திறமைகள் இருந்தும் முன்னேற முடியாமல் கஷ்டப்படுகிறார்கள் இந்த விஞ்ஞான உலகில் இளைஞர்களால் சாதிக்கமுடியாது எதுவுமில்லை எண்டு கூடச் சொல்லலாம் பெற்றோர்கள் சிறு வயதிலேயே உங்கள் பிள்ளைகளுக்கு தயக்கம் தாழ்வுமனப்பான்மை ஏற்படாமல் உற்சாகம் குடுத்து வளர்பீர்கள் எண்டால் நல்லதொரு இளைய சழுதாயத்தை ஏற்படுத்தமுடியும் ...............நன்றி ஜீவன் உங்களின் தகவலுக்கு...
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
#6
நல்ல தத்துவ கதை! நன்றி அஜீவன் அண்ணா
Reply
#7
நன்றி...........

[quote]நானும் பலசமயங்களில் பலதை இளந்ததுண்டு.
எங்கே பார்ப்போம் இனியாவது மனவலிமையோடு நினைப்பதை முடிக்கின்றேனா என.

[size=15]இப்படிக் கூட சந்தேகம் கூடாது.
முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை.

மற்றவருக்கு உள்ள திறமைகள் நமக்குள் இல்லாமல் இருக்கலாம்.
ஆனால்
நமக்குள் இருக்கும் திறமைகள் மற்றவர்களுக்கு இருக்காது.

முதலில் நமக்குள் இருக்கும் திறமையை புரிந்து கொண்டால்
நம்மால் நடைபோட முடியும்.

ஒன்றை மட்டும் சொல்வேன்.
எவர் ஒருவர் ஒருவரது மனதை தளும்படிக்க வார்த்தைகளைக் கொட்டுகிறாரோ
அவரை கொஞ்சம் தள்ளியே வையுங்கள்.

நல்லவையை விட கெடுதல்கள்
மனதை உறுத்துவது அதிகம்.

ஒருவரோடு இன்னொருவரை ஒப்பிட்டுப் பார்க்கப் போகக் கூடாது.

உதாரணமாக எனக்கு கவிதை வராது.
ஆனால்
என்னால் ஓரளவு கதை எழுத முடியும்.
நான் ஏன் கவிதைக்குள் போய் காலத்தை விரயமாக்க வேண்டும்.
இன்னொருவரது கவிதையை ஆசையோடு படிக்கலாம்.
என்னால் கவிதை எழுத முடியவில்லையே என அவர் மேல் காழ்புணர்ச்சி கொள்ளத் தேவையில்லை.

இது முதலில் கோபத்தையும் எரிச்சலையும்
பின்னர் மனஅழுத்தத்தையும்
இறுதியில் தாழ்வு மனப்பான்மையும் கொண்டு செல்லும்.

எனவே நமது திறமைகளை
நாம்தான் கண்டு பிடிக்க வேண்டும்.
அடுத்து
கண்டுபிடித்த
நமக்குள் இருக்கும் திறமையை நாம்தான் வளர்க்க வேண்டும்.
பின்னர் <b>நமது வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது.</b>
Reply
#8
ஆஜீவன் அண்ணா தத்துவக் கதைக்கு நன்றிகள். முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.
<b> .. .. !!</b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)